மாறன்
பயில்வான் ரங்கநாதனின் வாழ்க்கையை வரலாற்றை மொக்கையாக படம் எடுத்திருந்தாலும், அது மாறன் படத்தை விட நன்றாக இருந்திருக்கும்.
கோலியுட் - கோடம்பாக்கம் - தமிழ் திரையுலகிற்கு மொக்கை படங்களை தள்ளி விட நிறைய குப்பை தொட்டிகள் கிடைத்திருக்கிறது. போல சந்தோஷம்.
மேலாக எடுத்தால் ரசம், நடுவாகில் எடுத்தால் சாம்பார், அடியோடு எடுத்தால் குழம்பு என சமையல் தெரியாதோரின் சமையலை கிண்டல் செய்வார்கள்.
அது போல என்னது என தெரியாமல் எதோ ஒன்றை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். நல்ல வேளை திரையரங்கில் வரவில்லை.
ஒடீடீயில் வந்ததினால் நன்றாக இருக்கும் காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு மற்றவற்றை ஓட்டி விடலாம். அப்படி பார்த்தால் ஆரம்பத்தில் வரும் படத்தின் பெயரையும் முடிவில் வரும் சுபம் அல்லது வணக்கம் (மயக்க நிலையில் இருந்ததால் சரியாக தெரியவில்லை) மட்டும் தான் பார்க்கலாம். நியாயபடி அதற்கு மட்டும் தான் விமர்சனம் எழுத வேண்டி இருக்கும்.
ஒன்றை மணி நேரம் தேர் திருவிழா போல் நகர்ந்து விட்டு அய்யோ நாம் ஓட்டி கொண்டு இருப்பது தேர் இல்லை திருச்சி - சென்னை ரூட் பஸ் என ஞாபகம் வந்திருக்க வேண்டும் இயக்குனருக்கு.
குறிப்பு (இயக்குனருக்கு) -
முப்பது / இருபது வருடங்களுக்கு முன்பு ஜீனியர் விகடனின் வந்த கழுகார் இரவு ரவுண்ட் அப், துப்பறியும் செய்தி கட்டுரைகளை ஆகியவைகளை படித்தாலே நல்ல பத்திரிக்கை உலகம் சார்ந்த சிறப்பான த்ரில்லர் படத்தை எடுத்திருக்கலாம்.
No comments:
Post a Comment