Pages

Showing posts with label பீலிங்க்ஸ் ஒப் இந்தியா. Show all posts
Showing posts with label பீலிங்க்ஸ் ஒப் இந்தியா. Show all posts

Tuesday, February 19, 2013

பாலியல் வன்முறை - ஆண்மை நீக்கம்



பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடுபவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய பட வேண்டும் என்று பரவலாக கருத்து சொல்லுறாங்க. சந்தோசம். ஆனா அந்த மாதிரி பாலியல் வன்முறை செய்றவன் கல்யாணமானவனா இருந்தா, அவனோட ஆண்மைல அவனோட மனைவிக்கும்  பங்கு / உரிமை இருக்குல. 

அப்படி பாலியல் வன்முறைல ஈடுபட்ட கல்யாணமான ஒருத்தனுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அவனது மனைவி இடம் அனுமதி கேட்பார்களா ??? கணவன் செய்த குற்றத்துக்காக மனைவிக்கு அவன் மூலம் கிடைக்கும் உடலுறவு இன்பங்கள் மறுக்க பட வேண்டுமா ??? அவள் என்ன பாவம் செய்தாள் ???

முக்கியமா நான் கேள்வி பட்ட வரைக்கும் ஆண்மை நீக்கம் என்பது குடும்ப கட்டுப்பாடு மாதிரி இல்லை. 

கொஞ்சம் யோசித்து பார்த்ததில் இந்த ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தால் பல சமூக சீர்கேடுகள் கிளை போல் வருமே, அதற்கு எல்லாம் அரசு பொறுப்பு ஏற்குமா ???

ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தை சரி / தவறு என்று எல்லாம் நான் பேசவில்லை... அப்படி பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு ரூம்ல கம்ப்யூட்டர் முன்னாடி உட்கரந்துகிட்டு எங்கையோ நடந்த குற்றத்தை பற்றியும், அதனால் பாதிக்க பட்ட மனிதர்களை பற்றியும் பேசுறது நியாயம் இல்லை. 

பாலியல் குற்றதுல ஈடுபட்டவன் கல்யாணம் ஆகாதவனா இருந்த ஒன்னும் பிரச்சனை இல்லை, கல்யாணம் ஆனவன் என்றால் .... இந்த தீர்ப்பினால் பாதிக்க பட போகும் அவனது மனைவியை பற்றியும் யோசிக்க வேண்டும்ன்னு தோணுது. அதுக்குன்னு கல்யாணம் ஆனவங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய கூடாதுன்னும் சொல்ல முடியல. 

ஒரு வேளை பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம் தான் தீர்ப்பு என்று முடிவானால், அது எல்லா பக்க நியாயங்களையும் யோசித்து எடுக்க பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.  

Monday, October 24, 2011

***கலவை*** - **கூகிள் பஸ்ஸில் பயணம் செய்தவை**

போற வழி எல்லாம் கோவம், பொறமை என்ற எச்சிலை துப்பிக் கொண்டே போனால், அதே வழியில் திரும்பி வரும் போது, நாம் துப்பிய எச்சில் தான் நம்மை வரவேற்கும். வாழ்க்கை வாழ்வதற்கே. கற்று கொள்வது, கற்று தருவதற்கே ::::

= = = =
கடைசி நாள்

அன்று தான் எங்களது கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள். பிரம்மை பிடித்தது போல் எல்லோரும் டி கடையில் உட்கார்ந்து இருந்தோம். வாழ்க்கையில் என்ன ஆவோம் ? மீண்டும் சந்திப்போமா ??? என்று எல்லோரும் கவலைப்பட்டு கொண்டிருக்க ::: நானோ அந்த கவலைகளோடு வேறொரு கவலையை பற்றியும் கவலை பட்டு கொண்டிருந்தேன். காதல் :::: அவள் :::: வேலை:::::எதிர்காலம் = கவலை

என்னை தவிர வேறு யாருக்கும் பலமான குடும்ப பின்னணி இல்லை. அதற்காகவும் கவலை பட்டு கொண்டிருந்தேன். என் எதிர்க்காலதுக்காக ஒரு சிற்பத்தை போல என் அப்பா என்னை செதுக்கி கொண்டிருந்தார். என் நண்பர்களுக்கு அப்படிப்பட்ட சிற்பி என்று யாருமில்லை.

