இருந்தே அப்பா மீசையோடு தான்
சிறு வயதில் வேறயாருடைய மீசையும்
அப்பாவின் மீசை போல் இருந்ததில்லை ...
நீங்கள் என் அப்பாவை பார்த்ததில்லை
அதனால் அவரது மீசையையும்
நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்...
கம்பீரத்தின் அடையாளமாய்
மேல் உதட்டின் மேல
சுவாசத்தின் காவலர்களாய்
இடது பக்கமும் வலது பக்கமும்
சம சீராய் வளர்ந்துவிட்ட முடிகள்
கருப்பு வண்ணம் கொண்ட முடிகள்
உணர்சிகளை அப்பா வெளிகாட்டும்
பொழுது : அதன் வண்ணங்களும் மாறும்
கோபத்தின் பொழுது சிகப்பாய்
சிரிப்பின் பொழுது நீலமாய்
அந்த கருப்பு மீசையின் வெளிபாடுகள்
ஆச்சரியம் ஒன்றே எனக்கு
முடிகளுக்கு வாசனை இல்லை என்று
நான் படித்த அறிவியல் சொன்னாலும்
அது அப்பாவின் மீசைக்கில்லை என்று
தொழிற்சாலையில் இருந்து வந்த அப்பாவை
ஓடி சென்று அணைத்த பொழுது
வேர்வை வாசத்துடன் மீசையின் வாசத்தையும் உணர்ந்தேன்
சலூனில் அப்பாவின் மீசைக்கு அருகே கத்தி கத்திரி வரும்
பொழுதெல்லாம் கடவுளை ஆயிரம் முறையாவது
வேண்டிருந்திருப்பேன் : அப்பொழுதெல்லாம்
கடவுள் நல்லவராய் தான் இருந்தார்
எல்லா பிள்ளைகளை போல தான்
எனக்கும் அறிவியலின் புரியாத புதிர்களில்
ஒன்றாக இருந்தது அப்பாவின் மீசை.
ஒரு சமயம் தாத்தா இறந்த
செய்தி கேட்டு அப்பா அழுதார்
மீசையும் அழுதது.
அப்பா அழுவாரா ???
அப்பா அழுதுவிட்டார் என்ற அதிர்ச்சியே
அவரது மீசை மீதான பிம்பம் உடைந்து விடுமோ
பயத்தில் ஓடிவிட்டேன்.
ஊர் போய் சேரும் வரை
அப்பாவை நேர் கொண்டு பார்க்கவில்லை
அப்பாவின் மீசை தரும் தைரியத்தை
கொஞ்ச நேரம் அம்மாவின் முந்தானை
தந்து கொண்டு இருந்தது
ஊர் மக்கள் ; சொந்தம் ; குடும்ப நண்பர்கள்
என்று நிறைய ஆண்கள் இருந்தார்கள் அங்கு
வித விதமான மீசைகளோடு
எந்த மீசையும் அப்பாவின் மீசையை
போல் அழகு இல்லை ...
சிறுவர்களான எங்களை
இருட்டு அறையில் தூங்க வைக்க பட்டோம்
இரவில் தீடிரென்று வந்த சூரிய வெளிச்சம் போல்
கதவை திறந்து கொண்டு வந்த பெரியம்மா
எங்களை எழுப்பி கையோடு அழைத்து சென்றார்.
ஏன் எதற்கு எங்கே என்று கேட்பதற்குள்
மூன்று அறைகள் தள்ளி இருந்த அறைக்குள்
கொண்டு செல்ல பட்டோம் .
அங்கே தாத்தாவின் தலையை பிடித்த மாதிரி
அப்பா நின்று இருந்தார் : கொஞ்சம் வித்த்யாசமாக
தெரிந்தார்.
ஐந்து நிமிடங்கள் புரியாத புதிருக்கு
காணாமல் போன மீசை பதிலாய்
கூட்டத்தில் எல்லோருக்கும் மீசை இருந்தது
அப்பாவுக்கு இல்லை : இருந்தாலும் அழகு இருந்தது
அது நான் ரசித்த அழகில்லை.
