தாஜ்
மும்பை
சர்வீஸ் சென்டரை நோக்கி சற்று குழப்பத்தோடு service entrance யில் யார் டுடியில் இருக்கிறார்கள் என்று பார்க்க போய் கொண்டிருந்தார். இந்த நேரத்துக்கெல்லாம் குப்பத்திலிருந்து கிளம்பிய அவன் வெளியே சின்ன யானை என்று செல்லமாக அழைக்கப் படும் அந்த லோட் ஆட்டோவில் காத்துக்கொண்டிருந்தான். அவன் ரோட்டின் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு steering மீது தலை வைத்துக் கொண்டு, ஒரு கையில் மொபைல்யை பிடித்துக் கொண்டு, ஹோட்டல் உள்ளே வரும் இருந்து ஒரு அழைப்புக்காக கத்துக் கொண்டிருந்தான்.
"அங்க போய் நில்லு, ஒரு போன் கால் வரும், அதை attend பண்ணாத, கால் வந்த உடனே service enterance க்கு போய் லோட் இறக்கிட்டு வந்துரு.
"எப்புடி நா மட்டும் பண்ணறது..... லேடாயி மாட்டிகிட்ட. அதுவேற இல்லமா அது பெரிய இடம், செக்யூரிட்டி எல்லாம் இருப்பாங்க."
"டேய் .... நான் சொன்ன வேலைய மட்டும் பாரு. நீ அங்க போற நேரத்துக்கு யாருமே இருக்க மாட்டாங்க. அதுக்கு நா கரண்டி." என்று சொன்ன சோட்டா தாதாவை நம்பி தான் அவன், முகில் கிருஷ்ணா அங்கே காத்துக் கொண்டிருந்தான். காசுக்காக இல்லாவிட்டாலும் சோட்டாவின் மேல் இருக்கும் பயதிற்க்காகவே பொருட்களுடன் தனது ஏரியாவை விட்டு வெளிய வந்து இருக்கிறான். வழக்கமாய் போலீஸ் பயத்தினால் ஏரியாவை விட்டு வர மாட்டான்.
சோட்டா ராம், தாஜ் ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இருக்கும் ஒரு கதவுகள் முடிய அறைக்குள் சோபாவில் உட்க்கர்ந்துக் கொண்டு , ஒரு பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு, செல்போனில் முகில் கிருஷ்ணாவை அழைத்தான்.
"வந்துட்டியா ?"
"வந்துட்டேன் பாஸ். நீங்க சொன்ன இடத்தில தான் வண்டியை நிறுத்திருக்கேன்"
"சரி"
"பாஸ். இன்னும் miss call வரலையே...."
"வரும். வரும்..... அப்பரும் அந்த missed call வந்தப்பரும் இந்த நம்பரை use பண்ணாத. நா சொன்ன மாதிரி இன்னொருத்தன் பெயர்ல தானே வாங்கி இருக்க?"
"ஆமா"
ஒரு சிகரட்டை பற்ற வைத்து விட்டு, இரண்டு இழுப்புகளுக்கு பின் சயீத் இந்நேரம் சொன்ன மாதிரி செய்து இருப்பானா என்ற சந்தேகத்தில் அவனுக்கு மீண்டும் போன் பண்ணினான்.
service entrance யில் யாருமில்லாததை உறுதி செய்த பிறகு, store room வழியாக food production யை நோக்கி சென்று கொண்டிருந்த சயீத், அழைப்பு வரவே.
" உங்க பெயர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா"
"இங்க பாரு. என் பெயரு இப்ப உனக்கு முக்கியம் இல்ல. உன்னோட பொண்டாட்டி உசுரும், பசங்க உசுரும் தான் முக்கியம்"
கொஞ்ச கோவமாக செல்போனை டேபிளில் வைத்த சோட்டா ராம், கொஞ்ச நேரத்துக்கு ஜன்னல் வழிய தெரிந்த நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு இருந்தார்.
"ராமு......." என்று அவரது தாய் குரல் கேட்கவே கண்களில் கண்ணீருடன் "அம்மா நீ மட்டும் உயிரோட இருந்திருந்த நான் ஏன்மா இப்படி இருக்க போறேன்".
= = = = = = = = = =
திவஸ்
மதிய பிரதேசம்.
ஏதோ ஒன்றை முகர்ந்து பார்த்துவிட்டு ஒடி சென்ற நாய் மீண்டும் வந்து போலீஸ் இருக்கும் பக்கமாய் ஓடி வந்தது.
