Pages

Sunday, November 29, 2009

புத்திசாலி கூட்டாளிகள் - THE LEAGUE OF GENTLEMEN



உலக திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக அறிமுக காட்சியில் சாக்கடையில் இருந்து கதையின் ஓர் நாயகன் வருவது போல் அமைத்திருந்தது இந்த படத்தில் தான் இருக்கும். (எனக்கு தெரிந்த வரைக்கும்). BANK ROBBERY படங்களில் இது ஒரு குறுப்பிட வேண்டிய படம். ஒரு கிளாச்சிக்.




ராணுவத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்ற பட்ட சிலரை ஒருவன் ஒருங்கிணைத்து ராணுவ ரீதியில் திட்டங்களை திட்டி ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது தான் கதை.( வர போகும் எதாவது புது தமிழ் படத்தை நினைவு படுத்தினால் அதற்கு கம்பெனி பொறுப்பில்லை)




கூட்டாளிகள் அனைவரும் ஒவ்வொரு விதங்களில் திறமை மிக்கவர்கள். அந்த திறமைகளை கொண்டு ஓர் ராணுவ முகாமிலிருந்து ஆயுதங்களை கொள்ளை அடிபதையும், அந்த ஆயுதங்களை கொண்டு வங்கியை கொள்ளை அடிப்பதையும் என்ற இரு முக்கிய சம்பவங்களையும் அதற்கு ஏத்த துணை சம்பவங்களை கொண்டு விறுவிறுப்பான திரைப்படமான இது ஒரு பிரிட்டிஷ் நாட்டு திரைப்படம். ஒரு நாவலை தழுவி எடுக்க பட்டது. அதை எழுதியவரும் இதில் நடித்துள்ளார்.



எனக்கு நன்றாக நினைவுயிருக்கிறது நான் சிறு வயதில் இந்த படத்தை பார்க்கும் பொழுது கண் இமைக்காமல் பார்த்தது. அந்த காலத்தில் இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நடந்தால் ஹாலிவுட் மற்றும் பல நாட்டு திரைப்பட துறையினர் இதே போல கதைஅம்சம் கொண்ட திரைப்படங்களை எடுத்து உள்ளனர். தமிழிலும் பல வந்துள்ளது.
தமிழ் சினிமா போல இல்லாமல் அப்ப அப்ப போலீஸ் கதையில் எட்டி பார்த்து டென்ஷன் ஏற்படுத்தும். ஆனால் தமிழ் படத்தில் கொள்ளை அடிப்பது ஹீரோவாக இருந்தால் போலீஸ் கட்டாயமான முறையில் முட்டாளாக தான் இருப்பார்கள். இந்த படத்தில் அப்படி இல்லாமல் இருபது கொஞ்சம் நிம்மதி தான் என்றாலும் கடைசி காட்சியில் பரிதாபம் ஏற்படுவது டைரக்டர் யின் வெற்றி. படத்தில் டைரக்டர் டச் என்பது கதாபாத்திரங்களின் அறிமுகதில்லையே அவர்களின் நிலையையும் சொல்லி விடுவதில் தெரிகிறது.
ஓன்று மட்டும் நிச்சயம்.... ஞாயிறு மாலையில் பொழுது போக்க ஏற்ற படம்.




Saturday, November 28, 2009

யோகி - பட விமர்சனம்


"இந்த வெள்ளிகிழமை வந்த புது படங்களை பார்த்ததில் இருந்து இப்படி தான் உடம்புல இருக்கிற அத்தனை ஓட்டை ல இருந்தும் இப்படி தான் புகைய வருது..... இதுக்கு பேசாம மேவி எழுதின கவிதையை படிச்சிட்டு உயிரை விட்டு இருக்கலாம்..... எனக்கு வேணும் வேணும்..... தெருண் கோகி , சைரன் இவங்களை பார்த்த பிறகும் நான் போயிருக்க கூடாது... என்ன செய்ய விதி வலியது....."


"நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து பார்த்தேன்..... பட கதையை ஜீரணம் பண்ண முடியல..... இலக்கிய இனிமா தான் வேலைக்கு ஆகும் போல் இருக்கு... இவங்க உலக தரத்துக்கு போறதுக்குள் நம்ம நிலை தகர டப்பா ஆகிரும். ஐயா சாமிகளா ...... பர்மா பஜார் ல நிறைய சாமான் கிடைக்குது. ஏன் சிடி மட்டும் வாங்குறிங்க???"

டிஸ்கி - மேல் படங்களில் உள்ளவர்களும் யோகிகள் தான். மேலும் யோகி படத்திற்கும் இதற்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. நான் இன்னும் அதை பார்க்கவில்லை. அப்படி இருந்தும் விமர்சனம் வேண்டுவோர் கேபிள்ஜி பதிவிற்கு செல்லவும்.


Friday, November 27, 2009

நான் கடவுள்

என் உலகத்தில்
நானே கடவுள் ......
இங்கு எனக்கு
வாசனை வீசும் மலர்கள்
தான் முள்ளாக
இருக்கிறது......
நான் கடவுள்
வெளி உலகத்தில்
இளமையின் இயலாமைகளோடு
சராசரி மனிதனாய்
வேதனைகளின் களியாட்டத்தில்
சிக்கி தவிக்கும்
பாவப்பட்ட ஜென்மமாய்
இருக்கும் நானே
என் உலகத்தில்
கடவுள் ........


என் உலகத்தில்
நான் கருணை
மிக்கவன் .....
நம்பிக்கையும் தாராமல்
மோட்சமும் தாராமல்
ஏமாற்றும் பூஉலக
கடவுள் இல்லை
நான்.....

என் உலகில்
கடவுள் இல்லை என்று
சொல்ல்வோரும் உண்டு
சொல்லாதவோரும் உண்டு
ஆனால் எல்லாருக்கும்
கருணை உண்டு
என் உலகில் .....

ஏனென்றால்
நான் உண்மையானவன்
நானே கடவுள் ......

வெளி உலகில்
எல்லாவற்றுக்கும் நானே
காரணமானவன் ....
துடக்கமும் முடிவும்
நானே என்று சொல்லி கொண்டு
அவனால் செய்த பாவங்களுக்கு
மக்களை நரகத்திற்கு
அனுப்பும்
கடவுள் போல்
நான் இல்லை .......

