Pages

Showing posts with label சரித்திரம். Show all posts
Showing posts with label சரித்திரம். Show all posts

Wednesday, October 22, 2025

முகலாயர்கள் கொண்டாடிய தீபாவளி


முகலாயப் பேரரசின் காலத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், அரசவையின் ஆடம்பரமான நிகழ்வாகவும் திகழ்ந்தன. முகலாயர்கள் தீபாவளியை 'ஜஷன்-எ-சிராகோன்' (விளக்குகளின் கொண்டாட்டம்) என்று அழைத்தனர்.

முகலாயர்கள் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகையைப் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அக்பரின் தொடக்கம் மற்றும் கொண்டாட்டத்தின் விரிவாக்கம்:

 * துவக்கி வைத்தவர் அக்பர்: முகலாயப் பேரரசர் அக்பர் தான் முதன்முதலில் தீபாவளி கொண்டாட்டத்தை அரசவையில் ஒரு அதிகாரப்பூர்வ திருவிழாவாகத் தொடங்கினார். இது மத நல்லிணக்கத்தைப் பேணும் நோக்குடன் செய்யப்பட்டது.

 * பண்டிகையின் பெயர்: முகலாயர் காலத்தில் தீபாவளி பொதுவாக 'ஜஷன்-எ-சிராகோன்' என்று அழைக்கப்பட்டது.

 * ராங் மஹால்: ஆக்ரா மற்றும் பின்னர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் (லால் கிலா) இருக்கும் ராங் மஹால் (வண்ணங்களின் அரண்மனை) தான் அரச குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டங்களின் முக்கிய மையமாக இருந்தது.

முக்கியமான சடங்குகள் மற்றும் மரபுகள்:

 * தீப ஒளியூட்டல்: அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் பொது இடங்கள் எண்ணெய்த் தீபங்களால் (தியாஸ்) பிரகாசமாக ஒளியூட்டப்பட்டன.

 * 'ஆகாஷ் தியா' (வான விளக்கு): பேரரசர் ஷாஜஹான் காலத்தில், ஒரு பிரமாண்டமான 'ஆகாஷ் தியா' அறிமுகப்படுத்தப்பட்டது. இது 40 கெஜம் உயரமுள்ள கம்பத்தில் ஏற்றப்பட்டு, நகரெங்கும் அதன் ஒளி பரவியது.

 * பட்டாசுகள்: முகலாயர்களின் தீபாவளியில் பட்டாசுகளுக்கு முக்கிய இடம் உண்டு. செங்கோட்டையின் சுவர்கள் அருகில் 'மீர் ஆதிஷ்' (பட்டாசுகளுக்குப் பொறுப்பானவர்) மேற்பார்வையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

 * இனிப்புகள் பரிமாறுதல்: அக்பர் தான் தீபாவளி வாழ்த்தாக இனிப்புகளைப் பரிமாறும் பாரம்பரியத்தைத் தொடங்கி வைத்தார். கெவர், பேத்தா, கீர், பேடா, ஜிலேபி, ஷாஹி துக்ரா போன்ற பலகாரங்கள் அரசவையில் சமைக்கப்பட்டன.

 * எடையில் நிறுத்தல் (துலாபாரம்): சில முகலாய மன்னர்கள், குறிப்பாக பிற்கால முகலாயர்கள், தீபாவளி அன்று தங்கள் எடைக்கு நிகரான தங்கம் மற்றும் வெள்ளியால் நிறுக்கப்பட்டு, அந்தப் பொருட்களை ஏழைகளுக்கு தானமாக வழங்கினர்.

 * இலட்சுமி பூஜை: முகலாயர்களில் கடைசி மன்னரான பஹதூர் ஷா ஜஃபர், டெல்லி செங்கோட்டையில் லட்சுமி பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

 * ராமாயண வாசிப்பு: அக்பரின் அரசவை வரலாற்றாசிரியர் அபுல் ஃபசல் எழுதிய 'ஐன்-இ-அக்பரி'யின் படி, தீபாவளியின் போது ராமாயணத்தின் பாரசீக மொழிபெயர்ப்பின் பகுதிகள் அரசவையில் வாசிக்கப்பட்டன, சில சமயங்களில் நாடகங்களாகவும் நிகழ்த்தப்பட்டன.

