Pages

Thursday, December 15, 2011

**கலவை** - }} மம்பட்டியான் {{ கூகிள் பஸ் {{{


கூகிள் கம்பெனிகாரங்க இதோ அதோன்னு இழுத்தடிச்சு, பூச்சாண்டி எல்லாம் காட்டி இன்னைக்கு காலைல முடிட்டாங்க. ஏதோ ரொம்ப நெருங்கி பழகின தோஸ்த் என்னை விட்டு போன மாதிரி இருந்துச்சு. ஒரு வருஷம் போனதே தெரியல. சண்டை, பிடிவாதம்ன்னு பக்கவாதம் வராத குறையா போனாலும், அதுல இருந்த ஒரு ப்ளஸ் பாயிண்ட் :::: அது எல்லோரையும் ரொம்ப அக்டிவ்வா வைச்சு இருந்துச்சு. நிமிஷத்துல லைக்கிங், காரி துப்புறதுன்னு சுவாரசியமா போச்சு. 

அரசியல் டிபேட் நடுக்குற இடத்துல எல்லாம் சும்மா ஒரு லைக்கிங்கை போட்டுட்டு வேடிக்கை பார்பேன். பதிவுலகம் போலில்லாமல் எல்லோரையும் ஒரே இடத்துல படிக்க முடிஞ்சுது. பல நட்புகள் உருவாக காரணமாகவும் இருந்தது. முக்கியமா பதிவு எழுதுற டைம்ல  சில பல புஸ்தகம் படிச்சேன். 

கூகிள் பஸ்ஸை என் வாழ்க்கைல மறக்கவே முடியாது :::: சென்னைல இப்ப இருக்குற வீட்டை கட்ட ஆரம்பிச்ச போது, நான் பஸ் விட ஆரம்பிச்சேன், இப்ப கட்டி முடிச்ச எங்களோட வீட்டுல இருக்குற என்னோட ரூம்ல உட்கார்ந்துகிட்டு இந்த பதிவை டைப்பிக்கிறேன். வயசான காலத்துல நினைச்சு நினைச்சு சிரிக்க நிறைய விஷயம் கிடைச்சுது  இந்த கூகிள் பஸ் மூலம். அந்த அனுபவங்களை  மனசுல சேமிச்சு வைச்சு கிட்டேன். 

இப்ப கூகிள் ப்ளஸ்ல அதே மொக்கைய ஆரம்பிச்சு இருக்கேன் :::: உருப்படியா அதுல போஸ்ட்டிக்க கொஞ்ச நாளாகும். 

எழுதாத இந்த ஒரு வருஷத்துல பல பேரு இலக்கியத பொரட்டி பொரட்டி எடுக்குற நோக்கத்துல பல திரட்டிய ஆரம்பிச்சு இருக்காங்க. இப்ப நான் அதுலை எல்லாதுலையிலும் போய் என்னோட பிளாக்கை சேர்க்கணும். 

பிரபல பதிவர்கள் பலர் பஸ்ஸிட்டு கொண்டிருந்த காலத்துல நிறைய பேரு பதிவெழுத ஆரம்பிச்சு இருக்காங்க ; அவங்களை எல்லாம் படிக்க ஆரம்பிக்கணும்.  

டிஸ்கி - பதிவுலகத்துல என்ன ஒரு குறைன்ன, யாரையும் டக் பண்ணிவிட்டுட்டு கும்மி அடிக்க முடியாது. 
= = = = = 
நம்ம பயபுள்ள சேடன் எழுதின புரட்சி இருபது/இருபது {அதாங்க REVOLUTION 2020 } வந்த அன்னைக்கே வாங்கி படிச்சுட்டேன். அவரோட மத்த நாவல்ல வர மாதிரி எல்லாம் கிளைமாக்ஸ் ல ஒரு தேவ தூதர் பேசுறதில்ல :::: ஆன்னா நாயகனும் நாயகியும் ஒட்டிண்டு இஷிண்டு  உடற்பயற்சி எல்லாம் பண்ணுறாங்க. அதுலயும் அந்த கோபால் மிஸ்ரா ( முரளிதரனோட துஸ்ரா எல்லாம் இல்லைங்க ) ஒரே பாட்டுல  தொழிலதிபர் ஆனா பிறவு கதைல பெருசா ஒரு டிவிஸ்ட் அன் டர்ன் எல்லாம் இல்லை ; ஆனாலும் சுவாரசியமா போகுது. 

= = = = = 
காலம் பத்திரிக்கைல ( இந்த மாசத்து இஷ்யூ :::: அசோகமித்திரன் ஸ்பெஷல்) அ.முத்துலிங்கம் "சோப்பும் வாசனையும்" ங்குற சிறுகதைய பத்தி எழுதிருக்காரு. படிச்சதுல இருந்து நான் ரொம்ப டிஸ்டர்ப்டுடா இருக்கேன். அதுவும் தான் கொலை செய்ய பட போகிறோம்ன்னு தெரிஞ்சே மௌனமா புருஷன் பின்னாடி பொண்ணை பத்தி படிக்கும் போதே ஒரு மாதிரியா இருக்கு. இத்தனைக்கும் அது அந்த சிறுகதைய பத்தின ஒரு சிறுகுறிப்பு தான். படிக்க வேண்டிய சிறுகதை லிஸ்ட்ல அதையும் வச்சு இருக்கேன். 

