Pages

Sunday, February 23, 2014

*பாலியல் பிரச்சனைகள்* @ #மலிவான படங்களில்#

காட்சிபிழையில் சுரேஷ் கண்ணன் எழுதிய "கல்யாண சமையல் சாதம்" படம் பற்றிய கட்டுரை படித்தேன். அதில் அவர் பாலியல் பிரச்சனை பற்றி பேசிய தமிழ் படங்கள் மிகவும் குறைவு என்று சொல்லி இருக்கிறார்

உண்மை தான் என்றாலும், பாரதிராஜா இயக்கிய "வாலிபமே வா வா" படத்தை பற்றி அவர் சொல்லிருக்கவில்லை.

இதை பற்றி  அவரிடம் கேட்ட பொழுது, அதற்கு அவர்காதல் ஓவியத்தை' தமிழக மக்கள் தோல்வியடையச் செய்த வெறுப்பில் 'உங்களுக்கு இதானடா வேண்டும்' என்கிற பழிவாங்கலில் பாரதிராஜா எடுத்த மலினமான படமது. இதையெல்லாம் பாலியல் சிக்கல்களைப் பேசும் படமாக கருதக்கூடாது." என்று சொன்னார்

இது ஜனரஞ்சகமான படம் தான் என்றாலும் பாலியல் பிரச்சனை பற்றி பேசியிருக்கும் படம்.

கார்த்திக், ராதா நடித்திருப்பார்கள்

அம்மாவின் ஆதிக்கத்தில் எடுப்பார் கைபிள்ளையாக வளர்ந்த நாயகனுக்கு முரட்டு தன்மை உள்ள பணகார பெண்ணான நாயகி மீது காதல். அவள் இவனை ஆண்மை குறித்து கிண்டல் செய்து கொண்டே இருக்க, அவன் பயந்து போய் கடத்தல், ஊரை விட்டு ஓடி போகுதல்.... எல்லாம் முடிந்து அவன் மேல் காதல் வந்த நாயகி தானே முன்வந்து நாயகன் ஆண்மகன் தான் என்பதை நிரூபிக்க உதவி செய்வதாய் படம் முடியும்.

குறிப்பீட்டு சொல்ல எதுவும் படத்தில் இல்லையென்றாலும், பாலியல் பிரச்சனை பற்றி பேசிய படங்கள் என்று வந்தால், இதற்கென்று இடமுண்டு பாரதிராஜா இயக்கியுள்ளதால்
பாலியல் பிரச்சனை பற்றி பேசிய மலிவான படங்கள் என்று வரும் பொழுது ரம்யா கிருஷ்ணன் அவர்களின் முதல் படமான "வெள்ளை மனசு" படத்துக்கும் இடமுண்டு. இதில் அவருக்கு ஜோடியாக YG மகேந்திரா நடித்திருப்பார்

கிராமத்தில் ஒன்னும் தெரியாத வயதிற்கு வந்த பெண்ணான நாயகியை பக்கத்து வீட்டு வயோதிகர் வசிய படுத்த முயற்சிப்பார். நாயகிக்கு உடல்சார் இன்பங்கள் பற்றியெதுமறியதிருப்பார். இதற்கிடையில் பட்டணத்தில் வேலை பார்க்கும் தாய் மாமனான நாயகனுக்கு அவளை கல்யாணம் கட்டி வைத்துவிடுவார் நாயகியின் அம்மா

கல்யாணத்திற்கு பிறகான காலத்தில் இருவரும் பட்டணத்தில் குடிபுகுவார்கள். நாயகன் தேன் குடிக்க விரும்பிய வண்டாய் நாயகியை சுற்றி வர, நாயகியோ விருப்பங்கள் ஏதுமின்றி தெரு சிறுவர்களோடு விளையாடி கொண்டு இருப்பார். தவித்து போன நாயகன் பக்கத்து வீட்டு பெண்ணுடன் தொடர்பேற்டுத்தி கொண்டு இன்புறுவார். விளையாட்டி களைத்து வரும் நாயகி இந்த இன்புறுதலை கண்டு கிராமத்திற்கு போன பின் மனம் தெளிவடைந்து தனது கடமையை உணர்ந்து நாயகனுக்கான இன்ப பங்கீட்டை வழங்குவார். பிறகு படத்துத்திற்கு சுபம்.