மத நல்லிணக்கம் மற்றும் பொது பங்கேற்பு:

 * பொதுமக்கள் கொண்டாட்டம்: தீபாவளி அரசவை நிகழ்வாக இருந்தாலும், பொதுமக்களும் இதில் உற்சாகமாகப் பங்கேற்றனர். செங்கோட்டை மைதானத்தில் மக்கள் கூடி, அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டாசு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.

 * சமூக ஒற்றுமை: இந்து வணிகர்களும், பிரபுக்களும் தங்கள் மாளிகைகளில் விளக்கேற்றினர். முஸ்லிம்களும் சீக்கியர்களும் பொது இடங்களில் தீபங்கள் ஏற்ற எண்ணெய் மற்றும் பஞ்சுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

 * மதத் தடைகள்: ஔரங்கசீப் போன்ற சில முகலாயப் பேரரசர்கள் மதக் கட்டுப்பாடுகள் காரணமாக அரசவையில் ஹோலி மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களைத் தடை செய்த போதும், பெரும்பாலான முகலாய ஆட்சியாளர்கள் இந்தப் பாரம்பரியங்களைத் தொடர்ந்தனர்.

 முகமது ஷா ரங்கீலா போன்ற பிற்கால முகலாய மன்னர்கள் கூட இந்தப் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
முகலாயர்களின் தீபாவளி கொண்டாட்டங்கள் அக்கால வட இந்திய தீபாவளியின் ஒரு முன்னோடியாக அமைந்ததுடன், விளக்குகள், பட்டாசுகள், இனிப்புகள் பரிமாறிக்கொள்ளுதல் போன்ற பல மரபுகளைப் பிரபலப்படுத்தியது.

Monday, April 17, 2023

போர்கள் : வணிகம் : மதம் : சோழர்கள் - அத்தியாயம் 3


ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க பல காரணங்கள் இருக்கிறது, அதில் முக்கிய காரணம் அந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க தான் என பலரால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு முக்கிய காரணமாக பாட திட்டத்தில் நாடோடி மன்னர்களான தைமூர், செங்கிஸ் கான் ஆகியோரது வெறிதனமான செயல்களை படித்ததினால் தான். 

ஆனால் வெற்றிவேல் வீரவேல் என சொல்லி கொண்டு நிலையான ஒரு நாட்டின் மன்னனால் அப்படி சாதாரணமாக போர் தொடுத்துவிட முடியாது. முக்கிய காரணம் அதற்கான செலவு.

ஆயுதம் தயாரிப்பது, நாட்டின் உள்ளோர் மற்றும் வீரர்களுக்கான உணவு, பாதுகாப்பு ஆகிய செலவுகள் எல்லாம் கணக்கில் கொண்டு தான் ஒரு போர் தொடுப்பதை பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்க முடியும். ஒரு அரசன் படையெடுத்து நமது நாட்டை நோக்கி வருகிறான் என்றால், அந்நாட்டின் செல்வங்களை தான் முதலில் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைப்பார்கள். படையெடுத்து வரும் அரசனுக்கு கொள்ளையடிப்பது மட்டும் தான் லட்சியம் என்றால், அப்படையெடுப்பில் பெரிய லாபம் இருக்காது.

செல்வங்களை தவிர்த்து ஒரு நாட்டின் வணிக வளமே அந்நாட்டின் மீது படையெடுப்பை பற்றி தீர்மானிக்க முக்கிய காரணியாக அமைகிறது.

அக்காலத்தில் கடல் பட்டுவழி சாலை வழியை பார்த்தால் அது அரேபிய தேசத்தில் இருந்து காயல்பட்டினம் (இன்றைய கன்னியாகுமரி) வந்து அங்கிருந்து ஸ்ரீலங்காவின் (அன்றைய சிலோன்) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வழியாக கலிங்க நாட்டு துறைமுகத்திற்கு (இன்றைய புரி துறைமுகம்) செல்லும்.

