Thursday, October 23, 2025
நடிகவேள் எம்.ஆர்.ராதா
Sunday, March 6, 2022
பொன்னியின் செல்வன் II வீரமே வாகை சூடும்
Thursday, September 10, 2020
சொத்தில் பங்கு
Friday, April 24, 2020
நாளைய மனிதன் (1989) & அதிசய மனிதன் (1990) : தமிழின் முதல் ஸோம்பி படம்
Sunday, April 12, 2020
Confession Of Murder { Korean / 2012}
Saturday, March 28, 2020
Nanna Prakara (Kannada) - 2019
Wednesday, September 27, 2017
ஏதுமற்ற காலத்தில் சினிமா
ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள் முத ஷோ போய் ஏறக்குறைய பத்து வருஷமாகி இருக்கும்.
அது ஒரு பித்து நிலை. இத்தனைக்கும் இப்ப புக் பண்ணி இருக்குற மாதிரி ஆன்லைன் ல எல்லாம் புக் பண்ண மாட்டேன். அப்படி பண்ணவும் வசதி இல்லங்குறது வேற விஷயம்.
அப்ப தங்கிட்டு இருந்த பெருங்களத்தூர் ரூம் ல இருந்து கிளம்பி நேர தியேட்டர் போயிடுவேன். அங்க போய் அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி எல்லாம் படம் பார்ப்பேன். முக்காவாசி தாம்பரத்துல இருக்குற நேஷனல், வித்யா தியேட்டர் ல பாப்பேன். இதுல நேஷனல் தியேட்டர் ல அப்ப படம் பாக்குறதுங்குறது இட்லி குண்டா ல இருந்துட்டு வர மாதிரி இருக்கும். எதாச்சு பாட்டு வந்தா வெளில போய் காத்து வாங்கிட்டு வருவேன்.
இப்ப தான் எம்ஆர் தியேட்டர் ல ஏசி எல்லாம் போட்டு டக்கரா இருக்கு. அப்ப எல்லாம் அங்கன படம் பாக்குறதுங்குறது கக்கத்துல கொள்ளி கட்டைய வைச்சுகிட்டு ஒம குண்டத்துல உட்கார்ந்து படம் பாக்குற மாதிரி தான்.
குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அப்பவே சூப்பரா தான் இருக்கும். ஆனா அங்க போற அளவுக்கு பஸ் டிக்கெட் வாங்க அப்ப எல்லாம் காசு இருக்காது.
இதுல இன்னொரு கூத்து என்னன்ன தாம்பாரத்துல படம் பாத்துட்டு, திரும்பி பஸ் ல வர காசு இருக்காது ... அதனால ரயில் தண்டவாளம் வழியா நடந்து வருவேன். டைம் வீணாகுமேங்குற கவலை எல்லாம் இல்ல. ஏன்ன அவ்வளவு வெட்டியா இருந்தேன். சிம்பிளா வெட்டி ஆபீஸர்.
இப்புடி தான் லீந்னு ஒரு படம்... அந்த படத்துல நடிச்சவங்களே படத்த முழுசா பாத்து இருப்பாங்களானு தெரியாது. அப்புடி ஒரு மச மொக்கையான படம். படம் தான் அப்புடின்ன தியேட்டர் ஸ்கிரீனும் செம மொக்கையா இருக்கும். எதோ புட்பால வைச்சு படமுன்னு போயிட்டேன். படத்தோட ஹீரோ சிபிராஜ்ன்னு படம் முடிஞ்சு வெளில வந்து போஸ்டர பாத்து தான் தெரிஞ்சு கிட்டேன்.
இதவிட காவிய சோகம் என்னன்ன படத்த பத்தி பேசுறதுக்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாங்க. அப்புடியே கிடைச்சாலும் படம் நல்லா இருக்கான்னு கேட்டுட்டு ...சரி மச்சான் ஞாயித்து கிழம என் ஃபிகரோட போறேன்னு சொல்லி கடுப்படிப்பாங்க.
வேலை கிடைக்கலையேன்னு சோகம் இருந்தாலும் ஃபிகர் கூட இல்லையேன்னு அழுகாச்சி + கடுப்புஸ் + சோகமா இருக்கும். அப்ப எல்லாம் ஜிலேபி, லட்டு வகையறா ஃபிகர்ஸ் எல்லாம் கனவுல கூட பாக்க முடியாத அளவுக்கு பஞ்சத்துல இருந்தேன். இண்டர்வியூன்ன மட்டும் தான் சிட்டிக்குள்ள போவேன். அதுவும் காசு மிச்சம் பண்ண ஒரே நாள் ல மூணு நாலு இண்டர்வியூ போவேன். தனி தனியா போனா காசு அதிகமாகுமே என்குற கவலை தான்.
