Pages

Sunday, November 30, 2014

கலவை - 30/11/2014 }சாண்டில்யன் & கல்கி கிளிஷேகள்{

எப்படி சாண்டில்யன் நாவல்களில் இரு நாயகிகள், ஒரு அயல்நாட்டு நண்பன் கதாபாத்திரங்கள் காண படுமோ, அப்படியான விஷயங்கள் கல்கி நாவல்களிலும் காண படும். 

அவை எதாவது கதாபாத்திரம் பற்றிய ரகசியமாக தான் பெரும்பாலும் இருக்கும். அப்படியாபட்ட ரகசியங்கள் பொன்னியின் செல்வனில் விரவியிருக்கும். அவை ஆதித்த கரிகாலன் மரணம், நந்தினியின் பிறப்பு ரகசியம், ஊமை ராணி யார் ..... நினைவிற்கு இவ்வளவு தான் யோசித்தால் வருகிறது. 

இதே மாதிரியான ரகசியங்கள் கல்கியின் மற்ற நாவல்களிலும் காணலாம்... அலை ஓசை நாவலை எடுத்து கொண்டால் தாரிணியின் பிறப்பு ரகசியம், ரஜினிபூர் பைத்தியக்காரி ஆகியவை. சிவகாமியின் சபதம் நாவலை எடுத்து கொண்டால் நாகநந்தியின் பின்புலம் ஆகியவை. பார்த்திபன் கனவில் சிவனடியார், மகா கபால பைரவர். 

நாவலுக்கு சுவைவூட்ட சாண்டில்யன் அவர்கள் எப்படி கதாநாயகியின் அழகை பற்றிய ஆலாபனையை எப்படி இரண்டு மூன்று பக்கத்திற்கு எழுதிருப்பாரோ, அதே போல் தான் கல்கி அவர்கள் தனது நாவலுக்கு சுவைவூட்ட கதாபாத்திரங்கள் பற்றிய ரகசியங்களை ஒரு யுத்தியாக கையாண்டு இருப்பார். 

சாண்டில்யனும் சரி கல்கியும் சரி, இருவரும் ஒரு வித கிளிஷேவில் மாட்டி கொண்டு இருந்தார்கள். 
= = = = =
சிவகுமார் நடித்து வந்த ஏவிஎம்யின் திக் திக் திக் தொடரை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். 

சிவகுமாரின் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை பார்த்த பிறவு தவறான முடிவை எடுத்து விட்டோமோயென்று யோசிக்க வைக்கிறது. ஆனால் சிறிது காலம் கழித்து சிவகுமார் நடித்த எத்தனை மனிதர்கள் தொடரில் மேற்கொண்ட கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கி இருப்பார். 

இவை இரண்டும் டிடி பொதிகையில் வந்தவை. அதுவரை தொலைகாட்சி தொடர்களில் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்த சிவகுமார் சித்தி மெகா தொடரில் ஓரம் கட்ட பட்டார்.

இதனையொட்டி திரைப்படங்களிலும் அவரது பங்களிப்பு குறைய தொடங்கியது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் எனக்கு தெரிந்து சேதுவிற்கு பின் அவரது முக்கிய படங்கள் எதுவும் வரவில்லை. வந்த படங்களிலனைத்திலும் துணை பாத்திரத்தில் தான் வந்தார். 

தனியார் தொலைகாட்சி சேனல்களின் எழுச்சியும் அவரது மிகைபடுத்தபட்ட நடிப்பின் ஏற்புடைய தன்மை குறையும் நுண்ணிய தொடர்பு இருக்கிறது. இந்த குறைவிற்கு காரணம் அவரது மகன் சூரியா திரைபடங்களில் நடிக்க தொடங்கியதுமொரு காரணமாக இருக்கலாம். நானிப்பொழுது பார்த்துக் கொண்டு இருக்கும் தொடரில் ஒரு காதல் காட்சி வருகிறது, அதில் எனக்கு அவர் சூரியனின் தந்தையாகவே தெரிவதினால் எதோ ஒரு சங்கடம் மனதிற்குள். 