கலிங்க நாட்டில் இருந்து தான் ஜாவா, மலாய், சுமத்திரா, ஸ்ரீவிஜயம் ஆகிய நாட்டுகளுக்கு வணிக கப்பல்கள் செல்லும். 

சோழர்கள் போர்களில் ஈழத்து போர், கலிங்க போர் முக்கியமானதாக கருதுவேன். கலிங்க நாட்டு போரில் நடந்தவற்றை 12ஆம் நூற்றாண்டின் பரணி வகை நூலான கலிங்கத்துப்பரணி நூலில் ஒட்டக்கூத்தர் மற்றும் செயங்கொண்டார் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். 

முதலாம் கலிங்கத்துப்பரணி பாடல்கள் முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழன் தென் கலிங்க மன்னன் வீமனை வென்றதை பாடுகிறது. இரண்டாம்   கலிங்கத்துப்பரணி முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் கருணாகர தொண்டைமான் கலிங்க போரில் வென்றதை பேசும். 

கருணாகர தொண்டைமான் என்ற பெயரை கேட்டதும் சரித்திர நாவல் பிரியர்களுக்கு ஆனந்தம் பொங்கி இருக்கும். சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறா நாவலில் தலைமை கதாபாத்திரமாக வருவார்.

இந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் சைவமா வைணமா சண்டை வலுப்பெற்றது. 

சமண மதத்தில் இருந்து மன்னர்களை சைவ சமயம் பக்கம் கொண்டு வந்தார்கள் அப்பொழுது இருந்த  தீவிர சைவ துறவிகள்.  அதற்கு சாட்சியாக இந்நாளும் பலரால் பட பெறும் ஒரு பாடல் .

அந்த பாடல் "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு....".

இது யாரால் எதனால் பாட பெற்றது ? அதில் பின்னால் என்ன வணிக செயல்பாடு இருந்திருக்கும் ?

இப்பொழுது 12ஆம் நூற்றாண்டின் சோழர்களின் போர் பக்கம் இருந்து 19ஆம் நூற்றாண்டிற்கு வருவோம்.

திருபாய் அம்பானி செயதது போல் ஜாம்ஷெட்ஜி டாடா என்பவர் 1868ல் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார். பிறகு 1874ல் ஒரு ஜவுளி நிறுவனத்தை ஆரம்பித்தார்.

ஜவுளியும் சோழர்களின் காலத்தில் முக்கிய வணிக பொருளாக இருந்தது. மஸ்லின் துணிக்கும் சோழர்களுக்கும் சம்பந்தம் இருக்குமா ?

திருப்பதிக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு இருந்திருக்கும் ?

கடல் பட்டுவழி சாலையில் அந்த வைணவ பெரியவரின் பங்கு என்னவாக இருந்திருக்கும் ?

தொடரும்

#indianbusinessseries
#rajarajacholan 
#rajendracholan 
#Srilanka
#dhirubhaiambani

சோழர்களின் வணிக ராஜ்ஜியம் / BACKWARD INTEGRATION - ரிலையன்ஸ் - அத்தியாயம் 2

இந்தியாவின் நவீன வணிக போக்கில் வெற்றி பெற்ற நிறுவனங்களில் முக்கியமானது திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கதை.  அவர் அவ்வாறான மிக பெரிய வணிக ராஜ்ஜியத்தை அமைக்க காரணமாக இருந்தது BACKWARD INTEGRATION என்கிற முறையில் அவர் தொழிலை மற்றும் அதனை சார்ந்த வியாபாரத்தை விருத்தி செய்தது தான். 

அதென்ன Backward Integration ?

அதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்ள வேண்டும்.

1950கள் - அம்பானி அவர்கள் ஜவுளி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார். 10 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தமாக துணி வாங்கி அதனை தேவைக்கேற்றது போல அல்லது வியாபார வாய்ப்புகள் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். வெளிநாட்டு துணி வகைகளையும் இங்கு விற்பனைக்காக இறக்குமதி செய்தார்.

