D.P.Cooper.
இதுவரையில் தீர்வு காண முடியாத பல வழக்குகள் உலகம் முழுக்க இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றில் எல்லாம் இது இப்படியாக நடந்திருக்கும் என ஊகிக்க முடியும்.
ஆனால் ஒரு வழக்கில் யார் குற்றவாளி, அவர் எப்படி தப்பித்தார் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது என்றால் அது டிபி கூப்பர் விமான கடத்தல் வழக்கு தான். அந்த விமான கடத்தல் நடந்து 50 வருடங்களாகி விட்டது, இன்னும் அந்த வழக்கிற்கு டிபி கூப்பருக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. வழக்கை பற்றி பல்வேறு ஆவண படங்கள், மின்னூல்கள், கலந்துரையாடல்கள் வந்துவிட்டது.
இந்த வழக்கை பற்றி முன்பே கேள்வி பட்டு இருந்தாலும், அது இத்தனை பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கும் என தெரியவில்லை நெட்ஃபிலிக்ஸில் D.B. Cooper : Where Are You ? என்னும் தொடரை பார்க்கும் வரையில்.
இந்த வழக்கை பற்றி பல திரைப்படங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள், சமீபத்தில் லோகி தொடரில் நான் தான் டிபி கூப்பர் என லோகி சொல்வது போல் இருக்கும்.
கொஞ்சம் பெரிய விமான கடத்தல் நிகழ்வை சுருக்கமாக - ஒரு விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண் இடம் ஒரு துண்டு சீட்டு கொடுகிறார், படித்த பயத்தில் விமானியிடம் விஷயத்தை சொல்கிறார்.
மேலும் மிரட்டுவதற்காக பெட்டியில் குண்டு வைத்து இருப்பதை காட்டுகிறார்.
பேச்சு வார்த்தை - கோரிக்கை - நான்கு பாராசூட் - இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள்.
கை மாறியது.
உத்தரவு - குறைந்த உயரத்தில் விமானத்தை ஓட்ட.
டிபி கூப்பருக்கு தெரியாமல் - பின் தொடர்தல்.
விமானத்தின் பின் தளத்தில் இருக்கும் வழியின் மூலம் படிகளில் இறங்கி மழையும் குளிருமாய் இருந்த அந்த இரவில் 10,000 அடி உயரத்தில் இருந்து குத்தித்து உலகத்தின் பார்வையில் இருந்து காணாமல் போகிறார் டி.பி.கூப்பர்.
விரிவாக படிக்க ( https://www.thedbcooperforum.com/ , https://en.m.wikipedia.org/wiki/D._B._Cooper ,
https://www.britannica.com/biography/D-B-Cooper ,
null
https://www.vikatan.com/news/international/66245-fbi-is-giving-up-solving-mystery-of-db-cooper )
அமெரிக்க தனியார் துப்பறிவாளர்கள் இவர் தான் டிபி கூப்பர், இல்லை அவர் தான் டிபி கூப்பர் என பலரை கை காட்டி கொண்டு இருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது உண்மையென்று ஆகிவிட்டால் அதிலிருந்து கிடைக்க கூடிய வணிக ரீதியிலான வருவாய் முக்கிய காரணம். அமெரிக்காவில் அதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதே விஷயம் இந்தியாவில் நடந்திருந்தால் அதே வணிக வாய்ப்பு இருக்குமென தெரியவில்லை.
உங்களுக்கு வலையொளி (Podcast) கேட்கும் பழக்கம் இருந்தால் இந்த வழக்கை பற்றி அமெரிக்கர்கள் ஆர்வமாக பேசுவதை கேட்லாம்.
இந்த வழக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் தேடுதலில் ஒருவர் குற்றவாளி என சொல்ல ஆயிரம் ஆதாரங்கள் கிடைத்தால், அவர் டிபி கூப்பர் இல்லையென சொல்ல இரண்டாயிரம் ஆதாரங்கள் கிடைக்கும்.
உண்மையில் டிபி கூப்பர் என்பது ஒரு நபரா அல்லது உள்கூட்டத்தின் ஒரு ஏமாற்று வேலையா ?
ஏன் கனடாவில் தீவிர விசாரணை மேற்கொள்ளவில்லை ? ஏன் கனடாவில் விசாரிக்க வேண்டும் ?
1980ல் கொலம்பியா ஆற்றங்கரையில் டாலர் நோட்டுகளின் பின்னணி என்னவாக இருக்கும் ?
பண பரிமாற்றத்தின் / பரிவர்த்தனையின் மூலம் ஏன் கண்டுபிடிக்க முயலவில்லை ?
அரசியல் நோக்கம் கொண்டதா இந்த டிபி கூப்பர் விமான கடத்தல் ? அல்லது அந்த கடத்தலே ஒரு நாடகமா ?
தொடரும்....
No comments:
Post a Comment