மணிரத்னம் எடுத்த பொன்னியின் செல்வன் திரைபடம் ஏன் நாவலை போல் இல்லை என பலர் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பம்சமே நந்தினி கதாப்பாத்திரத்தின் பின்னணியில் இருக்கும் குழப்பங்களும், பிறகு அத்தனை அரசியல் சூழ்ச்சியை தாண்டி பிறப்பில் இருந்து மிகவும் கஷ்டபட்டு வளர்ந்து, தான் உண்டு தான் வேலை உண்டு என இருக்கும் சேந்தன் அமுதனுக்கு ராஜ்ஜியத்தை மணிமகுடத்தை போர்கள் பல வென்று அரசனுக்குரிய எல்லா தகுதிகளையும் கொண்ட அருள்மொழிவர்மன் நியாயத்தின் பாதையில் நின்று தருவது தான்.
நாவலை முதன் முதலில் பதின்ம வயதில் படிப்போர் பலரும் அந்த தியாகத்தில் நெகிழ்ந்து போய் அருள்மொழிவர்மனை கொண்டாடுவார்கள். மிக பெரிய திருப்பமாக அது இருக்கும்.
இதற்கு எல்லாம் முன்பாக சோழ அரசாட்சி எல்லாம் எத்தையக பெருமை வாய்ந்தது, அத்தனை பெரிய சோழ ராஜ்ஜியத்தை கட்டமைக்கப்பட்ட கதை என எல்லாவற்றையும் கல்கி முதலேயே நமக்கு படம் போல் கதை போகிற போக்கில் சொல்லி விடுவார். அதையெல்லாம் படித்துவிட்டு அப்பேர்ப்பட்ட சோழ மணிமகுடத்திற்கு ராஜ்ஜியத்திற்கு ஆபத்தா என பதைபதைப்புடன் நாவலை வாசிக்க வைக்கும்.
மேலும் கல்கியின் வார்த்தை பிரயோகம், எழுத்துநடை அப்படியே கட்டி போட்டுவிடும். மேலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணநலன்கள் பற்றிய விவரிப்பு மேலும் கதைக்குள் நம்மை கொண்டு போய் விடும்.
திரைப்படத்தில் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால் நாவல் தந்த உணர்வை திரைப்படம் தந்திருக்கிறதா என்பது தான் கேள்வி.
சேந்தன் அமுதன் விரும்பி திருமணம் செய்து கொள்கிற பூங்குழலி ஆகிய இரு கதாப்பாத்திரங்களும் கதையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். அந்த கதாப்பாத்திரங்களை தயிர் சாதத்திற்கு வைக்க படும் அப்பளத்தை போல் கையாள பட்டுகிறது.
நாவலில் வருது போல் எடுக்க போவது இல்லை, அதனை தழுவி எனது போக்கில் படம் எடுக்க போகிறேன் என்று மணிரத்னம் அவர்கள் முன்பே சொல்லி இருந்தால் எந்தவித பிரச்சனையும் வந்திருக்காது. வெக்கை நாவலை தழுவி அசுரன் படத்தை வெற்றிமாறன் எடுத்தது போல்.
ஆங்கில திரைப்படங்களில் நாவலின் கதாப்பாத்திரங்களை மட்டும் எடுத்து கொண்டு அவர்களது வசதிக்கேற்ப புது கதை ஒன்றை உருவாக்கி கொள்வார்கள். அப்படியாவது செய்திருக்கலாம். அப்படி செய்தால் வணிகம் பாதிக்கும் என்று செய்யவில்லையோ ?
காலை சிற்றுண்டிக்கு வடை செய்கிறேன், நெய் மசாலா தோசை செய்கிறேன், இரண்டு வகை சட்னி மற்றும் வடைகறி செய்கிறேன் என வீட்டில் காலையில் எழுந்ததும் சொல்கிறார்கள். நீங்களும் அதே நினைப்பில் சொல்லபடுகிற எல்லா வேலைகளும் செய்து விட்டு, உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்து விட்டு பசியோடு வந்தால், சாப்பிட தட்டில் உப்புமா வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது மணி சார் செய்திருப்பது.
#பொன்னியின்செல்வன்2
#ps2movie
#PonniyinSelvan2
#மணிரத்னம்
No comments:
Post a Comment