Pages

Sunday, June 14, 2015

அப்புசாமி படம் எடுக்கிறார்

தமிழில் சுவாரசியமான நகைச்சுவை எழுத்தாளர்களில் தேவன், ஜே.எஸ்.ராகவன் ஆகியோரை அடுத்து எனக்கு அதிகம் பிடித்தவர் பாக்கியம் ராமசாமி தான்.

இவரது கட்டுரைகளில் ப்ளஸ் டூ கட்டுரையை படித்தோமானால் வயிறு வலிக்க சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த கட்டுரையில் ப்ளஸ் டூ மாணவனது வீட்டில் இருப்போரின் மனநிலையை பகுடி செய்து இருப்பார். அந்த வீட்டில் ப்ளஸ் டூ என்ற நோய் எப்படி எல்லாம் தாக்கி இருக்கிறது என்று ஆர்ப்பாட்டமில்லாத எழுத்துக்களில் நம்மை சிரிக்க வைப்பார்.

இவரது அப்புசாமி சீதா பாட்டி கதையை கடக்காமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது.

ஜே.எஸ்.ராகவன் அவர்களை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இவரது கட்டுரைகள் எல்லாம் தேவன் எழுத்துநடையில் அமைத்து இருக்கும். மெல்லிய கோடு வித்தியாசம் தான் இருவரது எழுத்துக்கும். இவரது சிவசாமியின் சபதம் நாவலை (???) படிக்க வேண்டிய ஒன்று.

இவற்றை தவிர்த்து அதிகம் வாய் விட்டு சிரித்தபடியே படித்த புத்தகம் என்றால் கிரேஸி மோகன் அவர்கள் எழுதிய அமெரிக்காவில் கிச்சா. அப்புசாமி சீதா பாட்டி கதைகளில் வரும் ரசகுண்டு, பீமாராவ் இருவரில் யாரோ ஒருவரின் தாக்கத்தினால் எழுத பட்டாதாயிருக்குமென்று நினைக்கிறேன்.

முகில் எழுதிய புத்தகம் ஒன்று பெயர் மறந்து போய் விட்டேன், சிரிப்பு மருந்து. லொள்ளு காபியம் என்று நினைக்கிறேன்.

வாஷிங்டனில் திருமணம் ..... அந்த காலத்தில் அமெரிக்காவை பற்றி நம் மக்களுக்கு இருந்த ஆச்சரியத்தை, புரிதலை வைத்து எழுத பட்டது. வெளி வந்த காலத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டதாக கேள்வி பட்டு இருக்கிறேன். அதுவும் வானத்தில் பறந்து வரும் அப்பளங்களை அமெரிக்கர்கள் பார்த்து அது வேற்று கிரகவாசிகளின் விண்கலமோ என்று பயபடுவதை நகைச்சுவை பொங்க எழுதி இருப்பார் சாவி அவர்கள். பின்னர் தரம் தாழ்ந்த தரத்தில் சென்னை தொலைகாட்சி நிலையத்தில் (இன்றைய பொதிகை, முன்னர் டிடி தமிழ்) சீரியலாக எடுக்கப்பட்டது.

இணையத்தில் நகைச்சுவை மிளர வைக்கும் படி பலர் எழுதினாலும் எனக்கு ரொம்ப பிடித்தது   அக்காவின் எழுத்துக்கள் தான். அதிலும் 2008 வாக்கில் தன் காதிற்குள் வண்டு புகுந்த கதையும், புகுந்த பிறவு மருத்துவமனை சென்று வந்த அனுபவத்தையும் எழுதி இருப்பார். அந்த கட்டுரையை அவர் பதிவேற்றம் செய்த நடு இரவில் சில நிமிடங்கள் கழித்து படித்தேன். வேலை கிடைக்காத சமயம், கவலைக்குள் முழ்கி இருந்தென்னை பல மன தடைகளை தாண்டி சிரிக்க வைத்த கட்டுரை அது

வெட்டி வம்பு என்ற பெயரில் விஜய் குமார் என்பவர் எழுதி கொண்டு இருந்தார். சுஜாதாவின் எழுத்து தாக்கம் அதிகம் இருக்கும் இவரிடம். ஒரு சின்ன விஷ்யத்தை கூட சுவாரசியம் குறையாமல் எழுதுவார். சென்னைக்கு மாற்றலாகி வந்த உடனே எழுதுவதை விட்டுவிட்டர்