கிண்டலும் கேலியுமாய் நேரம் கடந்து போன பின், எல்லோரும் நல்லவர்களாய் மாறி விட தீர்மானித்து, தூரத்தில் wine shop நோக்கி போனோம். ஒரு பீர், மற்றும் ஒரு நீளமான சிகரட்டும் வாங்கினோம் (இரண்டினுடைய பெயர்களும் இப்பொழுது நினைவில் இல்லை). மொத்தம் பதினாறு பேர் (என்னையும் சேர்த்து (யுவா மற்றும் அப்பாஸ் இருவரும் ரொம்ப படிப்ப்ஸ் என்பதினால் அவர்கள் இந்த கோஷ்டியில் சேர்த்து கொள்ளவில்லை))

ஆளுக்கு ஒரு இழுப்பு என்று என் பக்கத்தில் இருந்த பையன் சிகரட்டை பத்த வைத்தான். அடுத்தது என்னிடம் தருவான் என்று எதிர்க்கொண்டிருந்த நேரத்தில், அவனுக்கு அடுத்து இருந்த பையன் புகைக்க ஆரம்பித்தான். அப்படியே சுற்றில் போய், குருமூர்த்தி என்னிடம் சிகரட்டை தரும் போது கங்கு பஞ்சுக்கு பக்கத்தில் இருந்தது. புகைக்க உதடுகளில் வைத்து இழுத்த பொழுது, கண்கள் எரிந்தது. இருமினேன்.

அடுத்தது பீர் ::::: இந்த தடவை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்று தெரியவில்லை. பாதி அளவில் பீர் இருக்கும் பொழுது, பாட்டில் என்னிடம் வந்தது. சிறிது குடித்தேன். கஷாயம் போலிருந்தது. பிறவு வெளி வந்தோம். பிரிந்து போனோம்

இன்று வரையில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் ...எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பொருளாதார போராட்டத்தில் எனக்கு என்று அடையாளத்தை பெற்று விட்டேன். அதே போல் அவர்களும் அடையாளம் பெற்றார்களா ??? தெரியவில்லை. convocation :::: மேற்படிப்பு ; வேலை என்றாகி விட்டது அப்பொழுது. பார்க்க முடியவில்லை யாரையும் அப்பொழுது.

யுவாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அப்பாஸும் வெளிநாடு போய்விட்டான். தொடர்ப்பில் இருப்பார்களா என்று தெரியவில்லை.

அந்த பதினைந்து பெயர்களையும் சமூக இணையதளங்களில் தேடி தேடி பார்க்கிறேன்.... பார்த்து கொண்டிருக்கிறேன்..... அவர்களோடு நட்பை புதுபிக்க முடியாவிட்டாலும் கவலை இல்லை. அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே போதும் எனக்கு...

#டைரி குறிப்பு
Oct. 17, 2011

= = = =

அண்ணா நாமம் வாழ்க ; எம்ஜியார் நாமம் வாழ்க :::::: நாளை அவர்கள் நமக்கு போடபோகும் நாமமும் வாழ்க

= = = =

சிறு வயது நினைவுகள் :-

நிறைய விஷயங்கள் இருக்கு, இந்த விளம்பரத்தை பத்தி டைப்பிக்க. ஆனால் கண்களை முடி யோசித்து பார்த்தால் அழுகை தான் வருகிறது. சின்ன வயசுல அப்பா எங்களோட செலவு செய்ஞ்ச நேரம் ரொம்ப ரொம்ப கம்மி தான். அப்படி அவர் எங்களோட செலவு செய்த நேரங்களில், ஸ்கூட்டர் பயணங்களும் அடங்கும். நான் முன்னாடி நிற்க, அண்ணன் அப்பாவுக்கு பின்னாடி உட்கார்ந்து இருக்க ::::: அப்பா ஸ்கூட்டர் ஓட்டுவர். முகத்துல எதிர் காத்து அடிக்கும் போது, ஏதோ வானத்துல பறக்குற மாதிரியே இருக்கும். I miss it :(((

இன்று வரைக்கும் எங்க அப்பா மாதிரி, ஸ்டைலா யாரும் வண்டி ஒட்டி நான் பார்த்ததில்லை

= = = =

கல்லூரி படிக்கும் போது ::::: ஒரு பெண்ணை செமையா இம்ப்ரஸ் பண்ண வேண்டுமென்பதற்காக ரத்தத்தால் எடுத்திய காதல் கடிதம் தரலாமென்று முடிவு செய்தேன். அவளுக்கு ஏகப்பட்ட போட்டி பசங்க மத்தியில். இரண்டு நாள் கழித்து வேறொருவன் பிரோபோஸ் பண்ண போவதாய் தெரிந்ததும், இன்னும் பயம் ஜாஸ்தியாகிருச்சு. அவனுக்கு முன்னாடி நான் அவளுக்கு பிரோபோஸ் பண்ணி, அவளை கரெக்ட் பண்ணனும் என்பதற்காக தான், இந்த ரத்த காதல் கடித திட்டம்

அன்று மாலை விடுதி அறையில் அதற்காக பிளேட் உடன் ஆயுதமாக இருக்கும் போது ஒரே பயமா இருந்துச்சு. என்ன பண்ணுறதுன்னு தெரியல.