மேலும் 1991ல் அவர் நடித்த சார் ... லவ் யூ படத்தின் படுதோல்வி அவரை நாயக கதாபாத்திரத்திலிருந்து துணை கதாபாத்திரத்துக்கு நிரந்தரமாக மாற வைத்தது. அதன் பின் அவரை வி.சேகரும் பாரதிராஜாவும் சேர்ந்து நடுத்தர வயது மற்றும் வயதான கதாபாத்திரத்துக்கு தள்ளி வைத்தார்கள். 

அண்ணாமலை தொடருக்கு பின் சிறிது காலம் கழித்து மேடைபேச்சில் ஒரு சுற்று வர தொடங்கினார். ஆரம்பத்தில் எனக்கு அது புதுமையாகவும் ரசிக்க கூடியதாகவுமாய் தான் இருந்தது. ஆனால் போக போக அவர் நடிப்பில் கையாண்ட கிளிஷே மிகைப்படுத்தல் ஆகியவையை கையாளுகிறாரோயென்றண்ணம் வரவே, அவைகளிலெனக்கு சுவாரசியம் போய் விட்டது. 
= = = = =

இன்னைக்கு கூட வேலை பாக்குற ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தேன். என்னை விட போஸ்டீங் நாலஞ்சு படி உயர்நிலை இருக்குறவர். 

சம்பளத்த பத்தி பேச்சு வந்தப்ப தீடீர்ன்னு அவர் " இதுக்கு தாண்டா நான் மூணு மாச சம்பள காச தனியா எடுத்து வைச்சுட்டேன்"னு சொன்னாரு. 

"
எதுக்கு ஜி ..."னு கேட்டேன்

"
ஆமா தீடீருன்னு இவங்க வேலைய விட்டு அனுப்பிட்டா என்ன பண்ணுறது ... குடும்பத்த நடத்தணும்ல ..."

எனக்கு திக்ன்னு ஆகிருச்சு. அவரோட மூணு மாச சம்பளம் என்னோட இரண்டு வருஷ சம்பளம். அவரோட லெவலுக்கே இப்புடி தயாரா இருக்குறப்ப ... நான் எவ்வளவு உஷார் பக்கிரியா இரூக்கணுமுன்னு தோனுச்சு 

கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இதைய எல்லாம் யோசிச்சதே இல்ல .... என் மேல எனக்கு இருந்த தன்னம்பிக்கை காரணமா இல்ல நான் தனி ஆளுங்குற தைரிய அலட்சியமான்னு தெரியல. 

இப்ப நான் தனி ஆளு இல்ல .... கல்யாணம் ஆகிருச்சு. ஒரு பயம் ஏற்கனவே மனசு வந்துருச்சு. அதனாலேயே இன்னும் தீவிரமா பொறுப்பா ஆபீஸ்ல வேலை பாக்குறேன். 

நான் பெரிய பிஸ்தான்னு எல்லாம் முன்னாடி காட்டிக்க ஆச பட மாட்டேன் .. ஆனா காட்டிக்குறேன். 

ம்ம்ம் .... இப்ப ஒரு மூணு மாச சம்பள பணத்த சேக்க முடியாட்டியும் ஒரு மாச சம்பள பணத்தையாச்சு சேத்து வைக்கணும். 

நான் எல்லோருக்கும் நான் என்ன சொல்லிக்குறது என்னன்ன மூணு மாச சம்பளத்தையும் அவசரத்துக்கு கொஞ்சம் காசையும் சேத்து வையுங்க. 

ஏற்கனவே நான் இதுக்கு முத கட்டமா ஆகுற செலவ கம்மி பண்ணிட்டேன். வாங்குட்டு இருந்த எல்லா பத்திரிகையையும் வாங்குறத நிறுத்திட்டேன். இதுவரைக்கும் பத்திரிகை வாங்குற செலவே எனக்கு ஒரு மாசத்துக்கு 850 ரூவா ஆகிட்டு இருந்துச்சு.
= = = = =
மெட்ராஸ் படத்த பாத்தேன். நம்ம இணைய குறியீடு ஸ்பெஷலிட்ஸ் கண்டுபிடிச்ச எந்த ஜாதி சம்பந்தப்பட்ட விஷயமும் படத்துல காணல.

