தி செவன்த் சீல் திரைப்படத்தில் வரும் போர் வீரன் அன்டோனியஸ் ப்ளாக்கிற்கும் மரண தேவனுக்கும் இடையேயான கடற்கரையில் நடக்கும் உரையாடல்.
வீரன் : நீங்கள் யார்?
மரண தேவன்: நான் மரணம்.
வீரன்: எனக்காக வந்துள்ளீர்களா?
மரண தேவன்: நீண்ட காலமாக நான் உன் பக்கத்தில் நடந்திருக்கிறேன்.
வீரன்: அது எனக்குத் தெரியும்.
மரண தேவன்: நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
வீரன்: என் உடல் தான் அஞ்சுகிறது, ஆனால் நான் இல்லை.
மரண தேவன்: அப்படியென்றால், அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை
வீரன்: ஒரு கணம் பொறுங்கள்.
மரண தேவன்: எல்லோரும் அதையேதான் சொல்கிறார்கள். ஆனால் நான் எந்த அவகாசத்தையும் வழங்குவதில்லை.
வீரன்: நீங்கள் சதுரங்கம் விளையாடுவீர்கள் அல்லவா?
மரண தேவன்: அது உங்களுக்கு எப்படி தெரியும்?
வீரன்: ஓவியங்களில் பார்த்திருக்கிறேன், பாடல்களில் கேட்டிருக்கிறேன்.
மரண தேவன்: ஆமாம், நான் உண்மையில் ஒரு நல்ல சதுரங்க வீரர்தான்.
வீரன்: இருந்தாலும், நீங்கள் என்னைவிட சிறந்தவராக இருக்க முடியாது.
மரண தேவன்: என்னுடன் ஏன் சதுரங்கம் விளையாட விரும்புகிறீர்கள்?
வீரன்: அதற்கு எனக்குக் காரணங்கள் உள்ளன.
மரண தேவன்: அது உங்கள் விருப்பம்.
வீரன்: நிபந்தனை என்னவென்றால், நான் உங்களை எதிர்த்து எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கிறேனோ, அவ்வளவு காலம் நான் வாழலாம். நான் வெற்றி பெற்றால், நீங்கள் என்னை விடுவித்துவிடுவீர்கள். ஒப்புக்கொள்கிறீர்களா?
மரண தேவன்: மிகவும் பொருத்தமானது.
+ + + +
நான் சந்திக்கும் எல்லா உலக சினிமா ரசிகர்களையும் 1957ஆம் ஆண்டு இங்மார் பெர்க்மென் இயக்கத்தில் வெளிவந்த தீ செவன்த் சீல் படத்தை பார்க்குமாறு சொல்லி கொண்டே இருப்பேன்.
மரண தேவன் அல்லது கால தேவனுக்கும் ஒரு போர் வீரனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் இந்த படத்தினுடைய களம். களத்தில் கறுப்பு மரண காலத்தில் நடந்தவை எல்லாம் பேச பட்டு இருக்கும்.
அதென்ன கறுப்பு மரணம் ?
14ஆம் நூற்றாண்டில் தொற்று நோய் மக்களிடத்தில் வேகமாய் பரவ ஆரம்பித்தது.
இந்த பரவலுக்கு காரணமாய் அமைந்தது கடல்வழி வணிகத்தில் ஈடுபட்ட மாலுமிகளால் ஐரோப்பாவில் தொற்று நோய் பரவல ஆரம்பித்தது.
அந்த காலத்தில் எதனை செய்தும் தொற்று நோய்களை கட்டு படுத்த முடியவில்லை. அந்த காலத்தில் தான் ஐரோப்பாவில் காலங்காலமாய் வழிபட்டு வந்த மதங்களை அடக்கி அழித்து கிறித்துவம் வேகமாய் பரவ ஆரம்பித்தது.
