Pages

Sunday, January 5, 2014

தி டர்க் - மாயாஜால இயந்திரம்

ஒரு இயந்திரத்தோடு மனிதன் சதுரங்கம் விளையாடுவதும் தோல்வி அடைவதும் இப்போதைய கணினி காலத்தில் சாதரணமாக இருக்கலாம் ஆனால் முன்னூறு வருடங்களுக்கு முன்பு யாரும் யோசிக்காத ஒன்றாகவும், பலர் அதை பில்லி சூனியம் வேலையாக இருக்கலாம் என்று தான் எண்ணினார்கள். காலம் அப்படி மூட நம்பிக்கையில் ஆழ்த்திருந்தது மக்களை.

அப்படி மக்களை யோசிக்க வைத்து, அவர்களோடு சதுரங்கம் விளையாடிய இயந்திரத்தின் பெயர் "தி டர்க்"(THE TURK). 

இந்த இயந்திரத்தோடு சதுரங்கம் விளையாடி தோல்வியடைந்தவர்களில் பெஞ்சமின், நெப்போலியன் போன்றவர்கள் உண்டாம். 

இந்த இயந்திரம் இயக்கத்தில் எந்த மறைவு வேலையையும் பயன்படுத்தாமல் வெறும் சாவி மட்டும் குடுத்து விளையாட வைக்க படுமாம். எதிராளி கொடுக்கப்பட்ட சதுரங்க காய் அமைப்பு நிலை பட்டியலில் இருந்து எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். பிறகு அந்த நிலையில் இருந்து அவர் விளையாடலாம். 

எதிராளி தவறாக விளையாடினால் இந்த இயந்திரம் அந்த நகர்வை ஏற்றுக்கொள்ளாமல் பழைய நிலைக்கு சதுரங்க காயை கொண்டு போய் வைத்து விடும். அதே போல் முக்கியமான கட்டத்தில் கண் சிமிட்டுவதும், குரல் எழுப்புவதும் இந்த இயந்திரத்தின் சிறப்பு என்று சொல்லலாம். 

ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே இந்த இயந்திரத்தை கண்டுபிடித்த நொல்ஃகாங் வோன் கெம்பிளேன் அவர்கள் சாவி கொடுப்பதை தவிர்த்து அவருடைய தலையீடு எதுவும் இருக்காது. 

எப்படி ஒரு இயந்திரம் மனிதனின் புத்திசாலித்தனமான விளையாட்டுகளில் ஒன்றான சதுரங்கத்தில் மனிதனை மிஞ்சிய முறையில் விளையாட முடிகிறது.... அப்படியானால் இது ஏதோ சாத்தானின் வேலையாக தான் இருக்கும் என்று நம்பினார்கள் இந்த மாய தந்திரமாக கட்டப்பட்ட வித்தையை. 

ஆனால் உண்மை என்னவென்றால் இந்த இயந்திரத்தை இயக்க கெம்பிளேன் கையாண்டது எளிய பௌதிக மற்றும் கணிதவியல் கோட்பாடுகள் தான் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

இன்றளவும் அந்த வித்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை, எப்படி அந்த இயந்திரம் மனித மூளை யோசனைக்கு ஏற்ற படி விளையாடியது என்று. 

கெம்பிளேன் காலத்திலேயே ஒரு தீ விபத்தில் அந்த இயந்திரம் எரிந்து ஒன்றும் இல்லாமல் சாம்பலானது என்று சொல்கிறார்கள். 

கடந்த முப்பது வருடங்களில் குறிப்புகள் கொண்டு இந்த இயந்திரத்தை மறு உருவாக்கம் செய்து ஆராய்ந்து வருகிறார்கள். ஒருவர் முழுமையாக செய்து அந்த வித்தையை கண்டுபிடித்து விட்டார். ஆனால் எப்படி அந்த இயந்திரம் இயங்குகிறது என்பதை சொல்ல மறுக்கிறார். ஆனால் பலர் இந்த இயந்திரம் இப்படி தான் இயங்குகிறது என்று அந்த காலம் தொட்டு பல வியூகங்களை பற்றி எழுதி கொண்டு வருகிறார்கள்.

அந்த இயந்திரம் வந்த காலத்தில் இருந்தே இந்த காலம் வரையிலும் பல சமூக சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் இந்த இயந்திரத்தை பற்றி எழுதி இருக்கிறார்கள். பல கதைகளிலும் இந்த இயந்திரம் வந்துள்ளது. 

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எட்கர் ஆலன் போ அவர்களும் இந்த இயந்திரத்தை பற்றி எழுதியுள்ளார். 

இந்த நாள் வரையிலும் இந்த பழம் புகழ்பெற்ற இந்த இயந்திரத்தை பற்றி முக்கிய ஆவணமாக பிரஞ்சு இயக்குனர் ரேமாண்ட் பெர்னாட் 1927ல் இயக்கிய படம் தான் திகழ்கிறது. 

எதையும் நகல் எடுக்கும் திறமையான ஆட்கள் நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்பும் இருந்தபடியால் 1845 வாக்கில் நியூயார்க்கில் ஒருவர் தான் கண்டிபிடித்தாக சொல்லி இதே போல் ஒரு இயந்திரத்தை மக்கள் பார்வைக்கு வைத்தார். கொஞ்ச காலத்தில் அவரது முகமூடியை கிழித்தது ஒரு பத்திரிக்கை. 

இந்த இயந்திரத்தை பற்றி கேள்வி பட்ட தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லும், இதன் மேல் ஆர்வம் கொண்டு சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார். 

ஒரு சமூக வராலாறை பற்றி வாசிக்கும் பொழுது, சமூகத்தின் ஒரு பங்காக விளங்கிய தந்திர இயந்திரங்கள் பற்றி படிப்பது அவசியமான ஒன்று. அது மக்களின் வாழ்க்கை முறையை ஒரளவுக்கு விளக்கி சொல்லும். 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வியக்க வைக்கும் இயந்திரம்... ஒரு நாள் வல்லவனுக்கு வல்லவன் வரலாம்...

Related Posts with Thumbnails