Pages

Monday, January 5, 2015

தனியார் காடுகள்

சுமார் ஒரு முன்று வருடங்களுக்கு முன்பு தனியார் காடுகள் பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் எழுதியிருந்தேன். பலரின் கவனத்தை கவர்ந்ததா இல்லையா என்று தெரியவில்லை. அதன் சாராம்சம் இது தான் இந்திய திருநாட்டில் தற்பொழுது வேண்டியவையாக இருப்பவை காடுகள் தான். 

1970
கள் வரைக்குமிருந்த காடுகள் அதன் பின் சாலை, தொழிற்சாலை, வீட்டுமனை அமைப்புகளுக்காக அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்டு வருகிறது. 

சில வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவிலொருவர் தனது முயற்சியால் ஒரு காட்டை உருவாக்கினாரென்று செய்திகள் வந்தது. அதை மேற்கோளாக வைத்துக்கொண்டு தனியார் காடுகள் பற்றி பேச ஆரம்பித்தேன். 

நாட்டில் இருக்கும் கார்ப்பரேட் கம்பனிகள் எல்லாம் அவரவர் பங்குக்கு ஒரு குறிபிட்ட ஏக்கர் அளவுக்கு காட்டை உருவாக்கி பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்கும் கம்பனிகளுக்கு அரசு வரி சலுகை தரலாம். அப்படி வரி சலுகை தர முடியாவிட்டாலும் வேறு வடிவத்தில் அந்த சலுகையை வழங்கலாம். 

ஒரு தனியார் நிறுவனத்தால் ஒரு காட்டை உருவாக்க முடியுமாயென்ற கேள்வி எழலாம். ஒரு தனியொருவரால் ஒரு காட்டை உருவாக்க முடியுமென்றால், அந்த தனியொருவரை விட பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தால் ஏன் ஒரு காட்டை உருவாக்க முடியாது ???

மேலும் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலம் வரும் கழிவுகளை பார்க்கையில், தனியார் காடுகள் என்பது ஒவ்வொரு நிறுவனத்தின் பௌதிக கடமையாகும். மேலும் இம்மாதிரியான காடுகள் உருவாக்குவதின் மூலம் சமூகத்தில் அந்நிறுவனத்திற்கு நன்மதிப்பு ஏற்படும். சமுதாயத்தில் இந்த நன்மதிப்புக்கு தான் எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களும் பல சிரமங்கள் மேற்கொள்கிறது.

உதாரணமாக ஒரு கார் நிறுவனத்தின் கழிவுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் அவை தயாரித்து வெளியிடும் கார்களின் பயன்பாட்டின் மூலம் ஓசோன் குறைபாடு தத்துவம் மேலும் வளபடுகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக அந்த கார் நிறுவனம் ஒரு காட்டை உருவாக்குவதே சமூகத்திற்கு செய்யும் மிக பெரிய தொண்டாகும். இதெல்லாம் தன்னார்வமாக நிறுவனம் செய்தால் நலம். 

சென்னை மறைமலை நகரில் தொழிற்சாலைகள் அமைந்த பின், அதன் பின்னால் இருந்த பகுதிகளில் இருந்த விவசாய பகுதியும் காடு பகுதியும் அழிந்துவிட்டது. அந்த இடத்தில் முள்செடிகள் தான் நிறைய இருந்தன நான் சென்று பார்த்த பொழுது.

அரசே இம்மாதிரியான முயற்சிகள் எடுக்கலாம் தான், ஆனால் அரசு கைவசம் காடுகளை மர திருடர்களிடமிருந்து காப்பாற்றவே நேரம் சரியாக இருக்கிறது.

தனியார் காடுகள் குறித்தான சட்டங்கள் இந்தியாவில் இருக்கிறதா என்று விசாரித்ததில் அப்படி இருக்கிற மாதிரி தெரியவில்லை. நாற்பது ஆண்டுகள் முன் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக விளை நிலங்களை தனிநபர் காடு கொள்முதல் சட்டம் கொண்டு வர பட்டு நிலங்கள் அரசுமயமாக்க பட்டதாக தெரிகிறது. அதனை தவிர்த்து தனிநபர் அல்லது தனியார் காடுகள் குறித்து இந்தியாவில் சட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை. 

கனடாவில் இம்மாதிரியான தனியார் காடுகளுக்கான சட்டம் இருப்பதாக தெரிகிறது. அப்படி வைக்க அனுமதி பெற வேண்டும் போல. 

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகமாக உள்ளது, இதனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. முக்கியமாக சர்ம புற்றுநோய். அதனை சமாளிக்க தனியார் காடுகள் என்ற கோட்பாடு பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும். இதுவே சுற்றுச்சூழலை பாதுகாக்க எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும்.
Related Posts with Thumbnails