Pages

Monday, March 24, 2014

ஞெகிழி அரசியல் * செங்கல்களான ஞெகிழி போத்தல்கள் * Plastic Bottle Bricks *


சமீபகாலமாக செங்கலுக்கு பதிலாக ஞெகிழி போத்தல்களை வைத்து வீட்டு கட்டுவதை பிரபல படுத்தி வருகிறது சென்னையை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். அதாவது எப்படி என்றால் குப்பையாக வீசப்படும் ஞெகிழி போத்தல்களில் மண் நிரப்பி, அடுக்கி வைத்து பின் அதன் மேல் வேண்டிய கலவையை பூசி, சுவர் எழுப்புவது. 

இதன் மூலம் பல நன்மைகள் இருக்கிறது என்று சொல்ல பட்டாலும், இதனை பிரபல படுத்த ஆதிக்க வர்க்கம் கையில் எடுத்திருப்பது ; "இதனை பயன்படுத்துவதின் மூலம் வீட்டு கட்டுவதற்கான செலவு பாதியாக குறையும்" என்பது தான். எனக்கு தெரிந்து சென்னையில் கொஞ்ச நாட்களாய் தான் இந்த கோஷம் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இம்முறையில் வீடு கட்டினால், அவற்றின் விற்பனை மதிப்பு குறைக்கிறது என்று கருதுவதால், துணிச்சல் கொண்டு இம்முறையை கையாளாமல் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது குறி யாரென்று பார்த்தோமானால் "எங்கும் இயற்கை, எதிலும் இயற்கை" என்று என்னை போல் இயற்கை பித்து பிடித்தவர்கள் தான். 

இதில், இந்தியாவை பல நுகர்வு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் எப்படி நுகர்வு குப்பை தொட்டியாக பார்க்கிறதோ, அப்படி தான் ஆதிக்க வர்க்க நிறுவனங்கள் பார்க்கிறது, தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் பங்கு இருக்கிறது என்று சொல்ல படுகிறது. 

எப்படி என்றால், உலகில் பல நாடுகளுக்கு குப்பையாக விழும் ஞெகிழி போத்தல்கள் தான் பெரும் அச்சுறுத்தலாக தான் இருக்கிறது. அவற்றில் ஒரு பகுதியை மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்ப முடிகிறது அவர்களால். மற்றவைகள் மறுசுழற்சிக்கு ஏற்றவையாக இல்லை. இவற்றை மூக்காடு போட்டு கொண்டு கடலில் கொட்ட முடிவதில்லை ; சாயம் வெளுத்து விடும். நிலத்தின் புதைத்தால் அவர்களது நாட்டின் வளம் கெட்டு விடும், முக்கியமாக அதற்கு அவர்களது நாட்டின் சட்டமும் கொடுக்காது. இதை எல்லாம் கவலை படாத நாடு இந்தியா இருக்கவே இருக்கிறதே அவர்களுக்கு. 

இந்தியாவிலும் சட்டப்படி இந்த முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை, அப்படி கிடைக்க தான் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் முயற்சிகள் எடுக்க படுகிறது. அந்த முயற்சிக்கு பலியாய் இருக்கவே இருக்கிறது இயற்கை பித்து ஆட்டு மந்தை கூட்டம். ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தின் அசூர வளர்ச்சியால் ஞெகிழி பயன்பாடு அதிகமாகி இருக்கும் இந்த வேளையில், ஆதிக்க வர்க்கத்தின் கார்பன் கால்தடத்தின் பற்றிய குற்ற உணர்ச்சியை போக்கி கொள்ள இம்முயற்சிகள் உதவும். அதாவது ஞெகிழி போத்தல் குப்பைகள் அதிகம் விழுந்தாலும் பரவாயில்லை, அதை மக்களின் வீடு கட்டலுக்கு பயன் படுத்தி கொள்ளலாம் என்று. 

அம்முறையில் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்வதால் மக்களுக்கு சுகாதார கெடு எதாவது வருமாயென்று தெரியவில்லை.

தேடி பார்த்ததில் அயல்நாட்டில் சில நிறுவனங்கள் இருக்கிறது. அவர்கள் இந்தியாவில் சீக்கிரம் கால் பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

தன்னார்வ நிறுவனம் தற்பொழுது ஞெகிழி போத்தல்களாலான மாதிரி வீடுகளை அமைத்து பெரும் பணகார ஆடுகள் இடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறது. மஞ்சள் தண்ணி தெளித்து ஆடு வெட்ட பட்டால் அரசு அங்கீகாரம் கிடைத்துவிடுற நிலை இப்பொழுது. 

இது மட்டும் நடந்துவிட்டால் ஞெகிழி போத்தல்களை சேமிக்கும் கிடங்காக பொதுமக்களின் வீடுகள் மாறிவிடும் அல்லது மாற்றப்பட்டு விடும். ஆட்களை அமர்த்தி, அவர்களை தெருவில் அலைய வைத்து ஞெகிழி போத்தல்களை சேமிப்பதை விட, அவர்களுக்கு வீடுகள் மூலம் ஞெகிழி போத்தல்களை சேமிப்பதால் செலவும் மிச்சம், நேரமும் மிச்சம்.
Related Posts with Thumbnails