1960கள் - அம்பானி அவர்கள் என்னதான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வந்தாலும் உற்பத்தியாளர்கள் தான் அதிக லாபமடைந்தார்கள். அவர்களுக்கு அம்பானி சம்பளம் வாங்காமல் வேலை செய்து போல உணர்ந்தார். இந்நிலையை மாற்ற மிக பெரிய முடிவினை எடுத்தார். அது வரைக்கும் இந்தியாவில் செயல்படும் ஏற்றுமதியாளர்கள் யாராவது அப்படிபட்ட துணிச்சலான முடிவை எடுத்திருப்பார்களா என தெரியவில்லை. 

உற்பத்தியாளர்களின் கைக்கு போகும் லாபம் தனக்கு வர வேண்டும் என்றால் தானும் ஒரு உற்பத்தியாளராக உருவாக வேண்டும் என முடிவெடுத்து ஜவுளி உற்பத்தியில் ரிலையன்ஸ் நிறுவனம் அடியெடுத்து வைத்தது.

1970கள் - இன்னும் பெரியளவிலான தொழில் செய்ய பங்கு சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் பட்டியலிட பட்டது. 

அதன் பிறகான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு வியாபார யுத்திகள் கையாள பட்டதால் ...

அதென்ன Backward Integration ?

ஒரு தொழிலுக்கு தேவையானவற்றை ஒரு நிறுவனமே தயாரித்து கொள்வது தான் அது. 

இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு  ரிலையன்ஸ் நிறுவனத்தை 1970களில் விட்டு விட்டு ஆயிரம் வருடம் பின்னோக்கி இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்திற்கு போகலாம். 

அக்காலத்தில் பட்டுவழி சாலை என்பது நில வழி மற்றும் கடல் வழி என இரண்டு வழிகள் இருந்தன. 

இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் சோழ தேசம் எனது ஒரு வளம் நிறைந்த தேசமாக உருவாக வேண்டும் என்ற கனவு இருந்தது.

தந்தை அக்கனவை கண்டார், மகன் கனவை செயல்படுத்தி காட்டினார். 

அரேபிய வியாபாரிகள் அக்காலத்தின் உலக வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றினார்கள். (அவர்களை பற்றி தெரிந்ததை வரும் நாட்களில் எழுதுகிறேன்)

அவர்களது முக்கியமான வர்த்தக மையமாக அக்காலத்தில் இந்திய நிலப் பரப்பு இருந்துள்ளது (இந்தியா என்னும் தேசம் அப்பொழுது இல்லை).

இந்தியாவை தாண்டி சீனா, சுமத்திரா,பர்மா, தாய்லாந்து, மலாய் , ஜாவா, வியட்நாம், ஸ்ரீவிஜய ஆகிய நாடுகளில் அவர்களுக்கு வர்த்தகம் இருந்தது. இதற்காக இலங்கை, இந்தியா பர்மா ஆகிய துறைமுகங்களை பயன்படுத்தி வந்தனர். இவற்றில் மூலம் வரிபணம் அதிக அளவின் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு கிடைத்து கொண்டு இருந்தது. அவற்றை எல்லாம் ராஜேந்திர சோழன் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.

(இதனை ராஜேந்திர சோழர் காலத்து சோழ ராஜ்ஜிய நிலப்பரப்பையும் கடல் வணிகத்தின் பட்டுவழி சாலையும் ஒப்பிடுகையில் நாம் புரிந்து தெரிந்து கொள்ளலாம்)

இதன் மூலம் கடல் வணிகத்தில் வியாபார கப்பல்கள் நிற்கும் எல்லா முக்கியமான துறைமுகங்களும் சோழ ராஜ்ஜியத்தின் கீழ்  இருந்தது. அவற்றின் மூலம் கிடைத்த வரி பணம் சோழ தேசத்தை வளமான தேசமாக இருந்தது. 

எல்லாம் சரி .... திருபாய் அம்பானி கையாண்ட யுத்தியை பல வருடங்களுக்கு முன்பே வேறொருவர் கையாண்டு பெரும் வெற்றி பெற்று இருந்தார்.

அவர் யார் ?

தொடரும்...

