கொஞ்ச நாள் முன்னாடி கலைஞர் டிவி ல வந்துச்சுன்னு நினைக்கிறேன், அப்ப பார்க்க முடியாம போயிருச்சு. ஆனா பாருங்க நேத்து youtube துளாவிட்டு இருக்கும் போது இந்த குறுங் படத்தை பார்த்தேனுங்க. செமைய இருந்துச்சு. கதை ஒரு மாதிரி Nonlinear narrative style ல இருந்தாலும் சொன்ன விதமும் வசனங்களும் அருமையா இருந்துச்சு.
அதிலும் கதையை சொல்லிக்கிட்டு போற அசாமி ஓட ஸ்டைல் நல்ல இருக்கு.
முக்கியமா இதை பத்தி நான் ஏன் சொல்லுறேன்ன .....என்னோட கல்லூரி வாழ்க்கையை எனக்கு ஞாபக படுத்திருச்சு. நானும் இந்த படத்துல வர குண்டு பையன் மாதிரி தான் சினிமா, டி, புத்தகங்களுக்கு ஆகுற செலவுக்காக எவனையாச்சு உசுப்பேத்தி காசை பிடுங்குவேன். ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இதுல என்னோட டார்கெட்க்கு பெண்களும் தப்ப மாட்டாங்க. இப்படி பண்ணிக்கிட்டு இருந்த என்கிட்டையே ஒருத்தன் பிட்டு ஒட்டியும் இருக்கான். (இப்ப அவன் பில் கேட்ஸ் க்கு குஜா துக்குர வேலைல இருக்கான்).
சரி மேட்டர் க்கு வருவோம் ....முக்கியமா ஒரு விஷயம் ஒரு புது படம் வந்த பதிவாளர்கள் எல்லோரும் அதுக்கு விமர்சனம் பண்ணுறாங்க ...அதே போல ஒரு குறுங் படதக்கும் விமர்சனம் எழுதினாங்க ன்ன நல்ல இருக்கும். முக்கியமா அவர்களுக்கு இன்னும் சப்போர்ட் யாக இருக்கும்.
சின்ன சின்ன உணர்வுகளை கூட அழகாய் சொல்லிருவாங்க இந்த மாதிரி குறுங் படத்தை எடுக்கிறவர்கள். கேபிள்ஜி அப்பப்ப இந்த மாதிரி படத்தை அறிமுகம் செய்வாரு. ஆனா detail ஆ எழுதுவாரான்னு தெரியல.
சரி இன்னும் நிறைய சொல்லலாம் ..ஆனா எனக்கு தான் டைம் இல்லை....
இந்த எடுத்தவர் இன்னும் பெரிய அளவுக்கு வளர வாழ்த்துகிறேன் ..... இந்த படத்தை பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
டிஸ்கி - இந்த மாதிரியான குறுங் படங்களுக்கு நிறையவே demand இருக்கு.....virtual education system பரவி கொண்டிருக்கும் இந்த காலத்தில் பாடங்களை எளிய முறையில் மாணவர்களுக்கு புரிய வைக்க இந்த மாதிரி குறுங் படங்கள் மிக முக்கியம்...
2 comments:
நல்ல முயற்சி மேவீ.ஆனா இதை ஏத்துக்கணும் யூத்துங்க !
மேவீ... என்னோட முதல் பதிவ பாத்தீங்களா? சரி உங்க நம்பர் கேட்டேனே என்ன ஆச்சு
Post a Comment