Pages

Sunday, January 26, 2014

வீடியோ கேமும் நொறுக்கும் சிறுவர் உலகமும்

கொஞ்ச நாள் முன்பு டைம்ஸ் அப் இந்தியா நாளிதழில் ஒரு வீடியோ கேம் விளையாட்டை பற்றி படித்தேன். அதாவது ஒரு அப்பா வேலையிழந்து குடும்பத்தை காப்பாற்ற திருட போகிறார். அதற்கு மகன் உதவி செய்வது போல் அமைந்துள்ளதாம் அந்த விளையாட்டு. இதில் இந்த விளையாட்டை விளையாடுபவர் அந்த மகன் நிலையிலிருந்து விளையாட வேண்டுமாம். 

இம்மாதிரியான விளையாட்டுகளின் மூலம் வேலை இல்லாமல் போனால் குடும்பத்தை காப்பாற்ற அப்பா திருட போவது தான் ஒரே வழி தான் எண்ணத்தை குழந்தைகளின் ஆழ் மனத்தில் உருவாக்கி விடலாம் இந்த விளையாட்டு. வெறும் விளையாட்டு தானே என்று இருந்துவிடலாம். ஆனால் இது களவு சார்ந்து போலியான எண்ண அலைகளை உருவாக்கி விடுமோ என்று பயமாக இருக்கிறது. ஏற்கனவே களவாடிவிட்டு தப்பி செல்லுதல், வன்முறை, அடித்தல் கொல்லுதல், நடிகைகளின் ஆடைகளை அவிழ்ப்பது போன்ற விளையாட்டுகளோடு இதுவும் ஒன்று.

இதனை விளையாட்டும் குழந்தைகளின் மனநிலை வருங்காலத்தில் எப்படியெல்லாம் கட்டமைக்கப்படும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. 

பெரியவர்களும் இதனை விளையாடுகிறார்களே என்று சிலர் சொல்ல கூடும். ஆனால் அவர்களுக்கு இதில் ஒன்றாக கலப்பதில்லை. இதனையெல்லாம் மறக்கடிக்கும் அளவுக்கு வேலை பளுவும் தினசரி வாழ்க்கையிலிருக்கும் இம்சைகளும் இருக்கிறது. ஆனால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நேரிலும் எண்ணத்திலும் இந்த மாதிரியான விளையாட்டில் லயித்திருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.

எனக்கும் நன்றாக ஞாபகமிருக்கிறது பள்ளியில் நான் படித்து கொண்டு இருந்த சமயத்தில் அப்பொழுது தொலைக்காட்சியில் தொடராக ஒவ்வொரு புதன்கிழமையும் வந்து கொண்டு இருந்த "மர்ம தேசம் - ரகசியம்" பற்றி வாரம் முழுவதும் பேசி கொண்டு இருப்போம். பாடங்கள் நினைவில் இருந்ததை விட மர்ம தேசம் தான் மண்டையில் அதிகம் ஏறி இருந்தது.

வாரம் ஒரு நாளைக்கே அந்தளவிற்கு மோகம் என்றால், எல்லா நேரத்திலும் இம்மாதிரியான வீடியோ கேம்களோடு இருக்க போகும் குழந்தைகளின் நிலையை எண்ணி பாருங்கள். 

வணிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் உருவாக்கி சந்தை படுத்துகிற அபத்தம் போக்கில் இதுவுமொன்று. இவைகளை எதிர்த்தோ, பற்றியோ அதிகம் விழிப்புணர்வு இல்லை அல்லது அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த யாரும் முனையவில்லை. மற்ற நிறுவனங்களோ இந்த போக்கு வெற்றி பெற்றால் பிறகு அதை வைத்து எப்படி எல்லாம் காசு பார்க்கலாம் என்று ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருக்கிறது. 

கொஞ்ச நாள் முன்பு எனது கைபேசியில் திரை உடைந்தது போல் காட்டும் ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்து சொந்தகார பசங்களுக்கு விளையாட்டு காட்ட முயற்சித்தேன். ஒவ்வொரு வாட்டியும் அதனை இயக்கிய பொழுது இதே போல ஒரு விளையாட்டை தரவிறக்கி விளையாடுமாறு பரிந்துரை வந்துகொண்டே இருந்தது. இதே நானல்லாமல் கூட்ட சிறுவன் இருந்திருந்தால் தரவிறக்கம் செய்திருப்பான். தேவை உற்பத்தி என்னும் அவர்கள் போடும் தூண்டில் புழுவை நம்பி போய் மாட்டிகொள்ளும் மீன்களாய் தான் நாம் இருக்கிறோம் அல்லது அப்படி ஆக்கபடுகிறோம். 

இதனை பார்த்து இம்சை செய்யும் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் பெற்றோரும் இந்த மாதிரியான விளையாட்டுகளை தரவிறக்கம் செய்து தந்துவிடுவார்கள். அப்படி தரவிறக்கம் செய்ய வைக்க படுகிறார்கள் பெற்றோர்கள். 

குழந்தைகள் இந்த மாதிரியான விளையாட்டை கேட்டு வாங்கி தந்தால் அவர்கள் சிறந்த பெற்றோர் ஆகிவிடுவார் என்று சொல்கிறது நான் பார்த்த உள்ளூர் விளம்பரம் ஒன்று. 1950களின் மத்தியில் அமெரிக்காவில் புகைபிடித்தல் நல்லது என்று சொல்லி சிகரெட்டுகளை விளம்பரம படுத்தியது தான் நினைவிற்கு வருகிறது எனக்கு.

இன்று இந்த மாதிரியான விளையாட்டு சந்தையில் நாட்டின் பிறப்பு விகிதத்தை வைத்து கொண்டு விளையாட்டுகள் வடிவமைக்கிறார்கள். இது இந்த துறைக்கு என்று இல்லை நுகர்வு சார்ந்த விற்பனை துறைகள் எல்லாமே இப்படி தான். கொஞ்சம் யோசித்து பார்த்தால் கல்யாணமான ஜோடிகள் ஆசைபட்டு பிள்ளை பெற்று கொள்வது இம்மாதிரியான கம்பனிகளின் லாப கணக்கை ஏற்ற தானோ என்று தோன்றுகிறது. 

எனக்கு வேலைக்கு வந்த பிறகு தான் நிழல் உலகத்தை பற்றி தெரிந்து கொண்டேன். ஆனால் இந்த விளையாட்டுகளின் மூலம் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பழக்க படுத்தி விடும் போக்கு ஆரம்பித்திருக்கிறது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆட்டிசம் மருத்துவனைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன....!@

இனிய குடியரசு நல்வாழ்த்துக்கள்...

Related Posts with Thumbnails