Pages

Sunday, August 20, 2017

காப்பர் டி மரணங்கள் - மத்திய அரசு - அரசு மருத்துவமனை






சஞ்சய் காந்தியின் திட்டங்களில் முக்கியமானது குடும்ப கட்டுப்பாடு திட்டம் ....டார்கெட் வைத்து அவசரம் அவசரமாக அதனை செயல் படுத்தியதால் பலர் இறந்து போனார்கள். இது ஆவண படுத்தியும் உள்ளார்கள்.

இப்பொழுது அதே மாதிரியான திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதாவது குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு அவர்களது அனுமதி உடன் கருத்தடை சாதனம் காப்பர் டி பொருத்துவது என்பது.

ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் இந்த திட்டத்தின் மூலம் ஒன்று இரண்டு பேருக்காவது சாதனம் பொருத்திருக்க வேண்டும் என்று கட்டாயம் படுத்தி இருக்கிறது.

இது ஒரு புரம் இருக்க வட இந்தியாவில் பெண்களது அனுமதி இல்லாமல் இந்த காப்பர் டி பொருத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது சில மாதங்களுக்கு முன்பு.

தமிழ் நாட்டில் அனுமதி இல்லாமல் மணிமேகலைக்கு சரிவர பொருத்தி இருக்கிறார்கள். அதனால் அவருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதை தனியார் மருத்துவமனை மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அந்த ரிபோர்ட்டை வைத்து அரசு மருத்துவமனையில் கேட்ட பொழுது, அவர்கள் நாங்களே சரி செய்து விடுகிறோம் என்று சொல்லி மலகுடலில் ஓட்டை விழுந்து சாகுமளவிற்கு சிகிச்சை தந்து இருக்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள்.

வெளியில் தெரிந்த விஷயம் இது ஒன்று தான், தெரியாமல் போன மரணங்கள் எத்தனையோ.

கருத்தடை சாதனம் நல்லது தான், ஆனால் அது தனிநபர் விருப்பத்தில் பெயரிலேயே பொருத்தபட வேண்டும். டார்கெட்டினால் அல்ல.

யாராவது RTIல் குழந்தை பிறந்து கொஞ்ச மாதங்களிலேயே இறந்த தாய்மார்கள் எத்தனை பேர் என்று கேட்டாலே இந்த விஷயம் அம்பலத்திற்கு வரும்.

மேலும் இதற்கு பொருளாதார ரீதியாக கீழ்நிலையில் இருப்பவர்களே இலக்காகுகிறார்கள்
.

கலவை [20/08/2017] - தரமணி இயக்குநர் ராம்

மலம் கழித்தல் ...

சிக்கலில்லா மலம் கழித்தலுக்கு நான் பின் பற்றும் வழிமுறைகள்...

மாலை ஆறு மணிக்கு மேல் மசாலா, காரம், கிழங்கு, சிப்ஸ், காபி டீ போன்றவற்றை சாப்பிட மாட்டேன்

இரவு உணவு என்பது பெரும்பாலும் சப்பாத்தி அல்லது இட்லியாக தான் இருக்கும். சப்பாத்தி என்றால் தொட்டுக்க பருப்பு வகைகள், இட்லி என்றால் சட்னி.

இரவு சாப்பிட்டுவிட்டு கால் கட்டி / சப்பாளங்கால் போட்டு ஒரு மணி நேரம் உட்கார்ந்திருப்பேன். டிவி பார்க்காமல் யாரிடமாவது பேசி கொண்டோ புத்தகம் படித்து கொண்டோ இருப்பேன்.

இரவு 8.30ல் இருந்து 9.30க்குள் இரவு உணவை முடித்து விடுவேன். வீட்டுக்கு வர நேரமாகும் என்றால் ஓட்டலில் அந்த நேரத்திற்குள் சாப்பிட்டுவிடுவேன். மறுநாள் விடுமுறை என்றால் இரவு கொஞ்சம் நேரம் கழித்து கூட சாப்பிடுவேன்.

காலை 4.30மணிக்கு எழுந்து பல் தேய்த்து, ஒரு லிட்டர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இருபது நிமிடங்களில் குடிப்பேன். 6மணி போல் காபி.

நடை பயிற்சி, உடற்பயிற்சி எல்லாம் முடிந்த உடன் ...வீட்டில் காலை கடன் எந்த பிரச்சனையுன் இல்லாமல்.

முக்கியமாக மலத்தில் நீர் தன்மை சரிவர இருத்தல் வேண்டும். குறைவாக இருந்தாலும் ஆபத்து அதிகமாக இருந்தாலும் ஆபத்து.

