Pages

Wednesday, January 29, 2014

உப்பு அரசியல் {அ}

முகலாய வம்சத்தின் கடைசி வாரிசு பிரிடிஷ் ஆட்சியிடம் தனது சொத்து மாளிகை எல்லாம் இழந்து தனது கடைசி காலத்தை அம்மாளிகையில் ஒரமாய் ஒடுங்கி வாழ்ந்து இறந்தார். 

உப்பை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு இந்த உவமை தான் ஞாபகத்திற்கு வரும். உப்பு தானே என்று அலட்சியமாக இருக்க முடியாது. உப்பில்லா பண்டம் குப்பையில் என்று பழமொழயே இருக்கிறது. உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்றும் சொல்லுவார்கள். இப்படி உப்பை சார்ந்து பழமொழிகளும் நம்பிக்கைகளும் உருவாக சரித்திரத்தில் உப்பின் முக்கியதுவமே காரணம் என்று நினைக்கிறேன். 

உலக அரசியல் சரித்திரத்தை பற்றி படிக்கும் பொழுது உப்பு என்ற பண்டம் தவிர்க்க முடியாத ஒன்று. விவசாயம் நடைமுறையில் சாத்திய படும் முன் மனிதன் இறைச்சியை உண்டு கொண்டு வாழ்ந்து வந்தான். அப்பொழுது மழை புயல் குளிரில்லாத காலங்களில் மட்டுமே அவனால் வேட்டையாட முடிந்தது. அதுவும் பல ஆபத்துகளின் மத்தியில். அப்படி வேட்டையாடிய இறைச்சியை மழை காலங்களில் சேமித்து வைக்க கற்கால மனிதன் உப்பை பயன் படுத்தினான். அதை உப்பு என்று தெரியாமல் பயன்படுத்தினான். 

இறைச்சி உண்ணுதலுக்கு மனிதன் காலம் காலமாய் பழகி வந்ததினால், ஒரு கட்டத்தில் ரோமானிய பேரரசில் சம்பளத்தில் ஒரு பகுதியாய் உப்பு தர பட்டது. அது அவன் சந்தையில் வாங்கும் இறைச்சியை பதப்படுத்த பயன் படுத்தி கொண்டான். 

இக்காலம் போல் அக்காலத்தில் உப்பு கிடைக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாததால், கிடைக்கும் கொஞ்சம் உப்புக்கு மாற்றாக தங்கம் தர பட்டுள்ளதாம். 

இறைச்சியை உண்பவனுக்கு மட்டுமல்லாமல் சைவ உணவு வகைகளை சாப்பிட்டு பழகிய மனிதனுக்கும் உப்பு தேவை பட்டது சமைத்த உணவிற்கு சுவை சேர்க்க. உப்பின் வேதியியல் கட்டமைப்பு நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறதாம். 

உப்பு சரித்திரத்தில் மிக அண்மைய நிகழ்வு என்று பார்த்தால் அது காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகம் தான். உப்பு மீதான வரி. 

உலகத்தில் இருக்கும் பல்வேறு நாட்டு ஊர்களில் பெயரில் உப்பை குறித்து இருக்கும்.

தற்கால உப்பு அரசியலை பற்றி பேசும் பொழுது கார்ப்பரேட் உலகின் சோடியம் உப்பை சந்தை படுத்துதல் பற்றி கட்டாயம் பேசியே ஆகணும். ஏனென்றால் நமது உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் தசைகளும் நரம்புகளும் சரி வர இயங்க சோடியம் சத்து தேவை படுகிறது. 

இன்றைய நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் உப்பில் சோடியம் நிறைந்துள்ளது. எந்தளவிற்கு என்றால் ஒரு டி ஸ்பூன் உப்பில் 2300 மில்லி கிராம் அளவு சோடியம் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான ஆள் உட்கொள்ள வேண்டிய சோடியம் சத்தின் அளவு.

அதாவது ஒருவன் தினசரி உணவை தவிர்த்து அவன் வெளியே உண்ணும் துரித உணவுகளிலும் இந்த சோடியம் சத்துக்கள் அதிகமுள்ளது. காலையிலிருந்து இரவு வரைக்கும் ஒரு மனிதன் உண்ணும் சோடியம் சத்தின் அளவு, அந்த 2300 மில்லி கிராமையும் மிஞ்சி தான் இருக்கும். 

அப்படி என்றால் அதிக சோடிய சத்துக்கள் உடலுக்கு நல்லதா ?? என்று கேட்டால் இல்லை என்று தான் பல உணவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். 

அதிக சோடிய சத்து ஒருவனுக்கு இருந்தால், அவனுக்கு அதிக ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆகியவை வரும். 