பிறவு பயம் காரணமாக பெருசா ஒன்னும் பண்ணல. கறி கடைல கொஞ்சம் ஆட்டு ரத்தம் வாங்கி, லெட்டர் எழுதி அவளுக்கு தந்துட்டேன். பாவி மவ பிரின்சிபால் கிட்ட போட்டு கூடுத்துடா.

வேறு வழி இல்லாம உண்மையை சொல்ல வேண்டியதா போயிருச்சு

# தொழி பிரேமா

= = = =

பல உலக சினிமாக்களை நிம்மதியா வீட்டு ஹாலில் உள்ள டிவியில் போட்டு பார்க்க முடியல. தீடிர்ன்னு முண்டமா வந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சுறாங்க

= = = =
எந்த மனிதனுக்கும் சுயம் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. அதை ஏற்று கொள்வதில் தான் அவனுக்கு பிரச்சனை. நாம் இப்படி தான் என்று மனிதன் ஒரு பொழுதும் ஒத்து கொள்வதில்லை. "நாம் இப்படி இல்லை" என்று தினமும் அவனை அவனே ஏமாற்றி கொள்ளும் முயற்சிகளில் தான் மனிதன் தீவிரமாக இருக்கிறான்

= = = =
பெண் என்பவள் புகுந்த வீட்டில் இடதுசாரியாகவும், பிறந்த வீட்டில் வலதுசாரியாகவும் இருக்கிறாள்.

= = = =

2005 யில் நண்பரிடம் நான் கூடுத்த யவன ராணி நாவல் (இரண்டு புத்தகம்) பல ஊர் சுற்றி, இன்று தான் கைக்கு வந்து சேர்ந்தது.

சின்ன வயதிலிருந்தே எனக்கொரு பழக்கம். வாங்கிய புத்தகத்தில் வாங்கிய தேதி, படித்து முடித்த தேதி மற்றும் அந்த புத்தகத்தை பற்றி என்னுடைய எண்ணங்கள் என்று எழுதி வைப்பேன். 2005 ல என்ன மனநிலையில் இருந்தேனோ தெரியவில்லை சண்டை காட்சிகளை பற்றி புகழ்ந்து எழுதிருக்கிறேன். இதை படித்த உடன், மற்ற புத்தகங்களையும் எடுத்து, நான் எழுதி வைத்த குறிப்புகளை படித்தேன். நல்லா பொழுது போனது. இந்த மாதிரியான பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா ???

டிஸ்கி - சுஜாதாவின் "பிரிவோம் சிந்திப்போம்" ல sad smiley போட்டிருக்கிறேன்.
= = = =

புதுமைபித்தன் சிறுகதை தொகுப்புல, எக்ஸாம் பத்தியும் அதற்க்கு படிக்கும் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் பத்தியும் புதுமைபித்தன் ஒரு கதை எழுதிருக்கார், செம பட்டாசா இருக்கு. அப்படியே என்னோட கல்லூரி வாழ்க்கையை திரும்ப பார்த்த மாதிரி இருந்துச்சு. எல்லா காலத்துலையும் ஸ்டுடென்ட்ஸ் ஒரே மாதிரியா தான் இருந்திருக்காங்க போல இருக்கு.

= = = =
"ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுப்பவர்கள் இருக்க தான் செய்வார்கள்" ன்னு சொல்லுறது "கற்பழிக்க பெண்கள் இருக்கும் வரை கற்பழிப்பவர்கள் இருக்க தான் செய்வார்கள்" ன்னு சொல்லுற மாதிரி இருக்கு. இந்த மாதிரியான லூஸ் தனமான தத்துவங்களை சொல்லுகிறவர்களை கண்டால் கோவம் தான் வருது

= = = =
பல விதமான அரசியல் கட்டுரைகளை படித்த பின் பொதுபுத்தி என்ன சொல்லுகிறதென்றால் - " ஆணியே புடுங்க வேண்டாம் "
= = = =


Sunday, November 7, 2010

தினசரி வாழ்க்கைக்கு (DAILY LIFE ) இரண்டு வயசு


இதனால் எல்லோருக்கும் சொல்லிக்கிறது என்னன்னா நான் பதிவு எழுத வந்து இரண்டு வருஷம் ஆகபோகுதுங்கோ .... போகுதுங்கோ:). ரொம்ப ஆச்சரியமா இருக்கு : பதிவு எழுதுவதினால் நான் நிறைய நல்ல விஷயங்களை கத்துகிட்டு இருக்கேன். அதைவிட நிறைய நண்பர்கள் எனக்கு கிடைச்சு இருக்காங்க.