முத்தலிப் (பெயர் சரியானதா என்று தெரியவில்லை) எழுதிய ஒரு கட்டுரை தமிழ் இணைய உலகத்தையே சிரிப்பு கடலில் ஆழ்த்தியது. சுன்னத் கல்யாணம் பற்றிய அனுபவத்தை பேசும் கட்டுரை அது. அதற்கு முன்னர் அதை யாரும் எழுதி இருக்கிறார்களாயென்று தெரியவில்லை. அதிலும் சம்பவம் நடத்ததை பற்றியும் அந்த சம்பவத்திற்கு பிறகான நடந்தவை பற்றியும் அக்கட்டுரையின் படிக்கையில் .... வயிற்று பகுதி வலிக்குமளவிற்கு சிரித்தபடி இருப்போம். 

தங்கிலீஷில் (தமிழை ஆங்கில வார்த்தைகள் கொண்டு எழுதுவது) உஷா என்பவர் எழுதி கொண்டு இருந்தார். இப்பொழுது எழுதுகிறாராயென்று தெரியவில்லை. நகைச்சுவை மிளரும்

தேவன் அவர்களை பற்றி சொல்லாமல் விட கூடாது. விடவும் கூடாது. நாவல்களை தவிர்த்து கட்டுரைகள் சிறுகதைகள் தான் இவரது ராஜபாட்டையாக இருந்துள்ளது. அண்ணாசாலையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த பொழுது, மதிய சாப்பாட்டிற்கு பின் கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தில்  தேவநேய பாவாணர் நூலகத்தில் ரங்கூன் பெரியப்பா (???), மல்லரி ராவ் கதைகள் (??), சீனுப் பயல், விச்சுவுக்கு கடிதம் (???) ஆகியவற்றை படித்தேன்

அவற்றை படித்து முடித்த பின் தேவன் எழுத்துகளை தேடி தேடி வாங்கி,  என் மின்சார ரயில் பயணங்களை இனிதாகினேன்.

என்னவோ... எதையோ சொல்ல வந்து, சுற்றி வளைத்து எதையெதையோ சொல்லி கொண்டு வந்து விட்டேன். இப்பொழுது நான் படிக்க ஆரம்பித்திருப்பது பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய, உலக புகழ் பெற்ற அப்புசாமி தாத்தா & சீதா பாட்டி தோன்றும் "அப்புசாமி படம் எடுக்கிறார்".

Friday, June 12, 2015

வேளச்சேரி டூ சென்னை பீச்

சென்னை புறநகரில் வாழும் மக்களுக்கு தான் தெரியும் அவர் நம்புகிற பக்தி மார்கத்தை விட ரயில் மார்கத்தில் பயணிப்பது எவ்வளவு முக்கியம் என்பது.

நான் வாழும் பெருங்களத்தூரில் இருந்து திநகர் வரை செல்ல வேண்டுமானால் மின்சார ரயிலே உகந்தது. ஏனென்றால் அதில் சென்றால் வெறும் நாற்பது நிமிடங்கள் தான் ஆகும். இதே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் பேருந்தில் பயணித்தால் குறைந்தது இரண்டு மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரம் வரைக்கும் ஆகும் திநகர் போய் சேர.

பைக்கில் சென்றால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரைக்கும் ஆகும்.

2005
ஆம் ஆண்டுக்கு பிறகு புதிய வழி தடங்களில் பேருந்துகள் இயங்க ஆரம்பித்தது. அப்பொழுதும் சில வழி தடங்களில் பேருந்து இயக்க படாமல் இருந்தது என்று கேள்வி.

2011
ஆம் ஆண்டுக்கு முன்பு ஒருவர் கூடுவாஞ்சேரியில் இருந்து திருவான்மியூர் வரை செல்ல வேண்டுமானால் அவர் தாம்பரம் வந்து பிறவு அங்கு இருந்து T51 (தற்பொழுது அது 95) பிடித்து திருவான்மியூர் போக வேண்டும். தற்பொழுது கூடுவாஞ்சேரியில் இருந்தே திருவான்மியூருக்கு போகும் நேரடி பேருந்து செல்கிறது.

அதே போல் சைதாப்பேட்டை வரைக்கும் தான் சென்னை என்று இருந்த காலத்தில் செங்கல்பட்டுக்கும் காஞ்சிபுரத்திற்கும் நேரடி பேருந்து இருந்தா என்று தெரியவில்லை. வெறும் ரூட் பஸ் என்று சொல்ல பட்டவையே இருந்துள்ளது. ஆனால் இன்றோ நேரடி பேருந்து மற்றும் மின்சார ரயில் எல்லாம் இருக்கிறது.

