Pages

Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Saturday, April 22, 2023

கொற்கை : மதுரை : சமணர் கழுவேற்றம் : பாண்டிய நாடு - அத்தியாயம் 4


"மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு...." என்கிற இப்பாடலை சிவ வழிபாட்டு முறையை கொண்ட குடும்பத்தில் பிறந்த எல்லோரும் கேட்டு இருப்பார்கள். சிறுவயதில் என் அப்பா எனக்கு திருநீறு அணியும் பொழுது பாடுவார். (ஆம் அதனை திருநீறு அணிதல் என்று தான் கூற வேண்டும்)

நெற்றி முழுவதும் திருநீறு அணிவதை உத்தூளனம் என்று சொல்ல படுகிறது. இந்த உத்தூளனம் முறை இந்தியாவின் மற்ற இடங்களை காட்டிலும் தமிழ் நாட்டில் பரவலாக பின்பற்ற படுகிறது. இதற்கும் பழங்கால வணிகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இதற்கு நாம் 10ஆம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஷாம்பெயின் சந்தையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அதனை படிக்கும் முன் பிரான்ஸ்  நாடு ஒரு காலத்தில் ரோம் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்ததை ஞாபக படுத்திகொள்ள வேண்டும். 

(சரி அதென்ன ஷாம்பெயின் சந்தை.... பின்னர் பார்க்கலாம்)

12ஆம் நூற்றாண்டு மற்றும் 13ஆம் நூற்றாண்டின் கால குறிப்பின் படி இச்சந்தையில் அதிகம் விற்ற பொருட்களில் ஒன்றாக இருந்தவை ஜவுளி, மசாலா மற்றும் தோல் பொருட்கள். இவற்றில் தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்து அதிகம் ஏற்றுமதியானவை எதுவென்று பார்த்தால் அவை ஜவுளி, மசாலா, கரும்பு சக்கரை மற்றும் உப்பு.

தென்னிந்தியாவின் முக்கிய துறைமுகமாக இருந்தது கொற்கை துறைமுகம் தான். இந்த கொற்கை துறைமுகம் பாண்டிய ராஜ்ஜியத்தின் தலைமை நகரமாக இருந்தது. இங்கு தான் பாண்டிய நாடு முடி இளவரசன் தங்கி வணிக தொடர்புகளை கவனித்து கொள்ளவார். வேறு யாரையும் நம்பி அப்பொறுப்பை பாண்டி நாட்டு ராஜ்ஜியம் வழங்கியது இல்லை. 

பழங்கால ரோமானிய கடல் வணிக வரைபடத்தில் கொற்கை துறைமுகமும் பாண்டிய நாட்டு பெயர்கள் தான் முக்கியமாக அடையாளம் காட்ட படுகிறது. சேர நாட்டு பெயர் அடைப்புக்குறிக்குள் தான் இருக்கிறது. 

பாண்டி நாட்டிற்கு அதிக வணிகத்தையும் அதன் மூலம் வரி பணத்தையும் தந்து கொண்டு இருந்தது.

(பார்க்க படம் இணைத்திருக்கிறேன்)

இப்பொழுது 7ஆம் நூற்றாண்டுக்கு செல்வோம்.

பாண்டியர்களளவிற்கு சோழர்கள் பெரிய ராஜ்ஜியகாரர்களாக இல்லை. பாண்டிய நாட்டை சைவத்தில் இருந்து சமணத்திற்கு மாறிய கூன் பாண்டியன் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.  

அப்பொழுது நம் தொடரில் வர போகிறவர்கள் வேறு யார் சமணத்தை பின்பற்றியவர்கள் என பார்த்தால் ஹொய்சள ஆட்சியாளர்கள் தான். 

சமணத்தை ஆதரித்து கொண்டு இருந்த கூன் பாண்டியன் ராஜ்ஜியத்தின் கீழ் தான் உலக கடல் வணிகத்தின் மையமான கொற்கை துறைமுகம் இருந்தது. 

இவ்வேளையில் தான் சோழ நாட்டில் பிறந்த  திருஞானசம்பந்தர் தீராநோய் உடன் போராடி கொண்டு இருந்த கூன் பாண்டியனை சந்திக்கிறார். சமண சமயத்தவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அரசனது நோயை சம்பந்தர் குணமாக்கிவிட்டால் சமணர்கள் அவர்களது உயிரை மாய்த்துகொள்ள வேண்டும் என முடிவாகிறது. 

அதன்படி சைவ அமைப்பின் மருத்துவமுறையில் உடல்நிலையில் முன்னேற்றமடைகிறது.  அப்பொழுது ஒவ்வொரு முறையும் சமபந்தர் சிறப்பு சிவ பூஜை செய்கிறார்கள்.

