பீமா மூங்கில் என்று ஒரு மூங்கில் வகையை
பற்றி படித்து கொண்டிருந்தேன். இந்த மூங்கில் வகையின் சிறப்பு என்று பார்த்தால்
குறைவான பாசன வசதி தான் தேவை படுமாம். பிறவு வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே
இருக்குமாம். முக்கியமாக தூய்மையான காற்றை வெளியீடு வதின் மூலம் சூழல் மாசடைதலை
கட்டுபடுத்துமாம்.
இதை வளர்க்க சிறப்பான நில வளம் தேவை இல்லை . வான்நிலை மாற்றங்களுக்கு ஈடு குடுக்கும். முக்கியமாக இதனுடையே ஏற்றுமதி மதிப்பு மிக மிக அதிகமாம். இந்த பீமா மூங்கிலை நட்டு இரண்டே வருடங்களில் பலன் தருமாம். மின்சார
உற்பத்திக்கும் உதவுமாம். பலன்கள் நிறைய உண்டு.
இன்னொரு முக்கிய சிறப்பு,
இதை வளர்க்க பகுதி நேர
விவசாயியாக கூட இருக்க வேண்டாமாம்.
இதையெல்லாம் படிக்கும் போது,
மலை காடுகள் பற்றி படித்து
ஞாபகத்துக்கு வருகிறது... அந்த காலத்தில் (அதாவது நூறு வருடங்களுக்கு முன்பு) காடுகளின்
ஒரு பகுதியாக மூங்கில் வளம் பெரும் பங்காக இருந்துள்ளது. அந்த பகுதிகளின் அதிக
குளிர்ச்சிக்கு காரணமாக மூங்கில் வளம் அமைத்துள்ளது.
இப்பொழுது தமிழ் நாட்டில் வன துறை விவசாயிகளிடம்
வளர்ப்புக்கு தந்து கொண்டு இருக்கும் வெளிநாட்டு மூங்கி கன்றுகள் வளர மூன்று
ஆண்டுகளாகும்... அதுவும் அது வளர மணல் சார்ந்த பகுதி தான் தேவை படும். பீமா
மூங்கில் அப்படி இல்லை.
இது ஒரு பக்கம் இருக்க, ஒரு நாட்டின் தாவரவியல் வளத்தை அழித்து,
வேறொரு நாட்டின் தாவர வகையை
பொருளாதார அழுத்தத்தின் மூலம் பயிரிட செய்வது என்பது ஒரு வகையான BIOLOGICAL
WAR தான்.
இப்படி வேறொரு நாட்டின் தாவரத்தை நமது நாட்டில் பயிரிடுவதின்
மூலம் நமது மண் வளம் தான் பாதிக்க படும்.
அதை தவிர்க்க, இந்திய தாவரவியல் விஞ்ஞானி திரு.பாரதி அவர்கள் கண்டுபிடித்த பீமா மூங்கிலை வரவேற்ப்போம்.
ஆங்கிலத்தில் பீமா மூங்கிலை பற்றி நிறைய படிக்க கிடைத்தாலும்,
தமிழில் போதுமான கட்டுரைகள்
படிக்க கிடைப்பது இல்லை. இவ்வளவு பலனை தரும் பீமா மூங்கிலை அரசாங்கம் கருத்தில்
கொண்டுள்ளதா என்றும் தெரியவில்லை.
மாறி வரும் சூழல் மாசடைந்தலை தடுக்கவும்,
தற்பொழுது நிலையில் பீமா
மூங்கில் வளர்ப்பது அவசியம் ஆகுகிறது. ஏனென்றால் அரசாங்கம் ஒரு காட்டை உருவாக்க வேண்டும் என்றால் குறைந்தது பத்தில் இருந்து இருபது வருடங்களாவது ஆகும். ஆனால்
இந்த வகை மூங்கில் அந்த காடு தர கூடிய சூழல் தூய்மையை இரண்டு மூன்று வருடங்களிலேயே
தந்து விடும். உம
ஆர்வம் உள்ளவர்களுக்கு மூங்கிலை வளர்ப்பதில் இருந்து அதன்
மூலம் பயனடையும்
வரைக்கும் உதவிகள் செய்து தர படுமாம்.
இதற்க்கு என்று தனி இணைய தளமே இருக்கிறது.
3 comments:
I would like to thank you for posting a wonderful information about Beema Bamboo.
Thanks,
THANKYOU
Post a Comment