"எப்புடி சார் கொலை பண்ணினது ஒரு பொம்பளன்னும் அவ மும்பை நோக்கி போறவன்னும் சொல்லுரிங்க..."
"டேய் சில விஷயத்துக்கு எல்லாம் காரணம் கிடைக்காது. ஆனா இப்படி தான் இருக்கனும்ன்ன்னு ஒரு சின்ன guess தான் ...... இதே மாதிரியான கொலை நடந்துகிட்டு வர ஊர் வரிசையை பாரு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ........
புனே
மித்ரா தாஸ் தன் மீது மோதிச் சென்ற ஆணின் வேர்வை நாற்றத்தில் சற்று மயங்கி, மனதளவில் தன்வசம் இழந்தாள். அது அவளுக்குள் மீண்டும் மீண்டும் ஆணின் ரத்த வாடையை முகர வேண்டும் என்ற ஆசையை துண்டிக் கொண்டே இருந்தது. மும்பை பக்கம் வந்து விட்ட பிறகும் அவளால் அந்த இச்சையை அடக்க முடியவில்லை. புனே மற்றும் மும்பையில் அவள் தெரிந்த முகம் என்பதினால் கலவரப்பட்டு போனாள் .
எதுவும் தப்பாகி விட கூடாது .....
கொஞ்ச நேரம் அங்கு நேரத்தை போக்கலாம் என்று நினைத்தவள், கார் ஸ்டார்ட் செய்த பின் செல்லும் வழிதெரியாமல் மனம் போன போக்கில் காரை செலுத்தினாள்.
யாரோ மண்டையில் கனமான சுத்தியலை கொண்டு தாக்கியதை போல் உணர்ந்தாள்.
டங் டங் டாங் டங் .....
மண்டை குடைச்சல் அவளுக்கு ஜாஸ்தியானது.
= = = = = = = = = =
பட்னா
பீகார்.
"அப்பா போயிட்டு வரேன்பா" என்று தாயின் கையை பிடித்தபடியே தனது தந்தையை பார்த்து சொன்ன கிஷன், துணி பைகளை எடுத்தபடிய வாசலை நோக்கிச் சென்றான்.
"பாருப்பா. லாரி டிரைவர் நம்ம தோஸ்து தான்.... எப்படியும் போக மூணு நாளாச்சி ஆகும், அவர்கிட்ட வெட்கபடாம எத இருந்தாலும் கேள்ளு."
"சரிப்பா. அம்மா கவலபடாதமா.... நம்ம ஊர்ல இருந்து போன நிறைய பேர் அங்க வேல பாக்குறாங்க. அதனால எதாச்சுனாலும் ஆளுங்க இருக்காங்க"
"சரிபா. அப்பாவுக்கு அப்ப அப்ப போன் பண்ணு. மொபைல், காசு எல்லாத்தையும் பத்திரமா வைச்சுக்கோ."
"சரிம்மா, சரிப்பா. போயிட்டு வரேன். அங்க போய் வேல எப்புடி இருக்குன்னு போன் பண்ணுறேன்."
" டேய்."
"என்னமா?"
"போரறது நல்ல கம்பெனியா?"
"அம்மா. தாஜ்மா..ரொம்ப பெரிய ஹோடலு..........."
கொஞ்சம் நேரம் கழித்து, லாரியில் ஏறி மும்பையை நோக்கி பயணமானான் கிஷன்.
= = = = = = = = = =
சென்னை.
"let the shit be always a shit ......."
"இல்ல ஷபேனம்....நான் சொல்லியே ஆகணும்"
"எதபத்தி?""அது வந்து..."
"நீ ஒரு பொண்ண காலேஜ்ல காதலிச்ச, அதானே ..."
"ஆமா. ஆனா ஏன் அவளை ...."
"அதை நீ சொல்ல வேண்டாம்" என்று சொன்னப்படி அவள் என்னை வந்து அணைத்தாள்.
"சரி. இப்போ சொல்லு, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"
"அதை நான் மும்பைக்கு வந்து சொல்லுறேன்"
"அட நீயும் மும்பைக்கு போறியா"
"இல்ல போறோம்"
= = = = = = = = = =
திவஸ்,
மதிய பிரதேசம்.
"எப்புடி சார். அவன் முஸ்லிம்ன்னு சொல்லுரிங்க ?"
"look ..... it has been circumcisionated "
"இதனால என்ன சார் பிரயோஜனம்?"
" short list பண்ணலாம்ல"
"சார். இப்பெல்லாம் முஸ்லிம் மட்டும் சுன்னத் பண்ணிக்கிறது இல்லையே.....
= = = = = = = = = =
தொடரும்......