கலவை
கால களத்தின் எண்ணங்கள்
தொடர்புடன் .... தொடர்பு இல்லாமலும்
(கலவை பற்றி ஏதோ என்னால் முடிந்த வரை ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்)
===================================================================
கிறிஸ்துவம் கென்யா, ஆப்ரிக்கா போன்ற கறுப்பு தோல் கொண்ட மனிதர்கள் இருக்கும் நாடுகளில் பரப்புவதற்கு இயேசு ஒரு கறுப்பர் என்று அந்த காலத்தில் சித்தரிக்க பட்டார்.
===================================================================
The Raven என்ற படம் தான் உலகத்தில் உள்ள அணைத்து மாயஜால படங்களுக்கும் முன்னோடி மாதிரி.
==================================================================
Tata McGraw-Hill "CEO 80/20" என்ற பெயரில் பல்வேறு வியாபார பெரும் தலைகள் பற்றியும் அவர்களின் case study போன்றவற்றை வெளிட்டு வருகிறது. எல்லோருக்கும் பயன் தருப்பவை.
=================================================================
எனக்கு நன்றாக எழுதும் திறமை இருக்கு என்று பாராட்டிய அந்த பிரபல வலைப்பூ பதிவாளர் வாழ்க ....... நல்ல இருக்கனும் அவங்க.
(இன்னுமா என்னை இந்த உலகம் நம்புது)
=================================================================
நான் நேற்று காலையில் அழித்த பதிவுகளின் எண்ணிக்கை 160
=================================================================
முதன் முதலில் நானும் பிரபுவும் ஒரு கம்பெனியில் சில காலம் trainee இருந்தோம். இப்பொழுது அந்த கம்பெனி திவால் ஆகிவிட்டது என்று கேள்விபட்டேன். அதற்கும் எங்களுக்கும் எதாவது சமந்தம் இருக்குமோ ????
================================================================
உண்மையில் குழந்தை இயேசு என்று வணங்க படுவது இயேசு இல்லை என்றும் அது இயேசுவின் குழந்தை தான் என்றும் கூறபடுகிறது.
================================================================
உலக அளவில் பலரை கவர்ந்த Arthur Conan Doyle யின் Sherlock Holmes கதையை மாற்றம் செய்து படமாக்கப்பட்டு இந்த வருட கடைசியில் வெளி வருகிறது. இதில் என்ன விசேஷம் என்றால் Sherlock Holmes க்கு சண்டை போட வரும் என்பது போல் வருகிறதாம். இதற்க்கு அந்த நாவலின் ரசிகர்கள் இடைய பெரும் எதிர்ப்பு. ஏற்கனவே செய்தது போல் இந்த கிளாச்சிக் நாவலையும் கெடுத்து விடுவார்களோ என்ற பயம் தான்.
==================================================================
உலகில் பிரபலமான் விலாசம் எது வென்றால் அது " 221b Baker Street London NW1 6XE England" தான். Sherlock Holmes அங்கு தான் வசிப்பதாய் நாவலில் வருகிறது.
=================================================================
-
5 comments:
//தொடர்புடன் .... தொடர்பு இல்லாமலும்//
நீ ஆயிட்டய்யா,
ஆயிட்ட
பின்நவீனத்துவவாதி ஆயிட்ட!
//கிறிஸ்துவம் கென்யா, ஆப்ரிக்கா போன்ற கறுப்பு தோல் கொண்ட மனிதர்கள் இருக்கும் நாடுகளில் பரப்புவதற்கு இயேசு ஒரு கறுப்பர் என்று அந்த காலத்தில் சித்தரிக்க பட்டார்.//
அப்ப மட்டுமல்ல, இப்பவும் அப்படித்தான்!
//எனக்கு நன்றாக எழுதும் திறமை இருக்கு என்று பாராட்டிய அந்த பிரபல வலைப்பூ பதிவாளர் வாழ்க//
அவருக்கு நன்றாக படிக்கும் திறமை இருக்குன்னு இப்போ தெரிஞ்சி போச்சு!
//நான் நேற்று காலையில் அழித்த பதிவுகளின் எண்ணிக்கை 160//
பதிவுகளை அழிக்க முடியும், அதை படிச்சு செத்தவங்களை உயிர்பிக்க முடியுமா?
//உண்மையில் குழந்தை இயேசு என்று வணங்க படுவது இயேசு இல்லை என்றும் அது இயேசுவின் குழந்தை தான் என்றும் கூறபடுகிறது./
இப்படியெல்லாம் உளரப்பிடாது!
குழந்தை ஏசு கையில் இருப்பதால் தான் அவுங்கம்மாவுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக தனியா சர்ச்சுகள், உதாரணம் வேளாங்கன்னி.
ஒருவேளை அது இயேசுவின் குழந்தையாக இருந்தால் அவர்களின் வாரிசு எல்லாம் கடவுளா?
டாவின்ஸி கோடு படம் பார்த்து கெட்டு போயிட்டிங்கன்னு நினைக்கிறேன்!
Post a Comment