வெயிலின் குன்றோ
சிறு செம்பவழ குன்று மணியோ
ஆலய மணியின் கடைசிச் சொடுக்கோ
அருங்காட்சியகத்தின் மெல்லிருட்டோ
மோர்கள் பற்றிய ரகசிய வதந்திகளோ
மரணிப்பவனின் கண்ணின் கடைசி கருணையோ
பொறுமையின் கண் வழியும் பெருமிதமோ
உடனே வசீகரிக்கப்படுகிறோம்
உள்ளார்ந்த கேள்விகளுக்கு விடை
தேடாமல் மொழிக்குள் அமர்கிறோம்
தேடியும் கிடைக்காமல் அலுத்தவர்களின்
முகம் பூக்கும் மெல்லிய காற்று
மொழியின் வரிகளை முறிக்கிறது
வசீகரப்படுகிறோம்.
நன்றி - காலம் ::சிற்றிதழ் ; விலை - ரூ.60 }}}அசோகமித்திரன் சிறப்பிதழ்{{{ :::: அக்டோபர் - டிசம்பர் 2011 இஷ்யூ :::: பக்கம் - 11 :
தொடர்ப்புக்கு :::: மொபைல் - 95436 16642 ::
ஈமெயில் -- kalammagazine@gmail.com ::
1 comment:
பொறுமையின் கண் வழியும் பெருமிதமோ
அருமை .
Post a Comment