மோடிஜி சென்னை வந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தாம்பாரம் ரயில் நிலையத்திலும் அதற்கான மேடை அமைக்கபட்டது.
தவறில்லை.
மேடை அமைக்க 3 மற்றும் 4ஆம் நடைமேடையில் இருந்த பயணிகள் அமர நிறுவ பட்டு இருந்த நாற்காலிகளை அகற்றி இருந்தனர்.
அதுவும் தவறில்லை. பெரும் நிகழ்வு நடைபெறும் சமயம் நடக்க கூடியவை தான்.
ஆனால் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களாகியும் அங்கு இருந்த நாற்காலிகள் மீண்டும் அதே இடத்தில் நிறுவ படவில்லையே ???
ஏன் ???
இன்று வாரயிறுதி என்பதால் கூட்டம் இல்லை, இதே வார நாட்கள் என்றால் செங்கல்பட்டு வரை போகும் ரயிலுக்காக ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கும்.
தாம்பாரம் வரையிலான ரயில் சேவை தான் அதிகம்.
ஆனால் குறைந்த சேவைகள் கொண்ட செங்கல்பட்டு வரை போகும் ரயில்களை அதிகம் பயன்படுத்தும் புறநகர் பகுதிவாசிகள் நிலை தான் திண்டாட்டம். அவர்களின் நேரத்தின் பெரும் பகுதி ரயில் காத்திருப்பில் கழிந்து விடுகிறது.
No comments:
Post a Comment