அதனால இந்த மாதிரி ஜிலேபி, லட்டு ஃபிகர்ஸ எல்லாம் சினிமாவுல மட்டும் தான் பாக்க முடியும். அந்த மாதிரி லட்டு ஜிலேபிய எல்லாம் இந்த மாதிரி மட்டமான ஸ்கிரீன் ல பாக்குறப்ப தும்ப பூவுல தூக்கு மாட்டிட்டு தொங்கிறலாம் போல இருக்கும்.
ம்ம்ம்ம்ம்
அது எல்லாம் ஒரு காலம்.
Wednesday, September 13, 2017
துப்பறிவாளன்
ஒரிஜினல் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என்பது ஆர்தர் கானன் டயல் எழுதிய 56 சிறுகதைகளும் 4 நாவல்களையும் அடங்கியது. இது தவிர ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் வாட்சன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து பல எழுத்தாளர்கள் பல கதைகள் எழுதி இருக்கிறார்கள்.
இது எல்லாம் இப்படி இருக்க
தமிழில் ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் சாயலில் ஒரு படம் என்று சொல்லி இருக்கும் மிஷ்கின் அதில் எந்த கதையை கள்ள பிரதியெடுத்திருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை. இதில் விஷால் வேறு.
இருவரது டிராக் ரெக்கார்ட்டும் அப்படி ஒன்றும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை.
மிஷ்கினின் முகமூடி படத்தை யாருன் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். படத்திலிருந்து எதையுன் எதிர்பார்க்க வேண்டாம், இது ஒரு எம்.ஜி.ஆர். படம் போலிருக்கும் என்று கடைசி நேரத்தில் பல்டீ அடித்தார்.
ஏற்கனவே ரசனை கோழி இந்த வாரம் தான் ஜாதகம் குறித்து கூவிய புண்ணியத்தில் விக்ரம் வேதாவும், விவேகமும் பார்த்தேன். இனிப்பை தொடர்ந்து கசப்பை உண்டது போல் ஆகிவிட்டது. விக்ரம் வேதாவை மட்டும் பார்த்து இருக்கலாமென்று கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமாய் இப்பொழுது தோன்றுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே பல்ப் நாவல்கள் மூலம் பல துப்பறியும் நாயகர்கள் அறிமுகமாகியுள்ளார்கள். அவர்களது சாயம் கொஞ்சம் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தில் வந்தால் கூட அவ்வளவு தான்.
மேலும் துப்பறியும் இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் இன்னும் பால்வாடியை கூட தாண்டவில்லை. அதனால் படம் எப்படி வர போகிறது என்று தெரியவில்லை.
ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் எல்லாம் 140 வருடங்களுக்கு முந்தைய இலண்டனில் நடப்பது போல் எழுத பட்டு இருக்கும். அந்த கதாப்பாத்திரத்தை எவ்வாறு இந்த நவீன யுகத்தில் மிஷ்கின் பொருத்திருப்பார் என்று யோசித்து பார்க்க முடியவில்லை.
Sunday, August 20, 2017
கலவை [20/08/2017] - தரமணி இயக்குநர் ராம்
சிக்கலில்லா மலம் கழித்தலுக்கு நான் பின் பற்றும் வழிமுறைகள்...
மாலை ஆறு மணிக்கு மேல் மசாலா, காரம், கிழங்கு, சிப்ஸ், காபி டீ போன்றவற்றை சாப்பிட மாட்டேன்
இரவு உணவு என்பது பெரும்பாலும் சப்பாத்தி அல்லது இட்லியாக தான் இருக்கும். சப்பாத்தி என்றால் தொட்டுக்க பருப்பு வகைகள், இட்லி என்றால் சட்னி.
இரவு சாப்பிட்டுவிட்டு கால் கட்டி / சப்பாளங்கால் போட்டு ஒரு மணி நேரம் உட்கார்ந்திருப்பேன். டிவி பார்க்காமல் யாரிடமாவது பேசி கொண்டோ புத்தகம் படித்து கொண்டோ இருப்பேன்.
இரவு 8.30ல் இருந்து 9.30க்குள் இரவு உணவை முடித்து விடுவேன். வீட்டுக்கு வர நேரமாகும் என்றால் ஓட்டலில் அந்த நேரத்திற்குள் சாப்பிட்டுவிடுவேன். மறுநாள் விடுமுறை என்றால் இரவு கொஞ்சம் நேரம் கழித்து கூட சாப்பிடுவேன்.
காலை 4.30மணிக்கு எழுந்து பல் தேய்த்து, ஒரு லிட்டர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இருபது நிமிடங்களில் குடிப்பேன். 6மணி போல் காபி.