என் உலகில்
பயம் இல்லை
சோகம் இல்லை
சந்தோசமே சந்தோசமாய்
வாழ்கிறது ......
எல்லோரும் நண்பர்களாய்
இருப்பார்கள்.....
எனக்காக அவர்கள்
ஏதும் அற்பனிப்பது
இல்லை .....

இருதாலும் அவர்களை
நான் சந்தோசமாக
வைத்துள்ளேன்......

நான் உன்னை மறப்பதும் இல்லை
கைவுடுவதும் இல்லை
என்று கூறும்
கடவுள் இல்லை
நான்.....

இந்த வரிகளை
என் உலக மக்கள்
படிப்பதும் இல்லை
எழுதுவதும் இல்லை ......
ஏனென்றால் அவர்களோடு
தான் நான் இருக்கிறேன்.......

=========================================

போதுமடா உனக்கு
இந்த கடவுள் பதவி....
நீ செய்தது என்ன ???
செய்யாதது என்ன ????
நச்சு பாம்புகளின்
விஷம் தடவிய
எழுத்தாணி கொண்டு
நரக வேதனை வாழ்க்கை
எம் மக்களுக்கு ......

உன் சந்தனம் குளியலுக்கு
நாங்கள் வேர்வையில் குளிக்கிறோம்
வாழும் போது இல்லாத சொர்க்கம்
இறந்த பின் அளிக்கும் பித்தன் தானடா நீ
நீ உறங்க நாங்கள் தூக்கம் இழக்கிறோம்
உண்மையில் மக்கள் ஆகிய
நாங்கள் தான் கடவுள் ......

நீ பாட வேண்டும்
"பித்தம் எல்லாம் எனக்கு மக்கள் மயமே ".....
==========================================

மதியிழந்த முடனே
என் கடவுளே !!!!
யார் தந்தார்கள்
உனக்கு உரிமை
என் விதியை எழுதிட.....
எழுதிய விதி
வீதியில் சேறுக்கு சமமாய் ;


அவமனபடுத்தினால் நரகம்
உன் சட்டம் ;
நீ வா என்னோடு ......

ஏனென்றால் அதில் நீ தான் முதல்வன்
விதி என்ற பெயரில்
செய்து கொண்டு இருப்பதால் ;
போதும் உன் விதியின் விளையாட்டு ;
யார் தந்தார்கள் உரிமை உனக்கு
விதி என்ற பெயரில்
என்னை அவமான படுத்த ???
நஞ்சு தேய்ந்த மறுபக்கத்தில் இருந்து
என்னை நான் காப்பற்றி
என்னக்கு நானே எழுதி கொள்கிறேன்
என் விதியை.......
===========================================


டிஸ்கி - ரொம்ப நாள் முன்னாடி எழுதின கவிதை ... அதனால் எழுத்து பிழைகள் கொஞ்சம் இருக்கும்

செய்திகள் வாசிப்பது மேவி

" 200 நகரங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு "

லண்டன் போன்ற நகரங்களில் பல வருஷம் முன்னாடியே இதை சத்தியம் ஆக்கி காட்டி இருக்காங்க. ஆன நாம இந்தியாவில் தான் இது இன்னும் திட்ட அளவில் இருக்கிறது. பிறகு இந்த திட்டமானது பல இடற்பாடுகளை உண்டாக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இன்னும் அரசு சப்பளை செய்யும் LPG GAS யில் பல பிரச்சனை இருக்கிறது. அதை சரி செய்யாமல் இவர்கள் எப்புடி அடுத்த நிலைக்கு போவர்கள் என்று ஆச்சிரியமா இருக்கு.


"பஸ்களில் விளம்பரத்துக்கு தடை ஆண்டுக்கு ரூ.10 கோடி இழப்பு"

என்ன கொடுமை சார் இது. நேற்று வரையில் உயர் கட்டணங்கள் வசூலிக்கும் A / C பஸ்களில் மட்டுமே விளம்பரங்கள் பார்க்கும் படி இருக்கிறது. மற்ற சாதாரண பஸ்களில் விளம்பரம் மாட்டப்பட்டு இருந்தாலும் அது பெரும்பாலும் பார்க்கும் படி இருப்பதில்லை. குறைவான பராமரிப்பு அதனால் அழுக்கு படிந்து TARGET AUDIENCE போய் சேரவில்லை. இதை மோப்பம் பிடித்த கம்பெனிகள் கணக்கு போட்டு பார்த்ததில் அவர்களின் EXPECTED RETURN ON INVESTMENT குறைவாக இருந்ததால் விழித்து கொண்டனர். இந்த விளம்பரங்கள் தரும் வருமானத்தை நம்பி தானே அரசு போஸ்டர், பேனர்களை தடை செய்தது. ஐயோ பாவம் அரசு.
"மக்களை கேட்டு பாருங்கள். விமர்சனம் எழுதியவர்களின் முகத்தில் தான் கரி - கமல்"


இவர் ஏதோ சமுக சேவை செய்து அதை சிலர் கிண்டலடித்தது போல் பேசுறார். சந்தைக்கு விற்பனைக்கு வந்த பொருளை பற்றி நாலு பேர் நாலு விதமாக பேச தான் செய்வார்கள். இதற்க்கு எல்லாம் பயந்தால் தொழில் பண்ண முடியுமா ?????
"மும்பையில் சீன பொருட்கள் கண்காட்சி"


ஆமா உள் ஊர் பொருட்களை நன்றாக முன்னேற்றிட்டாங்க இப்ப சீனா நாட்டு பொருட்களுக்கு போய்ட்டாங்க. சும்மா சொல்ல கூடாது நம்ம நாட்டு ஆரசாங்கம் நன்றாகவே நாம் நாட்டு சந்தைக்கு முக்கியத்துவம் தருகிறது. இதற்க்கு முக்கிய காரணம் நம்ம நாட்டு வணிகர்கள் கூட தான் தர கட்டுபாடு என்று ஓன்று இருப்பதையே மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை தான். ஆனால் ஏதோ ஒரு வழியில் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது.