பதின்ம வயதில் இப்படத்தை பார்த்து என் மன சிறகுகள் தேவையில்லாத வானத்திலெல்லாம் பறந்ததை எம்மால் மறக்க முடியாது

ராஜ் டிவியின் ஆரம்ப காலங்களில் இப்படத்தை அடிக்கடி ஒளிபரப்புவார்கள். இப்பொழுதும் பரப்புகிறார்களாயென்றறிய முடியவில்லை

இணையத்திலும் தேடி பார்த்ததில் கிடைக்கவில்லை
ஊவூப்ஸ். நேரடி தமிழ் படமில்லை. இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியீட பட்டது. இதுவும் பாலியல் பிரச்சனை பற்றி பேசிய படம் தான். ஆனால் அது பாலியல் பிரச்சனை தானாயென்றெனக்கு தெரியவில்லை. மலிவான பட்ஜெட் படம் தான்

இந்த படத்தை நான் வெட்டியாக இருந்த காலத்தில் கணினி வகுப்புக்கு போய் வந்து கொண்டு இருந்த காலத்தில் பார்த்தேன் திருச்சி மாரிஸ் அரங்கில்

இந்தி படமென்பதால் நடித்தவர்களின் பெயர்கள் எனக்கு தெரியவில்லை

வேலையெதுவுமில்லாத இளைஞனொருவன் வீட்டு பொருளாதார கஷ்டங்களை போக்க நிர்வாண நடனம் / கவர்ச்சி நடனம் ஆட முடிவெடுக்கிறான். துணைக்கு அவனது பணக்கார நண்பனையும் சேர்த்து கொள்கிறான். பெண்கள் கூடும் இடங்களில், பெண்களுக்கு மட்டுமேயான விருந்துகளில் இவர்கள் நடனம் ஆடுகிறார்கள். அப்படி எல்லாம் சுமுகமாக போய் கொண்டு இருக்கும் வேளையில் ஒரு விருந்துக்கு நண்பன் இல்லாமல் இவன் மட்டும் நடனம் ஆடும் படி ஆகிவிடுகிறது

அந்த விருந்தில் இவனை கண்டுகொண்ட ஒரு நடுத்தர வயது பணக்கார பெண்மணி மறுநாள் தொலைபேசியில் அழைக்கிறாள் ஒரு விடுதிக்கு. அங்கே அவனுக்கு ஒரு நிபந்தனை வைக்கிறாள். தான் யாரென்று கண்டுபிடிக்க கூடாதென்றும், இருவருக்கிடையான உறவு விடுதியில் மட்டும் தான் என்கிறாள். மேலும் தொலைபேசித்து அழைக்கும் பொழுதெல்லாம் வந்து தன்னை ஆணுறை போட்டு கொண்டு புணர்ந்துவிட்டு போகும் படி சொல்கிறாள். ஒவ்வொரு சந்திப்புக்கும் பணம் தருவதாக சொல்கிறாள்

பிறகு தனியாக நடனமும், விடுதி சந்திப்புமாய் காலத்தை கடத்துகிறான். அதிலிருந்து வரும் பணத்தை வைத்து குடும்ப நிலையை சமாளிக்கிறான்

