மேற்கொண்டு போகும் முன் முக்கிய அறிவிப்பு - எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் பராக் பராக் - வந்தியதேவன் பாதையில் ஒரு அனுபவ பயணம் என்ற தொடரை கல்கி ஆன்லைன் என்னும் கல்கி இதழின் யூடியூப் ஒளியலை வரிசையில் ( https://youtu.be/bUmXhOy3Cfs ) தொகுத்து வழங்க இருக்கிறார். தவற விட கூடாத நிகழ்ச்சி இது.
- - -
முதன் முதலில் பொன்னியின் செல்வனை படிக்கையில் ஒரு மாயாஜால உலகத்தில் பயணித்தது போலிருந்ததும். முதல் சில பக்கங்களில் கதையோடு ஒன்ற ஆரம்பிக்கும் வரையில் கொஞ்சம் என்னடா இது என்பது போல் தான் இருந்தது. அதன் பிறவு கல்கியில் எழுத்து நடையோட்டம் கூடவே பத்மவாசனது ஓவியங்கள் எல்லாம் சேர்ந்து கல்கி உருவாக்கிய அந்த மாயாஜால உலகத்திலென்னை தள்ளி விட்டது.
இப்படிப்பட்ட ஒரு மாயாஜால உலகத்தை படைக்க எம்மாதிரியான அனுபவங்கள் கல்கி அவர்களுக்கு உத்வேகமாக அமைத்திருக்கும் என்பதை அறிய சில புத்தகங்களை அவசியம் வாசிக்க வேண்டும்.
அவை
- தெய்வத்தமிழ் ஈழத்திலே : கல்கி
- நம் தந்தையர் செய்த விந்தைகள் : கல்கி
- பொன்னியின் புதல்வர் - சுந்தா
பொன்னியின் செல்வன் நாவலை போலவே கல்கி எழுதிய மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு அலை ஓசை. கல்கி தனது சுதந்திர போராட்டங்களின் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த நாவலை எழுதிருப்பார். 1934 முதல் 1948 வரையிலான இந்தியவை அப்படியே படம் பிடித்து காட்டி இருப்பார்.
சிறு போராட்ட குழுக்கள், அவர்களது ரகசிய சந்திப்புகள், இவர்களை கண்காணிக்கும் சி.ஐ.டி.கள் மற்றும் அந்தகால அரசியல்வாதிகள் & பொதுமக்கள் என கலந்துகட்டி எழுதிருப்பார். மிகுந்த பொறுமையுடன் வாசித்தால் தான் இப்படைப்பில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டடையலாம். கல்கிக்கு சாகித்திய அகாதமி விருதை வாங்கி தந்த படைப்பு இது.
பொன்னியின் செல்வனை மட்டுமே வாசித்த நபர்களுக்கு அலை ஓசை மிக பெரிய அதிர்ச்சியாக இருக்கலாம், ஏனென்றால் இரண்டிலும் வெவ்வேறு எழுத்துநடைகளை பயன்படுத்திருப்பார் கல்கி.
1930களில் ஆனந்த விகடனில் தனது கட்டுரைகளின் மூலமும் கதைகளின் மூலமும் புகழ்பெற்று இருந்த கல்கி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வாசன் சம்மதம் கொடுக்காத நிலையில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி.
அப்படி கல்கி ஆனந்த விகடனில் இருந்து விலகியதும் ஒரு வகையில் நன்மையே நிகழ்ந்தது. கல்கி விட்டு சென்ற இடத்தை தேவன் கையில் எடுத்து வழி நடத்தி சென்றார்.
ஏற்கனவே கல்கி தனக்கான ஒரு அடையாளத்தை எழுத்துலகில் பெற்றிருந்தார். போராட்டத்தில் சிறை சென்றுவிட்டு வந்த கல்கிக்காக அவரது நண்பர் சதாசிவம் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க முடிவெடுத்தார்.
அப்பொழுது கல்கி அவர்களையும் பங்குதாரராக சேர்த்து கொண்டார். ஆனந்த விகடன் அப்பொழுதே வார இதழ்களின் சந்தையில் புகழ்பெற தொடங்கி இருந்தது.
சதாசிவம் மற்றும் கல்கி இருவருக்கும் ஆனந்த விகடன் மற்றும் பல பிரபல இதழ்களில் மத்தியில் ஒரு புது இதழை ஆரம்பித்து மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே பெரிய சவால்.
அத்தகைய சவாலை எப்படி எதிர்கொள்வது யோசித்து சதாசிவம் ஒரு முடிவை எடுத்தார். புது பத்திரிக்கைக்கான ஒரு பெயரை தேர்ந்தெடுத்தார். அந்த பெயரே போதும் மக்களின் கவனத்தை பெற என நம்பினார்.
அந்த பெயர் "கல்கி". தமிழ் பத்திரிக்கை உலகில் ஒரு எழுத்தாளரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது அதுவே முதல் முறை.
இன்னொன்றயும் கவனிக்க வேண்டும் அப்பொழுது கல்கி எத்தகைய புகழை பெற்று இருந்தால் சதாசிவம் அவர்கள் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பார்.
பத்திரிக்கை ஆரம்பித்தாகி விட்டது, மக்களின் கவனத்தை பெற்றாகி விட்டது, கல்கி இதழுக்கான வாசக பரப்பை சந்தாதாரர்களை பெற என்ன வேண்டும் ?
எப்படி எல்லாம் எழுதினால் மக்களது கவனத்தை பெற்ற முடியும் என யோசித்து கல்கி எழுத ஆரம்பித்தது தான் " பார்த்திபன் கனவு' தொடர்கதை.
பெரும்பான்மையான மக்கள் சிவகாமியின் சபதம் கதை தான் முதலில் எழுத பட்டு இருக்கும் என்று ஆனால் உண்மையில் அது பார்த்திபன் கனவு வந்து முடிந்த பிறகே அந்ததொடர் ஆரம்பிக்க பட்டது.
பார்த்திபன் கனவு வந்து கொண்டி இருந்த நேரத்தில் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டு இருந்தது.
அதனை சமாளிக்க போட்டியில் நிலைத்திருக்க அப்பொழுது ஆனந்த விகடனில் தலைமை பொறுப்பில் இருந்த தேவன் ஒரு ஜனரஞ்சக நகைச்சுவை தொடரை எழுத ஆரம்பித்தார். இன்றளவும் அந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
அந்த தொடரின் பெயர் ..... "துப்பறியும் சாம்பு".
தொடரும் ...
#பொன்னியின்செல்வன்
#PonniyinSelvan
#பொன்னியின்செல்வனும்நானும்