Pages

Sunday, December 8, 2013

சென்னை புத்தக கண்காட்சி / திருவிழா - 2014

அலசல்களை கம்மி படுத்த, போகும் முன்பே சில ஏற்பாடுகளோடு தான் போக வேண்டியிருக்கும் சென்னை புத்தக கண்காட்சிக்குமுக்கிய பதிப்பகங்களுக்கு முதலில் போய் விட்டு, வேண்டியவையை வாங்கி கொண்டு பிறகு சுற்றி பார்க்கலாம்.

ஏனென்றால் பல கடைகள் இந்த முக்கிய மற்றும் முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்களை தான் விற்பனைக்கு வைத்திருக்கும்வெறும் கடைகள் என்று இல்லாமல் புத்தகங்கள் கொண்டு வரும் பதிப்பகங்கள் தான் புத்தக கண்காட்சியின் நட்சத்திரங்கள்.

இந்த பதிப்பக கடையில் தான் நேரம் அதிகம் செலவிட வேண்டி இருக்கும்.

இத்தனை வருடங்களாய் புத்தக கண்காட்சிக்கு போகும் நான் ஒரு பத்து கடைகளுக்கு தான் ஆர்வம் கொண்டு போயிருக்கிறேன்.
இவைகளை விற்பனை மையம் என்று தான் சொல்வார்கள் / எழுதுவார்கள் பலர்எனக்கு தெரிந்த சில முன்னணி பதிப்பகங்களை சொல்கிறேன். அவைகளுக்கு எக்காரணம் கொண்டும் தவற விட வேண்டாம்.

கிழக்கு பதிப்பகம்
உயிர்மை பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம்
வம்சி பதிப்பகம்
தமிழினி பதிப்பகம்
விகடன் பதிப்பகம்
திருமகள் பதிப்பகம்
விசா பதிப்பகம்
எதிர் பதிப்பகம்
எழுத்து பதிப்பகம்
கண்ணதாசன் பதிப்பகம்
நற்றிணை பதிப்பகம்
பாரதி புத்தகாலயம்
சாகித்ய அகாடமி
(
நினைவில் இவ்வளவு தான் வருகிறது)

இவைகளுக்கு முதலில் சென்று விட்டு பிறகு மற்ற கடைகளை நோட்டம் விடுங்கள்.

அப்படி நீங்கள் புதிதாய் புத்தகம் ஆர்வமாய் ஆரம்பிக்க உள்ளீர்கள் என்றால் மேல் சொன்ன எந்த பதிப்பகத்துக்கும் போகாமல் நேராக விகடன் விற்பனை மையத்திற்கு சென்று எஸ்.ராமகிருஷ்ணன் எழுதின "துணையெழுத்து" மற்றும் "கதாவிலாசம்" வாங்குங்கள். தமிழ் இலக்கியத்துக்கான நல்ல அறிமுகமாக இருக்கும்.

பொதுவாய் விற்பனை மையங்களில் கிடைக்கிற புத்தகமாய் வாங்காமல், எங்கும் கிடைக்காத புத்தகத்தை வாங்குங்கள்.

முக்கியமாக தேச தலைவர்களின் வாழ்க்கையை சொல்லும் புத்தகங்களை வாங்க வேண்டாம். ஏனென்றால் அவை எல்லாம் தெரிந்து கொள்ள சுலுவான இடத்திலேயே கிடைக்கிறது. முக்கியமாக தன்னம்பிக்கை புத்தகங்கள் வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்களது தொழிலுக்கு சம்பந்தமான புத்தகங்களை வாங்குங்கள்

நானும் ஒரு காலத்தில் தன்னம்பிக்கை புத்தகங்கள் அதிகம் படித்தவன் தான். அவை எல்லாம் ஒரு சண்டை படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுது வரும் வீரம் போல தான் உணர்ச்சிகளை தரும். அப்படியே உங்களுக்கு தன்னம்பிக்கை புத்தகம் அவசியம் வேண்டும் என்றால் "YOU CAN WIN" என்ற புத்தகத்தை மட்டும் வாங்குங்கள். 

தன்னம்பிக்கை புத்தகங்களுக்கு அடுத்து மக்களை அதிகம் கவர்வது சமையல் புத்தகங்கள், பக்தி புத்தகங்கள் மற்றும் மருத்துவ புத்தகங்கள். இதில் மருத்துவ புத்தகங்கள் பெரும்பாலும் உணவே மருத்து வகை புத்தகங்கள் தான். ஆனால் அதை எல்லாம் வாங்கி கொண்டு போகும் மக்கள் பெரும்பாலானவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு அதை திறந்தே பார்ப்பதில்லை. இந்த மாதிரியான பல பதிப்பகங்கள் தீவிர ஆராய்ச்சி இல்லாமல் தான் நூல்களை கொண்டு வருகிறார்கள்.

இந்த புத்தக கண்காட்சிக்கு நான் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு வகை மக்களும் வர தான் செய்கிறார்கள். அவர்கள் பள்ளிகூட / கல்லூரி புத்தங்கங்களை எதிர்பார்த்து வருகிறவர்கள். அவர்களை சொல்லி குற்றம் இல்லை. ஆனால் தமிழ் புத்தகங்கள் விற்கும் கடைகளுக்கு போய் "ப்ளஸ் டூ கைடு இருக்கா ஸார் ??" என்று கேட்கும் பொழுது தான் பக்கத்திலிருக்கும் நான் என்னை அறியாமல் சிரித்துவிடுவேன்.

