இந்த படத்தின் காட்சிகள் மூலமாக யாரவது கதையை புரிந்து கொள்ளலாம் என்று முயற்சி செய்தால், கண்டிப்பாக அவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். ஏனென்றால் கதையென்று எதுவுமில்லை ; நான் பார்த்த வரைக்கும். இருந்தாலும் இந்த படத்தை பார்க்க ஏதொரு காரணம் உண்டென்றால், அது வசனங்கள் தான். சிற்சில இடங்களில் அழகாய். மேல நான் மொழிபெயர்த்திருக்கும் வசனம் அப்படியொன்றும் சிறப்பான காட்சியில் வரவதில்லை, இருந்தாலும் அதில் ஏதொன்று எனக்கு பிடித்திருந்தது.
கொஞ்சம் நாள் முன்பு, நானொரு வடநாட்டு கதையை படித்தேன் (வங்காள நாட்டு கதை என்று நினைக்கிறேன் : சரியாய் தெரியவில்லை), நாட்டு விடுதலைக்கு பிறகான காலகட்டத்தில், கலவரங்களுக்கு மத்தில் : தனது காதலியை முத்தமிட ஒரு மறைவான இடத்தை தேடி அலைகிறான் ஒரு காதலன் தனது காதலி உடன். தெருவில் எங்கும் கலவரக்காரர்கள் கோஷமிட்டபடி சென்று கொண்டிருப்பதால், தனிமையான இடமில்லாமல் தவிக்கிறான். ஒரு சிக்கலான சூழ்நிலையில், அவனுக்கு இடம் கிடைக்கிறது. அங்கு அவனது காதலியை அணைத்து கொள்கிறான், அவள் வைத்திருக்கும் பூக்களை மோகர்ந்து பார்க்கிறான், லேசாக முத்தமும் தருகிறான். அப்பொழுது அங்கு கலவரக்காரர்கள் சத்தம் போட்டு கொண்டு வருவதால். இருவரும் பிரிந்து போய்விடுகிறார்கள். அன்று இரவு அவன் கண் முடி, அந்த நிகழ்வை நினைத்து சந்தோஷப்பட நினைத்து, கண்களை முடி கனவு காண்கிறான், கனவில் முத்த நினைவுகளோடு கலவரக்காரர்களின் கோஷமும் அவனுக்கு கேட்கிறது. :::: இந்த கதையில் வருமிந்த நிகழ்வு தான் படத்தில் அந்த வசனங்கள் வரும் பொழுது ஞாபம் வந்தன.
கன்னடத்திலும், ஒரு கதையில், இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வாழும் அந்த கால கூட்டு குடும்பத்தில் வாழும் ஒரு கணவன் மனைவி இடைய நடக்கும் புணர்வை கூட இதே மாதிரியான எழுத்துநடையில் ஆசிரியர் சொல்லிருப்பார்.
மோசமாக எடுக்க பட்ட படமிதுவாக தான் இருக்கும். எந்த கதாபாத்திரத்திலும் அழுத்தமில்லை. இருந்தும் படம் பார்க்க நமக்கு கிடைக்கும் ஒரே காரணம் வசனங்களும், சிற்பல காட்சிகளும் தான்.
நாவலை எழுதியவர் Marguerite Duras.
இந்த நாவல் முழுக்க அவரது சிறு வயது நினைவுகள் தானென்று ஒரு பேச்சும் இருக்கிறது. படத்தின் கடைசி காட்சிகளும் அதை உணர்த்துவது போல் தான் இருக்கிறது. நாவலாசிரியர் தனது கடைசி காலத்தில் எழுதிய நாவலிது. நாணயத்தின் இரண்டு பக்கம் போல : இந்த படத்தை கொண்டாடுவோர் ஒரு கோஷ்டியாகவும், வெறுப்பவர்கள் ஒரு கோஷ்டியாகவும் பிரிந்து இருக்கிறார்கள். நானிந்த படத்தை வெறுப்பவர்களின் பக்கம் இருக்கிறேன். படத்தை பாருங்கள். நான் பார்த்த பிறகு தான் இந்த கோஷ்டியில் சேர்ந்தேன்.
நாவலை படித்த ஒருவரிடம் கேட்டு பார்த்தேன். 1929 இல் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தை பற்றியும் , ஒரு பெண்ணின் உணர்வுகளை பற்றியும் அழகாக சொல்லிருப்பதாய் சொன்னார். நான் நாவலை இன்னும் படிக்கவில்லை, படத்தை மட்டும் தான் பார்த்தேன்.
படத்தை "சின்ன பசு" என்கிற பெயரில் தமிழில் டப் செய்து, நகரங்களுக்கு வெளியே உள்ள திரையரங்குகளில் காலை காட்சியாக
நமது ஆட்கள் போட்டாலும் போடுவார்கள்.சில வசனங்களுக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் (அதுவும் வெட்டியாக இருந்தால் மட்டுமே)
#டிஸ்கி - ஒரு வேளை நீங்க நாவலை முதலில் படித்து விட்டால், தயவு செய்து படத்தை மட்டும் பார்க்காதீங்க.
#டிஸ்கி - புணர்வு காட்சிகள் அளவுக்கு அதிகமாகவே படதிலிருக்கிறது.
No comments:
Post a Comment