Pages

Sunday, November 7, 2010

தினசரி வாழ்க்கைக்கு (DAILY LIFE ) இரண்டு வயசு


இதனால் எல்லோருக்கும் சொல்லிக்கிறது என்னன்னா நான் பதிவு எழுத வந்து இரண்டு வருஷம் ஆகபோகுதுங்கோ .... போகுதுங்கோ:). ரொம்ப ஆச்சரியமா இருக்கு : பதிவு எழுதுவதினால் நான் நிறைய நல்ல விஷயங்களை கத்துகிட்டு இருக்கேன். அதைவிட நிறைய நண்பர்கள் எனக்கு கிடைச்சு இருக்காங்க.

நான் எக்ஸாம் ல எழுதினதையெல்லாம் அதை திருத்துற வாத்தியாரே படிச்சு இருப்பாரா ங்கிறது சந்தேகம் தான். ஆனா நான் என்ன எழுதினாலும்(மொக்கை போட்டாலும்) ஏதோ பழகின தோஷத்திற்காச்சு படிச்சுட்டு "டேய் டம்பி, இவ்வளவு டம்மியா எழுதாதே..உருபடிய எதாச்சு எழுதுன்னு" சொல்லுறதுக்காச்சு கொஞ்சம் பேர் இருக்காங்கன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாயிருக்கு.

அமெரிக்காவுல இருந்தும், சுவிஸ் ல இருந்தும், லோக்கல் மதுரைல இருந்தும் என்னோட பதிவுகளை படிச்சிட்டு சிலபேர் நேசமா போன் பண்ணி பேசும் பொழுதெல்லாம் எவரெஸ்ட் அளவுக்கு சந்தோஷமா இருக்கும் : அதே சமயம் ரொம்ப பயமாகவும் இருக்கும். ஏன்ன இவங்களாவது அடுத்த பதிவுல மொக்கை போடமா உருபடிய எழுதணும் ங்குற பயம் தான். அதனால தான் கதாபாத்திரம் சிறுகதையை எழுதிட்டு வேறொன்னும் எழுதல. (இரண்டு சிறுகதை ரெடி ஆகிருச்சு (SCIFI ஒன்னு, மாயஜாலம் ஒன்னு). STORY PLOT பலபடுதுற வேலை நடந்துகிட்டிருக்கு

(தொலைந்த சொர்க்கம், மேவி...ஐ லவ் யூ ன்னு நான் எழுத ஆரம்பிச்சு, பிறகு தொடர முடியாமல் போன இரண்டு தொடர்கதை வேற பாதில அப்படியே இருக்கு)

)

நான் பதிவெழுத வந்த ஆரம்பத்துல நிறைய பேருக்கு பின்னோட்டம் போடணும்ன்னு சொன்னாங்க, இன்னொருத்தர் அவங்களுக்கு பின்னோட்டம் போட்ட தான் அவங்க நமக்கு பின்னோட்டம் போடுவங்கணும் சொன்னாரு. நானும் ஆரம்பத்துல சிலபலருக்கு பின்னோட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன், ஆனா பாருங்க அப்பரும் வேலை பளு காரணமா இப்பெல்லாம் யாருக்குமே பின்னோட்டம் போட முடியறது இல்லை. கிடைக்குற கொஞ்ச நேரத்திலும் ஏதோ கொஞ்சமாய் எழுத முடியுது. அதனால யாரும் என்னை தப்பாக நினைச்சிக்க வேண்டாம்ன்னு கேட்டுக்குறேன்.

இந்த சமயத்துல எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான தகவலை சொல்ல போறேனுங்கோ ( ஒபாமா இந்திய வந்திருப்பதையொட்டி இந்த தகவல் வெளியிடு) ..... அதுயேன்னா இனிமேல தினசரி வாழ்க்கை ல கொஞ்சம் இலக்கியத்தரமா எழுத போறேன், மொக்கை போடுறதெல்லாம் மேவியின் பகிர்வுகள் ல வைச்சுக்கலாம்ன்னு இருக்கேன். நான் இலக்கிய தரமா எழுதுறது மூன்றாம் உலக போர் வர காரணமாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை . BECAUSE SINCE CHILDHOOD WRITING WAS ALWAYS BEING MY PASSION...

இதுக்கு மேல சொல்லுறதுக்கும் ஒண்ணுமில்லை, இதோட முடிச்சுக்குறேன். இந்த பதிவை படிக்கிறவங்க முடிஞ்ச உங்களோட கருத்தை பின்னூட்டமாக சொல்லிட்டு போங்க.

= = = = =

டிவிட்டர் ல கூட நான் இருக்கிறேனுங்கோ. அதுல என்னைய பிடிக்க இங்க கிளிக் செய்ஞ்சு, என்னை பின் தொடருங்கோ ...

7 comments:

Anonymous said...

Congrats...

Karthik said...

Vazhthukkal thala. Ilakkiya tharamana pathivugal ethir parkurom. :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் மேவி..:-)))

அதே நேரத்துல மதுரைய லோக்கல்னு சொன்னதை வன்மையா கண்டிக்கிறேன்..

மேவி... said...

@ பிரேம்குமார் மாசிலாமணி : நன்றி தல (உங்க பேர் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு )

@ கார்த்திக் : நன்றி கார்த்திக் ...எதிர்பாருங்கோ நல்ல எதிர்பாருங்கோ

@ கார்த்திகை பாண்டியன் : சார் மதுரைக்கு போன் பண்ணின லோக்கல் கால்ன்னு செல் போன் சொல்லுது . ஐ ஜாலி எனக்கு முதல் கண்டிப்பு வந்துருச்சு ...இலக்கியவாதி ஆகிட்டேன்

ஹேமா said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் மேவீ.இடையிடை மொக்கையான பதிவுகள் தந்தாலும் சில சில பதிவுகள்,புத்தககங்கள் வாசிப்பின் அனுபவங்கள்,சில பழைய படங்களை விமர்சிக்கும் பதிவுகள் அருமை.தொடருங்கள்.

கார்த்தி,மகாவுக்கும் என் அன்பைச் சொல்லிவிடுங்கள் மேவீ.

எஸ்.கே said...

மென்மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்! மொக்கையா இருந்தா என்ன இலக்கியமா இருந்தா என்ன ரசிக்கும்படியா உங்கள் பதிவுகள் இருந்துள்ளன. வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்!

மேவி... said...

@ ஹேமா : ரொம்ப நன்றிங்க. கட்டயம் அவங்களை கேட்டதாக சொல்லிடுறேன்

@ எஸ்.கே. : கட்டாயம் ...... இனிமேல் கொஞ்சம் சீரியஸ் பதிவுகளை தான் (கலவையை தவிர்த்து)

Related Posts with Thumbnails