Pages

Sunday, May 17, 2015

புனிதமாக்குதலின் அரசியல்

எந்த கோட்பாடை எல்லாம் எந்த கேள்வியும் இல்லாமல் எந்த எதிர்ப்பும் இல்லாமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனிதன் நினைத்தானோ அதை எல்லாம் அவன் புனிதமாக்கி கொண்டான். 

இந்த புனிதமாக்குதலில் முதல் புள்ளியே கடவுள் என்ற கோட்பாடு தான். 

ஆதிமனிதன் எப்பொழுது சிறு சிறு குழுக்களாக நாடோடியாக சுற்ற ஆரம்பித்தானோ அப்பொழுது தான் வலியவன் அல்லது ஆற்றல்மிக்கவன் தலைவன் என்ற விஷயம் உருவாக ஆரம்பித்தது. அந்த தலைவன் என்பவன் தனது தலைவன் என்ற பதவியை காப்பாற்றிகொள்ள தன்னை குழுக்களிலிருந்து வேறு படுத்தி கொள்ள முற்பட்டான். அவன் அறிவை, அனுபவத்தை புனிதமாக்கி கொண்டான். 

பிற்பாடு பல ஆற்றல்மிக்கவர்கள் அதிக எண்ணிக்கையில் உருவான பொழுது கடவுள் என்ற பிம்பத்தை கொண்டு வந்து, தனக்கும் அந்த புனித பிம்பத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக காட்டி கொண்டு தனது தலைவன் என்ற பதவியை பலப்படுத்தி கொண்டான்.

அக்காலத்தில் இருந்து புனிதங்களை வழிபட்டு பின்னர் அதற்கு அடிமைகளாக மனிதன் மாறினான்.

அந்த அடிமை கூட்டத்தில் இருந்து யாராவது ஒருவன் தனித்து நின்று புனித பிம்பங்களை நோக்கி கேள்வி எழுப்பினால் அவன் கெட்ட ஆவி / சாத்தான் / பூதங்கள் ஆளுமையின் கீழ் இருக்கிறான் என்று முத்திரை குத்தி சமுதாயத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டான்.

புனிதமாக்குதலின் அரசியல் இக்காலத்தில் சாத்தியமா ???

இன்றைய உலக அரசியல் இதை அடிப்படையாக வைத்து தான் இயங்குகிறது. நரேந்திர மோடியிலிருந்து ஒபாமா வரைக்கும் தங்களது புனித பிம்பத்தை காப்பாற்றி கொள்ளவே பாடுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தனது அலுவலகத்து பெண் உடன் உடலுறவு கொண்ட பொழுது நாடே எதிர் காட்டியதாக செய்திகள் வந்தன. அந்த எதிர்ப்புகளுக்கு மூல காரணம் எது என்ற பார்த்தோமானால் பல தலைமுறைகளுக்கு முன்னால் நாட்டின் மக்கள் அந்த பதவியின் மீது ஏற்படுத்திய புனித பிம்பம் தான். 

மத அரசியல், ஜாதி அரசியல், மொழி அரசியல், பொருளாதார அரசியல் என்று இந்திய அரசியலில் பல உட்பிரிவுகள் இருந்தாலும் எல்லா வகுப்பினரும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கோட்பாடுகளை புனிதமாக்கும் முயற்சியிலேயே அதிகம் இயங்குகிறார்கள்.

அவர்களது வாழ்க்கை இந்த புனிதமாக்கும் முயற்சியிலேயே கழிந்து விடுகிறது. இம்மாதிரியான முயற்சியில் இயங்குபவரின் மனது நாள் பட அவரது கோட்பாடுகளான நாலு சுவர்களுக்குள் பாதுகாப்பாய் இருக்கும். அவர் இந்த உலகத்தை அந்த நாலு சுவருக்குள் இருந்தே பார்ப்பர்.

கொஞ்ச நாட்கள் முன்பு வயதான ஆந்திர ஆளுநர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) இளம் பெண் உடன் இன்பம் கண்டார் என்று சொல்லி ஒரு வீடியோ படம் வெளியானது. பின்னர் ஊடகங்களும் மக்களும் அந்த விஷயத்தை கையிலெடுத்து ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தனர். இந்த எதிர்ப்பலைக்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து பார்த்தால் அவர் வகித்த பதவியின் புனித பிம்பம் காரணமா இல்லை வயதானவர்கள் மீது இருக்கும் புனித பிம்பம் காரணமா ??? இவை இரண்டும் கலந்தது தான் எனக்கு தோன்றுகிறது.

இந்த புனித பிம்பங்களை உடைப்பத்திலும் உலகம் முழுக்க பெரும் அரசியல் நடக்கிறது. கடவுள் மறுப்பு, சட்டங்கள் மீது நம்பிக்கையின்மை என்று சொல்லி கொண்டே போகலாம். 

கடைசியாக நித்தியானந்தாவின் புனித பிம்பத்தை உடைக்க பெரும் முயற்சி எடுத்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அவரும் நடிகையும் சம்பந்தப்பட்ட வீடியோவை திரும்ப திரும்ப ஒளிபரப்பி மக்களிடையே ஒரு எதிர்ப்பை உருவாக்கினர். அந்த எதிர்ப்புகளின் அடித்தளம் சாமியார் என்ற புனித பிம்பம் நடிகை உடன் சல்லாபிக்கலாமா ???

No comments:

Related Posts with Thumbnails