Pages

Friday, August 6, 2010

இதொரு சுய டவுசர் கிழிப்பு


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அப்படியே கொஞ்சம் பிளாக்கின் இடது பக்கம் கொஞ்சம் பாருங்க ....தெரியுதா ??? அதுதான் என்னோட பதிவுலக பெயரு. google reader ல படிப்பவர்களுக்காக வேண்டுமானால் சொல்கிறேன் ... "இலக்கிய சுறா" டம்பி மேவீ (வேற யாரு நமக்கெல்லாம் பட்டம் தர போறாங்க ; அதனால நமக்கு நாமே திட்டத்தின் படி ...... ஹி ஹி ஹி )

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அது என்னோட உண்மையான பெயரில்லைங்க. குறிப்பா எந்த காரணமும் இல்ல இந்த பெயரை வைக்க. தம்பியை தான் கொஞ்சம் பட்டி பார்த்து டம்பின்னு வைச்சுகிட்டேன். மேவின்ன பரவியன்னு ஒரு அர்த்தம் இருக்குங்க ; ஆனா சத்யமா நான் அதை நினைச்சு வைச்சுக்கல. வேறொரு காரணமிருக்கு.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

நான் அதை ஒன்னும் சிறப்பா கருதல.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் முதல ஒரு முயற்சியும் செய்யல. என்னோட நண்பர் ஒருத்தர் தான் தமிழிஷ்ல என்னுடைய பதிவுகளை சேர்த்து கொண்டிருந்தார். பிறகு ஹேமா, கார்த்திகை பாண்டியன் இரண்டு பெரும் ரொம்ப INSIST பண்ணியதால் தமிழ்மணத்துல சேர்ந்தேன். பிறகு தமிழிஷ்யில் நானே சேர்க்க ஆரம்பித்தேன் ...பிறகு தமிழிஷ் பட்டி பெற்ற பிறகு பெருசா ஏதும் முயற்சிக்கவில்லை. அப்பப்ப டிவிட்டர்ல பகிர்ந்துப்பேன். சாட் ல சில நண்பர்களுக்கு லிங்க் தந்து படிக்க சொல்வேன்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னோட சொந்த வாழ்க்கை ரொம்ப அழுகாச்சியா இருக்கும். அதனால் அப்படி எல்லாம் அவசரப்பட்டு பகிர்ந்துக்க மாட்டேன். அது எல்லாம் சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிற மாதிரி தான்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

தெரியலைங்க. எதுக்கு எழுதுறேன்ன்னு தெரியல. தேடல் இல்லாத வாழ்க்கை ல சுகம் இருக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட தேடலில் பதிவு எழுதுவதும் ஓன்று. பொழுது போக்க என்பதையும் தாண்டி நான் நிறைய விஷயங்களை கற்று கொண்டு இருக்கிறேன். சம்பாத்தியம்ன்னு பார்த்தால் நட்புக்கள் தான். காசை விட நான் மனுஷங்களை மிகவும் மதிப்பவன்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு : வலைபதிவுகளில் நான் எழுதுவதற்காக உருவாக்கினேன். அது இரண்டும் தமிழ் பதிவுகளே. முதலில் ஆங்கிலத்தில் DAILY LIFE ங்கிற பெயரில் எழுத ஆரம்பித்தேன், பிறகு அதை தினசரி வாழ்க்கைன்னு மாத்திட்டேன். போன வருஷ கடைசில மேவியின் பகிர்வுகள் ன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சேன். அதுல எனக்கு பகிர்ந்துக்க வேண்டும்ன்னு நான் ஆசை படுற விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சத்யமா கோவம் எல்லாம் வராதுங்க. அதே போல் எப்பொழுதும் நான் யார் மேலையும் பொறமை பட்டதில்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அப்படி யாரும் பாராட்டினதில்லைங்க. என்னோட முதல் பதிவுக்கு (இங்கிலீஷ்) என் அண்ணன் போட்ட பின்னூட்டத்தை வேண்டுமானால் நான் பெற்ற பாராட்டாய் சொல்லலாம். இன்னும் அந்த வரிகள் ஞாபகமிருக்கு ....."wonderfull daa ..keep going ". பிறகு என்னோட பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களையே எனக்கு கிடைத்த பாராட்டுக்களாக கருத்துகிறேன்.

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

என்னை பற்றி சொல்வதற்கு பெருசா ஒன்றுமில்லைங்க. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டு ரசிப்பவன். நிறைய படிக்கணும், நிறைய கற்று கொள்ள வேண்டும்ன்னு ஆசை இருக்கு.
= = = = =
இந்த தொடர் பதிவுக்கு என்னை கூப்பிட்ட ஹேமாவுக்கு நன்றியோ நன்றிங்க. இந்த பதிவுக்கு யாரை கூபிடுவதுன்னு தெரியல. தமிழ்மணத்தையும் தமிழிஷ்யையும் திறந்து பார்த்து ரொம்ப நாளாச்சு. அப்படி யாராச்சு இந்த தொடர்-பதிவை எழுதணும்ன்னு ஆசைபட்டீங்கன்ன ....எழுதுங்க. அப்படி எழுதிருந்த பின்னூட்டத்துல சொல்லுங்க. நான் அங்க வந்து கும்மி அடிக்கிறேன். என்ன ஓகேவா ......

7 comments:

ஹேமா said...

ஐயோ....என்னைப் படுத்தினதைப் பாத்தா...மேவீ என்னமோ நிறைய எழுதப்போறார் என்று நினைச்சேன்.
என்ன மேவீ...சப்ன்னு இருக்கு.ஒரு காரசாரமே இல்லையே !
திருத்தி எழுதுங்க !

நட்புடன் ஜமால் said...

என்னோட சொந்த வாழ்க்கை ரொம்ப அழுகாச்சியா இருக்கும்]]


சிரிப்பாச்சியாக இருக்கும் யார்ன்னா ஒருத்தரை எனக்கு காட்டுங்களேன்

ஜில்தண்ணி said...

டவுசர செமையா கிழிச்சாச்சு

நானும் சட்டைய கிழிக்கலாமுன்னு இருக்கேன் :)

வால்பையன் said...

ரைட்டு!

மேவி... said...

@ ஹேமா : இல்லைங்க ...நக்கலா தான் எழுதலாம்ன்னு நினைச்சேன் ..பிறகு வேண்டாம்ன்னு விட்டுட்டேன். உப்பு புளி வைச்சு படிச்சு பாருங்க ... அதற்குள்ள அடுத்த பதிவு போட்டாச்சு.

@ ஜமால் : ஆமால ....எல்லோரும் அவங்க எடுத்திருக்க வகைல தானிருக்கு

@ ஜில்தண்ணி - யோகேஷ் - இதற்க்குமேல கிழக்க முடியாதுன்னு ஒரு நிலைமை வந்ததால் தான் கம்மிய கிளிசிருக்கேன்

@ வழிப்போக்கன் : நன்றி பாஸ்

@ வால்பையன் : ரை ரை.....

Saran said...

http://onlyjalli.blogspot.com/2010/08/blog-post_17.html

கும்மி அடிக்க ரெடியா ஒரு கூட்டத்தையும் கூட்டிகிட்டு வாங்க....

VISA said...

ரைட்டு!

ரைட்டு!

Related Posts with Thumbnails