Thursday, November 26, 2009

கலவை

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அனந்த விகடன் விளம்பரம் ஒன்றை பார்த்தேன் அதுல ஒரு குரங்கு வந்து "படிக்காட்டி கடிச்சுருவேன்" ன்னு சொல்லி மிரட்டுது. ஐயோ பவம் விகடன் நிலைமை இப்படி ஆகிருச்சு. ஒரு குரங்கை விட்டு வாசகர்களை மிரட்டி வாங்க வைக்கிறார்கள்.
----------
இனிமேல் யாரும் தமிழக முதல்வரை தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதவர் என்று சொல்ல வேண்டாம். அவர் நிறையவே தமிழ் மக்களுக்காக செய்து உள்ளார். அவரது குடும்பத்தினர் எல்லோரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் தானே, அவர்களும் தமிழ் மக்கள் தானே.
----------
இப்பொழுதெல்லாம் BINGO CHIPS விளம்பரம் ஓன்று வருகிறது. மிகவும் ரசித்து பார்க்கிறேன். வசனம் இல்லாமல் அந்த பெண் காட்டும் முக பவனை அருமையாய் இருக்கிறது.
----------
தற்சமயம் வரும் படங்களை பார்த்தால் அமெரிக்காவில் ஏதோ ஒரு கலாச்சார மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருப்பதை உணர முடிகிறது. LETTERS TO JULIET ன்னு ஒரு படம் அடுத்த வருடம் வர போகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன் எழுத பட்ட காதல் கடிதம் ஒருத்தி கைக்கு கிடைக்கிறது. அந்த கடிதத்தின் கதையை அறிய போகும் பொழுது அவள் காதலனை சந்திக்கிறாள். படம் நல்ல இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு வேளை சேரனுடைய பட சிடி அங்கேயும் போயிருச்சா ????
----------
இனிமேல் சென்னையில் கலாச்சார சின்னங்கள் என்று ஓன்று கூட இல்லாமல் போக போகுது. இருக்கிற ஓன்று இரண்டு கட்டடங்களை இடித்து புதுசு புதுசா ஏதோ கட்டுரங்க. இப்படியே போனால் கோவில்கள் மட்டுமே வரும்காலத்தில் சென்னையின் சின்னங்களாய் இருக்கும்.
----------
மெகா மகா சீரியல்யான கோலங்கள் இந்த வாரத்தோடு முடிய போகிறதாம். கேட்கவே சந்தோஷமா இருக்குல. திருசெல்வதுக்கு ரொம்ப பெரிய மனசு இவ்வளவு சிக்கிரம் முடிசுட்டாறு. எனக்கு என்னமோ அவர் பைத்தியக்காரன் அவர்களின் பதிவை ரொம்ப படிப்பார் போல் இருக்கு, அபி பேசும் வசனங்கள் அப்படி தான் இருக்கு.
----------

கொட்டாவி விட்டு கொண்டே வாழ்த்தலாம் வாங்க


நிஜப்பெயர்: மேவி

புனைப்பெயர்: மொக்க ராசா (வழங்கியவர் - "இலக்கிய பிரியாணி" தாபா)


வயது:
எதிரில் வரும் பெண்ணை பொருது

தொழில்: கொட்டாவி விடுவது

உபதொழில்: இலக்கியம் பேசுவது (பல தடவை காயபட்ட பொழுதிலும்)
நண்பர்கள்: டி, காப்பி வாங்கி தருபவர்கள்

எதிரிகள்: சாப்பிட்டதற்கு காசு கேட்பவர்கள்
பிடித்தது: குமுதம் நடுப்பக்கம்


பிடிக்காதது: குங்குமம் கடைசி பக்கம்
சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு நியூஸ் பேப்பர் படிப்பது

நீண்டகால சாதனை: உருபடாமல் இருபது
நீண்டநாள் ஆசை: அனுஜன்யாவை தனது கவிதையை படிக்க வைக்க வீண்டும் என்பது .

சமீபத்திய ஆசை: கார்க்கியை கவிதை எழுத வைக்க வேண்டும் என்பது

இப்படிக்கு

பிறந்த நாள் பதிவுகளுக்கு காபி பேஸ்ட் பின்னோட்டம் போடுவோர் சங்கம்

Wednesday, November 25, 2009

கண்டேன் இன்பத்தை

நினைவுகளில் அவளுடனான உறவில்

இன்பம் முன்னாள் காதலியின் இந்நாள்

கணவனுக்கு ; நான் அவனில்லை என்ற

விளக்கத்தோடு அறிவு விளங்கினாலும்

பிறழ்வு நிலையில் காமம்.....




முன்னாள் காதலியான பிறகும்

பசுமையாய் காதலி என்ற போர்வையில்

நினைவுகளில் வலம் வந்து கொண்டுயிருந்த

நேரத்தில் காமம் மேலோங்க

நினைவுகளில் கற்பழித்தேன்

திநகரில் இருந்து தாம்பரம் வரும்

ரயிலில் அனாவசிய நினைவுகளுடன்

இறங்கையில் முகமறியா பெண்ணின்

முன்-பின் அறிமுகம்

வளம் சேர்த்தது எனது காமத்திற்கு

குறையாய் நிறைந்த காமம்

நெறியுடன் அவள் மேல் மட்டும்

நிறைந்தது காமம் மேலும்.....




மேகங்கள் இடையில் சூரியன்

ஒளிந்து கொண்டு இரவு என்னும்

தோழியுடன் அழைப்பின் விளையாட்டில்

மாலை வந்த நேரமது ....


நிறை குடமாய் நடந்து

காமத்தை அடக்க முயன்று

வெகுதுரம் நடந்து களைப்பு வந்த

வேளையிலும் காமம் அடங்காமல்

அறை வந்து சேர்ந்தேன்....



அமர்ந்த பிறகு குமுதம் நடுப்பக்கம்

என் இயலாமையை துண்டி விட

என்னுள் இருக்கும் நல்லவன்

இறந்த நேரமிது....



கழிவறை பொழுதின்

நேரத்தில் கண்டேன் சுயமாய்

இன்பம் அவளோடு நினைவுகளில் ...



குளித்து முடித்த வேளையில்

இறந்த நல்லவன் மீண்டு

வந்தான் பழைய நினைவுகள் அன்று...

நிலவு என்றொரு பெண்


முத்தாய் வந்து

இரவில் கடந்து

என்னில் கலந்து .....

சுகத்தின் மிச்ச சொச்சங்களை தந்துவிட்டு

ஓசை படாமல் சென்றுவிட்டாயே

உன் சுகத்திற்கு மறுநாள் இரவு வரை

காத்திருக்க வேண்டுமா

சொல்லு நிலவே
துன்பமாய் சூரியன் வர


சுகத்தில் மட்டும் இல்லை

வேதனையிலும் வேர்வை...