கூன் பாண்டியனது உடல்நிலை முற்றிலும் குணமாகிவிட்ட பின் திருநீற்று பதிகம் பாடி பூஜையில் வைக்கபட்ட திருநீற்றை கின் பாண்டியனது உடல் முழுக்க அணிவிக்கிறார்.(இது மட்டுமே குறிப்பில் கிடைக்கிறது. பூஜை, சைவ மருத்துவம் எல்லாம் செவிவழி செய்தி)

இடையில் சமணர்கள் திருஞானசம்பந்தர் சோழ நாட்டு உளவாளி, அவரை நம்ப வேண்டுமென சொல்கிறார்கள். 

சமணர் கழுவேற்றம். ஒரு சமணரும் மிச்சமில்லாமல் எல்லோரும் கழுவேற்ற பட்டனர்.

9ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்து பாண்டியர்கள் வெளியேற்ற பட்டனர்.

10ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்தை பின்பற்றிய சோழர்கள் தஞ்சாவூரை தலைமையிலான ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். ஆதி சோழர்களது தலைநகரம் திருச்சிராப்பள்ளி தான். ஆனால் அதனை தவிர்த்து தஞ்சாவூரில் தலைமை இடத்தை ஏன் சோழர்கள் அமைக்க வேண்டும்.

திருச்சிராப்பள்ளி சமண பள்ளிகளுக்கு அக்காலத்தில் புகழ்பெற்றது.

21ஆம் நுற்றாண்டிற்கு வருவோம். 

பிரதான் மந்திரி காத்திஷக்தி மாஸ்டர் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மப்பேடில்  தளவாடங்கள் பூங்கா  ஒன்றை ரிலையன்ஸ்   நிறுவனம் தொடங்க போகிறதாம். இதன் மூலம் வான்வழி, தரை வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள போகிறதாம். புதிதாக அமைக்கபட போகும் பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த பூங்கா. 

இந்த இடத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலில் தான் அந்த புகழ்பெற்ற வைணவ விவாதம் நடந்ததாக கூறபடுகிறது. 

8ஆம் நுற்றாண்டில் இன்றைய ஆந்திர பிரதேசத்தில் நடத்த ஒரு வணிக செயல்பாடு  முக்கியமான இந்துமத கோவில் உருவாக காரணமாக இருக்குமோ.

அதென்ன செயல்பாடு , அதென்ன கோவில் ?

தொடரும்...

#indianbusinessseries
#cholargal 
#RelianceIndustries 
#hinduism 
#Seasilkroute
#rajarajacholan 
#PonniyinSelvan2 
#PS2
#KORKAI
#Pandiyan

Sunday, October 27, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -3

வணக்கம் நட்புகளே...

சிலர் பங்கு சந்தை முதலீடு என்றாலே பேயை கண்டது போல் அலருவார்கள். புரியாமல் முதலீடு செய்தோ... அல்லது முதலீட்டு முகவர்களால் காப்பீடு திட்டங்கள் மூலம் ஏமாற்ற பட்டவர்களாய் இருப்பார்கள். இப்படி ஏமாற்ற பட்டதினாலே பங்கு சந்தையை குறை கூறி கொண்டிருப்பார்கள்.

நான் கவனித்த வரையில் பங்கு சந்தை அப்படி ஒன்றும் மோசமானது இல்லை.  ஏமாற்ற பட்டவார்கள் குறை கூற வேண்டுமானல், அவர்கள் குறை கூற வேண்டியது அந்த சமந்த சம்மந்தபட்ட முதலீடு முகவர்களை தான். நான் இந்த பதிவிற்காக குறிப்புகளை தேடி கொண்டிருக்கும் பொழுது, தங்க முதலீட்டுகள் மற்றும் தங்க முதலீடு இணைய வர்த்தக (commodity trading & MCX market trading) பயிற்ச்சி வகுப்பில் எனக்கு தரபட்ட குறிப்பில் இந்திய பங்கு சந்தை 1979 வாக்கில் 100 புள்ளிகள் இருந்துள்ளது....  இப்பொழுது இந்த வெள்ளிகிழமை பங்கு சந்தை 20,725.43 புள்ளிகளில் முடிந்துள்ளது.

இப்பொழுது இதை வைத்து கணக்கு போட்டு பாருங்கள்.... 1979ல் ஒருவன் அதிகமில்லாமல் குறைவான பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து வைத்து இருந்தால்... அவனுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று. ஆனால் இன்றோ சில நூறு புள்ளிகள் குறைந்ததிற்காக பலர் சலித்து கொள்கிறார்கள்.

