ஹாய் மக்கள்ஸ் எப்புடி இருக்கீங்க. புது வேலைல ரொம்ப பிஸி ஆகிட்டேன். இப்ப இருக்குற கம்பெனில என்னோட dept புதுசா ஆரம்பிக்க பட்டது. அதனால தினசரி பாம்பே ல இருந்து செம pressure வந்துக்கிட்டே இருக்கும். பிறகு பழைய கம்பெனி மாதிரி இல்லாம இங்க எல்லா வெப்சைட்யையும் block பண்ணிருக்காங்க. ஒரு இலக்கியவாதிக்கு என்ன என்ன சோதனை வருதுன்னு பார்த்தீங்களா ???? நான் பிரபலம் ஆவுறது யாருக்கோ பிடிக்கல போல் இருக்கு.
= = = = =
கொஞ்ச நாளா என்னோட பைக்க்கு Shell petrol போட்டுக்கிட்டு இருக்கேன். ஆனா விசாரிச்சு பார்த்த, அந்த PETROL போட்ட கூடாதுன்னு சில பேரு சொல்லுறாங்க. ஆனா ஆபீஸ்க்கு போகும் போது அந்த பங்க் தான் வசதியா இருக்கு. இன்னொரு விஷயம் சொல்லிய ஆகணும், SERVICE செமைய இருக்கு. ரொம்ப மரியாதைய நடந்துக்குரங்க.
= = = = =
அல்லையன்ஸ் பதிப்பகம் மைலாப்பூர் ல இருக்கே, அந்த கடைல சும்மா போய் பார்த்தேன். சரி போயாச்சே வெறும் கையோட வர கூடாதேன்னு நம்ம மெரினா எழுதின "நாடகம் போட்டு பார்" புத்தகத்தை வாங்கிட்டு வந்தேன். சலிசு விலை தான். Amateur Drama போடுவதற்கு முன்னாடி அந்த டிராமா டைரக்டர் என்ன என்ன படு படுகிறார்ன்னு சொல்லிருக்காரு. அவரோட சொந்த சோக கதையாக கூட இருக்கலாம். ஒரு மாதிரி அனுபவ கட்டுரை மாதிரி இருக்கு.
= = = = =
சமீபத்துல பைத்தியக்காரன், வினவு தோழர்கள் எழுதின பதிவுகளையெல்லாம் நானும் படிச்சேன், ஆனா நரசிம் எழுதின பூக்காரி பதிவை அதற்குள் நரசிம் அதை delete பண்ணிட்டாரு. சரின்னு GOOGLE READER ல அந்த பதிவை தேடி பிடிச்சு படிச்சேன். புனைவு என்றெல்லாம் சொல்ல முடியாது. நேரடி தகுதல் மாதிரி தான் எனக்கு தெரிஞ்சுச்சு.
சந்தனமுல்லை மற்றும் நரசிம் ஆகிய இரண்டு பேரோட எழுத்துகளுக்கும் நான் பெரிய ரசிகன். நர்சிம்க்கு சந்தனமுல்லை மேல என்ன கோவம்ன்னு எனக்கு தெரியல. என்ன பிரச்சனைன்னு கூட எனக்கு தெரியாது. ஆனா நரசிம் அந்த மாதிரி எழுதிருக்க கூடாது. அவரோட தகுதிக்கு இந்த மாதிரியெல்லாம் எழுதிருக்க கூடாது.
இதுக்கு மேலையும் நிறைய சொல்லிருப்பேன், ஆனா அதுக்கு எனக்கு தகுதிருக்கான்னு தெரியல.
நானும் நிறைய அசிங்கமான கதைகள், படம்கள்ன்னு நிறைய பார்த்து இருக்கேன், ஆனா யாரையும் தவறான பார்வையில் பார்த்ததில்லை.
என்னைவிட நர்சிமுடைய மிக பெரிய ரசிகனாகிய எனது நண்பன் பிரபு மாமா தான் ரொம்ப நொந்து போயிட்டான்.
இதுல இருந்து ஒன்னே ஒன்னு தான் கத்துகிட்டேன்..... கோவத்துல இருக்கும் போது எந்த பதிவையும் எழுத கூடாதுன்னு.
= = = = =
என்னோட உண்மையான பெயர் வந்து ஒரு ஹிந்து கடவுளுடைய நேரடி பெயராக இருப்பதால் தான் நான் மேவின்னு எனக்கு நானே ஒரு பெயரை வைச்சுகிட்டேன். ஒரு வாட்டி கார்க்கி ஏதோ ஒரு பின்னூட்டத்துல தம்பி மேவின்னு சொல்லுறதுக்கு பதிலா டம்பி மேவின்னு சொல்லிடாரு....சரி இதே நல்ல இருக்குன்னு அந்த பெயரையையே வைச்சுகிட்டேன்.