நாற்றங்கள் சுயமாய் என் வேர்வையில்

ஆறுதலாய் துணை வேர்வை நாற்றங்கள்

இல்ல பொழுதில் போஸ்டர் நாயகிகள்

உன் நினைவை துண்ட

வளர்பிறை இன்பங்களின் தேய்பிறையாய்

ஆடி மாசம்
=
=
டிஸ்கி : தொடர்கதை செவ்வாய்கிழமை போஸ்ட் செய்கிறேன். கதையை பற்றி தனிப்பட்ட முறையில் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி

Sunday, November 22, 2009

தேவதையின் கை

தீபாவளிக்கு சில நாட்கள் முன் திருச்சி காற்றை சுவாசிக்க இரவு EGMORE ல ரயிலுக்கு காத்து கொண்டு இருந்தேன். செமையான கூட்டம். அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் மனசுக்குள் வந்ததென்னமோ உண்மை தான்.
(-)

இருக்கையில் அமர்ந்து இருந்தேன். பையில் இருந்து KARL MAX எழுதிய DAS KAPITAL படிக்க எடுத்தேன். TTR வருகிறாரா என்று பார்க்க தலை நிமிர்ந்தேன். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம் என் காதில் கேட்டது.
(-)

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சில பெண்கள் "இது தானா!!??? இது தானா!!??" என்று ஒரு ரொமான்டிக் பாட்டு பாடி முடித்து இருந்தார்கள். அந்த பெர்த்யில் என்னை தவிர எல்லோரும் பெண்கள்.
(-)

கையில் CHETAN BHAGAT எழுதிய 2 STATES வைத்த படி எதிர் இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்தேன். DAS KAPITAL பையில் தூங்கி கொண்டு இருந்தது.

(-)
அவள் ஏதோ நாவல் படித்து கொண்டு இருந்தாள். ரயில் இப்பொழுது EGMORE க்கு விடை தர தயாராகி கொண்டு இருந்தது. இடது கை கொண்டு வலது புருவத்தை சொரிந்து கொண்டே இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு வலது கண்ணை முடி இடது கண்ணால் பார்த்தேன். பிறகு இரண்டு கண்களையும் கொண்டு பார்த்தேன். எப்படி பார்த்தாலும் அழகாய் இருந்தாள்.
(-)

அவள் நான் பார்ப்பதை பார்த்து விட்டாள். பிறகு என்ன என்பது போல் முக பாவனை செய்தாள். ஒரு சிலை உயிர் பெற்றது இருந்தது. அவள் கையில் லியோ டால்ஸ்டாய் சிறுகதை தொகுப்பு. அதை பார்த்த உடனே அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை தலை தூக்கியது.


"AGATHA CHRISTIE எனக்கும் பிடிக்கும்........" என்றேன் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தபடி.

"ஹலோ!!! நல்ல பாருங்க இது லியோ டால்ஸ்டாய் எழுதின புக்கு"

"அப்படியா??"
"ஆமா"

"இல்ல, உங்க முகத்தை பார்த்த அப்படி தெரிஞ்ச்சு"

"எப்புடி தெரிஞ்ச்சு"

"ரொம்ப சீரியஸ் ஆ"

"ம்ம்ம்"

(-)

ரயில் கிளம்ப ஐந்து நிமிடங்கள் இருந்த பொழுது நாங்கள் நல்ல பேச ஆரமித்து இருந்தோம். அவள் தனியாக வந்து இருக்கிறாள் என்னை மாதிரி.

"காபி சாப்பிடலாமா"

"டைம் ஆகிருச்சு"

"அதனால என்ன"

"TRAIN ஸ்டார்ட் ஆச்சுன்னா"
"எல்லாம் நான் பார்த்துக்குறேன்"

"இல்லை வேண்டாமே"

(-)

ரயில் திநகர் தண்டி போய் கொண்டு இருந்தது. கையில் காலியான காபி கப்களுடன் நானும் அவளும் கதவின் அருகே நின்று பேசி கொண்டு இருந்தோம். பெர்த்க்கு வந்த பிறகு ஏசி குளிரை விட அவளின் பேச்சு ரொம்ப.........

(-)

ரயில் தாம்பரம் தண்டி கொண்டு இருந்தது. TTR வந்தார். அவளுடைய டிக்கெட்யை வாங்கி என் டிக்கெட் உடன் சேர்த்து கூடுதேன். அவளுடைய டிக்கெட்யை முதலில் திருப்பி தந்தார். பிறகு என் டிக்கெட்யை இரண்டாவதாக. அவளிடம் டிக்கெட் திரும்ப தரும் போது அவளுடைய வயது 24 என்று எனக்கு தெரிந்து இருந்தது.

(-)

ரயில் செங்கல்பட்டுயை கடந்து கொஞ்சம் நேரம் ஆகிருக்கும். கதவின் அருகே நின்று கொண்டு இருந்த பொழுது எங்கள் பேச்சு பல விஷயங்கள் கடந்து வந்து இருந்தது.

"தேவி. DO U READ TAMIL BLOGS"
"ya."
"எந்த மாதிரியான பிளாக்ஸ்"
"POPULAR பிளாக்ஸ் அப்பரும் FRIENDS லிங்க் குடுக்கிறது"
"ம்ம்ம். ஒன்னு தெரியுமா"
"என்னது"
"நான் கார்கி......."
"என்னது நீ கார்கியா ???? பொய் சொல்லாத..... நான் கார்கி பிளாக்கில் அவருடைய போடோஸ் பார்த்து இருக்கிறேன்..."
"அட பாவமே.... நான் கர்கியோட FRIEND ன்னு சொல்ல வந்தேன்.... அதுகுள்ள ????"

"ஓ அப்படியா"

"ஆமா அப்படி தான்"

"நான் கார்கியோட எல்லா போஸ்ட்யையும் படிப்பேன். ஆமா நீ பிளாக் எழுதுவியா?"

