"மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு...." என்கிற இப்பாடலை சிவ வழிபாட்டு முறையை கொண்ட குடும்பத்தில் பிறந்த எல்லோரும் கேட்டு இருப்பார்கள். சிறுவயதில் என் அப்பா எனக்கு திருநீறு அணியும் பொழுது பாடுவார். (ஆம் அதனை திருநீறு அணிதல் என்று தான் கூற வேண்டும்)
நெற்றி முழுவதும் திருநீறு அணிவதை உத்தூளனம் என்று சொல்ல படுகிறது. இந்த உத்தூளனம் முறை இந்தியாவின் மற்ற இடங்களை காட்டிலும் தமிழ் நாட்டில் பரவலாக பின்பற்ற படுகிறது. இதற்கும் பழங்கால வணிகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.
இதற்கு நாம் 10ஆம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஷாம்பெயின் சந்தையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அதனை படிக்கும் முன் பிரான்ஸ் நாடு ஒரு காலத்தில் ரோம் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்ததை ஞாபக படுத்திகொள்ள வேண்டும்.
(சரி அதென்ன ஷாம்பெயின் சந்தை.... பின்னர் பார்க்கலாம்)
12ஆம் நூற்றாண்டு மற்றும் 13ஆம் நூற்றாண்டின் கால குறிப்பின் படி இச்சந்தையில் அதிகம் விற்ற பொருட்களில் ஒன்றாக இருந்தவை ஜவுளி, மசாலா மற்றும் தோல் பொருட்கள். இவற்றில் தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்து அதிகம் ஏற்றுமதியானவை எதுவென்று பார்த்தால் அவை ஜவுளி, மசாலா, கரும்பு சக்கரை மற்றும் உப்பு.
தென்னிந்தியாவின் முக்கிய துறைமுகமாக இருந்தது கொற்கை துறைமுகம் தான். இந்த கொற்கை துறைமுகம் பாண்டிய ராஜ்ஜியத்தின் தலைமை நகரமாக இருந்தது. இங்கு தான் பாண்டிய நாடு முடி இளவரசன் தங்கி வணிக தொடர்புகளை கவனித்து கொள்ளவார். வேறு யாரையும் நம்பி அப்பொறுப்பை பாண்டி நாட்டு ராஜ்ஜியம் வழங்கியது இல்லை.
பழங்கால ரோமானிய கடல் வணிக வரைபடத்தில் கொற்கை துறைமுகமும் பாண்டிய நாட்டு பெயர்கள் தான் முக்கியமாக அடையாளம் காட்ட படுகிறது. சேர நாட்டு பெயர் அடைப்புக்குறிக்குள் தான் இருக்கிறது.
பாண்டி நாட்டிற்கு அதிக வணிகத்தையும் அதன் மூலம் வரி பணத்தையும் தந்து கொண்டு இருந்தது.
(பார்க்க படம் இணைத்திருக்கிறேன்)
இப்பொழுது 7ஆம் நூற்றாண்டுக்கு செல்வோம்.
பாண்டியர்களளவிற்கு சோழர்கள் பெரிய ராஜ்ஜியகாரர்களாக இல்லை. பாண்டிய நாட்டை சைவத்தில் இருந்து சமணத்திற்கு மாறிய கூன் பாண்டியன் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது நம் தொடரில் வர போகிறவர்கள் வேறு யார் சமணத்தை பின்பற்றியவர்கள் என பார்த்தால் ஹொய்சள ஆட்சியாளர்கள் தான்.
சமணத்தை ஆதரித்து கொண்டு இருந்த கூன் பாண்டியன் ராஜ்ஜியத்தின் கீழ் தான் உலக கடல் வணிகத்தின் மையமான கொற்கை துறைமுகம் இருந்தது.
இவ்வேளையில் தான் சோழ நாட்டில் பிறந்த திருஞானசம்பந்தர் தீராநோய் உடன் போராடி கொண்டு இருந்த கூன் பாண்டியனை சந்திக்கிறார். சமண சமயத்தவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அரசனது நோயை சம்பந்தர் குணமாக்கிவிட்டால் சமணர்கள் அவர்களது உயிரை மாய்த்துகொள்ள வேண்டும் என முடிவாகிறது.
அதன்படி சைவ அமைப்பின் மருத்துவமுறையில் உடல்நிலையில் முன்னேற்றமடைகிறது. அப்பொழுது ஒவ்வொரு முறையும் சமபந்தர் சிறப்பு சிவ பூஜை செய்கிறார்கள்.
கூன் பாண்டியனது உடல்நிலை முற்றிலும் குணமாகிவிட்ட பின் திருநீற்று பதிகம் பாடி பூஜையில் வைக்கபட்ட திருநீற்றை கின் பாண்டியனது உடல் முழுக்க அணிவிக்கிறார்.(இது மட்டுமே குறிப்பில் கிடைக்கிறது. பூஜை, சைவ மருத்துவம் எல்லாம் செவிவழி செய்தி)
இடையில் சமணர்கள் திருஞானசம்பந்தர் சோழ நாட்டு உளவாளி, அவரை நம்ப வேண்டுமென சொல்கிறார்கள்.
சமணர் கழுவேற்றம். ஒரு சமணரும் மிச்சமில்லாமல் எல்லோரும் கழுவேற்ற பட்டனர்.
9ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்து பாண்டியர்கள் வெளியேற்ற பட்டனர்.
10ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்தை பின்பற்றிய சோழர்கள் தஞ்சாவூரை தலைமையிலான ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். ஆதி சோழர்களது தலைநகரம் திருச்சிராப்பள்ளி தான். ஆனால் அதனை தவிர்த்து தஞ்சாவூரில் தலைமை இடத்தை ஏன் சோழர்கள் அமைக்க வேண்டும்.
திருச்சிராப்பள்ளி சமண பள்ளிகளுக்கு அக்காலத்தில் புகழ்பெற்றது.
21ஆம் நுற்றாண்டிற்கு வருவோம்.
பிரதான் மந்திரி காத்திஷக்தி மாஸ்டர் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மப்பேடில் தளவாடங்கள் பூங்கா ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க போகிறதாம். இதன் மூலம் வான்வழி, தரை வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள போகிறதாம். புதிதாக அமைக்கபட போகும் பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த பூங்கா.
இந்த இடத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலில் தான் அந்த புகழ்பெற்ற வைணவ விவாதம் நடந்ததாக கூறபடுகிறது.
8ஆம் நுற்றாண்டில் இன்றைய ஆந்திர பிரதேசத்தில் நடத்த ஒரு வணிக செயல்பாடு முக்கியமான இந்துமத கோவில் உருவாக காரணமாக இருக்குமோ.
அதென்ன செயல்பாடு , அதென்ன கோவில் ?
தொடரும்...
#indianbusinessseries
#cholargal
#RelianceIndustries
#hinduism
#Seasilkroute
#rajarajacholan
#PonniyinSelvan2
#PS2
#KORKAI
#Pandiyan
No comments:
Post a Comment