Pages

Sunday, July 3, 2011

*கலவை - கவிதை ஸ்பெஷல்*


தோல்வி என்ற வேங்கை
எனது வெற்றியின்
பெண்மையை கற்பழித்து விட்டு
சென்றது இந்த பக்கம்.

அங்கங்கே
தோல்வியின் வெற்றி ஓலம்:
எனது வெற்றி
காயங்களோடு நிற்க முடியாமல்
வேதனையின் நிழலில் .

மடை திறந்த வெள்ளமாய்
வறண்ட பூமியில் காய்ந்த நாற்றாய்
வெற்றி மங்கையின் கண்ணீர் .

கரைந்து விடுமோ தோல்வியின் உள்ளம்
தோல்வியின் வெற்றியை எண்ணி
வெற்றி மங்கை தற்கொலைக்கு
முயற்சிக்குமோ சிக்காதோ
முடிவும் இருக்குமோ தொடக்கமாய் ??

களையை விட்டு
பயிரை களை எடுத்து விட்டதே
தோல்வியின் நண்பர்களும் தோல்வியும் .

காணாமல் போன குழந்தையின்
தவிப்பாய் உதவியை நாடி
தவிப்புடன் அங்கும் இங்கும்
வெற்றியின் கண்கள்.

ஈன்று புறந்தருதல் பெற்றோரின் கடனே
கற்பழித்து விட்டு போவது தோல்வின் கடமை என்றாகுமா ?

புலம் பெயர்ந்த உள்ளம் போல்
குன்றியது வெற்றியின் உள்ளம்
குன்றிலிருந்தது குன்றுகிறதே

வந்துவிட்டதோ
இயலாமை என் வெற்றிக்கு
எழ முயற்சித்தாலும்
வருகிறதே தூரத்தில்
அவமானம் ஆண்மையுடன் .

= = =
ஊடல் பிரித்த கட்டிலில்
பக்கம் பக்கமாய்
நானும் அவளும்.

இரவோடு பழகியதால்
புரிந்துகொண்டேன்
அதன் மொழியை.
புரியாத மொழியோடு
மௌனமாய் அவள்
மறு பக்கத்தில்.

இரவின் இருளை
கண்கள் விழுங்க
வார்த்தைகள் வராமல்
விடை தெரிந்த என்னோடும்
மௌனம் இன்னும் !!!


= = =
ஊனமாகிவிட்டேன்
ஊனமானது வாழ்வது
சமுதாயத்தின் வார்த்தைகளில்.

மடை திறந்த முயற்சி
நிற்கிறது ஒரு தோல்விக்கு பின்னால்,
வாழ்கிறேன் சாவைநோக்கி.

பிணம் நடக்கிறது
பிணங்களை பார்த்தபடி
எதுகையும் மோனையும்
இல்லைஎன் வார்த்தைகளில்.
என் இதயத்தின் மேளமும் இங்கு இல்லை!
செயற்கையான இயற்க்கை
கண்டு இயற்கையான என் மனம் செயற்கையானது ; என் சுயம்.
போகிறேன்
தேவனிடம் நீதி கேட்க,
நைலான் கைறுவிலை பத்து ரூபாய்.

= = = =

மின்மினியாய் alarm
சீனா நாட்டு தொழில் நுட்பம்
நுட்பமாய் ஆராய்ந்து, புரிந்து
கொள்ள முடியாத நிலையில் நான்.
சத்தத்தை நிறுத்த வலது கையின்
ஜோடி இடது கை கொண்டு
மேல் பட்டனை அறைய போன்னேன்
ஐந்நூறு ரூபாய் அதன் விலை தெரிந்து
ஊமை ஆனது எனது கைகள்
பொருளாதார பின்னடைவு நாட்டில்
யாசிக்கும் பிச்சைக்காரனாய் நான்

= = =

விசாரணைகள் முடிந்த நிலையில்
வலிகள் தரும் வசவுகளை கண்ட மனமாய்
வலிகள் தராத அடிகளை தங்கிய உடல்
கொண்டு என் உணர்வுகளின் தனிமையை கண்டு அஞ்சும்
வேளையில் மனதில் கவிதை எழுதும் ஆசைகள் அலை மோதிய
பொழுதில் காகிதங்கள் ஏதும் இல்லாத நிலையில்
எண்ணங்களை எழுதுகோள் ; காற்று காகிதமானது
நான் இந்த கவிதையை எழுதும் வேளையில்.
நினைவுகளின் பதிவு ஏதும் இல்லாத
சுத்தமான காற்றை தேடினேன் ;
சுத்தமான காற்று கிடைக்காத பொழுது
நான் சுவாசிக்க சேமித்து வைத்திருந்த காற்றில்
என் எண்ணங்களின் பதிவான கவிதையை எழுதும்
வேளையில் வலிகள் இல்லாத உடல் வலிகள்
காரணமாய் மயங்கினேன் .
மறுநாள் வலிகளை வழி கொண்டு வரவேற்க
மயக்கம் தெளிந்த பொழுது
நான் பதிவு செய்த காற்றை காணவில்லை
யாரவது சுவாசித்து இருப்பார்களோ என்ற பயத்தில்
நான் இருக்க.
காலடி சத்தங்களை கேட்டது என் காதுகளில்

