தொடர்ந்து ஒரே எழுத்தாளரின் புத்தகங்களை படிக்க கூடாது என்கிற பழக்கத்தையும், ஆண்டுக்கு ஒரு சரித்திர நாவல் தான் படிக்க வேண்டும் என்கிற பழக்கத்தையும் மாற்றி வைத்திருக்கிறார் காலச்சக்கரம் நரசிம்மா.
அத்திமலைத்தேவன், சங்கதாரா ஆகிய நாவல்களை தொடர்ந்து இந்த ஆண்டில் மூன்றாவதாக அவரெழுதிய அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா! நாவலை படிக்க எடுத்திருக்கிறேன். நாவல் எதை பற்றியது என தெரியவில்லை, எந்தவித முன் முடிவுகளுமில்லாமல் காலச்சக்கரம் நரசிம்மா என்ற பெயருக்காக .....
எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு புத்தகம் வாங்க போகையில் பரிந்துரை பெயரில் வாங்கி, சரி வாங்கிவிட்டோம் அப்படி என்ன தான் இருக்கிறது என படித்து தான் பார்ப்போமே என சட்டென்று முடிவெடுத்து பஞ்ச நாராயண கோட்டம் நாவலை படிக்க ஆரம்பித்தேன். முதல் சில பக்கங்கள் கடக்கிறவரைக்கும் வாசிப்பு அனுபவமாக இருந்தது அதன் பிறகு புத்தகத்தை முடிக்கிற வரைக்கும் நிகழ்ந்தது எல்லாம் மாயாஜாலம் தான். ஹோய்சாலப் பேரரசு, இராமானுஜர், விஷ்ணுவர்த்தன், சாந்தலா என வாசிப்பின் வழி நிகழ்ந்த காலப்பயணம். பரவச அனுபவம்.
அதன் பிறகு அவரது படைப்புகளை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொன்றும் தனி உலகத்தை ஏற்படுத்தி தனி மாயாஜால அனுபவங்களை தந்தது.
அதே போல் ஒரு மாயாஜால காலப்பயண அனுபவத்தை அனுபவிக்க ......
No comments:
Post a Comment