Pages

Friday, August 21, 2009

அழகு... காதல்...பணம்...கடவுள் ?

ஹேமா போன்ற வாழ்வியல் சிந்தனையாளர் என்னை போன்ற மொக்கை சாமியை இந்த தொடர் பதிவுக்கு அழைத்து : ரொம்ப சந்தோஷமாய் இருக்கு


1)அழகு என்பது என்ன ?நிரந்தரமானதா ?
அழகு என்ற சொல்லை நாம் தவறாக புரிந்து வைத்து இருக்கிறோம். புற அழகு எல்லாம் அழகு அல்ல ; அகம் சார்ந்த அழகே அழகாகும், அது நிரந்தரமானது தான்.


அழகு என்பது மனிதர்களின் தோற்றம் மட்டும் இருப்பதில்லை. அது உலகத்தில் உள்ள அனைத்திலும் இருப்பது. மனிதர்களின் அழகு தான் அழகு என்று எண்ணம் கொண்டவர்கள் ஏதோ ஒரு விதத்தில் சுய-நலம் கொண்டுவர்களே.


2)காதல் மனிதனுக்கு அவசியமா ?

wikipedia வில் காதல் என்ற சொல்லுக்கு அவர்கள் தந்துள்ள் அர்த்தம் "காதல் என்பது மனிதர்களுக்கிடையே பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை.

பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டலும், அவற்றின் பொருள் வேறுபட்டது."

ஆண்-பெண் இடைய தோன்றும் காதல் மட்டும் காதல் இல்லை. காதலுக்கு இன்னும் பல்வேறு முகங்கள் இருக்கிறது ; ஆனால் மனிதனுக்கு அவை தேவை இல்லாததால் அவன் அதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.
காதல் என்பது மனிதனுக்கு அவசியமானது தான். ஆனால் விஷயம் என்வென்றால் நிறைய பேருக்கு காதல் என்றால் என்ன என்று தெரிவதில்லை.


காமம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்வோரும் உண்டு ;என்னை கேட்டால் காதலின் ஓர் பகுதி தான் காமம். (வெறும் உடல் உறவு மட்டும் காமம் இல்லை என்பது பல Sexologist களின் கருது).


உணர்களை மதித்தல் என்று இருந்த காதல் இன்று உணர்வுகளை மீதித்தல் என்று ஆகிவிட்டது.......

இப்பொழுதைய தேவை காதல் என்பதின் பொருள் தான். அதன் அர்த்தம் தெரியாமல் தான் காதல் அவசியமானதா என்ற விவாதம் வந்து இருக்கிறது........


3)கடவுள் உண்டா ?

கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை ; ஏனென்றால் கடவுள், பக்தி என்ற விஷயம் எல்லாம் என் மேல் திணிக்க பட்ட ஒன்றாக தான் இருந்துள்ளது. ஆதனால் கடவுளை பற்றி பெருசா எந்த ஒரு எண்ணமும் என்னிடத்தில் இல்லை.ஆனால் நிறைய படித்து இருக்கிறேன்.

எனக்கு சிறு வயது முதலே எது கடவுள் என்ற குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எனக்கு தெரிந்து எல்லா மதங்களும் கடவுளை தான் எல்லாவற்றுக்கும் முலம் என்று கூறுகிறது. ஆனால் அந்த கடவுளின் முலம் எது என்ற என் கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.

ஹிந்து மதத்தை எடுத்து கொண்டால் முருகனுக்கு தந்தை சிவன், சிவன் ஆதி சக்தியில் இருந்து வந்தாக நான் கேள்வி பட்டு இருக்கிறேன்; ஆனால் அந்த ஆதி சக்தியின் முலம் எது ????

சரி. கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறார் என்று கொக்க்மக்கு பதில் சொல்வார்கள் கடவுளின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியாத கடவுள் நம்பிக்கை கொண்டவார்கள்.

எனக்கு தெரிந்து எது கடவுள் என்று இன்னும் மக்களிடையே ஓர் தெளிவு வரவில்லை என்றே நினைக்கிறேன். எல்லா மதங்களும் கடவுள் ஒருவரே என்று கூறுகின்றன ஆனாலும் எல்லா மதங்களுக்கும் தனி தனியே கடவுள்களை வைத்து வியாபாரம் செய்த படி தான் இருக்கின்றன.

போய் சேரும் இடம் கடவுள் தான் என்று தெரிந்து விட்ட பின் மதங்களும் ஜாதிகளும் முக்கியமா ???? கடாவுளை சேரும் வழி என்று கூறும் மதங்கள் முக்கியமா ????

எனக்கு தெரிந்து யாருடைய நம்பிக்கைகளும் அவர்களுக்கு அடையாளமாகி போகாது. ஆனால் இந்த கடவுள் நம்பிக்கை மட்டும் எப்படி ஒருவரின் அடையாளமாகி போனது என்று எனக்கு தெரியவில்லை.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எப்படியும் இறந்த பின் எல்லோருக்கும் தெறிந்து விட போகிறது; பிறகு ஏன் மாற்று கருது உடையவார்களை இப்படி இம்சை பண்ணுறாங்க ன்னு தான் தெரியல ....... பலரின் நம்பிக்கை படி பார்த்தால் எப்படி இருந்தாலும் கடவுள் மன்னித்து விடுவர்; பிறகு என்ன கவலை .....

