Pages

Friday, August 28, 2009

கலவை

நேற்று இரவு ஒரு பிரபல பதிவாளர் தொலைபேசினார்; அவருடைய புரட்சிகாரமான பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பேசி கொண்டே இருக்கும் பொழுது அவர் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு சோகத்தை சொன்னார் எனக்கு ரொம்ப வருத்தமாய் போயிருச்சு. பதிலுக்கு நான் என் வாழ்க்கையில் நடந்த விபத்தையும் அதன் விளைவையும் சொன்னேன். ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை; வழக்கமாய் அதை பற்றி யாரிடமும் பேச மாட்டேன்.

பேச்சின் முடிவில் அந்த பிரபலம் சொன்னார் "நடந்தது எல்லாம் நன்மைக்கே" .......

பிறகு நகைச்சுவை மன்னன், மதுரை சூப்பர் ஸ்டார், தென்னகத்து சுனாமி, இலக்கிய புயல் திரு. கார்த்திகை பாண்டியன் தொலைபேசினார். பிறகு மகிழ்ச்சியாய் உறங்கினேன்.

==================================================================

"v for vendetta" என்ற படத்தின் dvd பல தமிழ் டைரக்டர்கள் வாங்கி இருப்பதால் ; தமிழ்யில் இன்னும் பல சூப்பர்-ஹீரோ படங்களை எதிர்பார்க்கலாம்.

=================================================================

Uncle Tom's Cabin என்ற நாவல் அமெரிக்க அடிமைகளின் வாழ்க்கையை பற்றி எழுதப்பட்டது. மனித உணர்ச்சிகளை முதன்மை படுத்தி எழுதிருக்கிறார் Harriet Beecher Stowe. இந்த நாவல் ஆபிரகாம் லிங்கன் ஆட்சி காலத்தில் வெளி வந்தது; வந்த பிறகு ஒரு மாபெரும் எழுச்சியை உண்டாக்கியது அரசியல் களத்தில். இது குறித்து Harriet யை ஆபிரகாம் சந்தித்த பொழுது சொன்ன "So this is the little old lady who started this new great war!" மிகவும் பிரபலம்.

===============================================================

ஆங்கில நாவல் படிக்க ஆரம்பிக்க Sherlock Holmes ல இருந்து ஸ்டார்ட் பண்ணின ஈஸியாக இருக்கும்.
================================================================

சமீப காலமாய் RHINNA பாடிய UNFAITHFUL அடிக்கடி கேட்கிறேன் ; வாய்ப்புகளே இல்லை, அவ்வளவு அருமையான குரல். அதை விஜய் அந்தோனி "காதலில் விழுந்தேன்" படத்தில் டூயட்யாக்கி கொலை செய்து இருப்பார்.
==============================================================

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் முன்னாடி ஒரு பிரிட்டிஷ் ராஜாவின் சிலை ஓன்று இருக்கிறது. அது யார் என்னன்னு ஒரு பெயர் கூட இல்லை. அப்படியே இருந்தாலம் படிக்க முடியவில்லை. சிலை வைத்தவர்கள் மக்களுக்கு சரித்திர அறிவு தேவை இல்லை என்று எண்ணி விட்டார்களோ ??????

==============================================================

ஸ்பேன்சர் பிளாசாவில் சரவண பவன் அருகே இருக்கும் கான்டீன் ஒன்றில் பொங்கல் நல்ல தரமாகவும் சுவையாகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. நேற்று தான் சுவைத்தேன்.
==============================================================

எழுத்தாளர் மருதனின் பிளாக்யை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க.

=============================================================

அடுத்த பதிவில் Recession ல கையாளப்படும் மார்க்கெட்டிங் முறைகளை பற்றி எனக்கு தெரிந்ததை எழுதலாம்ன்னு இருக்கிறேன்.

================================================================

16 comments:

நட்புடன் ஜமால் said...

ரொமாண்ட்டிக் ஆங்கில நாவல்கள் டைட்டில் கொஞ்சம் சொல்லுங்களே

எளிமையான நடையில் இருந்தால் இன்னும் சுகம்.

மேவி... said...

@ jamal :

"the flame and the flower"

illati

"heart of wolf"

தாரணி பிரியா said...

cement konjam jastiya irukku pola :)

தாரணி பிரியா said...

//ஆங்கில நாவல் படிக்க ஆரம்பிக்க Sherlock Holmes ல இருந்து ஸ்டார்ட் பண்ணின ஈஸியாக இருக்கும்.//

naan ippothan a b c d ye padikka arambichu irukken :) naan enna seiyyarathu ?