= = = = =
புது ஆபீஸ் ல எல்லோரும் ஒரே age group தான். அதுவும் என்னோட டீம் ல இருக்கிற எல்லோருக்கும் ஆள் இருக்கு. எனக்கு மட்டும் தான் ஆள் இல்லை. நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது??? அழகான பெண்களை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு காதலன் இருக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன், ஆனா சாயங்காலம் ஆன காதுல வளையம் மாட்டின எதாச்சு ஒரு பையன் அவளுக்காக ஆபீஸ் க்கு வெளில காத்து இருப்பான்......
அதை வைச்சே எல்லோரும் என்னை ஓட்டிகிட்டு இருக்காங்க. பிறகு ஆபீஸ் ல நான் சொல்லுற oneliners செம பிரபலம்.
= = = = =
வீட்டுல கல்யாண பேச்சை ஆரம்பிச்சுடாங்க...... ECR ரோட்டுல பைக் ல கட்டிபிடிச்சு ஜோடியாக போகமலே கல்யணம் ஆகிருமோன்னு பயமா இருக்கு.
வீட்டு ல ஒரு பொண்ணு யை fix பண்ணிருக்காங்க போல் இருக்கு. அவளை பார்க்கனும்ன்னு ஆசைய இருக்குன்னு கார்த்திகை பாண்டியன் கிட்ட சொன்ன .....அதுக்கு அவரு " வேண்டாம்னே ..... கல்யாணத்துல பொண்ணு கர்பமா இருந்த நல்லவ இருக்கும்" ன்னு சொல்லுறாரு.... என்ன கொடுமை மேவி இது .........சார் ...நான் பெண்ணை பார்க்கணும்ன்னு தான் சொன்னேன் .......
= = = = =
கடைசியா சுறா, ரெட்டை சுழின்னு இரண்டு படம் தான் பார்த்தேன்... முடியல இரண்டும் செம மொக்கை சுறா படத்துல விஜய் கையை பின்னாடி கட்டிக்கிட்டு நடக்குறார், அது தான் படத்துல அவரு பண்ணிருக்கிற ஒரே புது விஷயம். தமன்னாவுக்கு பல dress suit ஆகல.
= = = = =
நேத்து பதிவர் சந்திப்புக்கு போகணும்ன்னு தான் இருந்தேன்.... ரொம்ப tired ஆகா இருந்ததால் போகல.
= = = = =
வெயிலை குறைக்க நிறைய மரம் வளருங்க.... ஆனா நம்ம என்ன செய்றோம் ??? மரங்களை வெட்டி வீடுகளை கட்டிக்கிட்டு இருக்கோம். BASIC SCIENCE படிச்சவங்களுக்கு தெரியும் ..... eco balance ன்னு என்னன்னு. நிறைய oxygen க்கு நிறைய மரம் வளர்க்க வேண்டும்ன்னு. ஆன சென்னை சிட்டி ல பாருங்க ....... வண்டிககளில் இருந்து வரும் புகையை சமாளிக்க நமக்கு தேவையான மரங்கள் இல்லை. இந்தியாவுல காட்டு பகுதி குறைஞ்சுகிட்டே வருதுன்னு எங்கையோ படிச்சேன் .....
இப்படியே போன நீங்க தான் வயசான காலத்துல கஷ்ட பட போறீங்க.
= = = = =
பரிசல்காரர் போன் நம்பரை மாத்திடாராம்... இப்ப தான் மெசேஜ் வந்துச்சு.
= = = = =
-
8 comments:
கோபமாக இருக்கையில் பதிவு மட்டுமல்ல எல்லாவற்றிலிருந்துமே சற்று விலகி இருத்தல் நலம்.
மெட்ச்சூயுர்ட் (நான் நினைத்தேன் இப்படி) பீபிள் இப்படி செய்திருக்க கூடாது - இது சொல்லவே எனக்கு தகுதியிருக்கான்னு தெரியலை.
எல்லாம் முடிந்து சகஜ நிலைக்கு அனைவரும் திரும்பனும் - இதுவே எம் பிரார்த்தனை.
//
வீட்டுல கல்யாண பேச்சை ஆரம்பிச்சுடாங்க...... ECR ரோட்டுல பைக் ல கட்டிபிடிச்சு ஜோடியாக போகமலே கல்யணம் ஆகிருமோன்னு பயமா இருக்கு///
கண்ணாலம் பண்ணிக்கிட்டு ஜோடியா அப்படி போய் பாருங்க தல. அருமைய இருக்கும்
ஆமாம் தல எஸ்ரா தளத்தில் கூட ஏதோ வைரஸ் பிரச்சனைனு சொன்னாங்க. இலக்கிய வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம் போல.
உங்க கிட்ட மரியாதையா நடந்துக்காம ஒருத்தன் சென்னைல பங்க் நடத்த முடியுமா? ஆள் யாருனு மட்டும் சொல்லுங்க. மத்தத நான் பார்த்துக்கறேன்.
கார்க்கி வீட்டில் ஒரு போர்டு மாட்டிடலாம். இவ்விடம் நல்ல பிளாக்கர் ஐடிகள் தரமான முறையில் செய்து தரப்படும்.