(-)

அவள் எனது ஐ-போன்யை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். நான் திறந்த கதவின் வழியாக நச்ச்திரங்களை பார்த்தேன். அதை பார்த்த பொழுது எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன குபீர் ராஜாவின் கதை ஓன்று ஞாபகம் வந்தது. ஒரு சமயம் குபீர் வாலிபனாய் இருக்கும் பொழுது அவரது கிராமத்தில் இருந்து இரவில் சில திருடர்கள் தப்பித்து குதுரையில் சென்று கொண்டு இருந்தனர். குபீரும் அவர்களை தனது குதுரையில் துரத்தி கொண்டு இருக்கும் பொழுது ;அவரின் குதுரையின் வேகத்திலே மற்றொரு குதுரையை செலுத்திய படி இன்னொருவன் வந்து கொண்டு இருந்தான். இதை பார்த்த குபீருக்கு ஆச்சிரியம் தங்க முடியவில்லை. படளிபுரத்தில் அவனை போல் குதுரையை செலுத்த யாரும் இல்லை. அந்த அளவுக்கு பெயர் பெற்று இருந்தான். தன் வேகத்திற்கு இணையாக வருவது யாராக இருக்கும் என்ற கேள்விகளோடு திருடர்களை தொரத்தி கொண்டு இருந்தான். திருடர்களை நெருங்கிய சமயம் ; தன்னோடு போட்டியாக வந்தவனின் முக்காடு ஓர் மரத்தின் கிளையில் மாட்டி முகம் வெளிப்பட்டதை கவனித்தான். ஆச்சிரியம் தாங்க முடியவில்லை அவனால். போட்டி குதுரை மேல் வந்தது ஓர் பெண். அந்த வேகத்திலும் அவளின் முகம் பௌர்ணமி நிலவாய் அவனுக்கு காட்சி தந்தது.

அதே மாதிரி தான் இருந்தது எனக்கு அப்பொழுது. அங்கு வெவ்வேறு குதுரை : இங்கு நாங்கள் இருவரும் ஒரே ரயில் பெட்டியில்....
தொடரும்.......

Thursday, November 19, 2009

காதல் முத்தி போயிருச்சு


அன்று தீபாவளி. வெடிச் சத்தம் கேட்டு எழுந்த பொழுது தான் ஞாபகம் வந்தது. என்ன தான் ஊருக்கு இரண்டு நாள் முன்னரே வந்து இருந்தாலும் அவளை பற்றி வீட்டில் சொல்ல சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருந்தால் தீபாவளி கொண்டாடங்கள் பற்றிய சிந்தனை பெரிய அளவில் மனசுல இல்லை என்பது உண்மை.

சென்னையிலிருந்து கிளம்பும் போதே மனதிற்குள் முடிவு எடுத்து விட்டு தான் ரயில் ஏறினேன். என்ன தான் A / C பெட்டில் பயணம் செய்த பொழுதிலும் ; என்னால் அந்தே இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. மனதிற்குள்ளே ஓர் விவாத மேடையில் பலமான விவாதம் நடந்து கொண்டே இருந்தது. அந்த மேடையில் "யாரிடம் இந்த விஷயத்தை சொல்வது-அம்மா அல்லது அப்பா" , "சொன்ன பின் எந்த மாதிரியான விளைவு ஏற்படும்" போன்ற தலைப்புகளில் எனக்கு நானே கருது சொல்லியும் எதிர் கருது சொல்லியும் அந்த இரவை ஓட்டினேன். நிஜத்தில் அம்மா எதிர்ப்பு சொன்னால் என்ன செய்வது என்று நினைக்கவே பயமாக இருந்தது. அம்மா அப்பாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது.... அதே சமயம் அவளையும் என் மனதிலிருந்து வெளியேற்றவும் முடியாது. உயிரில் கலந்து விட்டாள் அவள்.

அவள் அழகான இம்சை. அவளை முதலில் பார்த்து வருடங்கள் பல ஆகிய பொழுதிலும் அவள் முகம் நேற்று பார்த்தது போல் பசுமையாய் மனதில் ராஜா ரவி வெர்மா ஓவியமாய் பதிந்து உள்ளது. இரவுகளில் அவள் வருவாள் தினம்தோறும். நித்தமும் அவள் தான் மனதில். அவள் நினைவ்வுகளை தான் சுவாசித்தேன்.

வீட்டிற்குள் நுழைந்த பொழுது அம்மா கேட்டாங்க "என்னாச்சுடா??? இப்படி இருக்கா".

அப்பொழுதே சொல்லிருக்கலாம் ஆனால் உடல் சோர்வு காரணமாய் அம்மாவை எதிர் கொள்ள இயலவில்லை. பிறகு வந்த இரண்டு நாட்களிலும் அம்மா அப்பா, இரண்டு பேரும் வேலையாய் இருந்ததினால் தனியாக பேச முடியவில்லை. அந்த நேரங்களில் என்னுள் இருந்த அந்த அவஸ்தையை மிகவும் ரசித்தேன்.

அடுத்த வெடி சத்தத்தில் இயல்பு நிலைக்கு வந்தேன். அம்மா பூஜை வேலையில் இருந்தார்கள். அப்பா நண்பர்களுக்கு செல்போன் முலமாக வாழ்த்துக்களை சொல்லி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் எனது செல்போனில் அழைப்பு வர, அதை எடுத்து பேசும் நிலையில் நான் இல்லாதால், அதன் இயக்கத்தை நிறுத்தினேன்.

காலை பூஜை முடிந்த நேரம். பேசலாம் என்று அம்மா அருகே சென்றேன். சமையல் வேளை. அதனால் சமயலறையில் இருந்தார்கள்.

"அம்மா"

" என்டா"

"கொஞ்சம் பேசணும்"

"இப்ப தான் நேரம் கிடைச்சுதா"

"போ. அப்பா கிட்ட போய் சொல்லு"

நான் மொக்கை போட தான் வந்து இருப்பேன் என்று நினைத்து விட்டார்கள். என் மொக்கையை தவிர்க்க அம்மா கையாளும் உத்தி இது. அம்மாவுக்கு தெரியும் எனக்கு அப்பா கிட்ட கொஞ்ச பயம் உண்டு என்று. சரின்னு அப்பா கிட்ட சென்ற பொழுது வாசலில் பக்கத்து வீட்டு மகாலிங்க மாமாவிடம் பேசி கொண்டு இருந்தார்.

வந்து டிவி முன் அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. இப்பொழுது தான் கவனித்தேன். அம்மா என் அருகே நின்ன்று கொண்டு இருப்பதை. பேசலாம் என்று நினைத்த பொழுது ..... அம்மாவுக்கு பிடித்த நடிகையின் பேட்டி டிவியில் ஒளிபரப்பானது. நேரம் காலம் தெரியாமல் ........ வந்த கோவத்தில் மாறன் சகோதரர்களை மனதிற்குள் சபித்தேன்.

