Pages

Wednesday, December 4, 2013

காப்பு காடுகள் - கிழக்கு தொடர்ச்சி மலைகள் - 1



மேற்கு தொடர்ச்சி மலைகள் போலவே கிழக்கு தொடர்ச்சி மலைகளும் பழமையானது தான்.

இந்த கிழக்கு தொடர்ச்சி மலைகள் சென்னையை தொட்டு செல்கிறது. இந்த மலைகளின் அமைப்பு சென்னையை மற்ற நில பகுதிகளிலிருந்து பிரித்து தனி தீவு போல் அமைந்திருக்கிறது. 

சென்னையை தொட்டு செல்கிற இந்த மலை தொடர்ச்சியில் தான் காப்பு காடுகள் அமைந்துள்ளது. 

எனக்கு தெரிந்து இந்த காப்பு காடுகள் செங்கல்பட்டில் தொடங்கி தாம்பரம் வரை அமைந்த்துள்ளது. இதற்கு செங்கல்பட்டிலும் பெருங்களத்தூரிலும் வனத்துறை அலுவலகம் அமைந்து உள்ளது.

இந்த மலைகளின் அடிவாரத்தில் தான் மதுராந்தகம் ஏரி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி எல்லாம் அமைந்திருக்கிறது. 

இந்திய பொருளாதாரம் உலகமயமாக்கலுக்கு முன்பு வரைக்கு நீண்டு அகண்ட ஏரியாய் இருந்த கொளவாய் ஏரி, கொஞ்சம் சுருங்கியது. 

சுருக்கத்திற்கு காரணம் மஹேந்திர சிட்டி. கொளவாய் ஏரியின் ஒரு பகுதியின் மேல் தான் மஹேந்திர சிட்டி அமைந்துள்ளது. 

இப்பொழுது மஹேந்திர சிட்டி இருக்கும் நில பரப்பில் அப்பொழுது விவசாயம் நடந்துள்ளது. 

இந்த கொளவாய் ஏரியை நம்பி தான் செட்டி புண்ணியம், வீராபுரம், செங்கல்பட்டு பகுதி விவசாயிகள் இருந்தனர். 

இதில் செங்கல்பட்டு விவசாய நிலங்கள் இப்பொழுது சின்னதிரை நட்சத்திரங்களின் உதவியோடும் விஜய் டிவி உதவியோடும் ரியல் எஸ்டேட் வீட்டுமனை பிரிவுகளாக விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது. 

வீராபுரத்தில் இன்று விவசாயமே நடப்பது இல்லை. நான் பார்த்த மஹேந்திர சிட்டி வாசலில் இருந்த ஒரு கிணறும் குப்பை குளமாக இருக்கிறது. 

செட்டி புண்ணியத்தில் ஒரு ராமர் கோவில் இருப்பதால், முன்பு நங்கநல்லூரில் நடந்தது போல அடுக்கு மாடி வீட்டு விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது. தனிநபர் வீட்டுமனை பிரிவு விற்பனை பற்றி அதிகம் தெரியவில்லை.

காட்டாங்குளத்தூர் முன்பு நீண்டு சிங்கபெருமாள் கோவில் பகுதி வரைக்கும் இருந்தது 1970களில் தமிழ்நாட்டு அரசு இங்கு தொழிற்சாலை பகுதியை அறிமுகபடுத்தும் வரையில். 

இந்த பகுதி தான் இப்பொழுது மறைமலை நகராக உள்ளது. இந்த தொழிற்சாலை பகுதியை அறிமுக படுத்த காப்பு காடுகளின் ஒரு பகுதியாக இருந்த முந்திரி காடுகளை அழித்தது அரசு. 

தொடரும்......

No comments:

Related Posts with Thumbnails