நடை பயிற்சி, உடற்பயிற்சி எல்லாம் முடிந்த உடன் ...வீட்டில் காலை கடன் எந்த பிரச்சனையுன் இல்லாமல்.
முக்கியமாக மலத்தில் நீர் தன்மை சரிவர இருத்தல் வேண்டும். குறைவாக இருந்தாலும் ஆபத்து அதிகமாக இருந்தாலும் ஆபத்து.
அதே போல் மூன்று வேளையும் அவசரம் அவசரமாக சாப்பிட்ட மாட்டேன். நன்றாக மென்று தான் சாப்பிடுவேன்.
எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக 7மணி நேரம் கண்டிப்பாக தூங்குவேன்.
தமிழில் எந்த பெரிய இலக்கிய படைப்புகளும் இல்லை. கிழக்கு, காலச்சுவடு மற்றும் விகடன் மட்டும் பெயருக்கு கடை வைத்துள்ளார்கள்.
மக்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், கடந்த 10 வருடத்தில் வாசிப்பு பழக்கம் இல்லாதவனை சுண்டி இழுக்கிற மாதிரி எத்தனை நாவல் வந்திருக்கிறது ????
தரமான நாவல்களை கிண்டிலில் கொண்டு வருவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை.
கொஞ்சம் தேடி பார்த்தால் எஸ்ராவின் கதா விலாசம் மற்றும் துணையெழுத்து, ஜெயமோகனது சிற்சில படைப்புகள் கிடைக்கிறது கிண்டில் ஸ்டோரில்.
இந்த இலக்கியவாதி அங்கீகாரம் தராத ராஜேஷ்குமார், பிகேபி, சுபா ஆகியோரது நாவல்களை ஜி.கே.அசோகன் அவர்கள் தனது சொந்த online portalயான NovelJunction ல் Soft copyகளை விற்கிறார். தரமாக இருக்கிறது.
மேலும் சுப்பாண்டி சீரிஸின் ஆங்கில முதல் பாகத்தை வாங்கினேன். அதை இனிமேல் தான் படிக்கணும்.
- - -
குங்குமத்தில் காலச்சுவடு கண்ணன் அவர்களின் பேட்டி படித்தேன். இன்னும் பல விஷயங்களை ஜனரஞ்சக பத்திரிக்கை வாசகர்களுக்காக பேசி இருக்கலாம்.
- - -
ஹோய்சால கோயில்களை காண வேண்டும் நினைப்பவர்கள் என ஹாசன் மாவட்டத்திற்கு போய் தங்கி கொண்டு, கோயில்களை சுற்றி பார்க்கலாம்.
சும்மார் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இப்பொழுது பார்க்க ஆசைபடும் கோயில்களை அணைத்தும் பார்த்து இருந்தாலும், அவற்றின் பெருமை தெரியாமல் கடந்திருக்கிறேன்.
ம்ம்ம் ...
மதுரைக்கு இன்னொரு சுற்றுப்பயணம் போக திட்டமிட்டு இருக்கிறேன். அதற்குள் நரசய்யா மதுரை பற்றி எழுதி இருக்கும் தகவல் களஞ்சியத்தை வாசித்துவிட வேண்டும்.
- - -
நினைத்த மாதிரி இயக்குநர் ராம் இந்த தடவையும் ஐடி துறை, கலாச்சார சீரழிவு என்று குழப்பத்துடன் படம் எடுத்திருக்கிறார் போல.
புரட்சிகர படம் என்றால் என்ன என்று தமிழக மக்களுக்கு தெரியாமல் போய் விடும் போல. Mostly life does me and sometimes i do the life. But rarely I f**k myself.
எனக்கும் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கு. ஆனால் அதனை எல்லாம் மற்றவரையோ அல்லது இந்த சமூகத்தையோ ஒருபோதும் எடை போட்டது இல்லை. நீதிபதி மனப்பான்மையோ குற்றவாளி மனப்பான்மையோ வந்தது இல்லை.
இயக்குநர் ராம் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் கோணலான கருத்தை சொல்லும் படங்களை எடுத்துவிட்டு அதற்கு சப்பைகட்டு காரணங்களுடன் பிறகு வருவார்.
பத்து வருடங்களுக்கு முன்பு 2007ல் இவரது முதல் படமான கற்றது தமிழ் வெளிவருவதற்கு முன்பு ..
"இது ஒரு தமிழில் M.A. முடித்தவன் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனை பற்றி பேசும் படம்" - இது படம் ஆரம்பித்த பொழுது அவர் சொன்னது.
"சிவனே என்று இருந்தவன் சிவனான கதை" - இது படம் வருவதற்கு கொஞ்ச நாட்கள் இருக்கிறது என்ற நிலையில் அவர் சொன்னது.