இந்த மாதிரி நீண்ட காலத்தில் பங்கு சந்தையில் வளமையான லாபத்தை தருவது ஒன்று தான் பரஸ்பர நிதி திட்டங்கள்.

ஆனால் என்ன ஒரு குறை என்றால் எவ்வளவு லாபம் என்பது நிச்சயம் இல்லை பங்கு சந்தையில்.

அப்படி குறைகளை தவிர்க்க விரும்புவோர்கள், போன பதிவில் சொன்ன கலவையான பரஸ்பர நிதி திட்டங்களுக்கு போவார்கள்.

இந்த கலவை பரஸ்பர நிதி திட்டங்களில் ஏன் கடன் பத்திர முதலீடும் பங்கு சந்தை முதலீடும் கலந்து இருக்கிறது என்றால்.... லாபத்தை அதிக படுத்த தான்.

உதாரணதிற்கு .....

முழுமையான கடன் பத்திர முதலீடுகளில் முதலீட்டாளர்களுக்கு 8.5 % சதவிகிததில் லாபம் கிடைக்கிறது என்றால் .... கலவை முதலீட்டு முறையில் பங்கு சந்தை முதலீட்டின் மூலம் இந்த 8.5 % சதவிகிதம் என்பது 11.25 % சதவிகிதமாக உயரும்.

இது போன்ற கலவை பரஸ்பர நிதி திட்ட கட்டமைப்பு எப்படி இருக்குமென்றால்...

50 % கடன் பத்திர முதலீடு: 50 % பங்கு சந்தை முதலீடு,
60 % கடன் பத்திர முதலீடு: 40 % பங்கு சந்தை முதலீடு,
65 % கடன் பத்திர முதலீடு: 35 % பங்கு சந்தை முதலீடு,
80 % கடன் பத்திர முதலீடு: 20 % பங்கு சந்தை முதலீடு,

மேல் சொல்லபட்டவை எல்லாம் சந்தையில் விற்பனை ஆகி கொண்டிருக்கும் சில பரஸ்பர நிதி திட்டங்களின் கட்டமைப்புகள் தான். இவை எல்லாம் திட்டத்துக்கு திட்டம் மாறுபடும்.

பங்கு சந்தை என்றாலே நீண்ட காலத்தில் லாபம் என்றாகிவிட்ட பிறகு குறுகிய காலத்தில் லாபம் நோக்கம் கொண்டவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்.

அது என்ன லாப நோக்கம் ???

ஒரு ஐந்து வருடங்கள் கழித்து சந்திக்க போகிற ஒரு செலவுக்கு இப்பொழுதே சேமித்து வைப்பதை தான் லாப நோக்க் முதலீட்டு என்று அழைக்க படும். இதற்கு சேமிப்பு நோக்கம் என்று தான் பெயர் வைத்து இருக்க வேண்டும்....  ஆனால் நாளைய விலை ஏற்றத்தை பற்றி இன்றே கணிக்க முடியாததால் ... லாப நோக்கம் தேவை படுகிறது.

சந்திக்க போகிற செலவுக்கு கடன் வாங்கி கொண்டால் ஆச்சு என்று நினைக்க கூடியவர்கள் நினைக்கிறவர்கள் நிறைய பேர் உண்டு.... அப்படி செய்தால் கடனுக்கு வட்டி கட்டி சுமை தான் அதிகமாகும்.

இன்றைய காலகட்டத்தில் யாரும் சேமித்து வைத்து பொருள் வாங்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஒரு டிவி வாங்க வேண்டுமானலும் கூட கடன் தான் வாங்குகிறார்கள். புஜ்ஜிய சதவிகித கடன் வட்டி முறை என்று பல கடைகள் கூவி கூவி விற்றாலும், அதில் செயல் பாடு கட்டணங்கள், வரிகள் என்று மறைக்க பட்ட பல விலைகள் அடங்கி இருக்கும்.

ஒருவர் சேமித்து வைத்து ஒரு பொருளை வாங்கினால், அவருக்கு ரூ.1000 லாபம் கிடைக்கிறது என்றால்..... கடன் வாங்கினால் அவருக்கு ரூ.6500 வரைக்கும் நஷ்டம் ஏற்படும்.

ஆனால் சந்தை மயமாக்க பட்ட இந்திய விற்பனை உலகில், சேமிப்பை பற்றி மக்களை யோசிக்க விடாமல் பொருட்களின் மீதான மக்களின் தேவையை / ஆசையை குறைந்து போக விடாமல் ... நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் தேவையை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. அப்படிபட்ட தேவை ஏற்கனவே இருந்தால், அத்தேவையை இன்னும் பலபடுத்த விளம்பரங்கள் செய்ய படுகின்றன.

ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.....

முதலீடு, கடன் ..... இவை இரண்டுமே உங்களுக்கு சுமையாக இருக்க கூடாது. அப்படி சுமையாக இருந்தால், அது உங்களது இயக்க சக்தியை பாதிக்கும். கடன் எடுப்பதாய் இருந்தால், அதனுடைய கடைசி தவணை வரைக்கும் எப்படி கட்ட வேண்டும் என்று திட்டமிட்டுவிட்டு கடன் வாங்குங்கள்.

பிறவு முக்கியமாக, முதலீடு திட்ட தன்மை அறிந்து முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு இந்தியாவில். முதலீட்டு தன்மையும் உங்களது லாப நோக்கமும் ஒரே கோட்டில் வரும் பொழுது தான் முதலீடு செய்யுங்கள்.


தொடரும் 

Wednesday, October 16, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -2

வணக்கம் நட்புகளே.

போன பகுதியை தொடர்ந்து இந்த பகுதியை எழுத முடியாமல் போனதற்கு அதிகமான வேலை பழுவும், கணினியில் எற்பட்ட தொழில் நுட்ப பிணக்கும் தான் முக்கிய காரணம். யாராவது எதிர் பார்த்து ஏமாற்றம் அடைந்து இருந்தால்....  மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

தொடருக்குள் போவோம்.


இன்றைய தேதியில் மியூச்சுவல் ஃப்ண்ட்ஸின் முதலீட்டு நிபுணர்களுக்கு இந்திய பங்கு சந்தையில் நம்பிக்கை போய் விட்டது போல் தெரிகிறது. வாடிக்கையாளருக்கு லாபம் ஈட்டி தர வேண்டும் என்ற நெருக்கடி நிலையிலுள்ளார்கள். இதனால் தாங்கள் நிர்வாகித்து வந்த முதலீட்டு அட்டவணையில்  வெளி நாட்டு பங்குகள் மீது கவனம் செலுத்த முடிவு எடுத்து உள்ளார்கள்.

இதனால் இது வரைக்கும் இந்திய சந்தையில் கட்டமைத்து கொண்டு இருந்த தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிதிகள் கொஞ்சம் குறைந்து போகும். ஆதலால் பங்கு சந்தை பழைய நிலையை போல் நிதி வீரியத்தோடு இயங்குமா என்று தெரியவில்லை. இதன் சாதக பாதகங்களை இனிமேல் வரும் காலங்களில் தான் தெரிய வரும்.

இந்திய பரஸ்பர நிதிகளில் முக்கிய முதலீட்டாளர்கள் என்று பார்த்தால், அது வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் தான். இப்பொழுது இந்தியா இல்லாத மற்ற நாடுகளிலும் இந்த பரஸ்பர நிதிகளின் வீச்சு இருக்கும் பொழுது, அவர்களிதை விரும்புவார்களா என்று தெரியவில்லை.
அதற்கென்று இந்த மாதிரியான திட்டங்கள் தான் சந்தையில் நிழவுகிறது என்று இல்லை. பங்கு சந்தை சாராத அரசு கடன் பத்திரங்கள் மீது முதலீட்டு செய்யும் திட்டங்களும் இருக்கிறது.

ஆனால் பங்கு சந்தை திட்ட முதலீட்டு அளிக்கும் கவர்ச்சிகாரமான லாபத்தை போல் இதில் கிடைக்காது என்றாலும், உறுதியான குறைந்த பட்ச லாபம் இதில் கிடைக்கும். 

முதலீடு என்று வரும் பொழுது..... அவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. சேமிப்பு.
2. முதலீட்டு.

இந்த இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும்... நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. அது என்ன்வென்றால்....

சேமிப்பு - இந்த முறையில் முதலீட்டு / சேமித்து வைக்கும் பொழுது, நாம் இதில் பெரியதாக லாபம் பார்க்க ஆசை படுவதில்லை. சம்பாரித்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நினைக்கிறோம். இந்த முறையில் அதிகமான நிலையின்மைகளை நாம் அனுமதிப்பதில்லை.

முதலீட்டு - இதில் போட படும் / முதலீடு செய்ய படும் நிதிகள் யாவும் லாபத்தை நோக்கியே  செய்ய படுகிறது. மைய புள்ளி லாபம் மட்டுமே. நமக்கு தகுந்த அளவில் நிலையின்மைகளை ஏற்று கொள்கிறோம்.