ஒரேயொரு இடத்த தவிர, மாரி காளி கிட்ட இருந்து அடி வாங்கின பிறவு இவங்க எல்லாம் என்னோட இனம்ன்னு இடத்துல ஜாதி தான் வருது. அதுகூட இன்னன்ன ஜாதின்னு குறிபிட்டு எதுவும் சொல்லல.

வட சென்னை இந்த ஜாதி மக்கள்ஸ் அதிகம், அதனால அவங்கள பத்தி தான் சொல்லிருக்காங்கன்னு சில பேர் சொன்னத படிச்சு இருக்கேன். படிக்கவே ஒரே சிரிப்பா சிரிப்பா வந்துச்சு.

உதாரணமாக ....

இப்ப எப்புடின்னு தெரியல, பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் திருச்சிய முத்துராஜா கம்யூனிடி தொகுதின்னு சொல்லுவாங்க.... ஆனா பாத்தீங்கன எல்லா ஜாதி மக்களும் இருப்பாங்க. அப்ப திருச்சிய பத்தி படம் எடுத்த முத்துராஜா ஜாதி மக்கள பத்தின படமுன்னு சொல்லுவாங்களான்னு தெரியல.
= = = = =
நேத்து கோலா கம்பெனிக்கு எதிரா பேசின கத்தி படத்த ஐநூறு ரூவாக்கு கோக்கோ கோலா, நொறுக்குத்தீனிஸ் வாங்கி சாப்பிட்டுகிட்டே பாத்தாச்சு. 

பசி தீந்தது போக சாப்புடுற அடுத்த இட்லி இன்னொருத்தன்னோடதுங்குற கம்யூனிசமுன்னு விஜய் சொல்லுறாபடி. எதோ பசிங்குறது ஒரு வாட்டி எடுக்குற மாதிரி இருக்கு. ஒரு இட்லி சாப்புட்டுட்டு பசி தீந்து போயிருச்சுன்ன, இன்னொரு இட்லிய அடுத்த வேள பசிக்கு வைச்சுக்க போறான். எதுக்கு அடுத்த ஆளுக்கு தர போறான். 

இன்னொன்னு இப்பெல்லாம் ஒட்டல்ல ஒரு பிளேட் இட்லி ஆர்டர் பண்ணி சாப்பிட்டாலே பசி போக மாட்டேனுங்குது. இன்னொரு பிளேட் ஆர்டர் பண்ணலாமுன்னு பாத்த ஒரு நாள் கைகாசு முக்காவாசி ஒரு பிளேட்க்கே போயிருது. 

இந்த இட்லி கம்யூனிசத்த வைச்சு ரொம்ப நாளா தீக்க படாம இருக்குற கரகாட்டக்காரன் பட செந்தில் கவுண்டமணி வாழைப்பழ பிரச்சனைய முடிச்சுரலாமுன்னு பாக்குறேன். 

மீஞ்சூர் கோபி கதைய திருடினது மட்டும் இல்லாம அதைய இப்புடி கொத்து பரோட்டா போட்டுட்டாரு முருகதாஸ்.

இப்ப எனக்கு என்ன பயமுன்ன இட்லி கம்யூனிசத்த தொடர்ந்து அஜித், சிம்பு, தனுஷ் எல்லோருமா அடுத்து பூரி மார்க்சியம், தோசை சோஷலிஸமுன்னு ஆரம்பிச்சுருவாங்களோன்னு தான். 

எல்லாத்தையும் மீறி கம்யூனிசமுங்குறது பொருளாதார கொள்கையிலோ, புத்தகத்திலோ இல்ல, அது நம்ம சாப்புடுற முருகன் இட்லி கடையோட ஒரு பிளேட் இட்லி தான் இருக்குன்னு .ஆர்.முருகதாஸ் சொல்லி இருக்குறதால கத்தி படத்த ஒரு வாட்டி பாக்கலாம். 
= = = = =

Related Posts with Thumbnails