சிறுகதைன்ன உடனே ஞாபகம் வருது ஆதவனின் "சினிமா முடிந்தபோது" ங்குற சிறுகதைய பத்தி ரொம்ப நாளா விலாவாரியா எழுதணும்ன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். முடிஞ்சா அடுத்த பதிவுல எழுதுடிறேன். 

டிஸ்கி - என்னோட இரண்டு சிறுகதையும் ரொம்ப டிராப்ட்ல இருக்கு ; கூடிய சீக்கிரம் பப்ளிஷ் பண்ணி இலக்கியத்தை கொலையா கொல்லுவோம். 

= = = = = 
எனக்கு பலப் பிக்ஷன் படங்களில் ரொம்ப பிடித்தது மம்பட்டியான் தான். அதுலயும் "காட்டு வழி போற பெண்ணே கவலை படாத...." ங்குற பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு மாதிரியான ஹால்லோ வாய்ஸ்ல இருக்கும் அந்த பாட்டு. அதுவே அதுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்டா இருக்கும். அந்த காலதுலையே படத்தை ரொம்ப த்ரில்லிங்கா கொண்டு போயிருப்பாங்க ::::: இப்ப எப்படின்னு வந்திருக்கோன்னு தெரியல. அதுவும் பழைய மசால் வடைய தின்ன மாதிரி தியாகராஜன் ஸார் அதுல மூஞ்சிய உர்ன்னே ஒரு மாதிரி வச்சு இருப்பாரு. பிரசாந்த் எப்படி பண்ணிருக்கோ தெரியல. அவரோட "கண்ணெதிரே தோன்றினாள்" படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ::::: ஸோ இந்த படம் வெற்றி பெறணும்ன்னு கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்க கிட்ட சொல்லி, வேண்டிக்க சொல்லுறேன்.

= = = = = 
 மல்லிகா ஷெராவத் நடிச்ச மர்டர் படத்தை, அவரோட அழகுக்காகவே இரண்டு மூணு வாட்டி பார்த்திருக்கிறேன் :::: ஆனா ஒஸ்தி படத்துல வர கலாசால பாட்டை பார்க்கும் போது, அவருக்கு ரொம்ப வயசு ஆனா மாதிரி தெரியுது, இல்லாட்டி காஸ்டியூம் சரியா பொருந்தமா போயிருக்கலாம். அதுவும் எல்.ஆர். ஈஸ்வரி குரல் அவருக்கு  பொருந்தமா போய், அதுவே கவர்ச்சியை குறைச்சுருச்சுன்னு நினைக்கிறேன். 
= = = = =
தமிழுணர்வை பத்தி பேசுறதுன்னாலே "ஏழாம் அறிவு" யை தமிழர்கள் கொண்டாடணும்ன்னு சொல்லுறாங்க. ரைட்டு ஓகே. அதே மாதிரி மக்களின் நன்மைய, நாட்டு பாதுகாப்பை பத்தி பேசுற, மக்களுணர்வை பேசுற "வேலாயுதத்தை" இந்த நாடே கொண்டாடணும்ல .... ஏன் அத பத்தி யாரும் பேசல ?

= = = = = 

சரிங்க .... தூக்கம் வருது. கமெண்ட்டைய போட்டுட்டு, அப்படியா வோட்டையும் குத்தி ருங்க. அப்பாலிக்க பார்போம்.  

KEEP SMILING

ENJOY LIVING

6 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஏதோ ரொம்ப நெருங்கி பழகின தோஸ்த் என்னை விட்டு போன மாதிரி இருந்துச்சு//

நிச்சயமா மேவி. இன்னைக்குக் காலைல மெயில் பார்த்திட்டு பஸ் இல்லைன்ன உடனே ஒரு மாதிரி ஆகிடுச்சு. இன்னும் அதை ஒத்துக்க முடியாத மனநிலைதான் இருக்கு..:-((

''பிங்க்'' தமிழன் said...

நீயெல்லாம் எழுதலன்னு எவன்டா அழுதது..மிகப்பெரிய சொம்பு அடிக்கிற புடிங்கி நீ..

மேவி... said...

@பிங்க் தமிழன் :

"நீயெல்லாம் எழுதலன்னு எவன்டா அழுதது"

யாரும் அழுவல.

"மிகப்பெரிய சொம்பு அடிக்கிற புடிங்கி நீ."

ஆமாஜி, அப்ப சின்ன சொம்ப அடிச்ச உங்களுக்கு பிரச்சனை இல்லை தானே. முக்கியமா "புடிங்கி" இல்லை அது "புடுங்கி"

மேவி... said...

@கார்த்திகை பாண்டியன் : ஆமாஜி ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. தினமும் பழகின விஷயம் சட்டுன்னு இல்லைன்னு ஆனதை, என்னால் கூட ஒத்துக்க முடியல

ஹேமா said...

பஸ்ல பழகினதை விடுறது கஸ்டம்ன்னா புளொக்ல பழகின எங்களையெல்லாம் மறந்துதானே போனீங்க எல்லாரும்.கார்த்தி உட்பட !

மேவி... said...

@ஹேமா : உங்களை நான் மறக்கல. ரொம்ப பிஸியா பஸ்ஸிட்டு கொண்டிருந்தால சிலபல பதிவுகளை படிக்க முடியாம போயிருச்சு. கோச்சிக்காதீங்க. இனிமேல் அதிரடி பின்னூட்ட மழை தான்.

Related Posts with Thumbnails