=
காலை சிற்றுண்டி முடிந்த நேரம். அப்பா வெளியே போய் இருந்தார். அம்மாவும் நானும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தோம். அம்மாவை எப்படியும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் கேள்வி கேட்க அப்பா இல்லை என்பதினால் வந்தது. அம்மாவிற்கு என் மேல் தனிபட்ட பிரியம் உண்டு. மொத்த குடும்பத்தில் நான் அதிகம் படித்தவன் என்பதினாலும், நல்ல குணமுடையவன் என்பதினாலும்.

வசதியான குடும்பம்...... அவளை மணம் முடித்து வைக்க சிரமம் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பம் முதலே இருந்தது.

காலை முதலே எனக்கு செல்போன் அழைப்பு ஏதும் வராததாலும், அப்பாஸும் யுவனும் இன்னும் வீடிற்கு வரவில்லையே என்று கேட்க ; பேச்சு ஆரம்பமானது.

சிறிது நேரம் போன பின்

"அம்மா"

என்னா என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்தாங்க.

எனக்குள் ஆயிரம் பிரளயம்.

"நா ....நா ... நான் ஒரு பெண்ணை கா...."

"ம்ம்ம் சொல்லு"

இது தான் அம்மாவிடம் எனக்கு பிடித்தது. மிகுதியான உக்கம் தருவார்கள்.

"நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்" என்று மனபாடம் செய்தது போல் சொல்லி விட்டேன்.

எனக்கு ஆச்சிரியம். அம்மா சிரித்த படி " யார அது??"

சற்றும் இதை நான் எதிர்பார்க்கவில்லை.

தைரியம் வந்து ....

"அசின் ம்மா"

"????"

"நடிகை அசின் ம்மா" என்று அழுத்தி சொன்னேன்.

ரொம்ப முத்தி போயிருச்சு என்பது போல் அம்மா என்னை பார்த்தாங்க.

Wednesday, November 18, 2009

முன்னுரைக்கு ஓர் பொருளுரை




காலை நேரத்தில் ஓர்
கவிதை எண்ணத்தில் தோன்றி விடவே
பதிவுச் செய்ய கணினி முன் அமர்ந்த பொழுது
இரவு எழுதிய முன்னுரைக்கு
பொருளுரை எழுத
எழுந்து நடந்தேன் அவளை நோக்கி ....
முடிவுரையை வெறுத்தபடி
முன்தின இரவு
ஊடலால் நேற்றைய இரவு
இருட்டின் மௌனங்கள் கலைந்தது

Sunday, November 15, 2009

இரவின் இருட்டில்







எனக்கும் அவளுக்கும் இடைவேளை

கட்டிலில் அவள் அந்த பக்க்கம்

நான் இந்த பக்கம்

எங்களுக்கு நடுவே ஊடல்....

இரவின் மௌனம் பழகியது

அவளின் மௌனம்

நான் அறியாதது.......

இரவின் மௌனம் ; மனதில்

அமைதி இல்லை,

பேசுவதற்க்கான வார்த்தைகளை

தேடியபடி கண்கள்

இரவின் இருட்டில் விடை தெரியாமல்

விடை என்னுள் வைத்து கொண்டே ......

Ilaiyaraaja's Superb BGMs










பிகு : இந்த மூன்றையும் ஓன்று சேர கேட்டு பாருங்க. அப்படியே சந்தோசத்தின் உச்சியில் இருப்பிங்க

Saturday, November 14, 2009

குழந்தைகள் தினம் இன்று.....


இன்று நேருவின் பிறந்த நாளாம், அவருக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் என்பதால் அவரின் விருப்ப படி இந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவிச்சாங்க இந்திய அரசாங்கம். இந்த மேட்டர்யை நாங்க எல்லாம் சின்ன வயசில மீட்டர் போட்டு யோசிப்போம். எல்லாம் கொக்கு மக்காக தான். ஹ்ம்ம்.



குழந்தைகள் தினம் என்று கொண்டாடும் இந்திய அரசு இன்னும் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க இன்னும் பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்த மாதிரி தெரியல. ஏதோ ஒன்னு இரண்டு சங்கங்கள் இருந்தாலும் ஒரு உஸ் இல்லை.



என்னை கேட்டால் இதற்க்குன்னு ஒரு அமைச்சரங்கம் (MINISTRY ) பெரிய அளவில் அமைத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாக்கினால் நல்ல இருக்கும்.



அதுவும் சினிமா, இலக்கியம் போன்றவற்றில் குழந்தைகளுக்கான இடம் இருப்பதில்லை. இன்று சமுகத்தில் குழந்தைகள் தினம் வந்தால் தான் குழந்தைகளை பற்றி பெரிய அளவில் பேசுகிறோம். பிற்பாடு மறந்து விடுகிறோம்.



இன்று எனக்கு தெரிந்து சென்னையில் பல குழந்தைகள் அவர்களின் குழந்தைதனமையை பெற்றோரின் பொருளாதார வேட்டையால் தொலைத்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பல வருஷம் கழிந்து பல திறமை கொண்டவர்களை பார்க்க முடியாது. இப்பொழுதே எதாவது செய்தால் தான் நாளைய இந்தியாவை காப்பாற்ற முடியும். இன்று கல்வி நிலையில் பொறுத்த வரைக்கும் ஒரு LONG STANDING PLAN இருப்பதாய் தெரியவில்லை.
பல வீடுகளில் குழந்தைகள் குழந்தைகள் போல் இல்லமால் பெரிய மனுஷங்கள் மாதிரி நடக்குரங்க.



போன தலைமுறையில் கல்வி முறை சரி இல்லாததால் தான் இன்று EMPLOYBILITY ரேட் ரொம்பவே கம்மியா இருக்கு. இன்ன்னும் சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு இருக்கு.



ஓர் நல்ல சமுகம் அமைக்க வேண்டுமானால் ; நாளைய இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்க்காலம் அமைய வேண்டுமானால் குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று இருக்கிறது.
=
=
=
=
=
டிஸ்கி : குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள்.

Friday, November 13, 2009

கார்கியும் பரிசல்க்காரனும்





கார்கி : "ஏன் நம்ம பதிவுலகம் மொக்கை பதிவுகளை தண்டி அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் ?"

