பறவைகள் பறந்துக் கொண்டிருக்கின்றன
அவைகளுடன் பறக்க முடியாமல்
தூரத்தில் நான்
அறையில் இருப்போடும்
பறவைகளுக்கிடைய இன்மையோடும்
இருக்கிறேன் நான்
என் இன்மையோடு பறவைகள்
பறந்து போயின
கண்ணாடியை பார்த்தேன்
என் இன்மை போய் விட்டதா
என்று தெரியவில்லை
சுழியத்தினுள் சிக்கி இருப்பவனுக்கு
சுழியத்தின் வடிவம் தெரிவதில்லை.
= = = = =
தாமரை இலையில் இரு துளி நீர்
இலையை மடக்கிய பொழுது
இரு துளி ஒன்றோடு ஓன்று
கலந்து
இரண்டு என்ற நிலை காணமல் போனது
தாமரைகளை பூஜைக்கு மட்டும் பயன் படுத்துகிறார்கள் மனிதர்கள்.
3 comments:
ஜென் கவிதை?
@ஸ்ரீ : அந்த மாதிரி எழுத முயற்சி பண்ணி இருக்கேன்... ஜென் தன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை
இன்மைகளுக்குள்தான் நிறைவு நிறைய மேவி.ஆயிரம் அர்த்தங்களைக் கொள்ளும் இந்தக் கவிதை.நான் ஈழத்தோடும் சம்பந்தப்படுத்திப் பார்த்தேன் !
Post a Comment