"நான் மனத்தில் கொல்ல வேண்டும் என நினைத்தவர்களை இப்படத்தின் மூலம் கொன்று இருக்கிறேன்" - இது நாளை படம் வர போகிறது என்று இருந்த பொழுது சொன்னது.
இப்படி படத்தை தமிழ் உணர்வாளன் சந்திக்கும் பிரச்சனை என்று அவர் பரப்பி கொண்டு இருந்தார். ஆனால் படம் வெளியான அன்றைய தினம் வசூல் மிகவும் குறைவு.
படத்தில் கதாநாயகனாக நடித்த ஜீவாவிற்கும் 2006ல் வந்த டிஷ்யூம், ஈ, அரண் என எதுவும் வசூல் பெறவில்லை. 2005/2006 ஆரம்பித்த படமான தெனாவட்டு இன்னும் வெளிவராத நிலை 2007ல். அதனால் படத்தை promote செய்ய அவர் வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாத நிலை.
பார்த்தார் ராம் .... அப்பொழுது சிறந்து விளங்கிய ஐடி துறையை கையில் சாட்டையுடன் அணுகி படத்தை promote பண்ணினார்.
"ஐடி துறையில் இருப்பவர்களுக்கு தமிழ் பற்றே இல்லை"
"ஐடியில் துறையில் இருப்பவர்கள் ஒழுக்கநெறி தவறியவர்கள்"
"ஐடியில் பணி நிரந்தரமானதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்க படலாம்"
"ஐடியில் வேலை செய்கிறவன் லட்ச கணக்கில் சம்பளம் வாங்குகிறான்... அது அவனை தவறான பாதையில் கொண்டு செல்கிறது" என்றெல்லாம் சொல்லி படத்தை பற்றிய ஒரு sensational issue ஆக்கினார்.
உடனே அது ஊடக துறையில் பற்றி எரிய ஆரம்பித்தது. சமூக ஊடகங்கள் பெரிதும் இல்லாத காரணத்தினால் (Orkut, Yahoo group எல்லாம் ஒரு குறுகிய வட்டத்தில் இருந்தது) தனியார் வானொலி நிலையங்கள் இதை வைத்து நன்றாக TRP அறுவடை செய்தது.
எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்ல ஆரம்பித்தார்கள். படம் கொஞ்சம் வசூலை கண்டது.
இரண்டு வருடம் கழித்து ராம் தனது வலைபதிவுயில் (blog) கற்றது தமிழின் திரைகதையை பகிர்ந்தார். விவாதங்கள் ஆரம்பித்தன.
அதிலிருந்து இதே மாதிரியான போக்கை தான் ஒவ்வொரு முறையும் பயண்படுத்துகிறார். மீறி ரொம்ப பேசினால் வடிவேலு பட காமெடி ஒன்றில் "எவன் எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும் தான் கடவுள் தெரிவார்" என்கிற தொனியில் பேச ஆரம்பித்தார். அப்படி பேச ஒரு கூட்டத்தையும் சேர்த்து கொண்டார்.
கற்றது தமிழ் - தமிழ் உணர்வுள்ள ஒருவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்
தங்க மீன்கள் - மகள்களை பெற்ற அப்பாக்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
தரமணி - பெண்களை மதிக்கும் ஒருவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
இந்த தடவை அவரோடு சேர்ந்து இந்த வரிகளை பஜனை செய்ய கூட்டத்தையும் சேர்த்திருக்கிறார்.
இவரது எல்லா படங்களிலும் இவரும் ஒரு கதாப்பாத்திரமாகவே வருவார். அதுவும் கதையின் நாயகனாக இருப்பார். அதனால் தனது புரிதல்களையே ஒவ்வொரு படத்திலும் நிறுவ பார்க்கிறார் இயக்குநர் ராம் அவர்கள். தான் சந்தித்த பிரச்சனைகளை பொது பிரச்சனைகளாக்கி, அதனை ஒரு விவாத பொருளாக்கி கொண்டு வருகிறார்.
இன்னும் எனக்கு "touch me here if you dare"க்கான தீர்வே கிடைத்த பாடு இல்லை.
இவரது எல்லா பேட்டிகளையும் ஒன்று மட்டும் கட்டாயம் இருக்கும் "நான் எல்லாவற்றையும் பற்றியும் அதன் நியாய தர்மங்களோடு சரிவர புரிந்து வைத்திருக்கிறேன்...".
இவரது போலி அறிவு ஜீவித்தை கண்டு அரைகுறை வேக்காட்டுகளும் அதே மாதிரி பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தான் சோகம்.