வால்பையன் said...

பீட்டரு, கொஞ்சம் புரியற சப்ஜெக்டா சொல்லுப்பா!

கார்க்கிபவா said...

//ஆங்கில நாவல் படிக்க ஆரம்பிக்க Sherlock Holmes ல இருந்து ஸ்டார்ட் பண்ணின ஈஸியாக இருக்கு//

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.. :))

கார்த்திகைப் பாண்டியன் said...

//நகைச்சுவை மன்னன், மதுரை சூப்பர் ஸ்டார், தென்னகத்து சுனாமி, இலக்கிய புயல் திரு. கார்த்திகை பாண்டியன் தொலைபேசினார். //

ஏதும் வடை டீ வேணும்னா கேளுப்பா.. அதுக்காக ஏன் இப்படி எல்லாம்.. நான் பச்சைக் கொழந்தையா.. என்ன விட்டுடுங்க..

//v for vendetta" என்ற படத்தின் dvd பல தமிழ் டைரக்டர்கள் வாங்கி இருப்பதால் ; தமிழ்யில் இன்னும் பல சூப்பர்-ஹீரோ படங்களை எதிர்பார்க்கலாம்.//

:-)))))

//எழுத்தாளர் மருதனின் பிளாக்யை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. //

பகிர்தலுக்கு நன்றி

Karthik said...

//கார்க்கி said...
//ஆங்கில நாவல் படிக்க ஆரம்பிக்க Sherlock Holmes ல இருந்து ஸ்டார்ட் பண்ணின ஈஸியாக இருக்கு//
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.. :))

ரிப்பீட்டேய்ய்ய்! :))

Karthik said...

நல்ல பதிவு மேவி...:)

நட்புடன் ஜமால் said...

"the flame and the flower"

illati

"heart of wolf"


இரண்டு தான் தேரிச்சா ராஸா

புக் டைட்டில் என்று இல்லை

ஆத்தர் டைட்டிலும் தரலாம்

Barbara Cartland மாதிரி ...

- இரவீ - said...

நல்லா கலவை போடுறீங்க அப்பு ...
கட்டுங்க - வீடு கட்டுங்க ....

ஹேமா said...

மேவீ,எனக்கு ஒன்றுமே புரிஞ்சமாதிரி இல்ல.ஒன்று மட்டும் உண்மை.
"நடப்பது எல்லாமே நன்மைக்குத்தான்."

kanagu said...

கலவையா நல்லா கலக்கி இருக்கீங்க தலைவா :))

/*"v for vendetta" என்ற படத்தின் dvd பல தமிழ் டைரக்டர்கள் வாங்கி இருப்பதால் ; தமிழ்யில் இன்னும் பல சூப்பர்-ஹீரோ படங்களை எதிர்பார்க்கலாம்.*/

இன்னும் பலவா... தாங்காதுடா சாமி..

/*சிலை வைத்தவர்கள் மக்களுக்கு சரித்திர அறிவு தேவை இல்லை என்று எண்ணி விட்டார்களோ ??????*/

சிலை இன்னும் இருக்கே-னு சந்தோஷபடுவேங்களா.. அத விட்டுபுட்டு...

/*ஸ்பேன்சர் பிளாசாவில் சரவண பவன் அருகே இருக்கும் கான்டீன் ஒன்றில் பொங்கல் நல்ல தரமாகவும் சுவையாகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. நேற்று தான் சுவைத்தேன்.*/

நாளை ஸ்பென்சர் செல்கிறேன்... சுவைத்து விடுகிறேன் :)))

அருள்மொழியன் said...

டம்பி மேவீ

சும்மா சொல்லக்கூடாது, கலக்குகிறீர் போங்க‌

Thamira said...

வெரைட்டியா துணுக்குச் செய்திகள் மாதிரி தந்திருக்கிறீர்கள்.. நல்லா இருக்குது.!

Cable சங்கர் said...

/RHINNA பாடிய UNFAITHFUL அடிக்கடி கேட்கிறேன் ; வாய்ப்புகளே இல்லை, அவ்வளவு அருமையான குரல். அதை விஜய் அந்தோனி "காதலில் விழுந்தேன்" படத்தில் டூயட்யாக்கி கொலை செய்து இருப்பார்.//

அந்த க்கொடுமைய ஏன் ஞாபக படுத்துறீங்க..

Related Posts with Thumbnails