பரிசல்க்காரன் : "இதை எல்லாம் நீயோ நானோ முடிவு செய்யறது இல்லை"




டிஸ்கி : காலையில் இந்த பாட்டு பார்க்கும் பொழுது தோன்றின டயலாக். ஹி ஹி ஹி ஹி. பதிவுலகத்தை அடுத்த காட்டதிற்கு கொண்டு போக விரும்புவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது. ஹி ஹி ஹி ஹி

Wednesday, November 11, 2009

பிடித்தவை : மிகவும் பிடித்தவை


நடிகர்
பிடித்தவர் :அஜித் மிகவும் பிடித்தவர் : ரஜினி


நடிகை
பிடித்தவர் : ஜோதிகா
மிகவும் பிடித்தவர் : சிம்ரன்

கவர்ச்சி
பிடித்தவர் : நமீதா
மிகவும் பிடித்தவர் : சில்க் சுமிதா

எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ். ராமகிருஷ்ணன்
மிகவும் பிடித்தவர் : சுஜாதா

இசையமைப்பாளர் :
பிடித்தவர் : இளையராஜா
மிகவும் பிடித்தவர் : எம்.எஸ். விஸ்வநாதன்.

கொள்கை
பிடித்தது : சோஷலிசம்
மிகவும் பிடித்தது : எது சோறு போடுகிறதோ அது

ஊர்
பிடித்தது : ஊட்டி
மிகவும் பிடித்தது : திருச்சி

திரைப்பட டைரக்டர்
பிடித்தவர் : வெங்கட் பிரபு, ஷங்கர்
மிகவும் பிடித்தவர் : மணிரத்தனம்

நாடக எழுத்தாளர்
பிடித்தவர் : மரீனா
மிகவும் பிடித்தவர் : கிரேசி மோகன்

நாடகம்
பிடித்தது : வியட்னாம் வீடு
மிகவும் பிடித்தது : மாது + 2

திரையரங்கம்
பிடித்தது : சத்யம், சென்னை மிகவும்
பிடித்தது : சோனா/மீனா, மாரிஸ்; திருச்சி

ரோடு
பிடித்தது : ECR
மிகவும் பிடித்தது : தஞ்சாவூர் ரோடு, திருச்சி

டி கடை
பிடித்தது : பாலன் டி ஸ்டால், பெருங்களத்தூர்
மிகவும் பிடித்தது : நாகநாதர் டி ஸ்டால், திருச்சி.
=
=
=
கொஞ்ச நாள் முனாடி ரம்யா அக்காவும் மற்றும் அண்ணன் வணங்காமுடி அவர்களும் என்னை இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருந்தாங்க. இப்ப தான் நேரம் கிடைச்சுது. இந்த தொடருக்கான விதிகள் என்னன்னு தெரியல. ஏதோ டைப் பண்ணும் போது மனசுக்கு படத்தை எழுதி இருக்கேன். இந்த தொடருக்கு யாரை அழைப்பதுன்னு தெரியல. யாராச்சு எழுதவில்லைன்ன எழுதுங்க. இல்லாட்டி நான் இலக்கியவாதியாக மாறி விடுவேன். ஆமா சொல்லிபுட்டேன்.

Monday, November 9, 2009

காற்றில் எனது பதிவுகள்


விசாரணைகள் முடிந்த நிலையில்
வலிகள் தரும் வசவுகளை கண்ட மனமாய்
வலிகள் தராத அடிகளை தங்கிய உடல்
கொண்டு என் உணர்வுகளின் தனிமையை கண்டு அஞ்சும்
வேளையில் மனதில் கவிதை எழுதும் ஆசைகள் அலை மோதிய
பொழுதில் காகிதங்கள் ஏதும் இல்லாத நிலையில்
எண்ணங்களை எழுதுகோள் ; காற்று காகிதமானது
நான் இந்த கவிதையை எழுதும் வேளையில்.....
நினைவுகளின் பதிவு ஏதும் இல்லாத
சுத்தமான காற்றை தேடினேன் ;
சுத்தமான காற்று கிடைக்காத பொழுது
நான் சுவாசிக்க சேமித்து வைத்திருந்த காற்றில்
என் எண்ணங்களின் பதிவான கவிதையை எழுதும்
வேளையில் வலிகள் இல்லாத உடல் வலிகள்
காரணமாய் மயங்கினேன் .....
மறுநாள் வலிகளை வழி கொண்டு வரவேற்க
மயக்கம் தெளிந்த பொழுது
நான் பதிவு செய்த காற்றை காணவில்லை
யாரவது சுவாசித்து இருப்பார்களோ என்ற பயத்தில்
நான் இருக்க....
காலடி சத்தங்களை கேட்டது என் காதுகளில்

Tuesday, November 3, 2009

ஏஞ்சல் வந்தாளே பத்து வரத்தோடு


ரொம்ப நாள் முன்னாடி தாரணி பிரியா அக்கா இந்த ஏஞ்சலை என் கிட்ட அனுப்பி இருந்தாங்க பத்து வரம் கேட்க சொல்லி. அனா இவ்வளவு நாட்களாய் யோசித்து பார்த்ததில் எனக்கு என்ன வரம் கேட்பதுன்னு தெரியல. என்னத்த சொல்ல.... நான் எதாவது கேட்க போய் ஏஞ்சலுக்கு பைத்தியம் பிடிச்சுட்டா என்ன செய்ய... பிறகு அதுக்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது.
ஒன்னு சொல்லியே ஆகவேண்டும். தேவதை நான் எதிர்பார்த்த அளவுக்கு அழகாக இல்லை. ஒரு வேளை நான் கேட்க்கும் வரம் தேவதை கிட்ட இல்லாவிட்டால் என்ன செய்வது. பிறகு நான் டென்ஷன் ஆகிவிடுவேன். அதனால் ஏஞ்சல் என்னிடமே இருக்கட்டும்.
கொஞ்ச நாள் முன்னாடி தேவதை போல் ஓர் பொண்ணு உன்னை தேடி வருவா என்று எங்க ஊர் பெரியவர் ஒருத்தர் சொன்னாரு ; ஒரு வேளை அந்த பொண்ணு இந்த தேவதை தானோ...... ஹீ ஹீ ஹீ. எப்படி இருந்தாலும் அந்த ஏஞ்சலுக்கு நான் வாழ்க்கை தர முடிவு செய்து விட்டேன். இந்த பதிவை படிக்கும் நீங்கள் தான் ஏஞ்சல் வீட்டில் பேச வேண்டும். என்ன ஓகே தானே......