#IndianBusinessSeries
#Reliance 
#dhirubhaiambani 
#Chozhakingdom
#rajarajacholan 
#Rajendracholan

Tuesday, October 5, 2021

இராஜராஜ சோழன் II பொன்னியின் செல்வன் II மதுராந்தகம்

பொன்னியின் செல்வன் நாவலுக்கும் அல்லது சோழர்களுக்கும் எனக்குமே ஒரு மறைமுகமான பந்தமொன்று இருக்கிறது. 

சுந்தர சோழருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த உத்தம சோழர் என்று அழைக்க பட்ட  மதுராந்தகன் தனது ஆட்சி காலத்தில் செகற்பட்டு மாவட்டத்தில் (பழைய செகற்பட்டு மாவட்டம் - அதில் காஞ்சிபுரம் ஒரு பகுதியாக இருந்தது)     விவசாயம் செழிக்க மாபெரும் ஏரி ஒன்றினை உருவாக்கினார். பின்னர் அவரது பெயரிலேயே அந்த ஊரும் ஏரியும் அழைக்கபட்டு வருகிறது. இப்பொழுது செங்கற்பட்டு மாவட்டத்திலேயே இருக்கும் பெரிய ஏரி மதுராந்தக ஏரி. 

அப்பொழுது ஏரி உருவாக்கத்தில் ஈடுபட்டு இருந்த சோழர்களுக்கு கருங்குழியில் இருந்து உணவிற்கான அரிசி போய் இருக்கலாம். 

கருங்குழி சோழர்காலத்தில் பெரும் ஊராக இருந்து வந்துள்ளதாம். இதனை மா.கேசவன் எழுதிய "வரலாறுமிக்க கருங்குழி நூலில் காணலாம்.

கருங்குழியில் இரண்டு போர்கள் நடந்திருக்கிறது. குறிப்பு இல்லாத மாலிக் கபூர் தலைமையில் நடந்த மொகலாய படையெடுப்பு மற்றும் வந்தவாசி போரில் கருங்குழி கோட்டையை ஹைதர் அலியும் ஆங்கிலேயர்கள் மாறி மாறி கைபற்றி இருக்கிறார்கள். இதனை பற்றிய விரிவான தகவல்கள் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆவண ஏட்டில் இருக்கிறது. 

சரி இதில் நான் எப்படி வருகிறேன்...?

என் அப்பா பிறந்து வளர்ந்த ஊர் தான் கருங்குழி. என் தாத்தா அங்கு தான் அலுவலக வேலை, விவசாயம் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். ஒரு வேளை இராஜராஜ சோழருக்கு எங்க குடும்பத்து முன்னோர்கள் சோறு கூட போட்டு இருக்கலாம். 

மதுராந்தகம் வட்டம் கருங்குழி கிராமம் தான் என் பூர்வீகம்.

இப்பொழுது தலைப்புக்கு இந்த விசைபலகை நடனம் பொருந்தி வருகிறதா ???

Wednesday, January 29, 2014

உப்பு அரசியல் {அ}

முகலாய வம்சத்தின் கடைசி வாரிசு பிரிடிஷ் ஆட்சியிடம் தனது சொத்து மாளிகை எல்லாம் இழந்து தனது கடைசி காலத்தை அம்மாளிகையில் ஒரமாய் ஒடுங்கி வாழ்ந்து இறந்தார். 

உப்பை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு இந்த உவமை தான் ஞாபகத்திற்கு வரும். உப்பு தானே என்று அலட்சியமாக இருக்க முடியாது. உப்பில்லா பண்டம் குப்பையில் என்று பழமொழயே இருக்கிறது. உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்றும் சொல்லுவார்கள். இப்படி உப்பை சார்ந்து பழமொழிகளும் நம்பிக்கைகளும் உருவாக சரித்திரத்தில் உப்பின் முக்கியதுவமே காரணம் என்று நினைக்கிறேன். 

