Pages

Sunday, June 11, 2017

பிளாஸ்டிக் அரிசி [Plastic Rice] - மறைந்திருக்கும் அரசியல்

கைல ஒட்டாட்டி அது பிளாஸ்டிக் அரிசி, கீழ போட்டு அது பவுன்ஸாச்சுன்ன அது பிளாஸ்டிக் அரிசின்னு ஆளாளுச்சு ஆராய்ச்சி பண்ணி வாட்ஸ் அப் அனுப்புறாங்க. இது காலங்காலமா அரிசி கல்ல கலந்து கலப்படம் செய்றவங்களை அசிங்க படுதுது.

முக்கியமா இதைய நான் வீட்டுல ஆராய்ச்சி பண்ணி பார்த்தா என்ன நடக்குமுன்னு யோசிச்சு பாத்தேன்...

அம்மா : கொழும்பு ஜாஸ்தி ஆகிருச்சி...

மனைவி : கஷ்டபட்டு செஞ்சு தாரேன் பாரு ... அதைய போய் கீழ போட்டு விளையாட தான் செய்வ.

ஆக மொத்தம் அம்மாவோ மனைவியோ இரண்டு பேரும் இப்புடிக்கா சொல்லிட்டு பொக்குன்னு என் முக்குல குத்த போறாங்க. ஸோ எதுக்கு இந்த விளையாட்டுங்குறேன்.

இதுல அரசியல் மறைஞ்சு இருக்கு.

இப்ப தான் branded packed rice எல்லாம் ஜாஸ்தியா விக்க ஆரம்பிச்சு இருக்காங்க . நம்ம மக்கள் காலங்காலமா அரிசி வாங்கிட்டு இருக்குற அண்ணாச்சி கடையிலிருந்தோ இல்லாட்டி அரிசி மண்டி இருந்தோ மடைய மாத்தி இந்த corporate branded packed rice வாங்க வைக்குற முயற்சியா இருக்குமுன்னு நான் நினைக்குறேன்.

இப்ப கொஞ்ச காலமா சில அரிசி மண்டிஸ் எல்லாம் online market நுழைஞ்சு கல்லா கட்டிட்டு இருக்காங்க. அந்த மண்டி எல்லாம் சிலது நூறு வருஷம் பழமை வாய்ந்தது. அதைய ஒடுக்க கூட இந்த புரளிய திட்டமிட்டு கிளப்பி விட்டு இருக்கலாம்.

இந்த புரளி வட இந்தியா பரவி இருக்குற மாதிரி தெரியல. முக்கியமா ஆந்திர தெலுங்கானா பரவி இருக்கு. இப்ப கொஞ்சமா தமிழ் நாட்டுலையும்.

இது எங்க கொண்டு போய் விடுமுன்ன பல இடங்கள் அரிசி வியாபாரமுங்குறது B2C ( Business to Consumers)யா இருக்குறது அதாவது நேரடி விற்பனையா இருக்குறது கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி B2B (Business to Business)யா மாத்துற முயற்சியா கூட இருக்கலாம். அதாவது பெரும் கார்பரேட் நிறுவனங்கள் விவசாயிகள் கிட்ட இருந்து நேரடி கொள்முதல் செய்ற மாதிரி ஆகிடும். இது அப்புடிக்கா போய் Corporate Farmingக்கு கொண்டு விட்டுரும்.

இந்த புரளி நேரடியா தாக்குறது அரிசி மொத்த வியாபாரிகள் மேலையும் அரிசி மண்டிஸ் மேலையும் தான். நம்பகத்தன்மைய குறைக்குறது.

இது ஒண்ணும் புதுசு இல்ல ..... ஏற்கனவே இப்புடி தான் நடந்துகிட்டு இருக்கு.

முக்கியமா பிளாஸ்டிக் அரிசி பண்ணி நார்மல் அரிசியோடு கலந்து விக்குறது அவ்வளவு லாபமானது இல்லன்னு பிளாஸ்டிக் துறைய சேர்ந்தவங்க ஃபேஸ்புக் சொல்லுறாங்க.


No comments:

Related Posts with Thumbnails