அந்த
தீர்வென்பது "திரிபலாதி சூரணம்" என்ற சூரணமாகும்.
திரிபலாதி
சூரணம் செய்யும் முறை.
கடுக்காய்
தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல் என்று
மூன்று பொருள்களையும் தலா ஐம்பது கிராம் எடுத்து வெயிலில் காய வைத்து, இடித்து பொடித்த பிறகு
சலித்து விட்டு வெந்நீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை வாய்
கொப்பளித்தால் பிரச்சனை சரி ஆகி விடுமாம்.
= = = = =
நேற்று
"நீயா நானா"வில் எலைட் ஐ.டி / கார்பரேட் பக்கம் இருந்த மக்கள் பேசுவதை
கேட்டு சிரிப்பு சிரிப்பா வந்தது. அவர்கள் யாரை நோக்கி பேசுகிறார்கள் என்று
தெரியாமலே பேசிக்கொண்டு இருந்தார்கள் கடைசி வரைக்கும்.
அரசியல்
கட்சி அமைப்பில் ஒரு வட்டசெயலாளரின் நிலை என்ன, பங்கு என்ன, அவருக்கு என்ன விதமான அதிகாரம்
இருக்கும் என்று புரிந்து / தெரிந்து கொண்டு பேசினது போல் தெரியவில்லை. இலவச
திட்டத்தை பற்றி ஒருவர் பேசும் பொழுது, ஒரு பக்குவபட்ட மனிதரின் பேச்சு
போலில்லை ; குழந்தை தன்மையே இருந்தது.
ஐடி
பக்கத்து மக்கள் சொன்னது போல நாலஞ்சு துணை ஆட்களுடன் எந்த வட்டசெயலாளரையும் நான்
திருச்சி திருவெறும்பூரிலோ அல்லது சென்னை பெருங்களத்தூரிலோ பார்த்தது இல்லை
நேற்றைய
பகுதியை பார்க்கும் பொழுது நிறைய தோன்றியது, ஆனால் அதையெல்லாம் இன்று எழுதலாம்
என்று யோசித்து பார்த்தால் ஒன்றுமே ஞாபகத்துக்கு வரவில்லை. அந்த அளவுக்கு ரொம்ப
மொக்கையாய் பேசினார்கள் எலைட் ஐடி / கார்பரேட் பக்கத்து மக்கள்.
நேற்று
ஜோ மில்டன் "நீயா நானா - அரசியல்வாதிகள் அதுவும் வட்டச்செயலாளர்கள்
..கிழிச்சு தொங்க போட்டுடலாம்-ன்னு வந்து செமையா பல்பு வாங்கினாங்க எலைட் ஐ.டி
:)" என்று சொல்லியதை படித்து விட்டு, ஆவலாய் நீயா நானாவை 9.15ல் இருந்து 11.00 வரை பார்த்து மண்டை காய்ந்து
போனேன்
4 comments:
திரிபலாதி சூரணம் செய்ய பொருட்கள் தான் கிடைப்பதில்லை... (வீட்டில் பெரியவர்கள்)
Vichu, why dont I see a +1 button on your posts?
@manjunaath : ya ... i do not know how to install that +1 button here
தினசரி வாழ்க்கை கருத்துக்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.
Post a Comment