புரியாமல் பக்கத்தில் நின்ற
பெரியம்மாவை கேட்ட பொழுது
"தாத்தா உங்க அப்பாவோட மீசையையும் சேர்த்து சாமிகிட்ட கொண்டு போயிட்டாரு"
புரியாமல் தாத்தாவை வெறுத்தேன்.
ஊர் மக்கள் ; சொந்தம் ; குடும்ப நண்பர்கள்
என்று நிறைய ஆண்கள் இருந்தார்கள் அங்கு
வித விதமான மீசைகளோடு
எந்த மீசையும் அப்பாவின் மீசையை
போல் அழகு இல்லை ...
சிறுவர்களான எங்களை
இருட்டு அறையில் தூங்க வைக்க பட்டோம்
இரவில் தீடிரென்று வந்த சூரிய வெளிச்சம் போல்
கதவை திறந்து கொண்டு வந்த பெரியம்மா
எங்களை எழுப்பி கையோடு அழைத்து சென்றார்.
ஏன் எதற்கு எங்கே என்று கேட்பதற்குள்
மூன்று அறைகள் தள்ளி இருந்த அறைக்குள்
கொண்டு செல்ல பட்டோம் .
அங்கே தாத்தாவின் தலையை பிடித்த மாதிரி
அப்பா நின்று இருந்தார் : கொஞ்சம் வித்த்யாசமாக
தெரிந்தார்.
ஐந்து நிமிடங்கள் புரியாத புதிருக்கு
காணாமல் போன மீசை பதிலாய்
கூட்டத்தில் எல்லோருக்கும் மீசை இருந்தது
அப்பாவுக்கு இல்லை : இருந்தாலும் அழகு இருந்தது
அது நான் ரசித்த அழகில்லை.
புரியாமல் பக்கத்தில் நின்ற
பெரியம்மாவை கேட்ட பொழுது
"தாத்தா உங்க அப்பாவோட மீசையையும் சேர்த்து சாமிகிட்ட கொண்டு போயிட்டாரு"
புரியாமல் தாத்தாவை வெறுத்தேன்.
8 comments:
அன்பின் டம்பி மேவி
புரியாமல் தாத்தாவை வெறுத்தேன். என்ன செய்வது - நாம் அதிகம் விரும்பும் பொருட்கள் திடீரென ஒரு நாள் நம்மிடமிருந்து பறிக்கப்படும். ம்ம்ம்ம்
மீசையை வைத்து ஒரு அழகான இடுகை - படத்துடன் - ரசிக்கும் விதம் நன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் டம்பி மேவி
புரியாமல் தாத்தாவை வெறுத்தேன். என்ன செய்வது - நாம் அதிகம் விரும்பும் பொருட்கள் திடீரென ஒரு நாள் நம்மிடமிருந்து பறிக்கப்படும். ம்ம்ம்ம்
மீசையை வைத்து ஒரு அழகான இடுகை - படத்துடன் - ரசிக்கும் விதம் நன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இதே தோணியில் நம்ம அப்துல்லா அண்ணன் ஒரு கதை எழுதியிருந்தார், எல்லாம் இழப்புக்காக அழ, மகன் மட்டும் இழந்த மீசைக்காக அழுவான்!
//முடிகளுக்கு வாசனை இல்லை என்று
நான் படித்த அறிவியல் சொன்னாலும்
அது அப்பாவின் மீசைக்கில்லை என்று
தொழிற்சாலையில் இருந்து வந்த அப்பாவை
ஓடி சென்று அணைத்த பொழுது
வேர்வை வாசத்துடன் மீசையின் வாசத்தையும் உணர்ந்தேன்//
Sema line.. Super
நல்லா இருக்கு..
Good one thala. Way to go!
நல்ல முயற்சி மேவி.. நிறைய இடங்களில் மனதைத் தொட்டுப் போகின்றன வார்த்தைகள்..:-))
@ சீனா : உண்மை தான் சார் .....
@ வால்பையன் : அப்படியா .... அந்த கதையை நேரம் இருக்கும் பொழுது படிச்சு பார்க்கிறேன்
@ கார்த்திக் : நன்றி :)))))))))
@ பிரேம் : ரொம்ப நன்றிங்க
@ கார்த்திக் : ம்ம்ம் நன்றி
@ கார்த்திகை பாண்டியன் : அப்ப நான் இலக்கியவாதியா
Post a Comment