ஒரு காலத்துல நியூஸ்பேப்பர் ல இன்னைக்கு டிவில என்னென்ன படம் போடுறாங்கன்னு ஆர்வமா பார்த்துட்டு இருந்தேன்...
அது வெட்டி ஆபீசரா இருந்த காலம் வரைக்கும் தொடர்ந்தது...
அப்ப தான் இந்தியா ல பிராட்பேண்ட் இண்டர்நெட் எல்லாம் புதுசா வர ஆரம்பிச்சது....
அப்பறமா டிவி சேனலேயே காய்கறி விக்குற மாதிரி கூவி கூவி சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பம் தான் இன்றைய சினிமா பகுதிய பாக்குறத நிறுத்தினேன்.
அப்பறமா யூட்யூப் ல புது படம் எல்லாம் வந்த கையோட சுட சுட வர ஆரம்பிச்சது. பழைய படமும் அதே மாதிரி வர ஆரம்பிச்சது. ஒரு நல்ல நாள் ல சட்டம் கொண்டு வந்து அப்படி யூட்யூப் ல படத்த கள்ள தனமா வெளியீடுறத தடை பண்ணிட்டாங்க.
அப்புறமா OTT, சேனல்ன்னு வளர்ந்துருச்சு. படம் பாக்கணுமுன்ன எதாவது சேனல வைச்சா போதுமுன்னு ஆகிடுச்சு.
இந்த சேனல் ல இந்த சினிமா போடுறாங்கன்னு ஆர்வமா பாத்து, அதுக்காக காத்திருந்து படம் பாத்த காலத்துல சந்தோஷம், இப்பம் எந்த படத்த எப்ப வேணுமுன்னாலுன் பாக்கலாமுன்னு வசதி இருக்கு... ஆனா அந்த காத்திருப்பு சந்தோஷம் இல்ல.