பலருக்கு இந்த நிலையின்மைகளென்றால் என்ன என்று புரியாமல் இருக்கும். அவர்களுக்காக சுலபமாக சொல்ல வேண்டும் என்றால்.....

வடிவேலு அவர்களின் நகைச்சுவை காட்சி ஒன்றில் மறைந்த பழம்பெரும் நடிகர் கண்ணையா அவர்கள் சொல்வாரே  " வரும் .... ஆனா வராது..." ; அது தான் நிலையின்மை.

ஏன் இந்த நிலையின்மை என்று கேட்டால் .... அவை பங்கு சந்தையில் முதலீட்டு செய்ய படுவதால் தான்.

மியூச்சுவல் ஃப்ண்ட்ஸில் / பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை சேமித்து வைக்கவும், முதலீடு செய்யவும் திட்டங்கள் கிடைக்கிறது. இவைகள் தனி தனியாகவும், கலந்து கலவையாகவும் கிடைக்கிறது.

இந்த கலவையில் பங்கு சந்தை முதலீடுகள், அரசு கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு விகுதம் திட்டத்துக்கு திட்டம் மாறுப்படும்.



தொடரும்....

Tuesday, September 24, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -1

தொடரை ஆரம்பிக்கும் முன், இந்த தொடரை எழுத உற்சாக படுத்திய தமிழ் இணைய நட்புகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

= = =
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், உங்களுக்கு பிடித்தமான பக்தி குறியீட்டை மனதிற்குள் நினைத்து கொண்டு மேற்கொண்டு படிக்க ஆரம்பிக்கவும். ஒரு வேளை கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லையென்றால் இந்த நான்கு வரிகளை படிக்கவில்லை என்று நினைத்து கொள்ளுங்கள்.

தொடர் உள்ள போறரதுக்கு முன்னாடி ஒரு சின்ன கணக்கை பார்ப்போம். ( "அவ்வ்வ்... அப்ப இன்னும் நம்ம தொடருக்குள்ள போகலையா ??" ன்னு சொல்லுற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது..)

பொதுவா நம்ம ஆளுங்க ஆபீஸுக்கு போன பிறவு ஒரு நாளைக்கு மூன்னு டி கிட்ட குடிப்பாங்க.... காலைல ஒன்னு, சாய்ங்காலம் ஒன்னு...கடைசியா வீட்டுக்கு கிளம்புறப்ப ஒன்னு.

இன்னய தேதில ஒரு டி ரூ.6 க்கு விக்குது.

ஒரு நாளைக்கு மூன்னு டி ங்குற கணக்கு ல, ஒரு நாள் டி செலவு ரூ.18.

ஒரு வாரத்துக்கு ஆகுற செலவு ரூ.108

அப்ப ஒரு வருஷதுக்கு டிக்கு மட்டும் நம்ம ஆளுங்க செலவு ரூ.5616. இதுல பண்டிகை நாள், அரசு விடுமுறைன்னு கணக்கு போட்டு குத்துமதிப்பா ரூ.600 கழிச்ச கூட டி செலவு ரூ.5000 கிட்ட நிக்குது.

இதுல சில ஆளுங்களுக்கு இருக்குற சிகரட், தண்ணி பழக்கத்தை எல்லாம் சேர்த்த இன்னும் அதிகமா இருக்கும் தொகை.

நினைப்பு தெரியாம ஆகுற இந்த செலவு மாதிரியே நமக்கு தெரியாம கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்ந்து வட்டியோட நம்ம கைக்கு கிடைக்குற மாதிரியான முதலீட்டு திட்டம் தான் மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்.

(சரியா சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன்,,,,,)

"ப்ண்டின்னு சொல்லுற .... வட்டி செலவுன்னு சொல்லுற .... நீ என்ன டிவில கோட் சூட் போட்டுகின்னு பேசுறவங்களை விட பெரிய அப்பாடக்கரா ??"

கண்டிப்பா நான் அப்பாடக்கர்  எல்லாம் இல்லைங்க. அவங்க எல்லாம் இந்த துறைல மலை மாதிரி, நான் அவங்களுக்கு கால் தூசு கூட வர மாட்டேன். நான் இந்த தொடர் ல சொல்ல நினைக்கிறது எல்லாம் இந்த திட்டதை பத்தி எனக்கு தெரிஞ்சது புரிஞ்சது பிறவு இது எவ்வளவு அருமையான திட்டம்ன்னு தான்.

இன்னோரு விஷயம்... என்னால் முடிஞ்ச வரைக்கும் ரொம்ப எளிமையா மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ் பத்தி சொல்லணும் தான்.