ஆன்லைனர்ஸா? ஒன் லைனர்ஸா? :) பிக் அப் லைன்ஸ்ல கலக்கினா யாரையாவது கரெக்ட் பண்ணலாம்.
//ஆமாம் தல எஸ்ரா தளத்தில் கூட ஏதோ வைரஸ் பிரச்சனைனு சொன்னாங்க. இலக்கிய வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம் போல.//
கார்த்தி.. வேணாம்.. அழுதிடுவேன்..
//இதுல இருந்து ஒன்னே ஒன்னு தான் கத்துகிட்டேன்..... கோவத்துல இருக்கும் போது எந்த பதிவையும் எழுத கூடாதுன்னு.//
:-((((
//சாயங்காலம் ஆன காதுல வளையம் மாட்டின எதாச்சு ஒரு பையன் அவளுக்காக ஆபீஸ் க்கு வெளில காத்து இருப்பான்......//
இது மேவீ பன்ச்.. நைஸ்..
//வீட்டுல கல்யாண பேச்சை ஆரம்பிச்சுடாங்க......//
யாரு அந்த பாவப்பட்ட பொண்ணோ? அவங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..:-))))
என்ன கொடுமை மேவி இது .........!
கொஞ்சம் உடம்பையும் மனசையும் தேத்திக்கோங்க !
எல்லோர் கமெண்ட்ஸ்க்கும் ஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்..:))
//ஆபீஸ் ல நான் சொல்லுற onliners செம பிரபலம்.//
இப்படி எதாவது பண்ணா தான் பிரபலம் ஆக முடியும்னா எனக்கு வேண்டவே வேண்டாம் மேவி!
@ ஜமால் : ஆமா அண்ணே ..கோவமா இருக்குற போது எதுவுமே செய்ய கூடாது , எனக்கே பெரிய அதிர்ச்சியா தான் ல இருக்கு .... எல்லோரும் சகஜ நிலைக்கு வந்துட்டாலும் யாரவது பிரச்சனை மீது கல் ஏறியாமல் பார்த்துக்க வேண்ணும்
@ LK :
"கண்ணாலம் பண்ணிக்கிட்டு ஜோடியா அப்படி போய் பாருங்க தல. அருமைய இருக்கும்"
நல்ல தான் இருக்கும் பாஸ் ...இருந்தாலும் அந்த thrill இருக்காது ல ..திருட்டு மங்காய்க்கு தானே ருசி அதிகம்
@ கார்த்திக் :
Karthik said...
"ஆமாம் தல எஸ்ரா தளத்தில் கூட ஏதோ வைரஸ் பிரச்சனைனு சொன்னாங்க. இலக்கிய வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம் போல."
அட எஸ்ரா கூட இத பத்தி எதி போன் ல சொன்னாரு பா :)))))))))))))))
"உங்க கிட்ட மரியாதையா நடந்துக்காம ஒருத்தன் சென்னைல பங்க் நடத்த முடியுமா? ஆள் யாருனு மட்டும் சொல்லுங்க. மத்தத நான் பார்த்துக்கறேன்."
எத ...நான் அடி வாங்கு வதையா
"கார்க்கி வீட்டில் ஒரு போர்டு மாட்டிடலாம். இவ்விடம் நல்ல பிளாக்கர் ஐடிகள் தரமான முறையில் செய்து தரப்படும்."
பதிவுலகத்துல கார்க்கி வீடு எங்கப்பா இருக்கு ???
"ஆன்லைனர்ஸா? ஒன் லைனர்ஸா? :) பிக் அப் லைன்ஸ்ல கலக்கினா யாரையாவது கரெக்ட் பண்ணலாம்."
அப்ப DROP LINE ல கூட கலக்க வேண்டிருக்குமே :))))
@ கார்த்திகைப் பாண்டியன் :
"கார்த்தி.. வேணாம்.. அழுதிடுவேன்.."
ஆனந்த கண்ணீர் தானே பாஸ் ....கார்த்தி NO NO control yourself ...public ல இப்படியெல்லாம் உணர்ச்சிவச பட கூடாது
"யாரு அந்த பாவப்பட்ட பொண்ணோ? அவங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..:-))))"
அதை நான் உங்களுடைய மதுரை தோழிக்கு சொல்லணும் ......பாஸ் சீக்கிரம் வீட்டு ல உங்க விஷயத்தை சொல்லுங்க
@ ஹேமா : நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன் ...உடம்பு தான் ஏறவே மாட்டேனுங்குது
@ தாரணி ப்ரியா : எதாச்சு சொல்லிட்டு போங்க அக்கா ....
@ மஹா : ரைட்டு ...
@ வால்பையன் :
"இப்படி எதாவது பண்ணா தான் பிரபலம் ஆக முடியும்னா எனக்கு வேண்டவே வேண்டாம் மேவி!"
அது எனக்கு தெரியுமே ..நீங்க இலக்கியவாதி இல்லல .....அதான் இப்புடி சொல்லுதே
Post a Comment