நான் எக்ஸாம் ல எழுதினதையெல்லாம் அதை திருத்துற வாத்தியாரே படிச்சு இருப்பாரா ங்கிறது சந்தேகம் தான். ஆனா நான் என்ன எழுதினாலும்(மொக்கை போட்டாலும்) ஏதோ பழகின தோஷத்திற்காச்சு படிச்சுட்டு "டேய் டம்பி, இவ்வளவு டம்மியா எழுதாதே..உருபடிய எதாச்சு எழுதுன்னு" சொல்லுறதுக்காச்சு கொஞ்சம் பேர் இருக்காங்கன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாயிருக்கு.

அமெரிக்காவுல இருந்தும், சுவிஸ் ல இருந்தும், லோக்கல் மதுரைல இருந்தும் என்னோட பதிவுகளை படிச்சிட்டு சிலபேர் நேசமா போன் பண்ணி பேசும் பொழுதெல்லாம் எவரெஸ்ட் அளவுக்கு சந்தோஷமா இருக்கும் : அதே சமயம் ரொம்ப பயமாகவும் இருக்கும். ஏன்ன இவங்களாவது அடுத்த பதிவுல மொக்கை போடமா உருபடிய எழுதணும் ங்குற பயம் தான். அதனால தான் கதாபாத்திரம் சிறுகதையை எழுதிட்டு வேறொன்னும் எழுதல. (இரண்டு சிறுகதை ரெடி ஆகிருச்சு (SCIFI ஒன்னு, மாயஜாலம் ஒன்னு). STORY PLOT பலபடுதுற வேலை நடந்துகிட்டிருக்கு

(தொலைந்த சொர்க்கம், மேவி...ஐ லவ் யூ ன்னு நான் எழுத ஆரம்பிச்சு, பிறகு தொடர முடியாமல் போன இரண்டு தொடர்கதை வேற பாதில அப்படியே இருக்கு)

)

நான் பதிவெழுத வந்த ஆரம்பத்துல நிறைய பேருக்கு பின்னோட்டம் போடணும்ன்னு சொன்னாங்க, இன்னொருத்தர் அவங்களுக்கு பின்னோட்டம் போட்ட தான் அவங்க நமக்கு பின்னோட்டம் போடுவங்கணும் சொன்னாரு. நானும் ஆரம்பத்துல சிலபலருக்கு பின்னோட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன், ஆனா பாருங்க அப்பரும் வேலை பளு காரணமா இப்பெல்லாம் யாருக்குமே பின்னோட்டம் போட முடியறது இல்லை. கிடைக்குற கொஞ்ச நேரத்திலும் ஏதோ கொஞ்சமாய் எழுத முடியுது. அதனால யாரும் என்னை தப்பாக நினைச்சிக்க வேண்டாம்ன்னு கேட்டுக்குறேன்.

இந்த சமயத்துல எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான தகவலை சொல்ல போறேனுங்கோ ( ஒபாமா இந்திய வந்திருப்பதையொட்டி இந்த தகவல் வெளியிடு) ..... அதுயேன்னா இனிமேல தினசரி வாழ்க்கை ல கொஞ்சம் இலக்கியத்தரமா எழுத போறேன், மொக்கை போடுறதெல்லாம் மேவியின் பகிர்வுகள் ல வைச்சுக்கலாம்ன்னு இருக்கேன். நான் இலக்கிய தரமா எழுதுறது மூன்றாம் உலக போர் வர காரணமாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை . BECAUSE SINCE CHILDHOOD WRITING WAS ALWAYS BEING MY PASSION...

இதுக்கு மேல சொல்லுறதுக்கும் ஒண்ணுமில்லை, இதோட முடிச்சுக்குறேன். இந்த பதிவை படிக்கிறவங்க முடிஞ்ச உங்களோட கருத்தை பின்னூட்டமாக சொல்லிட்டு போங்க.

= = = = =

டிவிட்டர் ல கூட நான் இருக்கிறேனுங்கோ. அதுல என்னைய பிடிக்க இங்க கிளிக் செய்ஞ்சு, என்னை பின் தொடருங்கோ ...

Friday, December 4, 2009

கல்லூரி நாட்கள்






என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே நான் படித்த கல்லுரி ஞாபகமாவே இருக்கு. கல்லுரி என்றால் அது நான் படித்த UG காலேஜ் தான். மற்றவையில் எல்லாம் போட்டி பொறமை என்று அனுபவிக்காமல் படிப்பு படிப்பு என்றே இருந்தேன். UG ல தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் ஊர் சுற்றி கொண்டு ..... சினிமா, கிசு கிசு பேசி கொண்டு ....... கிளாஸ் கட் அடித்து கொண்டு .....

வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........

எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் காலேஜ் ல ஓர் GET TOGETHER க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன நட்புகளை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் ORKUT FACEBOOK எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.

அப்ப ன்னு பார்த்து YOUTUBE ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்புகளே இல்லை......
Related Posts with Thumbnails