===
போலியான இன்பங்களைக் கொண்டு

இல்லாத சந்தோஷ தருணங்களை கருவில் உருவாக்கி

மனதளவில் சோகமும் சந்தோஷமும் மாறி மாறி

வந்தக் கொண்டே ; நினைவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது

என் வாழ்வின் வசந்தக் கால தேவதை : சிறகு ஒடிந்து

பறக்கவும் திறனில்லாமல் வேடனின் அம்பு சொற்களுடன்

வாழ்ந்து கொண்டே இறந்து கொண்டும்

சுவாசத்தை எண்ணிக் கொண்டும்
மாலை வெயில் வேர்வைகளுடன் அவள் வீதியில்

அவளுடைய கணவன் ; என் பார்வையில் அந்நியனாய்

ஒரு நொடி பார்வை பரிமாற்றத்தில்
விரும்பி ஏற்று கொண்ட ஏமாற்றத்தின் நினைவுகளின் வலி

எனக்கு அவள் கண்களில் முதுமை ; பத்து வருடங்கள் முன்பு காதலாய்

என்னை காதலித்தவை அவை அல்ல.

சில குழப்பங்களுடன் போராட்டம் அவள் இவளா இவள் அவளா என்றெல்லாம்கேள்விகள் வார்த்தைகள் காணாமல் போன கவிதை போல்.

தேவதைக்கு சிறகு இருந்த இடத்தில் சுமைகளுடன் சோகங்கள் . முடியாமலும் முடிவில்லாமலும் சிறு சிறு உறவுகள் வாழ்வில் வருவது ஏன் ? ஓர் காலத்தில் சுகமாய் இருந்த காதல், இன்று சுமையாய் மாறியதேன் பல குழப்பங்களுடன் முடிக்கிறேன் இந்த கவிதையை


= = =

புது கவிதை தோன்றியது

எண்ணங்களில் மங்கிய

கனவு வருவது போல் ....

நேற்றும் இன்றும் வார்த்தைகளில்

செதுக்க வில்லையென்றால்

நாளையும் இதே தவிப்பு....

தேடிய வார்த்தைகள் தொலைந்து

போவதை கண்டேன் எண்ண சிதறல்கள்.

என்னை அழைத்த தொலைபேசி

அளித்த தொல்லை ; டார்கெட்

= = =

நினைவு வந்த நாளில்
இருந்தே அப்பா மீசையோடு தான்
சிறு வயதில் வேறயாருடைய மீசையும்
அப்பாவின் மீசை போல் இருந்ததில்லை ...

நீங்கள் என் அப்பாவை பார்த்ததில்லை
அதனால் அவரது மீசையையும்
நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்...

கம்பீரத்தின் அடையாளமாய்
மேல் உதட்டின் மேல
சுவாசத்தின் காவலர்களாய்
இடது பக்கமும் வலது பக்கமும்
சம சீராய் வளர்ந்துவிட்ட முடிகள்
கருப்பு வண்ணம் கொண்ட முடிகள்
உணர்சிகளை அப்பா வெளிகாட்டும்
பொழுது : அதன் வண்ணங்களும் மாறும்

கோபத்தின் பொழுது சிகப்பாய்
சிரிப்பின் பொழுது நீலமாய்
அந்த கருப்பு மீசையின் வெளிபாடுகள்
ஆச்சரியம் ஒன்றே எனக்கு

முடிகளுக்கு வாசனை இல்லை என்று
நான் படித்த அறிவியல் சொன்னாலும்
அது அப்பாவின் மீசைக்கில்லை என்று
தொழிற்சாலையில் இருந்து வந்த அப்பாவை
ஓடி சென்று அணைத்த பொழுது
வேர்வை வாசத்துடன் மீசையின் வாசத்தையும் உணர்ந்தேன்

சலூனில் அப்பாவின் மீசைக்கு அருகே கத்தி கத்திரி வரும்
பொழுதெல்லாம் கடவுளை ஆயிரம் முறையாவது
வேண்டிருந்திருப்பேன் : அப்பொழுதெல்லாம்
கடவுள் நல்லவராய் தான் இருந்தார்

எல்லா பிள்ளைகளை போல தான்
எனக்கும் அறிவியலின் புரியாத புதிர்களில்
ஒன்றாக இருந்தது அப்பாவின் மீசை.

