அவரது பாடல்கள் அந்த அளவுக்கு இலக்கிய தரமாக இருந்தத என்று எனக்கு தெரியவில்லை ; ஆனால் எல்லாம் தினசரி வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை கொண்டதாக இருக்கும்.
இவருக்கும் திருவள்ளுவருக்கும் ஓர் ஒற்றுமை ; இருவரது வாழ்க்கை பற்றியும் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருசா ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு பாட்டில் சர்வஜன
"அரியோ பன்றியாக திரிந்தார்,அரனோ பிச்சையெடுத்து திரிந்தார்,
பிரமன் தலையோ கிள்ளப்பட்டது;
இவர்கள் விதியை விதித்தவர் யார்."
விதி எழுவது இறைவன் என்றால் ; அவன் பிச்சை எடுக்கும் படி ஆனதற்கு யார் காரணம் என்று விதியை குறித்து பாமர மக்கள் இடைய கேள்விகளை எழுப்பி ; ஒரு சமுதாய மறுமலர்ச்சிக்கு வழிவகை செய்தவர் என்று கூறினால் மிகை ஆகாது. இந்த பாடலை சற்று கவனமாக வாசித்தால் கடவுள் எதிர்ப்பு கொள்கை கொண்டதாக இருக்கும். ஒரு வேளை இதற்க்கு தான் திமுக அரசு இவரது சிலையை திறக்க உள்ளார்களோ?????
இன்னொரு பாடல .......
"நாம் அனைவரும் ஒரே மண்ணை மிதிக்கிறோம்
ஒரே நீரை குடிக்கிறோம்,அடுப்புத்தீயும் பிரிப்பதில்லை;
எங்கிருந்து சாதி வந்தது கடவுளே."
பெரியார் சொன்ன கருத்துக்களை தான் இவர் பல நூற்றாண்டு முன்பே சொல்லி இருக்கிறார். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வது திருக்குறள் ; பல மனிதர்களை கொண்ட சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது சர்வஜன பதம்.
இன்னொரு பாடலின் கருது .....
"குடிக்காரனோ, மது விற்பவனோ ஓர் பன்றியை விட கேவலமானவன்" என்று பொருள் வருகிறது. தமிழ் நாட்டில் அரசே டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மக்கள் மத்தியில் குடியை பரப்பி வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க ; தமிழ் நாட்டில் தனது சிலையை வைக்க சர்வஜன உயிருடன் இருந்தால் ஏற்று கொள்வாரா????
ஒரு விஷயம் எனக்கும் இவருக்கும் பொருத்தும். இருவரது அப்பாக்களும் காசி விஸ்வநாதனை பிள்ளை நன்றாக பிறக்க வேண்டி உள்ளார்கள்.
விஜய சாம்ராஜியம் புகழ் பெற்று இருந்தாலும் ; அதான் பிறகு பல முற்போக்கான அரசர்கள் ஆட்சி செய்து இருந்தாலும் சாதி பிரச்னை இருந்து கொண்டே வந்து உள்ளது.
இதற்க்கு சாட்சி என்று பார்த்தால் லிங்கயது என்று ஒரு வகுப்பினரிடம் தான் அந்த காலத்தில் தின்பண்டம் வாங்குவார்கள். மற்ற ஜாதி மக்கள் கடை விரித்தால் போணி ஆகாது. அந்த மாதிரியான நிலை இருக்கும் போது தான் ...
"தீண்டத்தகாதவர் வீட்டில் விழும் ஒளியும் தீண்டத்தகாததா?
மேலோர்,கீழோர் எனப்பேசாதீர்;
கடவுள் அருள் பெற்றவனே மேன்மையானவன்."
என்று ஜாதி மதங்கள் எதிர்த்து தனது கவிதையால் பதிவு செய்து உள்ளார்.
இவர் கடைசி வரைக்கும் நாடோடி கவியாக தான் இருந்துள்ளார் ; சமுதாய புரட்சிக்கு பாடுபட்டவர். சமுதாய ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து குரல் கூடுதவர். இவரை அந்த காலத்தில் வாழ்ந்த "ஆன்மீக பெரியார்" என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு பெயர் இவருக்கு பொருத்தும்.
பெரியார் வாழ்ந்த தமிழ் நாட்டில் இந்த மாதிரியான கவியின் சிலை திறப்பதற்கு மொழி என்ற பாகுபாடுகளை கடந்து நமது அரசை பாராட்ட வேண்டும் (பல அரசியல் காரணங்கள் இருந்த போதிலும்).......
(சர்வஜன பற்றி நிறைய சொல்லாம் ; அனா எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்)
(எல்லா கவிதைகளும் விக்கி யில் இருந்து தான் எடுத்தேன்)
6 comments:
பிரஸண்ட் ஸார்.
நல்ல பதிவு தல! :)
//சர்வஜன பற்றி நிறைய சொல்லாம் ; அனா எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்
LOL. :))
நிறைவான தேடல் மேவி.நிறையவே வாசிக்கிறீர்கள்.பகிர்ந்தும் கொள்கிறீர்கள்.நல்லது.சில நம்பிக்கைகள்தான் வாழ்வை நகர்த்திப் போகிறது.
அது என்ன "டம்பி"?
நல்ல விஷயத்த படிச்சு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பா
//"குடிக்காரனோ, மது விற்பவனோ ஓர் பன்றியை விட கேவலமானவன்" என்று பொருள் வருகிறது. தமிழ் நாட்டில் அரசே டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மக்கள் மத்தியில் குடியை பரப்பி வருகிறார்கள்.//
என்னாது நாமெள்ளாம் பன்னியா!?
”பெரியார் தான் முதல் பகுத்தறிவு வாதியா?” என்பது பற்றி என் இடுகையில்
1. உலக பயங்கரவாதம்
2. பெரியார் தான் முதல் பகுத்தறிவு வாதியா?
3. தமிழ் சமயம்
4. நான் மரத்தமிழன்.
Post a Comment