Pages

Sunday, March 23, 2014

*தில்லாலங்கடி அடகு கடை* - *Pawn Stars*

ஒரு அடகு கடையின் நிகழ்வுகள் மூலம் நாம் என்ன தெரிந்துகொள்ள முடியும் ???? 

நம்மில் பலர் சினிமா மூலமே அடகு கடை பற்றி தெரிந்து வைத்திருப்போம். அதிக வட்டி வாங்கும் இம்பிள்க்கி நம்பிள்க்கி சேட்டுஜி, கதாநாயகர்கள் இடம் ஏமாந்து போகும் சேட்டு என்று தான் பலருக்கும் அறிமுகம் இருக்கும் வட்டி கடை பற்றி. அதிகபடியாக போனால் நகை அடகு வைக்கும் இடம் என்று "கைல இருக்கு தங்கம், கவல எதுக்கு சிங்கம்" போன்ற விளம்பரங்கள் மூலம் புரிந்து வைத்திருப்போம். நானும் அப்படி தான், சில நாட்களுக்கு முன்பு வரையில். 

அந்த எண்ணம் மாறியது, History Channel TV 18 என்ற நிறுவனத்தின் தமிழ் சேவை ஆரம்பித்த பொழுது. இதில் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு பல நிகழ்ச்சிகள் இருப்பினும், எனக்கு பிடித்த நிகழ்ச்சி என்று பார்த்தோமானால் அது PAWN STARS தான். 

இந்த நிகழ்ச்சி 2009ம் ஆண்டு அமெரிக்க தொலைகாட்சியில் ஒளிபரப்ப பட்டது. அபுனைவு தொடரான இதன் ஜீவநாடி, GOLD AND SILVER PAWN SHOP என்ற மூன்று தலைமுறையினர் சேர்ந்து நடத்தும் அடகு கடையில் வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை அடகு வைக்கவோ, விற்பதற்கோ வருவது தான். 

இந்த நிகழ்ச்சியின் மற்றோரு சிறப்பு அம்சம் என்னவென்றால் பொருட்களை வாங்குவதையும் விற்பதையும் மட்டும் காட்டாமல், அந்த பொருட்களை பற்றிய சிறு அறிமுகத்தையும் தருகிறார்கள். எப்படி என்றால் பொருளை கொண்டு வருபவர் சொல்வதையும், அடகு கடைகாரர்கள் சொல்வதையும் தனி தனியே காட்டுகிறார்கள். இருதரப்பினரும் சற்று சந்தேகமாக நிலை கொண்டு இருந்தால், நிபுணர்கள் வரவழைக்க பட்டு, அவர்கள் சொல்வதையும் காட்டுகிறார்கள். 

அப்படி என்ன மாதிரியான பொருட்கள் இந்த கடைக்கு கொண்டு வர படுகின்றது என்று பார்த்தால் ஆச்சரியம் அளிக்கின்றன. 

உதாரணமாக....

முதலாம் போரில் பயன்படுத்தபட்ட துப்பாக்கி, நானூறு வருடங்களுக்கு முன்பு எழுத பட்ட புத்தகத்தின் முதல் பதிப்பு, பழங்கால சினிமா சுவரொட்டிகள், அரிய கண்டுபிடிப்புகள்,பழமையான முக்கிய அரசியல் ஒப்பந்தங்கள், 1930களில் பயன்படுத்த பட்ட கடலை வறுக்கும் இயந்திரம் என்று பல. எல்லாமே சுவாரசிய தகவல்களை சொல்கிறது.

இடை இடைய நகைச்சுவையை தூண்டும் நிகழ்வுகள். அவை பெரும்பாலும் கடையை சேர்ந்த சம்மி என்பவரை சுற்றியே இருக்கும். 

மிக முக்கியமாக மறைபொருளாக அமெரிக்க சரித்திரத்தையும் அங்கொன்றுமிங்கொன்றுமாய் சொல்கிறது. 

காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் நேரத்தில் ஒளிபரப்பாகும் காலை நேர காட்சியை தான் பார்ப்பேன். அல்லது பொழுதுபோகவில்லையென்றால் இரவு வேளையில் இணையத்தில் பார்ப்பேன். 

அது மட்டுமல்லாமல் அந்நாட்டின் சமூக போக்கையும் கொஞ்சம் உணர்ந்து கொள்ள முடியும். 

அதிலும் புத்தகங்கள் வரும் பகுதிகள் தான் என் ஆதர்ஷம். என்னை போன்ற புத்தக பித்துப்பிடித்த ஆட்களுக்கு மிக முக்கியமான கருத்துக்களை கிடைக்கும் பகுதி அவை. 

இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் பெரும் வெற்றியடைந்த ஒன்று. இதன் டிவிடிக்கள் கூட வெளி வந்திருக்கிறது போல. ஆனால் இணையத்திலேயே பார்க்க கிடைப்பதால், அவைகளை வாங்க விருப்பமில்லையெனக்கு.


இந்த நிகழ்ச்சியில் முக்கிய நபர்கல் என்று பார்த்தால் பெரியவர் ஹாரிசன், அவரது மகன் ரிக் ஹாரிசன், பிறகு பெரியவரின் பேரன் கொரி. பிறகு கொரியின் நண்பர் எனக்கு பிடித்த சம்மி

கிட்டதட்ட சம்மியை விகடகவி போலவே பயன் படுத்தி இருப்பார்கள் நிகழ்ச்சி முழுவதும்

இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலம் என்றால், இதை வைத்து இணைய விளையாட்டு எல்லாம் அறிமுகபடுத்தி, சந்தை படுத்திருக்கிறார்கள்

எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று. 

No comments:

Related Posts with Thumbnails