உலக அரசியல் சரித்திரத்தை பற்றி படிக்கும் பொழுது உப்பு என்ற பண்டம் தவிர்க்க முடியாத ஒன்று. விவசாயம் நடைமுறையில் சாத்திய படும் முன் மனிதன் இறைச்சியை உண்டு கொண்டு வாழ்ந்து வந்தான். அப்பொழுது மழை புயல் குளிரில்லாத காலங்களில் மட்டுமே அவனால் வேட்டையாட முடிந்தது. அதுவும் பல ஆபத்துகளின் மத்தியில். அப்படி வேட்டையாடிய இறைச்சியை மழை காலங்களில் சேமித்து வைக்க கற்கால மனிதன் உப்பை பயன் படுத்தினான். அதை உப்பு என்று தெரியாமல் பயன்படுத்தினான். 

இறைச்சி உண்ணுதலுக்கு மனிதன் காலம் காலமாய் பழகி வந்ததினால், ஒரு கட்டத்தில் ரோமானிய பேரரசில் சம்பளத்தில் ஒரு பகுதியாய் உப்பு தர பட்டது. அது அவன் சந்தையில் வாங்கும் இறைச்சியை பதப்படுத்த பயன் படுத்தி கொண்டான். 

இக்காலம் போல் அக்காலத்தில் உப்பு கிடைக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாததால், கிடைக்கும் கொஞ்சம் உப்புக்கு மாற்றாக தங்கம் தர பட்டுள்ளதாம். 

இறைச்சியை உண்பவனுக்கு மட்டுமல்லாமல் சைவ உணவு வகைகளை சாப்பிட்டு பழகிய மனிதனுக்கும் உப்பு தேவை பட்டது சமைத்த உணவிற்கு சுவை சேர்க்க. உப்பின் வேதியியல் கட்டமைப்பு நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறதாம். 

உப்பு சரித்திரத்தில் மிக அண்மைய நிகழ்வு என்று பார்த்தால் அது காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகம் தான். உப்பு மீதான வரி. 

உலகத்தில் இருக்கும் பல்வேறு நாட்டு ஊர்களில் பெயரில் உப்பை குறித்து இருக்கும்.

தற்கால உப்பு அரசியலை பற்றி பேசும் பொழுது கார்ப்பரேட் உலகின் சோடியம் உப்பை சந்தை படுத்துதல் பற்றி கட்டாயம் பேசியே ஆகணும். ஏனென்றால் நமது உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் தசைகளும் நரம்புகளும் சரி வர இயங்க சோடியம் சத்து தேவை படுகிறது. 

இன்றைய நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் உப்பில் சோடியம் நிறைந்துள்ளது. எந்தளவிற்கு என்றால் ஒரு டி ஸ்பூன் உப்பில் 2300 மில்லி கிராம் அளவு சோடியம் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான ஆள் உட்கொள்ள வேண்டிய சோடியம் சத்தின் அளவு.

அதாவது ஒருவன் தினசரி உணவை தவிர்த்து அவன் வெளியே உண்ணும் துரித உணவுகளிலும் இந்த சோடியம் சத்துக்கள் அதிகமுள்ளது. காலையிலிருந்து இரவு வரைக்கும் ஒரு மனிதன் உண்ணும் சோடியம் சத்தின் அளவு, அந்த 2300 மில்லி கிராமையும் மிஞ்சி தான் இருக்கும். 

அப்படி என்றால் அதிக சோடிய சத்துக்கள் உடலுக்கு நல்லதா ?? என்று கேட்டால் இல்லை என்று தான் பல உணவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். 

அதிக சோடிய சத்து ஒருவனுக்கு இருந்தால், அவனுக்கு அதிக ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆகியவை வரும். 

இதை எல்லாம் பொதுமக்களிடம் மறைத்துவிட்டு காலை முதல் இரவு வரையிலும் பல்வேறு விளம்பரங்கள் மூலம் உப்பை அதிகம் உண்ண வைத்து கொண்டே இருக்கிறார்கள் உணவு விற்பனையாளர்கள். அதிக உப்பு என்றால் அதிக சோடியமும் உடலுக்குள் போகிறது அவற்றின் மூலம். 

