"மௌனத்தில்
இந்த கவிதை என்ன பெயர் என்று விசாரித்து பார்த்ததில் யாருக்கும் தெரியவில்லை. எனக்கு என்ன பெயர் வைக்குறதுன்னே தெரியல.
அவள் வாழ்ந்தாள்.
மௌனத்திலேயே
அவள் இறந்தாள்.
செய்தி கேள்விப்பட்ட பிறகு,
"உதவாத யோனி" என்று
அவர்கள் சொன்னார்கள்.
நான் அவளது சடலத்தின் முன்பு
மண்டியிட்டு அமர்ந்தேன்.
அவளை மறைத்திருந்த
சவத்துணியை
எனது நகங்கள் கொண்டு
கிழித்தேன்.
பிறகு அவளது கல்லறையில்
ஏதோ எழுதினேன்."
இந்த கவிதை எழுப்பிடும் கேள்விகள் பல. அந்தந்த கேள்விகளுக்கு எல்லாம் எது பதிலாக இருக்கும் என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். யார் அவன் ??? அவர் அவளது கல்லறையில் என்ன எழுதினான் ?? அவளுக்கு அவனுக்கு என்ன தொடர்ப்பு ???
இந்த கவிதையின் வழியாக கவிஞர் இன்னொரு விஷயத்தையும் சொல்லாமல் சொல்லுறாரு. "மௌனத்தில் அவள் வாழ்ந்தாள்" என்ற வரி எத்தனை வலி தாங்கி உள்ளது என்று அதை படிக்க படிக்க தான் எனக்கு தெரிகிறது. பிறகு மத்தியில் "உதவாத யோனி" என்ற இடத்தில அவளது கணவன் புணர்ச்சிக்காக மட்டுமே அவளுடன் வாழ்ந்து / இருந்து இருப்பான் என்று தெரிகிறது.
அந்த இடம் வரைக்கும் எனக்கு தெளிவாக புரிந்த கவிதை, பிறகு வந்த வார்த்தைகளில் / வரிகளில் எதுவும் எனக்கு புரியவில்லை. முக்கியமாக "சவத்துணியை, எனது நகங்கள் கொண்டு கிழித்தேன்" என்ற வரி எதை குறிப்பாதாக இருக்கும் என்று இதை டைப் அடிக்கும் வரைக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவும்.
நன்றி - வலசை : பயணம் -1 :: பக்கம் : 33
2 comments:
மேவி....கவிதைகருக்குக் கருத்துச் சொல்லி விமர்சிப்பது கஸ்டம்.அதை எழுதியவருக்கே அதன் முழுமையான உட்கருத்துத் தெரியும்.அதோடு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்துக்கொடுத்தால்தான் அது முழுமையான கவிதை.எழுதியவரின் வெற்றியும்கூட !
இந்தக் கவிதை என் கோணத்தில்.அவள் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணாகப் புரிகிறேன்.
அவள் விபச்சாரியே தவிர, மற்றவர்களைவிட அவள் மிக மிக உயர்ந்தவள் என்பதைச் சொல்ல நினைக்கிறார் கவிஞர் !
http://sufipoetry.wordpress.com/poets/rabia-al-basri/
மேலே உள்ள சுட்டியில் கொஞ்சம் அடிப்படை விவரம் கிடைக்கும்.
மேவி! தமிழில் அரைகுறை மொழிபெயர்ப்பு எவ்வளவு பெரிய வில்லங்கமானது என்பது இந்தப்பதிவை நீங்கள்திருத்தியதில், இன்னொரு பின்னூட்டத்தில் புரிந்து கொள்ள முடிகிறது.நீங்கள் ஒரு சிற்றிதழில் படித்ததோடு நின்றுவிடாமல் கொஞ்சம் இந்த சுஃபி கவிஞர் யார் எவர் என்பதைத் தேடிப்பார்த்திருந்தால் விஷயம் புரியும்என்று தான் கூகிள் ப்ளஸ்ஸில் ஒரு கவிதையையும் எடுத்து சொல்லிருந்தேன்.எனக்குப் பரிச்சயமில்லாத இன்னொருவர், அங்கே விவாதத்தைப் பட்டிமன்றமாக நடத்த ஆரம்பித்து, என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா ரேஞ்சுக்குக் கொண்டு போனது மட்டும் தான் மிச்சம்!
எளக்கியவாதிகள் அல்லது அப்படி ஆக ஆசைப்படுபவர்களுடைய சங்காத்தம் எத்தனை விபரீதமானது என்பதை இந்த உரையாடல் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது! :-))))
Post a Comment