ஆங்கில கிளாசிக் நாவல் வகை எல்லா விலையிலும் கிடைக்கும் இந்த சென்னை புத்தக கண்காட்சியில். ஆனால் விலைக்கு ஏற்றது போல் பதிப்பு தரம் இருக்கும். ஆனால் ஜூல்ஸ் வெர்னெ, ஜானே ஆஸ்டன்  நாவல் எல்லாம் ரூ.50ல் இருந்து ரூ.75 க்கு கிடைக்கும் பொழுது கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிடும்.

சென்னை புத்தக கண்காட்சி என்றாலே நடைமேடை பாதையில் போட படும் பழைய புத்தக கடைகள் தான் முதலில் நினைவுக்கு வரும். ஈழத்து இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதை தொகுப்பு  எல்லாம் மூப்பது ரூபாய்க்கு கிடைக்கும் இடம் மன்னிக்கவும் கிடைத்த இடம் அதுவாக தான் இருக்கும். என்னை மாதிரி ஏழை வாசகனின் லேண்ட்மார்க்  அது.

என்னுடைய மிக பெரிய குறையாக இருப்பது இது நாள் வரையிலிருப்பது சென்னை புத்தக கண்காட்சியில் பல்ப் நாவல்களுக்கென்று தனி இடம் இல்லாதது தான். தமிழ் நாட்டில் பல்ப் நாவல்களால் தான் பொருளாதாரத்தில் கடை நிலையிலிருப்பவனும் கவலைகளை மறந்து வாசித்து கொண்டு இருக்கிறேன். அவன் வாழ்க்கையில் அவன் மனதுக்கு என்று ஓதுக்கும் நேரம் அதுவாக தான் இருக்கும். அதை வாசிப்பதால் அவன் கவலைகளை மறந்து , சிறிது நேரமாவது சந்தோஷ படுகிறான்

இந்த பல்ப் நாவல்களை இன்னும் தமிழ் நாட்டில் உயிர் வாழ வைத்து கொண்டியிருக்கும் "பாக்கெட் நாவல்" மற்றும் "க்ரைம் நாவல்" ஜியே பதிப்பகம் திரு.அசோகன் அவர்களை பாராட்டி.... பல்ப் நாவல்களுக்கு என்று இடம் குடுக்க வேண்டும். அது என்னை போன்ற பல்ப் நாவல் பிரியர்களை பெரிதும் சந்தோஷ படுத்தும்.

= = = = =
என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் என்னவென்றால் .... ????

இந்த புத்தக கண்காட்சியில் த எதிர்பார்த்து இந்த இணைய நிறுவனங்கள் கல்லா விரிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவே முடிவதில்லை. இப்படியே போனால் ஊறுகாய் கடை போட பட்டால் கூட ஆச்சரிய படுவதற்கில்லை.

புத்தக கண்காட்சியில் இன்னோரு சிறப்பு அம்சம் உணவு மற்றும் நொறுக்கு தீனி கடைகள் தான். இதில் நான் ஒவ்வொரு வருடமும் திரும்பி வீட்டுக்கு புத்தக கண்காட்சியிலிருந்து போகும் பொழுது இக்கடைகளிலிருந்து மசாலா கடலை மற்றும் பால் கடலை வாங்கி சாப்பிட்டு கொண்டே வருவேன். வேற எதுவும் சாப்பிட மாட்டேன். மிச்சம் பிடித்தால், எதாவது புத்தகம் வாங்கலாமேயென்று தான்.

"சிறையில் எனக்கு வேற எந்த சுதந்திரமும் வேண்டாம், புத்தகங்கள் படிக்க மட்டும் அனுமதி வேண்டும்" - நெல்சன் மண்டேலா.

புத்தக வாசிப்பு மட்டுமே கற்பனைக்கு செய்ய முடியாத அளவுக்கு நமது அறிவை விருத்தி செய்யும். முழுமையான எண்ண சுதந்திரத்தை தரும். ஆர்வமுடன் சென்னை புத்தக கண்காட்சிக்கு வாருங்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆவலுடன். வந்து மேம்பட்டு போங்கள்.

கொண்டாடுவோம் தமிழ் இலக்கியத்திற்கான பெரிய சந்தையான இந்த சென்னை புத்தக கண்காட்சியை.

பெற்றோர்களே.... உங்களது பிள்ளைகள் நல்ல வேலை கிடைக்க நல்ல மார்க் அவசியம் தான். ஆனால் அந்த வேலையை தக்க வைத்து கொள்ளவும் வாழ்க்கையை சிறப்பாக வாழவும் மன பக்குவம் தேவை. அந்த பக்குவதை தருவது நல்ல வாசிப்பு தான். உங்கள் குழந்தைகளுக்கு புத்தங்கள் வாங்கி குடுங்கள் ... ஒன்றாவது. ரூ.200 க்குள் எல்லாம் கிழக்கு பதிப்பகத்தில் நல்ல புத்தங்கள் கிடைக்கிறது.

நன்றி.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

/// புத்தக வாசிப்பு மட்டுமே கற்பனைக்கு செய்ய முடியாத அளவுக்கு நமது அறிவை விருத்தி செய்யும்... ///

அதனால் மற்றவர்களுக்கு நாம் செய்வது...? செய்ய வேண்டியது...?

/// பெரிய சந்தையான இந்த சென்னை புத்தக கண்காட்சியை... பெற்றோர்களே.... //

சென்னை பொருத்தவரை இது ஒரு பேஷன்...

மேவி .. said...

தனபாலன் அண்ணே...புத்தக திருவிழாவை பேஷன்னு சொல்லுற அளவுக்கு எல்லாம் அது சென்னை ல பிரபலம் ஆகல...

மத்தவங்க கிட்ட வாசிப்பை பத்தி சொல்லுறது நம்ம கடமை.. கேட்குறதும் ..காரி துப்புறதும் அவங்க அவங்க விருப்பம்

Related Posts with Thumbnails