Pages

Friday, March 12, 2010

தொலைந்த சொர்க்கம் -5


ருத்திர சேனை அலுவலகம்,
மும்பை.


அவன் கேட்ட கேள்வியை கேட்டதிலிருந்து சிரேஞ்சன் கர்க்கரேவின் முகம் அப்படியே சிவந்து போய்விட்டது. சிரேஞ்சன் தனது தந்தைக்கு பிறகு ருத்திர சேனையின் தலைமையை ஏற்று இருந்தான். இந்தியாவின் சொர்கப்புரியான மும்பை மரத்தியர்களுக்கே என்ற வாதத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அரசியலில் தனது முதல் அடியை எடுத்து வைக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தான்.


பொறுமையை இழந்த சிரேஞ்சன் தன் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்களைப் பார்த்து ......

"என்னாலும் சரி ... இங்க இருக்கிற ரயில்வே வேலைக்கு நம்ம ஆளுகளை தான் எடுக்கணும் .... எவன் எவனோ வந்து இங்க காசு பாக்குறாங்க, ஆனா நம்ம ஆளுங்க இன்னும் காசுக்கே வழில்லாம இருக்காங்க ....."

மெம்மேலும் வார்த்தை அம்புகளை தொடுத்து அங்கு கூடி இருந்த ஆடு மந்தையை இன போதையை காட்டி தனது கருத்தை ஏற்றுக் கொள்ள வைத்தான்.அவன் பேச்சின் முடிவில் அனைவரையும் ஏதோ பீகார்காரிகள் தான் மராத்தியர்களின் வாழ்க்கையை கெடுப்பதாக எண்ண வைத்து விட்டு, ஜன்னல் பக்கம் போனான் சிரேஞ்சன்.அங்கே அவன் பார்வைக்கு சர்ச்கேட்கில் இருந்து வந்த கார் அவன் பார்வைக்கு கிடைத்தது. அதில் அமர்ந்து இருந்தவனை பார்த்து காரியம் வெற்றி என்பது போல் விரல் காட்டினான்.


சிரேஞ்சன் கை காட்டிய உடன் அந்த காரில் அமர்ந்திருந்தவன், காரை வேகமாக கிளப்பி கொஞ்ச தூரம் போன பின் ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.


AIRTEL EASY RECHARGE ...... பெயர் பலகையில் எழுதிருந்ததை படித்தபடி உள்ள சென்றான்.இரவு நேரமானதால் கடைக்காரன் தூக்கக் கலகத்தில் இருந்தான்.

"ரீ- சார்ஜ். நூறு ரூபாய்க்கு...."

"நம்பர் சொல்லுங்க"

நம்பர் குறித்துக் கொண்டு ரீ-சார்ஜ் செய்தான்.

"சார், செக் பண்ணிகொங்க...."

"எனக்கு இல்லைங்க....தெரிஞ்சவருக்கு ....."

அந்த தெரிந்தவன் கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குப்பத்தில் இருந்தான்.அவன் மொபைல் ரீ சார்ஜ்யான உடன், கையெறி குண்டுகள், தூப்பாக்கிகள், அதற்க்கான தோட்டாக்கள் நிரப்பிய மாட்டு கரி , ஆட்டு கரி லோட் கொண்ட வண்டியை தாஜ் ஹோட்டல் நோக்கி ஸ்டார்ட் செய்து, கிளம்பினான்.


= = = = = = = = = =

ஷபேனம். இன்று இரவு என்னை தாக்கிய புயல்.அவளுக்கு எனது முதல் காதலை பற்றி தெரியுமா தெரியாதா என்ற குழப்பத்தில் கொஞ்சம் தீவிரமாக யோசித்து கொண்டிருந்தேன்.அவளிடம் என் காதலை சொன்ன பிறகும் ஷாபியவின் நினைவுகள் என் மனதைவிட்டு போகவில்லை.


உடல் அடுத்த வேளை புணர்வு தயாராகி விட்டாலும், மனம் உண்மையை சொல்ல தயாராகவில்லை.ஷபேனம், night linen clothes யில் அவயங்கள் தெரிய தேவதையாய் அறையில் அங்கும் இங்கும் RD BURMAN யை கேட்டபடி என் உள்ளத்தில் உள்ள காதலை மேலும் மேலும் வளர்த்து கொண்டு இருந்தாள்.

Nature has shaped her appropriately .... she was damn hot

= = = = = = = = = =

தாஜ்
மும்பை.


தனது ஆபீஸ் ரூமில் பதட்டமாய் சயீத் அங்கும் இங்கும் நடைப் போட்டுக் கொண்டு இருந்தார்.எதிர்ப் பார்த்தப்படிய தாதாவிடமிருந்து செல்போன் அழைப்பு வரவே. எடுத்து பேசினான்.

"சார். சொன்ன புரிஞ்சுகொங்க. purchase indent இல்லாம, எதையும் உள்ளே கொண்டு வர முடியாது. அதுவும் மாட்டு கரிக்கெல்லாம் chef கிட்ட இருந்து ஆர்டர் வரணும்."

"கள்ள தனமா கொண்டு போயிரு..."

"இல்லைங்க... store room ledger யை chef shift wise வந்து செக் பண்ணுவாரு...."

"அப்படி வந்த பெரிய பிரச்சனை ஆகிரும். நீங்க என் பெயரே இதில வராதுன்னு தானே சொன்னிங்க ......"


"அடடா... நீ மட்டும் இத பண்ணிரு, நீ ஏதோ project வைச்சு இருக்கியமே , அதுக்கு நான் காசு தரேன், இல்லாட்டி நான் சொன்னது தான் நடக்கும் ..."


கொஞ்ச நேர மௌனமாய் இருந்துவிட்டு " சரி பண்ணுறேன்".


விரித்த வலையில் மீன் சிக்கியதை எண்ணி சந்தோஷமாய் தாதா போனை வைக்கவே மேலும் பதட்டம் ஆனார் சயீத்.

= = = = = = = = = =

Devil's eye ஆபீஸ்

மும்பை .


" அதெல்லாம் தெரியாது. யாரையாச்சு பலி போட்டே ஆகணும். it will make wonders in trp "


இதைக் கேட்ட பின் ஷனந்து யாரை அதற்க்கு பிக்ஸ் செய்தால் மக்கள் வருத்த படுவார்கள் என்றெண்ணியவாறு நின்றுக் கொண்டு இருந்தான்.


"சார்" என்று அழைத்தபடிய விவிதி அவனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்.அப்பொழுது தான் அவளுடைய நிகழ்ச்சி தான் தொடர்ந்து prime time rating யில் ஹிட் அடித்து கொண்டிருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.


காயம் பட்ட உதட்டை தடவிய படி அவளை பார்த்து மர்மமாய் சிரித்தான் ஷனந்து.

= = = = = = = = = =

தொடரும் .....

4 comments:

Anonymous said...

nice:)

ஸ்ரீ said...

ரைட்டு.

சரவண குமார் said...

ஒண்ணுமே புரியலைனாலும் படிக்க நல்லா இருக்கு.எப்ப முடிப்பேங்க

டம்பி மேவீ said...

@ அனானி அண்ணே : யாருண்ணே நீங்க

@ ஸ்ரீதர் : பாஸ் அடுத்த வாட்டியிலிருந்து எதாச்சு சொல்லிட்டு போங்க

@ சரவணா : அப்படியா சிக்கிரம் முடிக்கிறேன் (இப்பெலாம் கொஞ்சம் பிஸி)

Related Posts with Thumbnails