= = =
மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்  என்றால் என்ன ???

இதை பற்றி சொல்லுவதென்றால் முழு தொடரையும் இந்த ஒரு பகுதியிலேயே சொல்ல வேண்டிய நிலை வந்துவிடுமென்பதால் இப்போதைக்கு பெயர் காரணத்தை சொல்லிவிடுகிறேன். 

இரண்டு பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவரோ ஒன்றிணைந்து இணைந்து கூட்டாக ஒரு குறிபிட்ட இலக்கை அடைவதற்க்காக முதலீட்டு செய்வது. இங்கே இலக்கு என்பது லாபம் என்று எடுத்து கொள்ளலாம். இதைய தான் நம்ம தாத்தா பாட்டி எல்லாம் "ஊரை கூட்டி, தேரை இழுக்குறது"ன்னு சொல்லுவாங்க.

இந்த திட்டதின் முக்கிய செயல்பாடு மக்களிண்டமிருந்து பணம் பெற்று ; அதை வெவ்வேறு இடங்களில் (பங்கு சந்தை, கடன் பத்திரம்) மூலம் முன் தீர்மானிக்க பட்ட இலக்கை அடைவது என்றாலும் ..... பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் இருக்கும் மக்களை இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற செய்வது தான் இத்திட்டத்தின் இன்னொரு அம்சம்.

பெரும் பணகாரனையும், சாதரணனையும் ஒரே குடைக்குள் இந்த திட்டம் கொண்டு வருவதால் இது ஒரு சோஷலிசம் திட்டம் தான். { இத தான் சூப்பர் ஸ்டார் அப்பவே சொன்னாரு ... அஜக்குன்ன அஜக்கு தான், குமுக்குன்ன குமுக்கு தான்.}

உலகமயமாக்கலுக்கு பின் இந்தியாவில் தோன்றிய முதலீட்டு நிறுவனங்கள், சில்லறை முதலீட்டு இலக்கணத்தை லாப நோக்கில் மாற்றி அமைத்தன. அதில் தப்பித்து பிழைத்த ஒரு திட்டம் தான் இந்த மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்.  

இந்த முதலீட்டு இலக்கணம் என்றால் என்ன ???

நல்ல கேள்வி.... இதுக்கான பதிலை நான்காம் பகுதியிலோ ஐந்தாம் பகுதியிலோ சொல்கிறேன். மறக்காம ஞாபக படுத்துங்க.

இந்த மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்  திட்டம் எப்படி இயங்குகிறது ???

அதை சொல்ல எங்கூர் திருச்சில இருந்து வெள்ளச்சாமி, அவரது மனைவி முத்துபேச்சி, முத்துபேச்சியின் தம்பி முருகன் ஆகியோரை அழைக்கிறேன்......


தொடரும்.....

Sunday, August 7, 2011

முக்காத மூன்று முடிச்சுகள் / கடிச்சுகள் - தொடர் பதிவு

தேடல் என்ற மைய புள்ளியில் கேள்விகளுக்கான பதில் நமக்கு கிடைக்கும் பொழுது, அந்த பதில்களெல்லாம் மற்றொரு கேள்விக்கான விதையாக இருக்கும். வாழ்க்கை என்பதொரு கோலம் மாதிரி தான், எப்படி புள்ளிகளுக்கிடைய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாய் போய் ஒரு கோலத்தை உருவாக்குகிறதோ, அந்த மாதிரி நமது வாழ்வின் பல நிலைகளிலும் அந்த கோடுகள் மாதிரி யோசனைகள் இருந்து கொண்டே இருக்கும். அப்படிபட்ட ஒரு நிலையில் நானிருக்கும் பொழுதில் தான் நண்பர் கார்த்திகை பாண்டியன் என்னை இந்த கேள்வி பதில் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார். சரி பதிவின் கேள்விகளுக்கான எனது பதிலில் பயணிப்போம்.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
எனக்கு பெரியதாக விருப்பமென்று எதுவுமில்லை. ஆனாலும் சில விஷயங்கள் எனக்கு பிடித்தவை இருக்கின்றன ; அவை - யோசிப்பது, புதிய மனிதர்களுடன் பழகுதல் பிறகு புத்தகங்களும் சினிமாவும்.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
ஒரு காலத்தில் இந்த பட்டியல் பெரியதாக இருக்கும், மன பக்குவத்தின் காரணமாக பட்டியல் சுருங்கி விட்டது. இப்பொழுது பட்டியலில் பிரதானமாக இருப்பவை இயற்க்கை அழிவு,
மனிதர்களின்
சுயநலம், பிறகு இஷ்டப்பட்டு வாங்கும் புத்தகங்கள் மொக்கையாய் இருப்பது. முக்கியமாக மதிய வேளையில் நான் சாப்பிடும் கோன் ஐஸ் கிரீம் உருகுவது... நான் விரும்பவே விரும்பாதொன்று.