தெளிவு பெறவும் மக்களை நம்பிக்கை தரவும் சமுதாயத்தை மென் படுத்தவும் கடவுள் என்ற ஒரு விஷயத்தை கொண்டு வந்தார்கள் என்றால் ; அது அனைத்தும் இன்று கடவுள் இல்லாமலே நடக்கிறது. இன்றைய உலகத்தில் கடவுளுக்கு அருளிப்பதை தவிர வேறு எந்த வேலையும் இல்லை.

சரி மேட்டர் க்கு வருகிறேன்
சீனா நாட்டு பழமொழி "கடவுளை நீ உணரும் பொழுது ; நீயும் அவனில் ஒருவனாய் இருப்பாய்." என்று கூறுகிறது ......... அதனால் கடவுள் என் முன் தோன்றினால் ; கடவுள் இருக்கிறார் என்று ஒத்து கொள்வேன் ; அப்பொழுதும் அவர் மேல் எனக்கு நம்பிக்கை வராது.

நம்பிக்கையற்ற இந்த உலகத்தில் சிலருக்கு கடவுள் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்றால் ; கட்டாயம் கடவுள் நம்பிக்கை தேவை அந்த மாதிரி ஆளுகளுக்கு.

4)பணம் அவசியமா ?

பணம் பற்றி தெரிய வேண்டுமானால் பொருளாதரத்தை பற்றி நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளுக்கு தேவை அதிகரிக்கும் பொது தான் அதனை அடைய ஒருவன் பெரும் கஷ்ட பட்டு முயற்சிகளை எடுக்கிறான். அந்த முயற்சிகளை பலன் அளித்தாலும் சில காயங்களை விட்டு செல்கிறது.

பணம் தேடல்களின் ஒரே குறிக்கோள் வாழ்வின் சந்தோசம் தான். ஆனால் வாழ்க்கை முழுவதும் பண தேடலுக்கு தான் நம்முடைய நேரத்தை செலவு செய்து விட்டு வாழ்வின் கடைசி நாட்களில் வருத்த பட்டு கொண்டு இருக்கிறோம். பண தேடல்கள் எல்லாம் வாழ்வின் சதோஷங்களின் அழிவில் தான் இருக்கிறது.

பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஆனால் அது நம்முடைய சந்தோஷங்களை பதிக்காமல் பார்த்து கொள்வோம். பணத்தின் தேவையை தீர்மானிக்கும் உரிமை நம்ம கிட்ட தான் இருக்கு.

================================================

நான் இந்த கேள்வி-பதில் தொடருக்கு அழைப்பது...

வால்பையன்

கார்த்திக்

கார்த்திகை பாண்டியன்

9 comments:

தேவன் மாயம் said...

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எப்படியும் இறந்த பின் எல்லோருக்கும் தெறிந்து விட போகிறது; பிறகு ஏன் மாற்று கருது உடையவார்களை இப்படி இம்சை பண்ணுறாங்க ன்னு தான் தெரியல //

மேவி!! பெரிய விசயத்தை எளிமையா எடுத்துச் சொல்லியிருக்கீர்..

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்க பதில்கள் அருமை.. அழைப்புக்கு நன்றி.. கூடிய சீக்கிரம் எழுதுறேன்..

Karthik said...

என்ன தல, அறிவிப்பே இல்லாம இப்படி அதிர்ச்சி கொடுக்குறீங்க? ட்ரை பண்றேன். :)

நல்ல பதிவு. :)

வால்பையன் said...

எல்லா கேள்விக்கும் அழகா பதில் சொல்லியிருக்கிங்க!
உங்க அளவுக்கு என்னால சொல்லமுடியுமான்னு தெரியல!
முயற்சி பண்றேன்!

ஹேமா said...

மேவீ எப்பிடீ ஆச்சு இப்பிடி.
அத்தனையும் அருமையான விளக்கங்கள் நான் என் எளிய நடையில் என் அனுபவத்தை மட்டுமே சொல்லியிருந்தேன்.இப்படி விளக்கம் தரத் தெரியவில்லை.
ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் தெளிவா இருக்கு.எது நல்லது எது கூட நல்லதுன்னு போட்டி போடுது.நன்றி மேவீ.
பாராட்டுக்களும்கூட.

அதென்ன சொல்லி வச்ச மாதிரி நீங்களும் ரவியும் வால்பையனையும்,ஆனந்தும் நீங்களும் கார்த்திகைப் பாண்டியணையும் கூப்பிட்டு இருக்கீங்க.யார் முந்திப் பிந்தி கொப்பி அடிச்சீங்க.சரி பரவாயில்ல.இன்னும் இரண்டு பேரின் பெயர்களை இணைச்சிடுங்க.சரியாப்போயிடும்.

RAMYA said...

அருமையான பதில்கள்.

அசத்தல் பதில்கள் என்றும் கூறலாம்.

யோசிக்க வைக்கும் விளக்கங்கள்!

MT said...

Beauty - your point taken.

Love - its just x chromosome y chromosome xy yx xx yy chromosomes
You are a commerce student.. but still its nothing more than a reaction towards the opposite sex.

God - Hinduism actually doesnt say that Siva is Muguran's dad. Because in northern India there is no worship for Muguran. What it actually says "look for god inside you". Now what is god? It is a mere act(s) of God which makes us God.

Money: Its more than anything else in the world!

மேவி... said...

elorukkum thanks ppaa

- இரவீ - said...

விளக்கம் நல்லா இருக்கு ....

அகாராதிஎல்லாம் பாத்து - யம்மாடி கலக்குங்க ...

Related Posts with Thumbnails