அதே போல் மூன்று வேளையும் அவசரம் அவசரமாக சாப்பிட்ட மாட்டேன். நன்றாக மென்று தான் சாப்பிடுவேன். 

எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக 7மணி நேரம் கண்டிப்பாக தூங்குவேன்.

- - - -

அமேசான் கின்டில் செயலியை தரயிறக்கம் செய்து கிழக்கு பதிப்பகத்தின் சஞ்சய் காந்தி புத்தகமும், இர்விங் வாலஸ் நாவல் ஒன்றையும் வாங்கி படித்து வருகிறேன்.

தமிழில் எந்த பெரிய இலக்கிய படைப்புகளும் இல்லை. கிழக்கு, காலச்சுவடு மற்றும் விகடன் மட்டும் பெயருக்கு கடை வைத்துள்ளார்கள்.

மக்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், கடந்த 10 வருடத்தில் வாசிப்பு பழக்கம் இல்லாதவனை சுண்டி இழுக்கிற மாதிரி எத்தனை நாவல் வந்திருக்கிறது ????

தரமான நாவல்களை கிண்டிலில் கொண்டு வருவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

கொஞ்சம் தேடி பார்த்தால் எஸ்ராவின் கதா விலாசம் மற்றும் துணையெழுத்து, ஜெயமோகனது சிற்சில படைப்புகள் கிடைக்கிறது கிண்டில் ஸ்டோரில்.

இந்த இலக்கியவாதி அங்கீகாரம் தராத ராஜேஷ்குமார், பிகேபி, சுபா ஆகியோரது நாவல்களை ஜி.கே.அசோகன் அவர்கள் தனது சொந்த online portalயான NovelJunction ல் Soft copyகளை விற்கிறார். தரமாக இருக்கிறது.

மேலும் சுப்பாண்டி சீரிஸின் ஆங்கில முதல் பாகத்தை வாங்கினேன். அதை இனிமேல் தான் படிக்கணும்.

- - -

குங்குமத்தில் காலச்சுவடு கண்ணன் அவர்களின் பேட்டி படித்தேன். இன்னும் பல விஷயங்களை ஜனரஞ்சக பத்திரிக்கை வாசகர்களுக்காக பேசி இருக்கலாம்.

- - -

ஹோய்சால கோயில்களை காண வேண்டும் நினைப்பவர்கள் என ஹாசன் மாவட்டத்திற்கு போய் தங்கி கொண்டு, கோயில்களை சுற்றி பார்க்கலாம்.

சும்மார் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இப்பொழுது பார்க்க ஆசைபடும் கோயில்களை அணைத்தும் பார்த்து இருந்தாலும், அவற்றின் பெருமை தெரியாமல் கடந்திருக்கிறேன்.

ம்ம்ம் ...

மதுரைக்கு இன்னொரு சுற்றுப்பயணம் போக திட்டமிட்டு இருக்கிறேன். அதற்குள் நரசய்யா மதுரை பற்றி எழுதி இருக்கும் தகவல் களஞ்சியத்தை வாசித்துவிட வேண்டும்.

- - -

நினைத்த மாதிரி இயக்குநர் ராம் இந்த தடவையும் ஐடி துறை, கலாச்சார சீரழிவு என்று குழப்பத்துடன் படம் எடுத்திருக்கிறார் போல.

புரட்சிகர படம் என்றால் என்ன என்று தமிழக மக்களுக்கு தெரியாமல் போய் விடும் போல. Mostly life does me and sometimes i do the life. But rarely I f**k myself.

எனக்கும் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கு. ஆனால் அதனை எல்லாம் மற்றவரையோ அல்லது இந்த சமூகத்தையோ ஒருபோதும் எடை போட்டது இல்லை. நீதிபதி மனப்பான்மையோ குற்றவாளி மனப்பான்மையோ வந்தது இல்லை.

இயக்குநர் ராம் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் கோணலான கருத்தை சொல்லும் படங்களை எடுத்துவிட்டு அதற்கு சப்பைகட்டு காரணங்களுடன் பிறகு வருவார்.

பத்து வருடங்களுக்கு முன்பு 2007ல் இவரது முதல் படமான கற்றது தமிழ் வெளிவருவதற்கு முன்பு ..


"
இது ஒரு தமிழில் M.A. முடித்தவன் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனை பற்றி பேசும் படம்" - இது படம் ஆரம்பித்த பொழுது அவர் சொன்னது.

"
சிவனே என்று இருந்தவன் சிவனான கதை" - இது படம் வருவதற்கு கொஞ்ச நாட்கள் இருக்கிறது என்ற நிலையில் அவர் சொன்னது.