ஒரு சமயம் தாத்தா இறந்த
செய்தி கேட்டு அப்பா அழுதார்
மீசையும் அழுதது.
அப்பா அழுவாரா ???
அப்பா அழுதுவிட்டார் என்ற அதிர்ச்சியே
அவரது மீசை மீதான பிம்பம் உடைந்து விடுமோ
பயத்தில் ஓடிவிட்டேன்.

ஊர் போய் சேரும் வரை
அப்பாவை நேர் கொண்டு பார்க்கவில்லை
அப்பாவின் மீசை தரும் தைரியத்தை
கொஞ்ச நேரம் அம்மாவின் முந்தானை
தந்து கொண்டு இருந்தது

ஊர் மக்கள் ; சொந்தம் ; குடும்ப நண்பர்கள்
என்று நிறைய ஆண்கள் இருந்தார்கள் அங்கு
வித விதமான மீசைகளோடு
எந்த மீசையும் அப்பாவின் மீசையை
போல் அழகு இல்லை ...

சிறுவர்களான எங்களை
இருட்டு அறையில் தூங்க வைக்க பட்டோம்

இரவில் தீடிரென்று வந்த சூரிய வெளிச்சம் போல்
கதவை திறந்து கொண்டு வந்த பெரியம்மா
எங்களை எழுப்பி கையோடு அழைத்து சென்றார்.
ஏன் எதற்கு எங்கே என்று கேட்பதற்குள்
மூன்று அறைகள் தள்ளி இருந்த அறைக்குள்
கொண்டு செல்ல பட்டோம் .

அங்கே தாத்தாவின் தலையை பிடித்த மாதிரி
அப்பா நின்று இருந்தார் : கொஞ்சம் வித்த்யாசமாக
தெரிந்தார்.

ஐந்து நிமிடங்கள் புரியாத புதிருக்கு
காணாமல் போன மீசை பதிலாய்

கூட்டத்தில் எல்லோருக்கும் மீசை இருந்தது
அப்பாவுக்கு இல்லை : இருந்தாலும் அழகு இருந்தது
அது நான் ரசித்த அழகில்லை.

புரியாமல் பக்கத்தில் நின்ற
பெரியம்மாவை கேட்ட பொழுது
"தாத்தா உங்க அப்பாவோட மீசையையும் சேர்த்து சாமிகிட்ட கொண்டு போயிட்டாரு"
புரியாமல் தாத்தாவை வெறுத்தேன்.

= = =
இலக்கியமாய் கவிதை எழுத

தோன்றியே எண்ணங்களை திரட்டி

தலைப்பை எழுத "இ" யை தேடி "ஈ" யில் நின்றேன்

இலக்கு இல்ல பறவை பறக்க திரும்பி விரும்பி

தேடினேன் "இ" யை ........

"அ" வாகவும் இல்லாமல் "ஆ" வாகவும் இல்லாமல்

உயிரெழுத்தின் கடைசி மூச்சாய் இருந்துவிடவே

கவிதையின் முழுமையை எண்ணி முன்னேறினேன்

சிதைந்த உணர்வுகளின் உருவமாய் "ல"

"கி" முன் "கோ" வாய்

"ய" வரும் முன்னே மணியோசையாய்

வந்தது "ம்" மென்மையாய் இல்லாமல் வன்மையாய்

அதனால் பயந்து இலக்கியம் எழுத முடியாமல்

முடிவில்லாமல்

இந்த கோணலின் வட்ட நேர்கோடான

தவிக்கிறது இந்த கவிதை

6 comments:

ஹேமா said...

எல்லாம் எல்லாம் எல்லாமே அழகான ஆரோக்யமான கவிதைகள்.தோல்வி,ஊடலில் காதல்,தோல்வியால் தற்கொல.எல்லாம் பிடித்திருந்தாலும் அப்பாவின் மீசை மனதில் படிந்துபோகிறது.தாத்தாவில் எனக்கும் பிடிக்காமல் போகிறது.

மேவீ....ஒவ்வொரு கவிதையாகப் பதிவிட்டிருக்கலாமே.ரசிப்பின் இடைவெளி அதிகமாயிருக்கும்.
பொறுமையாகவும் ரசித்திருக்கலாம் !

மரா said...

கவிதைகள் அனைத்தும் செம மொக்கை ரகம்.தயவுசெய்து கவிதை எழுத் வேண்டாம்.ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

மேவி... said...

@ஹேமா : ம்ம்ம் பண்ணிருக்கலாம்

@மரா : நான் எதை எழுதினாலும் அது மொக்கையா தான் இருக்கும் ஜி :)))))

vidivelli said...

supper poem..
congratulation...




can you come my said?

அத்திரி said...

டேய் உன் பதிவ படிக்கிறதே பெரிய விசயம்,,,,,,,, இந்த கொடுமையில கவித வேறயா?????????////////////////////// ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்முடியல

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Related Posts with Thumbnails