3)
பயப்படும் மூன்று விஷயங்கள்
?
ஒரு வயது வரைக்கும் பயங்களோடு வளர்ந்ததினால், எதற்கு அதிகம் பயபடுவேனேன்று தெரியாது.

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
மரணம், மிருகங்களின் உலகம், படிக்காத புத்தகங்களில் இருப்பவை.

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
அண்ணன் மகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படம், மொபைல் போன், SOURCE CODE மற்றும் BLACK SWAN பட டிவிடிகள்.

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லதுமனிதர்கள்?
சிரிப்பை மறந்து பல வருடங்களாகிவிட்டது. அதனால் சிரிக்க சந்தர்ப்பம் எப்பொழுது தேடிக்கொண்டே இருப்பேன். அப்படி கிடைத்தால் சிரித்துவிடுவேன். தனிமையில் இருக்கும் பொழுது சில கல்லூரி நினைவுகளால் புன்னகை பூப்பேன்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்றுகாரியங்கள்?
பாலியல் தொழிலாளிகளை பற்றி ஒரு கட்டுரை படித்து கொண்டிருக்கிறேன், உலக சந்தை பற்றி கவலை படுகிறவர்களின் கவலைகளை படித்துகொண்டிருக்கிறேன், ஜன்னல் வழியாக வரும் மாலை நேர குளிர் காற்றை அனுபவித்து கொண்டிருக்கிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்றுகாரியங்கள்?
பொருளாதார அடிமையாகி விட்டபின், நாடு போற்றும் ஒரு தலைமை பொருளாதார அடிமையாக வேண்டும் என்று ஆசை படுகிறேன், நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும், பள்ளிக்கு போக முடியாத சிறுவர்களுக்கு பாடம் சொல்லி தர வேண்டும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?
இதற்க்கான பதில்களும், எனது தேடலில் உண்டு.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
கேட்க கூடாது என்று இருப்பதை எல்லாம் கேட்டாகிவிட்டது. இனியும் என்ன இருக்கு ?? முக்கியமாக என் பிரியத்துக்குரியவர்கள் சோகமாய் இருப்பதாக கேட்க விரும்பவில்லை.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
உலகில் உள்ள பேச்சு மொழிகள் அனைத்தையும், ஓவியம், பிறகு எனக்கு தெரியாது என்று நினைக்கும் அனைத்தையும்.

12) பிடிச்ச மூன்று உணவு வகை?
ரவா தோசை, இட்லி, நூட்லஸ்

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அப்படி எல்லாம் ஒன்றும் செய்ய மாட்டேன். எனக்கிருக்கும் ஞாபக மறதியால்.....எல்லா பாடல்களின் முதல் வரியை தவிர வேறெதுவும் ஞாபமிருக்காது.

14) பிடித்த மூன்று படங்கள்?
நிறைய இருக்கிறது, எதை சொல்லுவதென்று தெரியவில்லை . அதனால்: நான் அடிக்கடி விரும்பி பார்ப்பது :- சிம்லா ஸ்பெஷல், தில்லுமுல்லு, பாஷா, அண்ணாமலை

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியானமூன்றுவிஷயம்?
உயிர், தோழர்கள்/தோழிகள், புத்தகங்கள் ..... முக்கியமாகஎன்னுடைய நக்கல் நையாண்டி தனம்

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
யாரை அழைப்பதென்று தெரியவில்லை ...ம்ம்ம்

இறந்தகால இலக்கியவாதிகள்
சமகால இலக்கியவாதிகள்
எதிர்கால இலக்கியவாதிகள்

Friday, August 6, 2010

இதொரு சுய டவுசர் கிழிப்பு


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அப்படியே கொஞ்சம் பிளாக்கின் இடது பக்கம் கொஞ்சம் பாருங்க ....தெரியுதா ??? அதுதான் என்னோட பதிவுலக பெயரு. google reader ல படிப்பவர்களுக்காக வேண்டுமானால் சொல்கிறேன் ... "இலக்கிய சுறா" டம்பி மேவீ (வேற யாரு நமக்கெல்லாம் பட்டம் தர போறாங்க ; அதனால நமக்கு நாமே திட்டத்தின் படி ...... ஹி ஹி ஹி )