ஒரு சந்திப்பில் புணர போகுமுன் அந்த பெண்மணி மேல் காதல் வந்துவிட்டதை அவளிடம் சொல்லி, இந்த புணர்வில் இருந்து ஆணுறை போடுவதை நிறுத்தி கொள்ளட்டுமாயென்று கேட்கிறான். இதனால் கோபம் கொண்ட அந்த பெண்மணி அவனை தனியே விட்டுவிட்டு விடுதியை சென்று விடுகிறாள். பிறகு அவளிடமிருந்து அவனுக்கு எந்த அழைப்பும் வராததால், காதல் பைத்தியம் பிடித்து ஊர் முழுக்க தேடி அலைகிறான், விருந்து இடங்களில் எல்லாம் தேடுகிறான்

எவ்வளவு முயன்றும் அந்த பெண்மணியை கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து அமைதிகொள்ள வேண்டி பணக்கார நண்பனை பார்க்க அவன் வீட்டிற்குள் முதல் முறையாய் போகிறான்

உள்ளே போனவனுக்கு அதிர்ச்சி. அவன் யாரென்று தெரியாமல் விடுதியில் அடிக்கடி சந்தித்து, காதல் கொண்ட பெண் வேறு யாருமில்லை, அவர் நண்பனின் தாய் தான்

பொறுக்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் நண்பனிடம் போய் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கிறான். தாங்க முடியாமல் அவனை பணக்கார நண்பன் அடித்து போட்டுவிட்டு போய் விடுகிறான்.

பிறகு ஒரு நாளில் அந்த பணக்கார நண்பன் தன் அப்பாவோடு சேர்ந்துகொண்டு அவனது அம்மாவை கேள்வி கேட்கிறான்

அப்பொழுது அவள் அழுதபடி அவள் கணவனிடம் தனிமையும், நீண்டகால நிராகரிப்பு, வாழ்வில் வெறுமை தான் இப்படி செய்ய வைத்தது என்று சொல்கிறாள். எல்லோரும் புரிந்து கொண்டு ஒன்று சேர்கிறார்கள். அடி வாங்கின நாயகன் வெளிநாட்டில் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர அந்த நாட்டுக்கு போகிறான். பிறகு படத்துக்கு சுபம்

பத்து வருடத்திற்கு முன்பு இந்த படத்தை பார்த்துவிட்டு அரங்கை விட்டு வெளியே வரும் பொழுது கொலைவெறியோடு தான் வந்தேன். கதை இப்படி இருக்கிறதே என்பதற்காக இல்லை, "A" சான்றிதழை பட போஸ்டரில் போட்டுவிட்டு ஏமாற்றிவிட்டார்களே என்று தான். ஒரேயொரு உதட்டு முத்த காட்சி மட்டும் தான் இருந்ததே என்றும்

அப்படி ஒன்றும் முக்கிய படம் இல்லை. இணையத்தில் கூட அந்த ஒரேயொரு உதட்டு முத்த காட்சி மட்டுமே பார்க்க கிடைக்கிறது

இப்பொழுது யோசித்து பார்த்தால், ஏதோ வெளிநாட்டு படத்திலிருந்து உரிமையற்ற நகலெடுத்திருப்பார்களோயென்று தோன்றுகிறது

இந்த கட்டுரையில் முறையே நான் சொன்ன படங்களில் கவனித்து பார்த்தோமானால் மூன்று விதமான பிரச்சனைகளை பற்றி பேச பட்டு இருக்கும். பயம், அறியாமை, நிராகரிப்பு .... பாலியல் பிரச்சனைகளுக்கு மொத்தம் இதுவே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் பல பாலியல் குற்றங்களுக்கான மூலங்களை  இதுனுள்ளடக்கி விடலாம்

இந்த மூன்று காரணிகளுக்கு எப்படி பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை இந்த மூன்று படங்களின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

இவை மூன்றும் சரியான எடுத்துக்காட்ட என்று தெரியவில்லை. உலக படங்களை வைத்து இந்த பிரச்சனைகளை பற்றி மேலும் சொல்லியிருக்கலாம். ஆனால் நான் அவ்வளவாக உலக சினிமா பார்த்ததில்லை

மூன்று இடத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது வீட்டினுள்ளிருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது

Related Posts with Thumbnails