Pages

Monday, April 14, 2014

* கலவை - மனத்தோன்றியவை *

துரித உணவிற்காக கடல் பிராணிகளை கொல்லும் போக்கு இந்தியாவிலும் தொடங்கி இருப்பதாய் சொல்கிறார்கள், என்னவென்று தெரியவில்லை. ஆனால் எனக்கு தெரிந்து இந்திய மீன் வள துறை வெகு காலமாய் மீன் பண்ணை முறையை பிரபல படுத்தி வருகிறார்கள்.

தற்பொழுதிய சூழ்நிலை பற்றி தெரியவில்லை, ஆனால் 1990 இறுதி வரைக்கும் இதை தொழில் சார் நபர்களிடம் பரிந்துரை செய்து வந்துள்ளனர்

அமெரிக்காவில் துரித உணவுக்காக அதிக அளவில் கடல் பிராணிகள் கொல்ல படுவதை எதிர்த்து இருபது வருடங்களுக்கு முன்னால் சட்டம் கொண்டு வந்ததாக சொல்கிறார்கள்
- - - - -

குழந்தைக்கு லங்கோட் கட்டுறதுக்கு கூட பயிற்ச்சி வேணும் போல. இன்று மதியம் கிருஷ்ணாவுக்கு லங்கோட் கட்டுற பாக்கியம் எனக்கு கிடைத்தது. எப்படி கட்டுவது என்று தெரியாமல் துணியை இரண்டாக கிழித்து முன்னாலும் பின்னாலும் மறைத்து அரைஞான் கயிற்றில் முட்டு கொடுத்து வெற்றி கரமாக கட்டினேன். ... அதிலும் பின்பக்கம் கட்ட அவன் கால்களை தூக்குவதற்குள் பயம் உச்சம் தட்டி விட்டது. ஒரு வழியாக கட்டி முடித்து ஜென் நிலையை அடைகையில் கட்டிலை நனைத்து விட்டார் கிருஷ்ணர். பிறகு தான் புரிந்தது லங்கோட் என்பது மறைப்புக்கு இல்லை தடுப்புக்கு என்று
- - - - -

வழக்கம் போல் இந்த வருடமும் பொறியல் கல்லூரிகளின் லேகிய வியாபாரத்தில் பலியாக போகும் மாணவர்களை நினைத்து பாவமாக தான் இருக்கிறது

இதற்கு சாவி கொடுப்பது போலொவ்வொரு பண்ணையும் மன்னிச்சூ பள்ளியும் எங்கள் பள்ளியில் ஏழு பேர் நூத்துக்கு நூறு வாங்கி இருக்காங்க என்று அப்பள்ளியில் 500 பேர் பரீட்சை எழுதி இருக்கிறார்கள் என்ற விஷயத்தை மறைத்து விட்டு விளம்பரம் செய்வார்கள். இந்த வருடமும் செய்வார்கள்

ஆனால் இந்தியாவில் இந்த கால களத்தை பெரும் வியாபாரமாக பார்க்கிறார்கள். எது சிறந்த கல்லூரி என்று பட்டியல் போட்டு ஊடக துறையினர் பெரும் லாபம் பார்ப்பார்கள்.எதோ இந்த படிப்பை படித்து விட்டால் வாழ்க்கை கஷ்டமில்லாத ஒன்றாக மாறி விடும் என்று படம் போடுவார்கள். ஆனால் உண்மையில் எல்லோருக்கும் நன்றாக படித்தவனுக்கும், படிக்காதவனுக்கும் வாழ்க்கை என்பது கஷ்டங்களிறைந்தொன்றாக தான் இருக்கும்.

இந்த கால கவலைகள் என்பது 1990 வரைக்கும் ஆசைகளாக இருந்தது, அதன் பிறவு  தேவைகளாக மாறிவிட்டது.

இந்த நடுதர குடும்பங்களில் கனவாக இருப்பதை வைத்து அரசு வெளி நாட்டிற்கு சென்று எங்களிடம் அறிவு வளம் இவ்வளவிருக்கிறது எங்களிடம் வந்து எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று கெஞ்ச வேண்டியது.