இதை எல்லாம் பொதுமக்களிடம் மறைத்துவிட்டு காலை முதல் இரவு வரையிலும் பல்வேறு விளம்பரங்கள் மூலம் உப்பை அதிகம் உண்ண வைத்து கொண்டே இருக்கிறார்கள் உணவு விற்பனையாளர்கள். அதிக உப்பு என்றால் அதிக சோடியமும் உடலுக்குள் போகிறது அவற்றின் மூலம். 

1980
களின் இறுதி வரைக்கும் கல் உப்பை நேரடியாக தள்ளு வண்டியில் வைத்து தெருவில் விற்று கொண்டு இருந்தார்கள். இந்த ரக உப்பு தான் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் இப்பொழுது கடைகளில் கிடைக்கும் உப்பு என்பது உப்பின் இயற்கை தன்மை நீக்கியவையாக தான் இருக்கிறது. 

நமது பாரத நாட்டில் பண்டைய காலத்தில் விவசாயமும் உப்பு உற்பத்தியும் ஒன்றாக தான் கருதி வந்து உள்ளார்கள். 

சோழ சாம்ராஜ்ஜியத்தில் விவசாய நிலத்தையும் உப்பளத்தையும் கண் போன்று பாதுகாத்தனர். 

விவசாயிகளுக்காக பொங்கல் விழா எப்படி கொண்டாட பட்டதோ அதே முக்கியத்துவதோடு தான் பரதவர்களுக்காகவும் உமணர்களுக்காகவும் இந்திர விழா கொண்டாட பட்டது. 

இந்த இந்திர விழா என்பது பொங்கல் கொண்டாட பட்ட அதே நேரத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் தான் கொண்டாட பட்டுள்ளது. 

அப்பொழுது விவசாயிகளுக்கு எப்படி அறுவடையோ, அக்கால உப்பளத்தில் உப்பு உற்பத்தி தொடக்கமும் அப்பொழுது தான் ஆரம்பிக்கப்பட்டது. ஜனவரி முதல் ஜூன் வரை. 

இதையெல்லாம் வைத்து பார்த்தால் இந்திர விழாவை உமணர்களின் பொங்கல் என்றே சொல்ல தோன்றுகிறது. 

அப்பொழுது உப்போடு சம்மந்தமான ஆட்கள் என்று பார்த்தால் உமணர்களும் பரதவர்களும் தான். உமணர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் தான் உப்பை வைத்து வணிகம் செய்தவர்களாக இருக்கிறார்கள்.

பரதவர்களுக்கு கூலியாக உப்பு தரபட்டு இருக்கும் போல. இவர்கள் மற்ற நில பகுதிக்கு போய் உப்பை பண்டம் மாற்று முறையில் தந்து பொருட்கள் வாங்கி வந்துள்ளார்கள். ஒரு சமயத்தில் உப்புக்கு மாற்றாக தங்கம் தர பட்டுள்ளது தமிழ்நாட்டு பகுதியில் (அப்பொழுதெல்லாம் தமிழ்நாடு எல்லாம் இல்லை, வெறும் தமிழ் மொழி மட்டும் தான்).

இவர்களுக்கு என்ன மாதிரியான மரியாதை இந்திர விழாவில் தர பட்டுள்ளது என்று பார்த்தால், ஒரு சங்க பாடலில் "அரசர் முறையோ பரதவர் முறையோ" என்று வருகிறது. 

இப்படிப்பட்ட அளம் / உப்பளம் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் கோவளம் கூட அளம் கொண்ட ஊர் தான். இப்பொழுது அங்கு உப்பு உற்பத்தி நடக்கிறதா என்று தெரியவில்லை . அந்த இடமெல்லாம் வணிக தொழில்நுட்ப மையங்களாகவும் ரியல் ஸ்டேட்டாகவும் மாறி இருக்கிறது. 

நான் இதுவரைக்கும் படித்த அரசு திட்ட அறிவிப்பில் எதிலும் உப்பளம் மேம்பாடு பற்றி எதுவும் இல்லை. அரசு கல் உப்பை கொள்முதல் செய்கிறதா என்று தெரியவில்லை. கல் உப்பு தான் மனித உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் தமிழக ரேஷன் கடை எல்லாவற்றிலும் தனியார் கம்பனிகள் தயாரிக்கும் தூள் உப்பே விற்க படுகிறது. 

அந்த காலத்தில் உப்பின் முக்கியத்துவம் எத்தகையது என்று பார்த்தோமானால் உப்பின் உற்பத்தியிலிருந்தும் விற்பனை மீதான வரியிலிருந்தும் கிடைத்த பணத்தில் தான் சீனா பெருஞ்சுவர் கட்ட பட்டது. 


Related Posts with Thumbnails