பிரபஞ்சமே நிர்மூலமானதாக
முதன்முதலாக முத்தமிட்டவளை உருவாக்கிக்கொள்கிறான்
கற்றோ படிரென சன்னலை அறைந்துமூடுகிறது
விழித்துக்கொண்டவளின் முழுக்காதலுடன்
வீர்யமிக்க காமத்தை
களையும் உடல் வழியே துய்க்கிறான்
கெட்ட சொப்பனத்தின் இடையூறில்
மங்கி மறையும் நிர்வாணம்
சபிக்கப்பட்ட நகரத்தில்
பித்தம் முற்றிய நிலையில்
ஒழுங்கற்ற வறண்ட பாழ் மனதுடன்
அபலை போன்ற தோற்றத்தில் நிற்கிறான்
வீசுகின்ற காற்றில் காதோரம் அசையும் முடிகளில்
அவள் விரல்கள் கோதிய ஞாபத்தில்
ஏதோ ஒரு நிழல் தொடர பயந்து
சாய்ந்து படுத்தான் சிதைவுற்ற கட்டிலில்
கேலிச் சிரிப்புகள் பெருகும் வெளியினை மூட
தனிமைக்குள் புகுந்து சென்றான்
வெளியில் அலறும் காற்றில் துர்தேவதைகள்
தாழிட்ட கதவை உடைக்கின்ற வேளை
பெண்களுள்ள பிரதேசங்களை தேடும் கனவொன்றில்
உறைந்துபோனான்
எழுதியவர் - அய்யப்பமாதவன்
புத்தகம் - நிசி அகவல்
பதிப்பகம் - ஆழி
விலை - ரூ. 60
நன்றி - கார்த்திகை பாண்டியன்
7 comments:
/////வீசுகின்ற காற்றில் காதோரம் அசையும் முடிகளில்
அவள் விரல்கள் கோதிய ஞாபத்தில்
ஏதோ ஒரு நிழல் தொடர பயந்து
சாய்ந்து படுத்தான் சிதைவுற்ற கட்டிலில்
கேலிச் சிரிப்புகள் பெருகும் வெளியினை மூட
தனிமைக்குள் புகுந்து சென்றான்
//////////
கண்களை மூடி வார்த்தைகளுடன் , வார்த்தைகள் எதுவுமின்றி நடை பழக செய்கிறது கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி
அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!
கனவோடு வாழும் ஒரு நிலை !
enaku konjam puriyala... thirumba padikiren...
ரொம்ப இலக்கியம் படிக்க ஆரம்பிச்சுட்டியே மேவி
Into serious literature? Couldn't comprehend a thing. :-)
@ பனித்துளி சங்கர் : நன்றிங்க .ஆமாங்க கவிதை சூப்பர் தான், புஸ்தகத்தை வாங்கி பாருங்க : அதுல இருக்கிற நிறைய கவிதை உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்
@ எஸ்.கே. : ரொம்ப நன்றிங்க. இன்னும் நிறைய பகிர்ந்து கொள்கிறேன்
@ ஹேமா : ஆமா
@ பிரேம் : பொறுமையா படிங்க .நல்ல கவிதை இது
@ தாரணி பிரியா : அக்கா ...அப்படியெல்லாம் தப்பா நினைக்க கூடாது.... எனக்கு இன்னும் இலக்கியவியாதி வரல ..வரவும் வராது
@ கார்த்திக் : அப்படி எல்லாம் ஒன்னுமில்லைங்க ......
Post a Comment