இதை பற்றி வாத்தியார் சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதுமில் 1952 வருச  இன்ஜினீயரிங் வேட்டையை பற்றி அருமையாய் எழுதிருப்பார். கிடைத்தால் படித்து பாருங்கள்.
- - - - -

சுதந்திரத்துக்கு முன்பான தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி பேசுவதில் எனக்கு தெரிந்து முக்கிய இடத்தை பிடிக்கிறது மனோகர் தேவதாஸ் எழுதிய எனது மதுரை  நினைவுகள் என்ற அபுனைவு புத்தகம்.அதிலும் அந்தகால சினிமா ரசனை பற்றியும் பேசுகிறது.  
- - - - -

துறை சார்ந்து கொஞ்சம் அறிவை வளர்த்து கொள்ளலாம் என்று தமிழில் முதலீடு பற்றிய பத்திரிக்கைகள் என்ன என்ன வருகிறது என்று கடைக்கு போய் நோட்டம் விட்டத்தில் ஏமாற்றமே கிடைத்தது

ஆங்கிலத்தில் முதலீடு பற்றிய நல்ல பத்திரிக்கைகள் என்றால் குறைந்தது 50 வோவாவில் இருந்து  100 வோவாவிற்கு தான் கிடைக்கிறது. அது  கைகாசில் அடங்காது என்று தான் தமிழில் படிக்கலாம் என்று தேட ஆரம்பித்தேன். ஆனால் சொல்லி கொள்ளும் படி எதுவும் கிடைக்கவில்லை. எல்லா கடைகளிலும் கிடைக்கும் அந்த பிரபல பத்திரிக்கை பங்கு சந்தையில் அதை வாங்கு, இதை வாங்கு என்று சொல்வதில் தான் ஆர்வம் காட்டுகிறது. அதன் வாசகர்களை அதையும் தாண்டி உலக அரசியல், இந்திய பொருளாதாரத்தின் கட்டமைப்பு என்று பேசுவதில்லை.

கடைக்கும் போய் நோட்டம் விட்டத்தில் அரசியல் பத்திக்கைகள் தான் அதிகம் விற்பதாய் தெரிகிறது. மக்களுக்கு வெட்டி பேச்சு பேசுவதில் தான் ஆர்வம் அதிகம் என்று தெரிகிறது. மந்தையோடு மந்தையாக இருக்கும் ஆடுகள். மந்தையில் இருந்து விலகாத ஆடுகள். இந்த மந்தை உணர்வை தான் அதிகம் வியாபாரம் ஆக்கி பார்க்கிறது ஊடகங்கள்.

எல்லோரும் அரசியல் பேசுவதில் எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால் இப்புடி வெட்டியாக அரசியல் பேசி என்ன பண்ண போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. இவர்கள் பேசுவதை எல்லாம் கணக்கில் எடுத்து கொண்டு பார்த்தால் நாட்டில் நான்கு ஐந்து புரட்சிகள் வெடித்து இருக்க வேண்டுமே. ஆனால் இன்னும் பசுமை புரட்சி குறித்தான புரித்தலே இன்னும் பலருக்கு சரியாக இல்லை.   
- - - - - 

ராகவ்வின் நடிப்பிற்காக இந்த குறும்படத்தை ஒரு தரம் பார்க்கலாம், கதையை இன்னும் கொஞ்சம் விரிவாக கையாண்டு இருந்தால் குறும்படம் சிறப்பாக வந்திருக்கும்

ஒரு த்ரில்லர் சினிமாவிற்கான கதை கரு இதனுள் புதைந்து இருப்பதாய் உணர்கிறேன்

இயக்குனரின் அடுத்த குறும்படம் நன்றாக பட்டி பார்த்து டிங்கரிங் தட்டி எடுக்க பட்டால், நல்ல புகழ் அடையும்

குழுவிற்கு வாழ்த்துகள்
- - - - -

நானும் டுடூவும் இப்ப தான் pillow fight விளையாடி முடிச்சோம். பரபரப்பான விளையாட்டுல நான் நாலு பாயிண்ட்ஸும், டுடூ ஒரு பாயிண்ட்டும் எடுத்திருந்தோம்

சரின்னு அவளை ஜெய்க்க வைக்குறதுக்காக சில பல ராஜதந்திரம் கையாண்டு அவள ஜெய்க்க வைச்சுட்டேன்

என்ன ஒன்னு ஏசி ரூம் தான் போர்க்களம் மாதிரி ஆகிருச்சு. அம்மா வந்து பாத்தப்ப இரண்டு பேரும் நைஸா எஸ்கேப் ஆகிட்டோம்

# வாழ்வினிது 


Related Posts with Thumbnails