Monday, November 2, 2009

கடவுள் ...... கேள்விகளுக்கான எனது பதில்

ஆன்மீகம் எப்பொழுது தோற்கிறது ???

அதனை நம்புகிறவர்களின் நம்பிக்கையை அது காப்பாற்றாத பொழுது.


நாத்திகம் ஏன் தோற்கிறது ???

மக்களிடம் அது எந்த வித நம்பிக்கையும் ஏற்படுத்தவில்லை. அதனால் தான் அது தோற்கிறது.


ஆன்மீக நூல்கள் அவசியமா???

அதை படிபவர்களுக்கு நிம்மதியையும் ; எழுதுபவர்களுக்கு லாபத்தையும் தருவதால்... அது பாட்டுக்கு இருந்துவிட்டு போகட்டுமே.

கடவுள் நம்பிக்கை அவசியமா ???

நம்பிக்கை இல்லாத வாழ்க்கையில் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும் என்று கடவுளை நம்புகிறவர்களுக்கு அவசியம் தான். ஆனால் எனக்கு அது அவசியம் இல்லை. ஏனென்றால் எனக்கு உலகில் உள்ள எல்லா மனிதர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது.


ஆன்மீகத்தின் ஆயுள் ????

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்று மக்கள் தெரிந்து கொள்ளும் வரை.

உங்களை பொறுத்த வரையில் கடவுள் யார் ???

கடவுள் யார் என்று எனக்கு தெரியாது. சிறுவயதில் நானும் கோவிலுக்கு போய் இருக்கிறேன்; காரணம் கடவுள் எனது வேண்டுதல்களை கேட்பார் என்று. ஆனால் கேட்டாரா இல்லையோ என்றெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு அப்பொழுது எல்லாம் யார் கடவுள் (ஏசுவா, அல்லாஹ்வா, இல்லை சிவனா) என்ற குழப்பம் தான் அதிகம் இருந்தது. பிறகு கொஞ்சம் வளர்ந்த பின் எந்த கடவுளை வழிபட்டால் அதிகம் பலன் உண்டு என்று யோசிக்க ஆரமித்தேன். அதற்கு பல்வேறு ஆட்களும் ஊடங்கள் காரணம். பிறகு வளர வளர கடவுளுக்கான தேவை என்னிடத்தில் குறைந்து கொண்டே வந்தது. இப்பொழுது கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை.


என்னை பொறுத்த வரைக்கும் கடவுள் என்பவர் நன்றாக DEMAND CREATE செய்யப்பட ஓர் விற்பனை பொருள்.

எப்படி கடவுளை நீங்கள் விற்பனை பொருள் என்று சொல்லுரிங்க ????

காசு வராவிட்டால் யாரும் மத ஆலயங்கள் நடத்த மாட்டர்கள். கடவுள் இல்லாமல் யாரும் மத ஆலயங்களை நடத்துவது இல்லை.


மக்கள் காசுக்காக மத ஆலயங்களுக்கு போவது இல்லையே ???

ஆமாம். கட்டாயம். ஆனால் மத ஆலயங்களை இன்றைய உலகில் யாரும் ஓசிக்கு நடத்துவது இல்லை.


நீங்கள் சொல்வது இன்றைய உலகில் தானே. அந்த காலத்தில் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடன் தான் மத ஆலயங்களை கட்டினார்கள் ???

உண்மை தான். காசுக்காக அவர்கள் கோவிலை கட்டவில்லை. ஆனால் எல்லோரும் மரணத்திற்கு பிறகு சொர்கத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கோவிலை கட்டினார்கள். மத ஆலயங்கள் ஏற்பட மரண பயமும் ஓர் காரணம். இதற்க்கு சாட்சியாக கடவுளை துதித்து பாடினவர்கள் எல்லோரும் சொர்க்கத்தில் ஓர் இடம் வேண்டும்; இனி பிறவி இல்லாத வரம் வேண்டும் என்றெல்லாம் தான் படி உள்ளார்கள். ஏதோ ஒரு விதத்தில் பலனை எதிர்பார்த்தார்கள் கடவுளிடம் இருந்து.

(கேள்வி- பதில்கள் தொடரும்)

Sunday, November 1, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009..!!!

கார்த்திகை பாண்டியன் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்து இருக்காரு.
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?

மேவி (பெயர் சொன்னால் போதும் தரம் விளங்கி விடும்). என்னை பற்றி சொல்ல பெருசா ஒன்னும் இல்லைங்க.
2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

சிறுவயதில் பாண்டிச்சேரி ல நிறைய பாட்டாசுகளுடன் கொண்டாடியது.மூன்று நாளாகியும்; தொடர்ந்து வெடித்தும் பட்டாசுகள் காலியாகவில்லை.அவ்வளவு இருந்துச்சு.
3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

போன தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தேன்னோ அதே ஊரில் தான் இந்த தீபாவளிக்கும் இருந்தேன்.
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ரொம்பவும் சுயநலமாய் போகிவிட்டது.
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

அதெல்லாம் தெரியாதுங்க. அப்பா, அம்மா தான் வாங்குவாங்க.
6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

வீட்டில் தான் செய்வோம். அது ஒரு பெரிய பட்டியலுங்க.
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

நேரில் பார்க்க முடியுமானால் நேரில் சென்றே சொல்லி விடுவேன். இல்லாட்டி செல்போன் முலமாக தான்.
8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

அப்பாஸ், யுவன் வீட்டிற்கு மட்டும் சென்று விட்டு வீடு வந்து விடுவேன். தொலைக்காட்சி பெரும்பாலும் பார்க்க மாட்டேன். விளம்பர தொல்லை தாங்க முடியாது, அதனால் எதாவது புத்தகம் படிப்பேன்
9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வழிவகை செய்வேன்.
10)மறக்க முடியாத தீபாவளி சம்பவம் எதாவது ???

தலை தீபாவளிக்கு அண்ணி வந்து இருந்த பொழுது ; தீபாவளிக்கு மறுநாள் அண்ணி சமையல் தான். சாப்பிட்டு விட்டு "அண்ணி!!! ரசம் சூப்பர்" என்று சொன்னேன்.உடனே " மேவி!! அது சாம்பார்". என்று அவங்க சொன்னாங்க. பிறகு எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், எழுந்து போய் விட்டேன்.
Related Posts with Thumbnails