"
நான் மனத்தில் கொல்ல வேண்டும் என நினைத்தவர்களை இப்படத்தின் மூலம் கொன்று இருக்கிறேன்" - இது நாளை படம் வர போகிறது என்று இருந்த பொழுது சொன்னது.

இப்படி படத்தை தமிழ் உணர்வாளன் சந்திக்கும் பிரச்சனை என்று அவர் பரப்பி கொண்டு இருந்தார். ஆனால் படம் வெளியான அன்றைய தினம் வசூல் மிகவும் குறைவு.

படத்தில் கதாநாயகனாக நடித்த ஜீவாவிற்கும் 2006ல் வந்த டிஷ்யூம், , அரண் என எதுவும் வசூல் பெறவில்லை. 2005/2006 ஆரம்பித்த படமான தெனாவட்டு இன்னும் வெளிவராத நிலை 2007ல். அதனால் படத்தை promote செய்ய அவர் வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாத நிலை.

பார்த்தார் ராம் .... அப்பொழுது சிறந்து விளங்கிய ஐடி துறையை கையில் சாட்டையுடன் அணுகி படத்தை promote பண்ணினார்.

"
ஐடி துறையில் இருப்பவர்களுக்கு தமிழ் பற்றே இல்லை"

"
ஐடியில் துறையில் இருப்பவர்கள் ஒழுக்கநெறி தவறியவர்கள்"

"
ஐடியில் பணி நிரந்தரமானதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்க படலாம்"

"
ஐடியில் வேலை செய்கிறவன் லட்ச கணக்கில் சம்பளம் வாங்குகிறான்... அது அவனை தவறான பாதையில் கொண்டு செல்கிறது" என்றெல்லாம் சொல்லி படத்தை பற்றிய ஒரு sensational issue ஆக்கினார்.

உடனே அது ஊடக துறையில் பற்றி எரிய ஆரம்பித்தது. சமூக ஊடகங்கள் பெரிதும் இல்லாத காரணத்தினால் (Orkut, Yahoo group எல்லாம் ஒரு குறுகிய வட்டத்தில் இருந்தது) தனியார் வானொலி நிலையங்கள் இதை வைத்து நன்றாக TRP அறுவடை செய்தது.

எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்ல ஆரம்பித்தார்கள். படம் கொஞ்சம் வசூலை கண்டது.

இரண்டு வருடம் கழித்து ராம் தனது வலைபதிவுயில் (blog) கற்றது தமிழின் திரைகதையை பகிர்ந்தார். விவாதங்கள் ஆரம்பித்தன.

அதிலிருந்து இதே மாதிரியான போக்கை தான் ஒவ்வொரு முறையும் பயண்படுத்துகிறார். மீறி ரொம்ப பேசினால் வடிவேலு பட காமெடி ஒன்றில் "எவன் எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும் தான் கடவுள் தெரிவார்" என்கிற தொனியில் பேச ஆரம்பித்தார். அப்படி பேச ஒரு கூட்டத்தையும் சேர்த்து கொண்டார்.

கற்றது தமிழ் - தமிழ் உணர்வுள்ள ஒருவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்

தங்க மீன்கள் - மகள்களை பெற்ற அப்பாக்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

தரமணி - பெண்களை மதிக்கும் ஒருவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இந்த தடவை அவரோடு சேர்ந்து இந்த வரிகளை பஜனை செய்ய கூட்டத்தையும் சேர்த்திருக்கிறார்.

இவரது எல்லா படங்களிலும் இவரும் ஒரு கதாப்பாத்திரமாகவே வருவார். அதுவும் கதையின் நாயகனாக இருப்பார். அதனால் தனது புரிதல்களையே ஒவ்வொரு படத்திலும் நிறுவ பார்க்கிறார் இயக்குநர் ராம் அவர்கள். தான் சந்தித்த பிரச்சனைகளை பொது பிரச்சனைகளாக்கி, அதனை ஒரு விவாத பொருளாக்கி கொண்டு வருகிறார்.

இன்னும் எனக்கு "touch me here if you dare"க்கான தீர்வே கிடைத்த பாடு இல்லை.

இவரது எல்லா பேட்டிகளையும் ஒன்று மட்டும் கட்டாயம் இருக்கும் "நான் எல்லாவற்றையும் பற்றியும் அதன் நியாய தர்மங்களோடு சரிவர புரிந்து வைத்திருக்கிறேன்...".

இவரது போலி அறிவு ஜீவித்தை கண்டு அரைகுறை வேக்காட்டுகளும் அதே மாதிரி பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தான் சோகம்.



- - -
Related Posts with Thumbnails