கல்லூரி முடித்த பிறவு எனக்கு வேலைக்கு போக எல்லாம் இஷ்டமே இல்லாம இருந்துச்சு, எதாவது பிசினஸ் பண்ணலாம்ங்குற ஐடியா பலமா இருந்ததால ...திருச்சி டவுன் பக்கம் ஒருத்தரு மொத்த இட்லி வியாபாரம் பண்ணுறதை கேள்வி பட்டு, அதே மாதிரி திருவெறும்பூர் பக்கமும் செய்யலாம்ன்னு அவரை பார்க்க போனேன் 2004 வாக்குல.
மொத்த இட்லி வியாபாரம் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு ஓட்டலுக்கோ / நிகழ்வுக்கோ மொத்தமா இட்லி தயார் செய்து குடுப்பது. மொத்த விலை என்று இல்லாமல் சில்லறை விலை தான்.
அதாவது அப்பொழுது நான் பார்க்க போயிருந்த மனிதர் ஒரு இட்லியை ரூ.1.25 பைசாவிற்கு விற்று கொண்டிருந்தார் 2004 ல். அங்கு நானும் என் நண்பனும் சாம்பிளுக்காக இரண்டு இட்லி சாப்பிட்டு பார்த்தோம். அவ்வளவு தரம் ..அவ்வளவு சுவை. அற்புதமா இருந்தது.
இதையெல்லாம் ஏன் இப்பொழுது சொல்லுகிறேன் என்றால், புரட்சி தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ் நாட்டில் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களை இன்று திறந்து வைக்கிறார். அதில் ஒரு இட்லி ஒரு ரூபாயாம். :))))
2004 லையே நல்ல தரமான சுவையான அடர்த்தியான இட்லியை அந்த மனிதரால் ரூ.1.25 பைசாவுக்கு விற்க முடிந்தது. விலைவாசி அதிகமுள்ள 2013 ல் தமிழக அரசால் எப்படி ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு தர முடிகிறது என்று தான் தெரியவில்லை.
விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.
No comments:
Post a Comment