இந்த தொற்று நோய்களில் இருந்து காப்பாற்ற முடியாத ஆன்மீக தூதுவர்கள் மக்களிடையே தேவலாயங்களின் மதிப்பு குறைவதை கண்டு இப்படியாக போனால் ஒன்று செய்ய முடியாதென்பதை உணர்ந்து மக்களை திசை திருப்பி மரியாதையை மீட்க பழி போடுதல் அரசியலை கையிலெடுத்தார்கள்.
இதெல்லாம் சாத்தானின் வேலை.
சாத்தானின் வேலை என்று சொன்னால் மட்டும் போன மரியாதை மீண்டும் வந்துவிடாது என உணர்ந்து அதற்கொரு வடிவம் கொடுத்தார்கள்.
அந்த வடிவத்தின் உருவமாக பழியானவர்கள் கிறித்துவ மதத்தை ஏற்று கொள்ளாத பழங்குடி மதவாதிகள், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள், ஒதுங்கி வைக்கப்பட்டவர்கள் என்று பட்டியல் நீளம்.
இந்த பட்டியலில் முக்கியமாக வந்தவர்கள் நாட்டு மருத்துவ வயதான பெண்கள், பழங்குடியின பெண்கள்.
ஏன் இவர்கள் ?
அந்த காலத்திலும் இந்த காலத்தை போல சில கிறித்துவ ஆன்மீக தூதுவர்கள் தீவிர பக்தி வழிபாடு தான் நோய்களில் இருந்து மனிதனை காப்பாற்றும் என பரவி கொண்டு இருந்தார்கள்.
அதெல்லாம் தேவையில்லை மருத்துவ சிகிச்சை போதும் என்பதை செய்து காட்டி கொண்டு இருந்தார்களிந்த நாட்டு மருத்துவச்சிகள்.
பழங்குடி மதங்களெல்லாம் ஆண் பெண் உடல் சேர்க்கையை பாவமாக பார்க்காமல் அதனை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பார்த்தார்கள் அல்லது அதனை கடவுளை அல்லது கடவுள் நிலையை அடைகிற வழியாக அதனை பார்த்தார்கள்.
மேல் சொன்ன இரண்டும் அப்போதைய தேவலாய மத பிரச்சாரத்திற்கு எதிராக இருந்ததினால் அவர்களை எல்லோரும் குற்றவாளிகளாக அடையாள படுத்தி பொது இடங்களில் கட்டி போட்டு நெருப்பில் எரித்து கொன்றார்கள்.
நவீன மருத்துவ முறையை 19ஆம் நூற்றாண்டில் தான் தேவலாயம் ஏற்று கொண்டது. சோகமென்னவென்றால் நவீன மருத்துவத்தை மக்களிடம் நற்பெயர் எடுத்து நம்பிக்கையை பெற்று கடைசியாக அவர்களின் மதத்தை மாற்ற பயன் படுத்தி கொண்டார்கள்.
14ஆம் நூற்றாண்டில் எல்லாம் ஒருவர் கடவுளை ஏற்று கொள்ளாவிட்டால் அவர் கடவுளுக்கு எதிரான சாத்தானின் ஆளாக கருத்த படுவார்.
குறிப்பு - ஜோன் ஆஃப் ஆர்க் எரித்து கொல்ல பட்டதை பற்றி எல்லோரும் கேள்வி பட்டு இருப்பீர்கள்.
என்ன தான் அவர் மத நம்பிக்கையாளராக இருந்தாலும் அப்பொழுது நிலவிய மத கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் எரித்து கொலை செய்யப்பட்டார்.
இதனை சூனியகாரி வேட்டை (Witch Hunt) என்று சொல்வார்கள்.
மேல் சொன்னவை படத்தில் ஒரு காட்சியாக வந்து போகும்.
வாழ்க்கை, நம்பிக்கை, மரணம் என்று இந்த பட காட்சிகள் ஒரு உளவியல் விசாரணை செய்யும் விதமாக அமைந்திருக்கும்.
கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.
- - -
THE SEVENTH ZEAL (1957)
No comments:
Post a Comment