சென்னை மின்சார ரயில் வழி தடங்கள் மக்களின் வேலை வாய்ப்புகளை அதிக படுத்தியுள்ளது. எனக்கு தெரிந்த ஒருவர் காஞ்சிபுரத்தில் இருந்து தினமும் நுங்கம்பாக்க அலுவலகத்திற்கு வந்து வேலை பார்த்துவிட்டு போகிறார். பயண நேரம் இரண்டு மணி நேரம் தான் ஆகிறதாம். Fast service ரயில் தான் அதற்கு காரணம். நானும் அந்த வழி தடத்தில் பயணித்து இருக்கிறேன்.

இது இப்படியாக இருக்க இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்திதாளில் வேளச்சேரி சென்னை பீச் இடையான ரயில் வழி தடத்தை குறை கூறி பேருந்து வழி தடமே போய் வர சிறந்தது எனவும் அதில் தான் பயண நேரம் குறைவு என்று எழுதி இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து வேளச்சேரியில் பாரிஸ் கார்னர் வரையிலான பேருந்துகள் இரண்டு வழி தடங்களில் இயக்க படுகிறது ஒன்று அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா சாலை, சிந்தாரிபேட்டை வழியாக போகும் ஒன்று. மற்றொரு வழி தடம் பெசன்ட் நகர், அடையாறு, மெரினா வழியாக போகும் மற்றொன்று. இதில் இரண்டு வழி தடத்திலும் அதிக முறை பைக்கில் பயணித்திருக்கிறேன் என்ற முறையில் சொல்கிறேன் ; இரண்டுமே வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழி தடங்கள்.

செய்தித்தாள் சொல்லும் வழி தடமான இரண்டாம் வழி தடத்தில் அடையாறு பகுதியை விட்டு வெளி வரதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். நேற்று தான் எனக்கு அப்படி ஆனது. இவர்கள் எந்த அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டு இந்த முடிவை சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அக்கட்டுரையில் சென்னை பீச் நிலையத்தில் இறங்கி விட்டு பாரிஸ் கார்னர் போக அதிக நேரம் எடுக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். சென்னை பீச் நிலையத்தில் இருந்து பர்மா பஜார் வழியாக போனால் தான் அதிக நேரம் எடுக்கும். அதற்கு பதிலாக நிலையத்தின் எதிரே இருக்கும் அன்னபிள்ளை தெரு வழியாக போனால் நேரம் குறைவாக தான் எடுக்கும்.

அந்த கட்டுரையாளர் பாரிஸ் கார்னர் போக வேண்டுமானால் எதற்கு சென்னை பீச் நிலையம் வரைக்கும் போக வேண்டும் என்று தெரியவில்லை. சென்னை ஃபோர்ட் நிலையத்தில் இறங்கினாலே குறைவான நேரத்தில் பாரிஸ் கார்னர் போய் விடலாமே ???

அதிலும் குறிப்பாக பறக்கும் ரயில் நிலையங்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் இருக்கிறது என்று சொல்கிறார். உண்மை தான் பய படும் அளவிற்கு இல்லை என்பதே என் கருத்து. சில நிலையங்கள் சேரி பகுதி நடுவில் ரயில் அமைந்து இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.. எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை

ஒரு தரம் அலுவலக வேலை முடித்து விட்டு கிளம்ப நடு இரவாகி விட்டது. பைக்கில் வேளச்சேரி பகுதியை கடக்கும் பொழுது வண்டி ரிப்பேர் ஆகிவிட்டது. என்ன பண்ணுவது என்று தெரியாமல் நின்ற பொழுது அங்கிருந்த சேரி பகுதியில் இருந்து யாரோ ஒரு அண்ணன் வந்து வண்டியை சரி செய்து கொடுத்தார். அவர் மட்டும் வரவில்லை என்றால் என்ன பண்ணி இருப்பேன் என்று இது நாள் வரைக்கும் யோசிக்க முடியவில்லை. இது நடந்து ஏழு வருடங்களாகி இருக்கும்

இது இப்படியாக இருக்க கட்டுரையாளருக்கு சேரி பகுதியை கண்டு என்ன பயம் என்று புரியவில்லை.
Related Posts with Thumbnails