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அது என்னோட உண்மையான பெயரில்லைங்க. குறிப்பா எந்த காரணமும் இல்ல இந்த பெயரை வைக்க. தம்பியை தான் கொஞ்சம் பட்டி பார்த்து டம்பின்னு வைச்சுகிட்டேன். மேவின்ன பரவியன்னு ஒரு அர்த்தம் இருக்குங்க ; ஆனா சத்யமா நான் அதை நினைச்சு வைச்சுக்கல. வேறொரு காரணமிருக்கு.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

நான் அதை ஒன்னும் சிறப்பா கருதல.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் முதல ஒரு முயற்சியும் செய்யல. என்னோட நண்பர் ஒருத்தர் தான் தமிழிஷ்ல என்னுடைய பதிவுகளை சேர்த்து கொண்டிருந்தார். பிறகு ஹேமா, கார்த்திகை பாண்டியன் இரண்டு பெரும் ரொம்ப INSIST பண்ணியதால் தமிழ்மணத்துல சேர்ந்தேன். பிறகு தமிழிஷ்யில் நானே சேர்க்க ஆரம்பித்தேன் ...பிறகு தமிழிஷ் பட்டி பெற்ற பிறகு பெருசா ஏதும் முயற்சிக்கவில்லை. அப்பப்ப டிவிட்டர்ல பகிர்ந்துப்பேன். சாட் ல சில நண்பர்களுக்கு லிங்க் தந்து படிக்க சொல்வேன்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னோட சொந்த வாழ்க்கை ரொம்ப அழுகாச்சியா இருக்கும். அதனால் அப்படி எல்லாம் அவசரப்பட்டு பகிர்ந்துக்க மாட்டேன். அது எல்லாம் சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிற மாதிரி தான்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

தெரியலைங்க. எதுக்கு எழுதுறேன்ன்னு தெரியல. தேடல் இல்லாத வாழ்க்கை ல சுகம் இருக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட தேடலில் பதிவு எழுதுவதும் ஓன்று. பொழுது போக்க என்பதையும் தாண்டி நான் நிறைய விஷயங்களை கற்று கொண்டு இருக்கிறேன். சம்பாத்தியம்ன்னு பார்த்தால் நட்புக்கள் தான். காசை விட நான் மனுஷங்களை மிகவும் மதிப்பவன்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு : வலைபதிவுகளில் நான் எழுதுவதற்காக உருவாக்கினேன். அது இரண்டும் தமிழ் பதிவுகளே. முதலில் ஆங்கிலத்தில் DAILY LIFE ங்கிற பெயரில் எழுத ஆரம்பித்தேன், பிறகு அதை தினசரி வாழ்க்கைன்னு மாத்திட்டேன். போன வருஷ கடைசில மேவியின் பகிர்வுகள் ன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சேன். அதுல எனக்கு பகிர்ந்துக்க வேண்டும்ன்னு நான் ஆசை படுற விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சத்யமா கோவம் எல்லாம் வராதுங்க. அதே போல் எப்பொழுதும் நான் யார் மேலையும் பொறமை பட்டதில்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அப்படி யாரும் பாராட்டினதில்லைங்க. என்னோட முதல் பதிவுக்கு (இங்கிலீஷ்) என் அண்ணன் போட்ட பின்னூட்டத்தை வேண்டுமானால் நான் பெற்ற பாராட்டாய் சொல்லலாம். இன்னும் அந்த வரிகள் ஞாபகமிருக்கு ....."wonderfull daa ..keep going ". பிறகு என்னோட பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களையே எனக்கு கிடைத்த பாராட்டுக்களாக கருத்துகிறேன்.

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

என்னை பற்றி சொல்வதற்கு பெருசா ஒன்றுமில்லைங்க. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டு ரசிப்பவன். நிறைய படிக்கணும், நிறைய கற்று கொள்ள வேண்டும்ன்னு ஆசை இருக்கு.
= = = = =
இந்த தொடர் பதிவுக்கு என்னை கூப்பிட்ட ஹேமாவுக்கு நன்றியோ நன்றிங்க. இந்த பதிவுக்கு யாரை கூபிடுவதுன்னு தெரியல. தமிழ்மணத்தையும் தமிழிஷ்யையும் திறந்து பார்த்து ரொம்ப நாளாச்சு. அப்படி யாராச்சு இந்த தொடர்-பதிவை எழுதணும்ன்னு ஆசைபட்டீங்கன்ன ....எழுதுங்க. அப்படி எழுதிருந்த பின்னூட்டத்துல சொல்லுங்க. நான் அங்க வந்து கும்மி அடிக்கிறேன். என்ன ஓகேவா ......
Related Posts with Thumbnails