1980
களின் இறுதி வரைக்கும் கல் உப்பை நேரடியாக தள்ளு வண்டியில் வைத்து தெருவில் விற்று கொண்டு இருந்தார்கள். இந்த ரக உப்பு தான் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் இப்பொழுது கடைகளில் கிடைக்கும் உப்பு என்பது உப்பின் இயற்கை தன்மை நீக்கியவையாக தான் இருக்கிறது. 

நமது பாரத நாட்டில் பண்டைய காலத்தில் விவசாயமும் உப்பு உற்பத்தியும் ஒன்றாக தான் கருதி வந்து உள்ளார்கள். 

சோழ சாம்ராஜ்ஜியத்தில் விவசாய நிலத்தையும் உப்பளத்தையும் கண் போன்று பாதுகாத்தனர். 

விவசாயிகளுக்காக பொங்கல் விழா எப்படி கொண்டாட பட்டதோ அதே முக்கியத்துவதோடு தான் பரதவர்களுக்காகவும் உமணர்களுக்காகவும் இந்திர விழா கொண்டாட பட்டது. 

இந்த இந்திர விழா என்பது பொங்கல் கொண்டாட பட்ட அதே நேரத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் தான் கொண்டாட பட்டுள்ளது. 

அப்பொழுது விவசாயிகளுக்கு எப்படி அறுவடையோ, அக்கால உப்பளத்தில் உப்பு உற்பத்தி தொடக்கமும் அப்பொழுது தான் ஆரம்பிக்கப்பட்டது. ஜனவரி முதல் ஜூன் வரை. 

இதையெல்லாம் வைத்து பார்த்தால் இந்திர விழாவை உமணர்களின் பொங்கல் என்றே சொல்ல தோன்றுகிறது. 

அப்பொழுது உப்போடு சம்மந்தமான ஆட்கள் என்று பார்த்தால் உமணர்களும் பரதவர்களும் தான். உமணர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் தான் உப்பை வைத்து வணிகம் செய்தவர்களாக இருக்கிறார்கள்.

பரதவர்களுக்கு கூலியாக உப்பு தரபட்டு இருக்கும் போல. இவர்கள் மற்ற நில பகுதிக்கு போய் உப்பை பண்டம் மாற்று முறையில் தந்து பொருட்கள் வாங்கி வந்துள்ளார்கள். ஒரு சமயத்தில் உப்புக்கு மாற்றாக தங்கம் தர பட்டுள்ளது தமிழ்நாட்டு பகுதியில் (அப்பொழுதெல்லாம் தமிழ்நாடு எல்லாம் இல்லை, வெறும் தமிழ் மொழி மட்டும் தான்).

இவர்களுக்கு என்ன மாதிரியான மரியாதை இந்திர விழாவில் தர பட்டுள்ளது என்று பார்த்தால், ஒரு சங்க பாடலில் "அரசர் முறையோ பரதவர் முறையோ" என்று வருகிறது. 

இப்படிப்பட்ட அளம் / உப்பளம் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் கோவளம் கூட அளம் கொண்ட ஊர் தான். இப்பொழுது அங்கு உப்பு உற்பத்தி நடக்கிறதா என்று தெரியவில்லை . அந்த இடமெல்லாம் வணிக தொழில்நுட்ப மையங்களாகவும் ரியல் ஸ்டேட்டாகவும் மாறி இருக்கிறது. 

நான் இதுவரைக்கும் படித்த அரசு திட்ட அறிவிப்பில் எதிலும் உப்பளம் மேம்பாடு பற்றி எதுவும் இல்லை. அரசு கல் உப்பை கொள்முதல் செய்கிறதா என்று தெரியவில்லை. கல் உப்பு தான் மனித உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் தமிழக ரேஷன் கடை எல்லாவற்றிலும் தனியார் கம்பனிகள் தயாரிக்கும் தூள் உப்பே விற்க படுகிறது. 

அந்த காலத்தில் உப்பின் முக்கியத்துவம் எத்தகையது என்று பார்த்தோமானால் உப்பின் உற்பத்தியிலிருந்தும் விற்பனை மீதான வரியிலிருந்தும் கிடைத்த பணத்தில் தான் சீனா பெருஞ்சுவர் கட்ட பட்டது. 


Related Posts with Thumbnails